கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 - சிம்மம் (Guru Peyarchi Palangal - Simmam)...



குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023  - சிம்மம் (Guru Peyarchi Palangal - Simmam)...



நல்லதோ, அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முடித்துக் காட்டுபவர்களே!


வசதி வந்தபோதும் பழைய நட்பை மறவாதவர்களே! உங்களின் பூர்வ புண்யாதிபதியான குருபகவான் கடந்த ஓராண்டு காலமாக 6-ம் வீட்டிலும், 7-ம் வீட்டிலும் மாறி மாறி அமர்ந்ததால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமல் தடுமாறிப் போனீர்களே! பணப்பற்றாக்குறையாலும், சரியான தூக்கமில்லாமலும் தத்தளித்தீர்களே, இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை எட்டாம் வீட்டுக்குள் ஆட்சிப் பெற்று அமர்கிறார். முன்பு போலவே பெயர் கெடுமோ, எந்த வேலையையும் திறம்பட செய்ய முடியாதோ! என வருந்தாதீர்கள். சர ராசியில் பிறந்த உங்களுக்கு குருபகவான் உபய வீட்டில் மறைவதுடன், தன் சொந்த வீட்டில் அமர்வதால் மேற்கண்ட காலக் கட்டங்களில் கெடு பலன்கள் குறைந்து நற்பலன்களே அதிகரிக்கும். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகள் எல்லாம் இனி முழுமையடையும். வரவேண்டிய பணம் வந்துசேரும். பழைய கடனையும் பைசல் செய்வீர்கள்.


பூர்வீகச் சொத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். வழக்குகள் சாதகமாகும். உங்கள் ஆலோசனையை அலட்சியப்படுத்தியவர்கள் இப்போது தேடி வருவார்கள். பணம் வரத்தான் செய்கிறது ஆனால் ஏனோ தங்கவில்லை என புலம்பினீர்களே! இனி பணத்தை சேமிக்கும் வழியை கண்டுப்பிடிப்பீர்கள். பழுதான எலட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ் சாதனங்களை மாற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். இயக்கம், சங்கம் இவற்றில் நல்ல பதவி கிடைக்கும். கொஞ்சம் மறைமுக எதிர்ப்புகளும் உங்களுக்கு இருக்கத்தான் செய்யும். விமர்சனங்கள், வதந்திகள் வரும். அதற்காக அஞ்ச வேண்டாம். எதையும் துணிச்சலுடன் எதிர்கொண்டால், எதையும் சாதிக்கலாம்.


குருபகவான் உங்களின் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் குழப்பங்கள், பனிப்போர் நீங்கும். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. நீங்கள் நல்லதே சொன்னாலும் சிலர் அதை தவறாகப் புரிந்து கொண்டார்களே, சில சமயங்களில் சொல்ல வேண்டிய விஷயத்தை சரியாக சொல்ல முடியாமல் தடுமாறினீர்களே, அந்த அவல நிலையெல்லாம் இனி மாறும். குருபகவான் உங்களின் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் உடல் ஆரோக்யம் மேம்படும். மருந்து மாத்திரைகளின் அளவு இனி குறையும். வீண் அலைச்சல், டென்ஷன், களைப்பு, மன உளைச்சல் நீங்கும். தண்ணீர் வசதி யில்லாத, இடவசதியில்லாத வீட்டில் தவித்துக் கொண்டிருந்தீர்களே, இனி விசாலமான வீட்டுக்கு மாறுவீர்கள்.


குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:


14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங் களில் உங்களின் பூர்வ புண்யாதிபதியான குருபகவான்தன் நட்சத்திரமான பூரட்டாதி 4-ம் பாதத்தில் செல்வதால் உங்களின் தகுதி, அந்தஸ்து உயரும். பதவிகள் தேடி வரும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். அரசாங்க காரியங்களில் வெற்றியுண்டு. மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பெரிய உதவிகள் கிடைத்து, வாழ்க்கையில் முன்னேற வழி கிடைக்கும். பெரிய பிரபலங்களுடன் நட்பு ஏற்படும்.


30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் ரோக சப்தமாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் குடும்பத்தில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சில நேரங்களில் தாழ்வு மனப்பான்மை, தயக்கம் வரக்கூடும். வாகன விபத்துகள், வீண் செலவுகள், மறைமுக அவமானம், உறவினர், பிரபலங்களுடன் பகையும் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக்கையாளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளவேண்டாம். பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் பார்த்து பார்த்து பேச வேண்டும். எந்நேரமும் பொறுமை காக்கவும்.


24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குருபகவான் உங்கள் தன லாபாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் தடைபட்டுக் கொண்டிருந்த காரியங்கள் முழுமையடையும். குழந்தை பாக்யம் கிட்டும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். குலதெய்வம் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். ஆன்மிகப் பயணங்கள் செல்ல திட்டமிட்டு, அப்பயணங்களால் நன்மை கிட்டும். வியாபாரிகளே, பழைய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க புது திட்டம் தீட்டுவீர்கள். பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலிக்க வேண்டும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். டிசம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இரும்பு, கெமிக்கல், ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் பிரச்சினைகள் வெடிக்கும். யாரையும் எளிதில் நம்ப வேண்டாம். எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருக்கவும்.


உத்யோகஸ்தர்களே, நீங்கள் திறமைசாலி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மூத்த அதிகாரி புரிந்து கொள்ளவில்லையே என்று வருந்துவீர்கள். சக ஊழியர்களிடையே வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சக ஊழியர்களை நம்பி மேலதிகாரிகளைப் பற்றி குறை சொல்லாதீர்கள். புது வேலைக்கு மாறும்போது யோசித்து செயல்படுங்கள். அனைவரிடமும் இணக்கமான போக்கைக் கையாண்டால், எளிதில் வெற்றிகளைக் குவிக்கலாம். இந்த குருப்பெயர்ச்சி வாழ்க்கை போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கான மன உறுதியைத் தருவதுடன், வி.ஐ.பிகளின் மனதிலும் இடம்பிடிக்க வைக்கும்.


பரிகாரம்: காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள திருப்புலிவனம் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரரையும், ஸ்ரீசிம்ம குரு தட்சிணாமூர்த்தியையும் சித்திரை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். வெற்றி உண்டு.




குருப்பெயர்ச்சி பலன் - சிம்மம்


குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை


திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை


குருவானவர் தாம் நின்ற ராசியில் இருந்து


ஐந்தாம் பார்வையாக விரய ஸ்தானத்தையும்


ஏழாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தையும்


ஒன்பதாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

எதிலும் துரிதத்துடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!!

வருகின்ற குருபெயர்ச்சியில் குருவானவர் சிம்ம ராசிக்கு களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் இருந்து, அஷ்டம தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் குரு பார்வை கோடி புண்ணியம் என்று அழைக்கப்படுகின்றது.

பலன்கள் :


மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த கவலைகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். எண்ணங்களில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.

பொருளாதாரம் :


தனவரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். வாடகை மற்றும் குத்தகை தொடர்பான பாக்கிகள் வசூலாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.

உடல் ஆரோக்கியம் : 


உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பாதியில் நின்ற கட்டிடம் தொடர்பான பணிகளை நிறைவு செய்வீர்கள்.

பெண்களுக்கு :


சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு உருவாகும். வாழ்க்கை துணைவரை பற்றிய புரிதல் மேம்படும். உத்தியோக பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் மறையும். குழந்தைகள் வழியில் சில விரயங்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு : 


மாணவர்களுக்கு பாடங்களில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். போட்டி தேர்வுக்கு ஈடுபட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். வங்கி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :


உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகளும், திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகளும் சாதகமாக அமையும். உயரதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தேவையற்ற சஞ்சலங்கள் நீங்கி மனநிம்மதியான சூழல் உருவாகும். பழைய வாகனங்களை மாற்றியமைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

வியாபாரிகளுக்கு :


வியாபார பணிகளில் அலைச்சல்கள் மேம்படும். சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவர்களுக்கு தனவரவுகள் சாதகமாக அமையும். கால்நடை தொடர்பான வியாபாரங்களில் லாபங்கள் மேம்படும். கணினி சார்ந்த துறைகளில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

விவசாயிகளுக்கு :


விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மையான சூழ்நிலை காணப்படும். புதிய கால்நடை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பாசன வசதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் சுபநிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு : 


அரசியல்வாதிகள் கட்சி தொடர்பான உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். கட்சி நிமிர்த்தமான புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடனிருப்பவர்களின் உதவிகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். எண்ணிய செயல்களை செயல்படுத்துவதில் சில எதிர்ப்புகளால் காலதாமதமாகி நிறைவேறும்.

கலைஞர்களுக்கு : 


கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் புதிய அனுபவங்களும், விரயங்களும் உண்டாகும். வித்தியாசமான கலை ரசனை மற்றும் சிந்தனைகள் அதிகரிக்கும். தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும்.

நன்மைகள் :


வர இருக்கின்ற குருப்பெயர்ச்சியின் மூலமாக புதுவிதமான பயணங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகளாலும், புத்துணர்ச்சியான சிந்தனைகளாலும் முன்னேற்றத்தை உருவாக்குவீர்கள்.

கவனம் :


வர இருக்கின்ற குருப்பெயர்ச்சி மூலமாக எதிர்காலம் மற்றும் தனம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும்.

வழிபாடு :


வியாழக்கிழமைதோறும் குலதெய்வ வழிபாடு செய்துவர எண்ணங்களில் தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே...!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...