கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 - மகரம் (Guru Peyarchi Palangal - Makaram)...

  


குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023  - மகரம் (Guru Peyarchi Palangal - Makaram)...




உதட்டால் பேசாமல் இதயத்தால் பேசுபவர்களே...!



குலம், கோத்திரம் பார்க்காமல் பாசமுடன் பழகுபவர்களே! எடுத்த வேலையை முடிக்கும் வரை அதே சிந்தனையுடன் இருப்பவர்களே! சிறந்த கலா ரசிகர்களே! இதுவரை உங்களின் ராசியிலும், 2-ம் வீட்டிலும் மாறி மாறி அமர்ந்து ஓரளவு வசதி வாய்ப்புகளையும், கவுரவத்தையும், அதே நேரத்தில் அலைக்கழிப்பையும், தர்ம சங்கடத்தையும் கொடுத்த குருபகவான் இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை முதல் ராசிக்கு மூன்றாம் வீட்டில் மறைந்தாலும் ஆட்சிப் பெற்று அமர்கிறார். நல்லதே நடக்கும். மனைவியிடம் விட்டுக் கொடுத்து போகவும். உங்களுக்கு வேண்டியவர்களே உங்களுக்குள் கலகத்தை ஏற்படுத்தி பிரிக்க முயல்வார்கள். ஆனால் ராசிக்கு 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் கணவன் - மனைவிக்குள் அன்பும், அன்யோன்யமும் குறையாது. நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் அறிமுகம் கிடைக்கும்.



குருபகவான் உங்களின் ஒன்பதாவது வீட்டைப் பார்ப்பதால் வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகனின் திருமணத்தை ஊரே மெச்சும்படி தடபுடலாக நடத்தி முடிப்பீர்கள். மகளின் உயர்கல்விக்காக வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள். தந்தைவழி உறவினர்களிடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். குருபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் புது முயற்சிகள் வெற்றியடையும். விலை உயர்ந்த ஆபரணங்கள், ரத்தினங்கள் வாங்குவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.



எந்தச் செயலிலும் அவசரப்படாமல் நீங்கள் கொஞ்சம் நிதானமாகத்தான் செயல்படவேண்டும். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் வந்து நீங்கும். அநாவசியமாக யாரையும் வீட்டுக்குள் அழைத்து வரவேண்டாம். இளைய சகோதரருடன் அவ்வப்போது உரசல் போக்கு வந்து நீங்கும். நீங்களும் தரவேண்டிய கடனையெல்லாம் தந்து முடிப்பீர்கள். அனைவரிடமும் இணக்கமான போக்கைக் கையாளவும். எதிலும் நிதானம் அவசியம். உறவினர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். எதிலும் குறிப்பாக பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். திடீர் பணவரவு உண்டு. மூத்த சகோதரர் உதவுவார். பூர்வீகச் சொத்தை புதுப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும்.



குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:



14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்களின் சேவக, விரயாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் வீடு கட்டுவது, வாங்குவது நல்ல விதத்தில் முடியும். வீடு கட்ட லோன் வசதி கிடைக்கும். சொத்து சம்பந்தபட்ட வழக்கு சாதகமாக முடியும்.



30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் உங்கள் ராசிநாதனும், தனாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் எதிர்பார்த்த வகையில் உதவியுண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் பிறக்கும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவுடன் சில வேலைகளை முடிப்பீர்கள்.



24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குருபகவான் உங்களின் ரோக, பாக்யாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் தந்தையாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். கல்யாணம், காதுகுத்து என வீடு களை கட்டும். குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். வியாபாரிகளே, போட்டியாளர்களுக்கு மத்தியில் ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! இனி உங்களின் அணுகுமுறையை மாற்றி அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுப்பீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் வசூல் அதிகரிக்கும். கெமிக்கல், ரியல் எஸ்டேட், ஹோட்டல் வகைகளால்லாபமடைவீர்கள்.



உத்யோகஸ்தர்களே, உங்கள் கோப தாபங்களை உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள். சில சமயங்களில் மேலதிகாரியுடன் வீண் விவாதங்கள் வரும். ஆனாலும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். வெகுநாட்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல் போன பதவி உயர்வு கிடைக்கும். இந்த குரு மாற்றம் கவலைகளை கரைப்பதாகவும், காசுபணம் தருவதாகவும், எங்கும் முதல் வரிசையில் உட்கார வைப்பதாகவும் அமையும்.



பரிகாரம்: கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் உள்ள தென்குடித் திட்டையில் வீற்றிருக்கும் பசுபதிநாதரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் அனுஷம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுங்கள். நிம்மதி கிட்டும்.





குருப்பெயர்ச்சி பலன் - மகரம்

குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை


குருதேவர் தான் நின்ற ராசியிலிருந்து

ஐந்தாம் பார்வையாக களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தையும்

ஏழாவது பார்வையாக பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தையும்

ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தையும் பார்க்கின்றார்.
எதிலும் நிதானத்துடனும், பொறுமையுடன் செயல்பட்டு வெற்றி காணக்கூடிய மகர ராசி அன்பர்களே...!
இந்த வருட குருபெயர்ச்சியில் உங்களுடைய ராசிக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் பாவகத்தில் இருந்து முயற்சி ஸ்தானம் என்னும் நான்காம் பாவகத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.

குருவானவர் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வாழ வைக்கும் தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் குரு பார்வை கோடி புண்ணியம் என்று அழைக்கப்படுகின்றது.
பலன்கள் :

புதிய நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கூட்டு வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான வாய்ப்புகள் ஏற்படும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். மறுமணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.
பொருளாதாரம் :

பொருளாதாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவினால் மேன்மை உண்டாகும். மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறைந்து சுதந்திரத்தன்மை மேம்படும்.
உடல் ஆரோக்கியம் :

ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். சளி தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும்.
பெண்களுக்கு :

பெண்களுக்கு சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நபர்களின் தன்மையை அறிந்து நட்பு கொள்வது நல்லது. வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :

தவறிப்போன சில பொருட்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வீர்கள். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்படும். மாணவர்கள் பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.
வியாபாரிகளுக்கு :

ஒப்பந்தம் தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆடம்பரப் பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
விவசாயிகளுக்கு :

குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். மனை மீதான கடன் சார்ந்த உதவி கிடைக்கும். எதிர்பாராத சில புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். காலநிலை தொடர்பான விஷயங்களில் ஆதாயம் மேம்படும்.
அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் துறைகளில் இருப்பவர்களுக்கு நிம்மதியான தூக்கமும், தனவரவும் உண்டாகும். அரசு சார்ந்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
கலைஞர்களுக்கு :

கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சமூகத்தில் செல்வாக்கும், மதிப்பும் அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான முயற்சிகள் ஈடேறும். எதிர்பார்த்த உதவியின் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
நன்மைகள் :

வர இருக்கின்ற குருபெயர்ச்சி மூலமாக வாழ்க்கை துணைவரின் அன்பையும், அரவணைப்பையும் பெறுவீர்கள். மேலும் பெரியோர்களின் ஆதரவோடு செல்வச்சேர்க்கையும், சுபிட்சத்தையும் மேம்படுத்துவீர்கள்.
கவனம் :

வர இருக்கின்ற குருப்பெயர்ச்சியில் எந்தவொரு பணியையும் செய்வதற்கு முன்பு திட்டமிட்டு செயல்படுவது புதிய அனுபவத்தையும், புரிதலையும் ஏற்படுத்தும்.
வழிபாடு :

வியாழக்கிழமைதோறும் பிரத்தியங்கரா தேவியை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே...!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...