கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 - தனுசு (Guru Peyarchi Palangal - Dhanusu)...

 


குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023  - தனுசு (Guru Peyarchi Palangal - Dhanusu)...


தலையை அடகு வைத்தாவது சொன்ன சொல்லை நிறைவேற்றுபவர்களே...!


தவறு செய்தால், தலைவனாக இருந்தாலும் தட்டிக் கேட்கத் தயங்கமாட்டீர்கள். இதுவரை இரண்டாம் வீட்டிலும், மூன்றாம் வீட்டிலும் அமர்ந்து, உங்களை தெளிவான பாதையில் அழைத்துச் செல்லாமல் திணறடித்த குருபகவான் இப்போது நான்காவது வீட்டுக்குள் நுழைந்து 14.04.2022 முதல் 22.04.2023 வரை நீடிப்பதால் கொஞ்சம் வேலைச்சுமை அதிகமாகவே இருக்கும். குடும்பத்தில் சின்னச் சின்ன விவாதங்கள் கூட சண்டையில்தான் போய் முடியும். பிள்ளைகளின் கல்யாண விஷயத்தில் அவசரப்பட வேண்டாம். தாயாருக்கு மூட்டுவலி, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வந்து போகும். ஆனாலும் குரு பகவான் உங்கள் சுக ஸ்தானத்தில் ஆட்சிப் பெற்று அமர்வதால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பூர்வீகச் சொத்து விஷயங்களில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.


குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் உதவியுண்டு. பிள்ளைகளை அன்பாக நடத்துங்கள். அவர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. சொத்து வாங்குவது விற்பதில் உஷாராக இருங்கள். உங்களின் 10-ம் வீட்டை குரு பார்ப்பதால் உத்யோகத்தில் மகிழ்ச்சி தங்கும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். புது வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டை குரு பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். வீண் சந்தேகத்தால் கணவன் - மனைவி பிரிய வேண்டி வரும். சில விஷயங்களுக்கு உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள்.


உயர் கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள். நெருங்கிய உறவினர்களானாலும், நண்பர்களானாலும் அத்துமீறி அவர்களின் விவகாரங்களில் நுழைய வேண்டாம். நெருப்பு, மின்சாரத்தை கவனமாகக் கையாளுங்கள். வாகன விபத்துகள் நிகழக் கூடும். தன்னைச் சுற்றியுள்ளவர்களின் உண்மையான சுயரூபத்தை உணருவீர்கள். பணத் தட்டுப்பாடு அவ்வப்போது தொடர்ந்தாலும் ஏதேனும் ஒருவழியில் அவற்றைச் சமாளிப்பீர்கள்.


குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:


14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்களின் ராசிநாதனும், சுகாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். வெளியூர் பயணங்களால் கையிருப்பு கரையும்.


30.04.2022 முதல் 24.02.2023: மேற்கண்ட நாட்களில் உங்களின் தன, சேவகாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பேச்சில் தடுமாற்றம், வீண் விவாதங்கள் வரக் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கி நிம்மதியுண்டாகும்.


24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குருபகவான் உங்களின் சப்தம, ஜீவனாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் கணவன் - மனைவிக்குள் இருந்த இடைவெளி நீங்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. நாடாளுபவர்களின் சந்திப்பு நிகழும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். அயல்நாடு சென்று வர விசா கிடைக்கும். வியாபாரிகளே, லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பெரிய முதலீடுகள் வேண்டாம். வரவேண்டிய பாக்கிகளை நாசூக்காக வசூலியுங்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த புதிய யுக்திகளை கையாளுங்கள்.


பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும், கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போகவும். உத்யோகஸ்தர்களே, பணிச்சுமை வாட்டியெடுக்கும். சக ஊழியர்களின் பணிகளையும் இழுத்துப் போட்டு பார்க்க நேரிடும். மேலதிகாரியிடம் மனஸ்தாபங்கள் அதிகரிக்கும். திடீர் இடமாற்றம் உண்டு. என்றாலும் குருபகவான் உங்களின் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் சவால்களை சமாளிப்பீர்கள். மே மாதங்களில் நிம்மதி கிட்டும். பதவி உயர்வு, புதிய வாய்ப்புகள் தேடி வரும். இந்த குரு மாற்றம் அவ்வப்போது உங்களை கசக்கிப் பிழிந்தாலும் வருங்காலத்துக்கு பயனுள்ளதாக அமையும்.


பரிகாரம்: திருவிடைமருதூருக்கு அருகிலுள்ள திருக்கஞ்சனூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஅக்னீஸ்வரரையும், அங்குள்ள ஸ்ரீதட்சிணாமூத்தியையும் பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். வாரிசு இல்லாத வயதான தம்பதியருக்கு உதவுங்கள். நிம்மதி பெருகும்.




குருப்பெயர்ச்சி பலன் - தனுசு


குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை


திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை


குருதேவர் தான் நின்ற இடத்திலிருந்து


ஐந்தாம் பார்வையாக அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்தையும்


ஏழாவது பார்வையாக தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தையும்


ஒன்பதாம் பார்வையாக விரய ஸ்தானமான பனிரெண்டாம் ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.

எதிலும் பொறுமையுடன் செயல்பட்டு மேன்மையை உருவாக்கக்கூடிய தனுசு ராசி அன்பர்களே!!

இந்த வருட குருபெயர்ச்சியில் உங்களுடைய ராசிக்கு முயற்சி ஸ்தானம் என்னும் மூன்றாம் பாவகத்தில் இருந்து சுக ஸ்தானம் என்னும் நான்காம் பாவகத்திற்கு குருபகவான் பெயர்ச்சி அடைகிறார்.


குருவானவர் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வாழ வைக்கும் தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் குரு பார்வை கோடி புண்ணியம் என்று அழைக்கப்படுகின்றது.

பலன்கள் :


மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தமான சூழ்நிலை காணப்படும். எதிர்காலம் சார்ந்த செயல்களில் அனுகூலமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்டநாள் தடையாக இருந்துவந்த சுபகாரியம் தொடர்பான முயற்சிகளும், தனவரவுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயமான சூழ்நிலை காணப்படும். செயல்பாடுகளில் சுதந்திர தன்மை காணப்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவங்கள் உண்டாகும். வாழ்க்கை பற்றிய கண்ணோட்டங்களில் மாற்றங்கள் உருவாகும். வாழ்க்கைத் துணைவர் வழியில் சிலருக்கு பொருட்சேர்க்கை உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை செயல்படுத்துவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வெளிவட்டாரங்களில் உங்களின் மீது இருந்துவந்த மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

பொருளாதாரம் :


பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் ஆதாயமடைவீர்கள். இணையம் சார்ந்த முதலீடுகளில் திடீர் திருப்பங்கள் காணப்படும்.

உடல் ஆரோக்கியம் :


உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்பாராத வாகன பயணங்களில் அலைச்சல்களும், சோர்வும் உண்டாகும்.

பெண்களுக்கு :


கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் மூலம் மறைமுகமான ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்தியோகம் நிமிர்த்தமான வெளியூர் வாய்ப்புகள் சாதகமாக அமையும். சுயதொழிலில் முன்னேற்றத்தையும், லாபத்தையும் அடைவீர்கள். தோற்றப் பொலிவில் மாற்றங்கள் காணப்படும்.

மாணவர்களுக்கு :


மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறைந்து முன்னேற்றமான வாய்ப்புகள் காணப்படும். மனதில் தோன்றும் இனம்புரியாத சிந்தனைகளை தாயிடம் கலந்து உரையாடுவதன் மூலம் தெளிவு பிறக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :


உத்தியோக பணிகளில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். முயற்சிக்கேற்ப பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோகம் சார்ந்த நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தகவல் தொடர்பு சார்ந்த துறைகளில் ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும்.

வியாபாரிகளுக்கு :


வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறைந்து முன்னேற்றம் உண்டாகும். புதிய கிளைகள் தொடங்குவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். கமிஷன் தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைக்கேற்ப புதிய முதலீடுகளை மேற்கொள்வது நல்லதொரு மாற்றத்தையும், புதிய அத்தியாயத்தையும் உருவாக்கும். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

விவசாயிகளுக்கு : 


விவசாயத்துறையில் பெரியோர்களின் ஆலோசனைகள் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கும். வேலையாட்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். பணப்பயிர் மற்றும் எண்ணெய் வித்துகளின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு : 


அரசியல் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலை உண்டாகும். எண்ணிய விதத்தில் செயல்களை செய்து முடிப்பீர்கள். எந்தவொரு விஷயத்திலும் லாபமும், ஆதாயமும் ஏற்படும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்தி முன்னேற்றமான எதிர்காலத்தை உருவாக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

கலைஞர்களுக்கு :


கலை சார்ந்த துறைகளில் செய்கின்ற முயற்சிக்கேற்ப முன்னேற்றத்தை உருவாக்க இயலும். உங்களின் மீதான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகங்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

நன்மைகள் : 


வர இருக்கின்ற குருபெயர்ச்சியின் மூலம் நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். வாழ்க்கைத் துணை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான செயல்கள் கைகூடும்.

கவனம் :


வர இருக்கின்ற குருபெயர்ச்சியின் மூலம் மனதளவில் பலதரப்பட்ட சிந்தனைகளினால் குழப்பங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும்.

வழிபாடு :


வியாழக்கிழமைதோறும் சித்தர்களை வழிபாடு செய்துவர சிந்தையில் இருக்கக்கூடிய குழப்பங்கள் நீங்கி தெளிவு புத்துணர்ச்சியும் பிறக்கும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே...!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...