கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 - கன்னி (Guru Peyarchi Palangal - Kanni)...

 


 குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023  - கன்னி (Guru Peyarchi Palangal - Kanni)...


வெளிப்படையாக மற்றவர்களை சில நேரங்களில் விமர்சிக்கும் மண்ணின் மைந்தர்களே...!




ஆரம்பத்தில் அந்தரத்தில் கோட்டை கட்டும் நீங்கள், பிற்காலத்தில் ஆள்பவர்களுக்கு நெருக்கமாவீர்கள். உங்கள் சுக ஸ்தானாதி பதியான குருபகவான் கடந்த ஓராண்டு காலமாக 5-ம் வீட்டிலும், 6-ம் வீட்டிலும் மாறிக் கொண்டேயிருந்ததால் கொஞ்சம் கூட ஓய்வெடுக்க முடியாத படி வேலைச்சுமை இருந்ததே! இப்போது குருபகவான் 14.04.2022 முதல் 22.04.2023 வரை ஏழாம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்வதால் குழம்பிக் கிடந்த உங்கள் மனம் இனி தெளிவடையும்.. குருபகவான் உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்ப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த கணவன் - மனைவி இனி ஒன்று சேருவீர்கள். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. வீட்டை முழுமையாகக் கட்டி முடிப் பீர்கள். சொத்துப் பிரச்சினை தீரும்.




மூத்த சகோதரி பண உதவி செய்வார். இளைய சகோதரர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். குருபகவான் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் தொட்ட காரியம் துலங்கும். ஷேர் மூலம் பணம் வரும். வீடு,வாகன வசதி பெருகும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். குருபகவான் உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் கவுரவப் பதவிகள் தேடி வரும். வி.ஐ.பிகளின் வீட்டு விசேஷங்களில் தனி மரியாதை கிடைக்கும். சொந்த ஊர் கோயில் திருவிழாவை முன்னின்று நடந்துவீர்கள்.




குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:

 14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்களின் சுக, சப்தமாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் தடைகள் நீங்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த உரசல் போக்கு மாறும். அரசாங்கத்தால் அனுகூலமுண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள்.




30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் உங்களின் பூர்வ புண்ய, ரோகாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வீட்டில் தள்ளிப் போய்க் கொண்டிருந்த கல்யாணம், காது குத்து போன்ற சுபநிகழ்ச்சிகள் உடனே முடியும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பணவரவு ஓரளவு நிம்மதி தருவதாக இருந்தாலும் செலவுகள் துரத்தும். பழைய கடனை போராடி பைசல் செய்வீர்கள். கனவுத் தொல்லை, தூக்கமின்மை விலகும்.




24.02.2023 முதல் 22.04.2023 வரை இக்காலகட்டத்தில் குருபகவான் உங்கள் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உடல் சோர்வு, அசதி, கை, கால், மூட்டுவலி நீங்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். இடவசதியில்லாத வீட்டிலிருந்து விசாலமான வீட்டில் குடிபுகுவீர்கள். சிலர் புதிதாக வீடு, மனைவாங்குவீர்கள். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். சகோதரி உதவுவார். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரிகளே, முடங்கிக் கிடந்த நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள். டிசம்பர், மார்ச் மாதங்களில் வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். புதிய ஏஜென்ஸி எடுப்பீர்கள்.




வராது என்றிருந்த பழைய பாக்கிகள் வந்து சேரும். புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். படித்த அனுபவமுள்ள வேலையாட்களை கூடுதலாக நியமிப்பீர்கள். ரியல் எஸ்டேட், உணவு விடுதி, வாகன உதிரிபாகங்களால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் எதற்கெடுத்தாலும் நிலவி வந்த பிரச்சினைகள் இனி ஓயும். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். உத்யோகஸ்தர்களே! மேலதிகாரியின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். மறைமுக எதிர்ப்புகள், வீண்பழி, வேலைச்சுமை நீங்கும். நினைத்தபடி பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் புதிய வாய்ப்புகளும் தேடிவரும். இந்த குரு மாற்றம் சமூகத்தில் மதிப்பு, மரியாதை தருவதுடன் எதிர்பாராத திடீர் திருப்பங்களையும் அமைத்துத் தரும்.




பரிகாரம்: கடலூர் அருகிலுள்ள திருவந்திபுரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஹயக்ரீவரை புதன்கிழமையில் சென்று வணங்குங்கள். பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோருக்கு உதவுங்கள். வளம் பெருகும்.




குருப்பெயர்ச்சி பலன் - கன்னி


குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை


திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை


குருதேவர் தான் நின்ற ராசியிலிருந்து


ஐந்தாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும்


ஏழாம் பார்வையாக ஜென்ம ராசியையும்


ஒன்பதாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தையும் பார்வையிடுகின்றார்.

கனிவான பேச்சுக்களின் மூலம் காரியங்களை சாதிக்கக்கூடிய கன்னி ராசி அன்பர்களே...!

வருகின்ற குருபெயர்ச்சியில் சத்ரு ஸ்தானமான ஆறாம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். 


குருவானவர் தான் நிற்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வாழ வைக்கும் தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் குரு பார்வை கோடி புண்ணியம் என்று அழைக்கப்படுகின்றது.



பலன்கள் :


மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகளும், வெளிவட்டாரங்களில் செல்வாக்கும், மதிப்பும் அதிகரிக்கும். மனதில் நீண்ட நாட்களாக நினைத்திருந்த சில காரியங்கள் கைகூடி வரும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன்களை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். 


பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். 

பொருளாதாரம் :


பொருளாதாரம் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் குறையும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வர்த்தகம் தொடர்பான துறைகளில் சிந்தித்து செயல்பட்டால் லாபகரமான வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

உடல் ஆரோக்கியம் :


உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சியான தருணங்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகளும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உருவாகும். சிறு தூரப் பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும்.

பெண்களுக்கு :


உங்களுடைய எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். சிறு மற்றும் குறுந்தொழில் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பாகப்பிரிவினையில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். சகோதர உறவுகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு :


மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தகவல் தொடர்புத்துறை சார்ந்த கல்வியில் மேன்மை ஏற்படும். அரசு தொடர்பான உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :


எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். 

வியாபாரிகளுக்கு :


வியாபார பணிகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். அனுபவமிக்க வேலையாட்களின் ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புகள் மேம்படும். மனை விற்பது, வாங்குவது மற்றும் உணவு சார்ந்த வியாபாரங்களில் லாபம் உண்டாகும். கூட்டாளிகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

விவசாயிகளுக்கு :


விவசாயம் சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வரப்பு தொடர்பான பிரச்சனைகள் குறையும். 

அரசியல்வாதிகளுக்கு :


சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயமான சூழ்நிலைகள் காணப்படும். உங்களின் மீதான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிகள் உண்டாகும். அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் சாதகமாக அமையும். சொத்துக்கள் வாங்குவதில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும்.

கலைஞர்களுக்கு :


கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். வயதில் மூத்தவர்களின் ஆலோசனைகள் நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும். மறைமுகமான சிறு முயற்சிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். வித்தியாசமான சிந்தனைகளுடன் அங்கீகாரங்களும், பாராட்டுகளும் கிடைக்கும். 

நன்மை :


இந்த குருபெயர்ச்சியின் மூலமாக மனதில் நினைத்து எண்ணங்களை செயல் வடிவில் மாற்றி, செல்வாக்கினை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

கவனம் :


இந்த குருபெயர்ச்சியில் நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நன்மையை ஏற்படுத்தும்.

வழிபாடு :


வியாழக்கிழமைதோறும் அர்த்தநாரீஸ்வரரை வழிபாடு செய்துவர தம்பதியர்களுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். 

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே...!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...