கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 - கடகம் (Guru Peyarchi Palangal - Kadagam)...

  


குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023  - கடகம் (Guru Peyarchi Palangal - Kadagam)...


கடமை உணர்வு கொண்ட நீங்கள் எல்லாவற்றையும் விரும்பிச் செய்பவர்களே...!




பிறர் தன்னை குற்றம் குறை கூறிக் குதர்க்கமாகப் பேசினாலும் மனம் தளரமாட்டீர்கள். தொலை நோக்குச் சிந்தனையால் சாதிப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலும், 8-ம் வீட்டிலும் மாறி மாறி அமர்ந்து எதையும் முழுசாக செய்யவிடாமல், பலவிதங்களில் உங்களை டென்ஷனாக்கிய குருபகவான் இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை உங்கள் ராசிக்கு பாக்ய வீடான 9-ம் வீட்டில் அமர்வதால் உங்களின் திட்டங்கள் யாவும் வெற்றியடையும்.




‘ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு' என்ற பழமொழிக்கேற்ப உங்களின் அடிப்படை வசதிகளும், அந்தஸ்தும் உயரும். எடுத்த வேலையை முடிக்க முடியாமலும், அடுத்த வேலையைத் தொடங்க முடியாமலும் தத்தளிக்க வைத்த குரு இனி தொட்டதையெல்லாம் துலங்க வைப்பார். சாதுர்யப் பேச்சால் பல வேலைகளை சாதிக்க வைப்பார். வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய திட்டங்களைத் திட்டுவீர்கள். வெகுநாட்களாக வீட்டில் தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்களெல்லாம் இனி அடுத்தடுத்து நடக்கும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். மனைவிவழி உறவினர்களும் உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்வார்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். கல்யாணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். வீடு, வாகன வசதிகள் பெருகும்.




குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் முகச் சுருக்கம் நீங்கி தேஜஸ் கூடும். வருமானம் கூடும். எப்போதும் பரபரப்பாக இருப்பதைப் போல காணப்பட்டாலும், விரைவில் அனைத்திலும் சாதிப்பீர்கள். அதிக வட்டிக்கடனை பைசல் செய்வீர்கள். குரு பகவான் உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப் பதால் வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கவுரவப் பதவிகள் தேடி வரும். பாகப்பிரிவினை மற்றும் சொத்துப் பிரச்சினைகளில் இருந்துவந்த இழுபறி நிலை மாறும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றியடைவீர்கள்.




குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:




14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்களின் பாக்யாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி 4-ம் பாதத்தில் செல்வதால் திடீர் யோகம், பணவரவு எல்லாம் உண்டு. பழைய சொத்தை மாற்றிவிட்டு புதுச் சொத்து வாங்குவீர்கள். மகளுக்கு நல்லவிதத்தில் திருமணம் முடியும். இனி நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புது முயற்சிகளில் வெற்றியுண்டு.




30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் உங்களின் சப்தம, அட்டமாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டு. கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த நகைகள், ரத்தினங்களை கவனமாகக் கையாளுங்கள். வி.ஐ.பிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.




24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குருபகவான் உங்களின் தைரிய, விரய ஸ்தானாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் வெகு நாட்களுக்குப் பிறகுபழைய நண்பர்கள், உறவினர்களின் சந்திப்பு நிகழும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதரர் பாசமாக இருப்பார். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். ஷேர் மூலம் பணம் வரும். அடிக்கடி பழுதாகிக் கொண்டிருந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஆன்மிக காரியங்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள்.




வியாபாரிகளே, இனி புது யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள். கடையை விரிவு படுத்துவீர்கள். இணையதள விளம்பரம் மூலம் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவீர்கள். உங்களின் அதிரடியான செயல்களைக் கண்டு சக வியாபாரிகளும் திகைப்பார்கள். ரியல் எஸ்டேட், கம்ப்யூட்டர் உதிரி பாகம், எலெக்ட்ரானிக்ஸ், கெமிக்கல் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் ஆதாயமுண்டு. உத்யோகஸ்தர்களே, எப்போதும் உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த மேலதிகாரி இனி புகழாரம் பாடுவார். காத்திருந்தபடி பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. சக ஊழியர்களுடன் இணக்கமான போக்கு ஏற்படும். இந்த குருமாற்றம் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று அவதிபட்ட உங்களை கோபுரமாய் மிளிர வைக்கும்.




பரிகாரம்: சென்னைக்கு தெற்கேயுள்ள திருக்கழுக்குன்றத்தில் அருள்பாலிக்கும் வேதகிரீஸ்வரரையும், நந்தீஸ்வரரையும் பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். புற்று நோயாளிகளுக்கு உதவுங்கள். செழிப்புக் கூடும்.




குருப்பெயர்ச்சி பலன் - கடகம்


குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை


திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை


குருவானவர் தான் நின்ற ராசியில் இருந்து


ஐந்தாம் பார்வையாக ஜென்ம ராசியையும்


ஏழாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தையும்


ஒன்பதாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தையும் பார்வையிடுகின்றார்.

விவேகமான எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் அனைவரையும் கவரக்கூடிய கடக ராசி அன்பர்களே!!

வருகின்ற குருபெயர்ச்சியில் அஷ்டம ஸ்தானத்தில் இருந்துவந்த குருபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் பாவகத்தில் பெயர்ச்சி அடைகிறார்.


குருவானவர் தான் நிற்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வாழ வைக்கும் தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் 'குரு பார்வை கோடி புண்ணியம்' என்று அழைக்கப்படுகின்றது.

பலன்கள் :


திட்டமிட்ட காரியத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். இளைய சகோதரி வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். செயல்பாடுகளில் துரிதமும், வேகமும் அதிகரிக்கும். தோற்றப்பொலிவில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்களின் தன்மைகளை அறிந்து திட்டமிட்டு செயல்படுவீர்கள். குலதெய்வ வழிபாடுகளை நிறைவேற்றுவீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். நுணுக்கமான விஷயங்களை எளிதில் புரிந்து கொள்வீர்கள்.

பொருளாதாரம் : 


பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

உடல் ஆரோக்கியம் :


உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய செயல்களை நிறைவேற்றி கொள்வீர்கள்.

பெண்களுக்கு :


குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மதிப்பும், மரியாதையும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும்.

மாணவர்களுக்கு :


மாணவர்களுக்கு புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். விளையாட்டு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த தயக்கமும், கூச்சமும் விலகி தெளிவுடன் காணப்படுவீர்கள். உயர்கல்வி நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு : 


உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலை காணப்படும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழ்நிலை ஏற்படும். அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கவும்.

வியாபாரிகளுக்கு : 


வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபார பணிகளில் ஆர்வத்துடன் செயல்பட்டு முன்னேற்றத்தை உருவாக்குவீர்கள். கூட்டாளிகள் வகையில் ஒத்துழைப்பு ஏற்படும். போட்டிகள் குறைந்து முயற்சிக்கு உண்டான பலன்களை பெறுவீர்கள்.

விவசாயிகளுக்கு : 


விவசாயம் சார்ந்த துறையில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அரசு சார்ந்த உதவிகளில் அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் உண்டாகும். அடமானம் வைத்திருந்த சில பொருட்களை மீட்டு எடுப்பீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு :


சமூக பணிகளில் இருப்பவர்கள் புதுவிதமான சிந்தனைகளுடன் காணப்படுவீர்கள். புதிய முடிவுகளின் மூலம் மாற்றங்களை உருவாக்குவீர்கள். பேச்சுக்களில் வேகம் அதிகரிக்கும். மற்றவர்கள் மீதான கருத்துக்களில் கவனம் வேண்டும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை குறைத்து கொள்வது மேன்மையை ஏற்படுத்தும்.

கலைஞர்களுக்கு :


எழுத்து சார்ந்த துறைகளில் இருக்கக்கூடியவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனதில் புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். ஊடகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

நன்மைகள் :


இந்த குருபெயர்ச்சியின் மூலமாக மனதில் நினைத்த காரியங்களை திட்டமிட்டு, நுட்பமான செயல்பாடுகளின் மூலம் நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

கவனம் :


வர இருக்கின்ற குருபெயர்ச்சியில் தந்தைவழி உறவுகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும்.

வழிபாடு :


வியாழக்கிழமைதோறும் ஹயக்ரீவரை வழிபாடு செய்துவர சிந்தனைகளில் தெளிவும், உற்சாகமும் ஏற்படும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே...!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...