கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 - மிதுனம் (Guru Peyarchi Palangal - Mithunam)...

 


குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023  - மிதுனம் (Guru Peyarchi Palangal - Mithunam)...


அதிகம் ஆசைப்படாமல் உதிக்கும்போது விதிக்கப்பட்டதை உணர்ந்து வாழ்பவர்களே...!




வாக்குவாதம் என வந்து விட்டால் வரிந்துக் கட்டி வாதாடுபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் கொஞ்சம் காலம் இருந்து பணப்புழக்கத்தையும், எட்டாம் வீட்டில் கொஞ்சம் காலம் இருந்து மனப் போராட்டத்தை மாறிமாறி தந்த குருபகவான் இப்பொழுது 14.04.2022 முதல் 22.04.2023 வரை பத்தாவது வீட்டுக்குள் நின்று பலன் தரப் போகிறார். உங்களின் பிரபல யோகாதிபதிகளான சனி பகவானின் நட்சத்திரத்திலும், புதனின் நட்சத்திரத்திலும் குருபகவான் செல்ல இருப்பதால் ஓரளவு நல்ல பலன்களே உண்டாகும். வெகுநாட்களாக தள்ளிப் போய்க் கொண்டிருந்த பிரார்த்தனைகளையெல்லாம் இப்போது நிறைவேற்றுவீர்கள். நவீன ரக வாகனத்தை வாங்குவீர்கள். கவுரவத்தைப் காப்பாற்றுவதாக நினைத்து வீண் செலவுகளை செய்யாதீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.




குருபகவான் உங்களின் 2-ம் வீட்டை பார்ப்பதால் பேச்சிலிருந்த தடுமாற்றம், பயம் நீங்கும். வரவேண்டிய பணம் வரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை உணருவீர்கள். வி.ஐ.பிகள் தக்க நேரத்தில் உங்களுக்கு உதவுவார்கள். பல வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். என்றாலும் நேரம் கடந்து சாப்பிடுவதை தவிர்க்கப் பாருங்கள். குரு உங்களின் சுக வீடான 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயுடன் அவ்வப்போது இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். அவரின் உடல்நிலையும் சீராகும். தாய்வழி சொந்த பந்தங்கள் உதவுவார்கள். உங்களின் 6-ம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் பழைய கடனை அடைப்பதற்கு புது வழி பிறக்கும். இழுபறியில் இருந்த வழக்கிலும் வெற்றியுண்டு.




குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:




14.04.2022 முதல் 29.04.2022 வரை இக்காலகட்டங்களில் உங்கள் பாதகாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் உத்யோகத்தில் மறைமுக இடையூறுகள், மேலதிகாரியுடன் உரசல்போக்கு வரக் கூடும். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், கருத்து மோதல், சிறு சிறு விபத்துகள் வரக் கூடும். சிலர் உங்களைப் பற்றிய தவறான வதந்திகளையும் பரப்பி விடுவார்கள். கொஞ்சம் உஷாராக இருங்கள். லேசாக கால்வலி, உடல் அசதி, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். அவ்வப்போது ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.




30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் உங்களின் அஷ்டம, பாக்யாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வெகுநாட்களாக வராமலிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். திட்டமிட்டபடி வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள். என்றாலும் வீடு, வாகனபராமரிப்புச் செலவு என்று ஒருபக்கம் அதிகரிக்கத் தான் செய்யும். உடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்பு வரக் கூடும். அவ்வப்போது விரக்தி, சோர்வு வந்து நீங்கும்.




24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குருபகவான் உங்கள் ராசிநாதனும், சுகாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் சோம்பல் நீங்கி சுறு சுறுப்படைவீர்கள். குடும்ப வருமானம் உயரும். தங்க ஆபரணம் சேரும். வியாபாரிகளே, தொழிலில் புதிது புதிதாக வந்த போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகு முறையை மாற்றுவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள்.




கூட்டுத் தொழில் செழிக்கும். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உத்யோகஸ்தர்களே, இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டியது வரும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாதீர்கள். அலுவல ரகசியங்களை வெளியிடாதீர்கள். முக்கிய கோப்புகளை கவனமாகக் கையாளுங்கள். அடிக்கடி விடுப்புகள் எடுக்காதீர்கள். அதிக சம்பளத்துடன் பெரிய பதவி வந்தால் பலமுறை யோசித்து ஏற்பது நல்லது. இந்த குருப்பெயர்ச்சி பணம், காசின் அருமையை உணர்த்துவதுடன், மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றியைத் தருவதாக அமையும்.




பரிகாரம்: கும்பகோணம் அருகிலுள்ள திருக்கொள்ளம்புதூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவில்வ வனநாதரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் சனிக்கிழமையில் சென்று தரிசியுங்கள். மூட்டைத் தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள். முயற்சிகள் பலிதமாகும்.




குருப்பெயர்ச்சி பலன் - மிதுனம்


குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை


திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து


ஐந்தாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தையும்


ஏழாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும்


ஒன்பதாம் பார்வையாக சத்ரு ஸ்தானத்தையும் பார்வையிடுகின்றார்.

சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு தனது காரியத்தை சாதித்து கொள்ளக்கூடிய மிதுன ராசி அன்பர்களே!!

வருகின்ற குருபெயர்ச்சியில் குருபகவான் பாக்கிய ஸ்தானம் என்னும் ஒன்பதாம் இடத்தில் இருந்து தொழில் ஸ்தானம் என்னும் பத்தாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார்.


குருவானவர் தான் நிற்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வாழ வைக்கும் தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் 'குரு பார்வை கோடி புண்ணியம்' என்று அழைக்கப்படுகின்றது.

பலன்கள் :


குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சொந்த வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதை உறுத்தி கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய தொழில் நிமிர்த்தமான முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும்.


விலகி இருந்தவர்கள் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பயணங்களின்போது எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். வாழ்க்கை துணைவர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மேன்மை உண்டாகும்.

பொருளாதாரம் :


தனவரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சொத்து சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

உடல் ஆரோக்கியம் :


உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் புதிய நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்ப்புகளால் உண்டான காரியத்தடைகள் அகலும்.

பெண்களுக்கு : 


பெண்களுக்கு சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் கைகூடும். சகோதரர் வகையில் சுபவிரயங்கள் உண்டாகும். தாய்வழி உறவுகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த சில பயணங்கள் சாதகமாக அமையும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு : 


மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தேவையான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர்கல்வி தொடர்பான வெளிநாட்டு வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் புதிய நம்பிக்கையை உருவாக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு : 


வெளியூர் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத சில இடமாற்றங்களின் மூலம் அலைச்சலும், புதிய அனுபவமும் உண்டாகும். சிறு வாய்ப்பாக இருந்தாலும் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் மாற்றங்கள் பிறக்கும். பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உயரதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான சூழ்நிலையை உருவாக்க முடியும்.

விவசாயிகளுக்கு :


விளைச்சலுக்கு உண்டான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். புதுவிதமான இயந்திரங்கள் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படவும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பகை உணர்வை மறந்து அனைவரிடத்திலும் சமமாக பழகுவதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.

வியாபாரிகளுக்கு :


தொழில் சார்ந்த இடங்களை மாற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபார பணிகளில் போட்டிகள் அதிகரிக்கும். இயந்திரம் தொடர்பான பணிகளில் அவ்வப்போது ஏற்படும் பழுதுகளை சீர் செய்வது நல்லது. வழக்கு சார்ந்த விஷயங்களில் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் கையாளுவது மேன்மையை ஏற்படுத்தும்.

அரசியல்வாதிகளுக்கு :


கட்சி நிமிர்த்தமான பணிகளில் உயர் பொறுப்பில் இருப்பவர்களுடன் விட்டுக்கொடுத்து செல்வது மேன்மையை ஏற்படுத்தும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் சிந்தித்து செயல்படவும். மற்றவர் விஷயங்களில் உங்களின் அதிகாரங்களை பயன்படுத்துவதை குறைத்து கொள்வது நல்லது. நெருக்கமானவர்களின் மூலம் புதிய அனுபவமும், பக்குவமும் உண்டாகும்.

கலைஞர்களுக்கு :


கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நேரம் கண் விழித்து வேலை செய்வதை குறைத்து கொள்வது நல்லது. பத்திரிக்கை சார்ந்த துறைகளில் செய்திகளின் தன்மையையும், உண்மை நிலையையும் அறிந்து செயல்பட வேண்டும்.

நன்மை : 


இந்த குருபெயர்ச்சியின் மூலமாக உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உறவுகள் பற்றிய புரிதலும், நெருக்கமானவர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகளும் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலைகள் காணப்படும்.

கவனம் :


இந்த குருபெயர்ச்சியின் மூலம் தொழில் சார்ந்த விஷயங்களில் அபிவிருத்தி தொடர்பான செயல்பாடுகளிலும், புதிய முதலீடுகளிலும் சிந்தித்து செயல்படவும். 

வழிபாடு :


வியாழக்கிழமைதோறும் சித்தர்களை வழிபாடு செய்துவர தொழில் சார்ந்த விஷயங்களில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே...!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...