கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 - துலாம் (Guru Peyarchi Palangal - Thulaam)...

  



குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023  - துலாம் (Guru Peyarchi Palangal - Thulaam)...



வெகுளித்தனமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திழுப்பவர்களே...!




தவறு செய்தால், தலைவனாக இருந்தாலும் தட்டிக் கேட்கத் தயங்க மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டிலும், 5-ம் வீட்டிலும் மாறி மாறி அமர்ந்து உங்களை பலவிதங்களிலும் சிரமப்படுத்திய குருபகவான் இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை 6-ம் வீட்டுக்குள் ஆட்சிப் பெற்று அமர்வதால் சந்தோஷத்தையும், சங்கடங்களையும் கலந்து தருவார். உங்களின் பிரபல யோகாதிபதிகளான சனிபகவான் மற்றும் புதனின் நட்சத்திரத்தில் குரு செல்வதால் அவ்வப்போது உங்களுக்கு யோகபலன்களையும் அள்ளித் தருவார். 6-ல் குரு அமர்வதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில காரியங்களை பலமுறை அலைந்து முடிக்க வேண்டி வரும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.




குருபகவான் உங்களின் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பேச்சில் இருந்த கடுமை குறையும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உங்கள் குடும்ப விஷயத்தை வெளியாரிடம் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகள் உயர்கல்வியில் வெற்றி பெற்று உங்களை தலைநிமிரச் செய்வார்கள். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த பிரச்சினைகளெல்லாம் ஓயும். சகோதர, சகோதரிகள் உறுதுணையாக இருப்பார்கள். குரு உங்களின் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் புதிய வேலை கிடைக்கும். அரைகுறையாக நின்று போன கட்டிடப் பணிகள் முழுமையடையும். வீட்டில் தள்ளிப் போய் கொண்டிருந்த கல்யாணம் சிறப்பாக நடந்து முடியும். அலுவலக சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி கிடைக்கும். குரு உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் வீண் செலவுகளையெல்லாம் கட்டுப்படுத்துவீர்கள். புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் பாக்யம் கிட்டும்.




குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:




14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்களின் தைரிய ரோகாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் எதிர்பாராத பயணங்கள், சுபச் செலவுகள், அலைச்சல் என வந்து போகும். திட்டமிட்டபடி சில காரியங்களை செய்ய முடியாமல் போகும். அவ்வப்போது, வீண் அலைச்சல் வந்து போகும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்து போடாதீர்கள். வீணாக சந்தேகப்பட்டு நல்லவர்களை இழக்க வேண்டி வரும்.




30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் உங்களின் சுக, பூர்வ புண்யாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் நிலவி வந்த பனிப்போர் மறையும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். மகளுக்கு வேலை கிடைக்கும். திருமணமும் நல்ல விதத்தில் முடியும். உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகள் வெளிநாடு செல்வார்கள். குழந்தை பாக்யம் உண்டு. செலவுகளை ஈடுகட்ட பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். தாயாருக்கு இருந்த மூட்டுவலி, முழங்கால் வலியெல்லாம் நீங்கும். சிலருக்கு அயல்நாடு சென்று வரும் வாய்ப்பு உண்டாகும்.




24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குருபகவான் உங்கள் பாக்ய, விரயஸ்தானாதிபதி புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் நினைத்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் தக்க சமயத்தில் கைக்கு வரும். கடனாக வாங்கியிருந்த தொகையைத் தந்து தீர்ப்பீர்கள். தந்தைவழியில் உதவியுண்டு. உறவினர்கள், நண்பர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். கவுரவப் பதவிகள் தேடி வரும். பழைய நண்பர்களால் ஆதாயமுண்டு. புதிய வாகனம் வாங்குவீர்கள்.




வியாபாரிகளே, தேங்கிக்கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வரவேண்டிய பழைய பாக்கிகளெல்லாம் வசூலாகும். கடையை கொஞ்சம் அழகுபடுத்துவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, கமிஷன், ரியல் எஸ்டேட், மரவகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். உத்யோகஸ்தர்களே, காலம்நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டியது வரும். என்றாலும் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சம்பள உயர்வுடன் பதவி உயர்வும் உண்டு.




இந்த குரு மாற்றம் ராகு, கேதுவின் தாக்கத்தை ஓரளவு குறைப்பதுடன், மாறுபட்ட அனுபவங்களையும், ஒரு சில வெற்றிகளையும் தருவதாக அமையும்.




பரிகாரம்: காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரையும், தட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமையில் சென்று தரிசியுங்கள். பார்வையிழந்தவர்களுக்கு உதவுங்கள். பலம் கூடும்.




குருப்பெயர்ச்சி பலன் - துலாம்


குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை


திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து


ஐந்தாம் பார்வையாக ஜீவன ஸ்தானத்தையும்


ஏழாவது பார்வையாக விரய ஸ்தானத்தையும்


ஒன்பதாம் பார்வையின் மூலமாக பார்வையாக குடும்ப ஸ்தானத்தையும் பார்வையிடுகின்றார்.

எதிலும் நடுநிலை தன்மையுடன் செயல்படக்கூடிய துலாம் ராசி அன்பர்களே...!

வருகின்ற குருபெயர்ச்சியில் ஐந்தாம் ஸ்தானமான புத்திர ஸ்தானத்தில் இருந்துவந்த குருபகவான் சத்ரு ஸ்தானமான ஆறாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.


குருவானவர் தான் நிற்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வாழ வைக்கும் தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் குரு பார்வை கோடி புண்ணியம் என்று அழைக்கப்படுகின்றது.



பலன்கள் :


குடும்ப உறுப்பினர்கள் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். மற்றவரின் செயல்பாடுகளில் தலையிடுவதை குறைத்துக் கொள்வது நல்லது. பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இளைய சகோதரர்கள் வழியில் சில விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். சிகை அலங்காரம் தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். ஆலயம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும்.

பொருளாதாரம் :


பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் அமையலாம். நண்பர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கையிருப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம் :


பயனற்ற பயணங்களை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையை ஏற்படுத்தும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பழக்கவழக்கம் தொடர்பான விஷயங்களில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். 

பெண்களுக்கு :


கணவன்-மனைவிக்கிடையே பொறுமையை கையாளவும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். பூமி மற்றும் கால்நடை தொடர்பான விஷயங்களில் லாபம் அதிகரிக்கும். இன்பச் சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்புகள் அமையும். கணிதம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

மாணவர்களுக்கு :


மாணவர்கள் பாடங்களை சற்று கவனத்துடன் படிக்க வேண்டும். புதிய நண்பர்களின் அறிமுகம் மாற்றத்தை உருவாக்கும். நபர்களின் தன்மைகளை அறிந்து பழகுவது மேன்மையை ஏற்படுத்தும். விளையாட்டுப் போட்டிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பேச்சுத்திறனை வெளிப்படுத்தக்கூடிய விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதுவிதமான கலைகளை கற்பதில் ஆர்வமும், ஆசையும் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :


உத்தியோக பணிகளில் வேலைப்பளுவும், பொறுப்புகளும் அதிகரிக்கும். திறமைக்கான பாராட்டுகளும், அங்கீகாரமும் காலதாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும், அவர்களைப் பற்றிய புரிதலும் மேம்படும். மற்றவர்களை நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவதில் சிந்தித்து செயல்படவும். கிடைக்கும் சிறு தொகையாக இருந்தாலும் அதனை பாதுகாத்து மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

வியாபாரிகளுக்கு :


வியாபார பணிகளில் இருந்துவந்த சோர்வுகளும், மந்தத்தன்மையும் படிப்படியாக குறையும். நிலம் விற்பது, வாங்குவது தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். இயந்திரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் மேம்படும். அரசு தொடர்பான விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபார அபிவிருத்தி தொடர்பான முதலீடுகள் மேம்படும். ஆபரணம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். 

விவசாயிகளுக்கு :


விவசாயம் சார்ந்த துறைகளில் முன்னேற்றமான பலன்களும், ஆலோசனைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். விளைச்சலுக்கு உண்டான லாபம் கிடைக்கும். கால்நடை சார்ந்த விஷயங்களில் அனுகூலமான சூழ்நிலைகள் காணப்படும். பாசனம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மறைமுகமான ஒத்துழைப்புகள் நம்பிக்கையை உருவாக்கும்.

அரசியல்வாதிகளுக்கு :


அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பதவிகளும், உயர்வான வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய யோசனைகளை செயல்படுத்தி ஆதரவுகளை மேம்படுத்துவீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். கட்சி நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். 

கலைஞர்களுக்கு :


கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில யோகங்கள் உண்டாகும். மனதில் இருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் புதிய நுட்பங்களை கையாளுவீர்கள். எப்பொழுதும் பொலிவுடனும், மகிழ்ச்சியான சூழ்நிலைகளுடனும் காணப்படுவீர்கள். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிறப்பு விருந்தினராக கல்வி தொடர்பான நிறுவனங்களுக்கு சென்று வருவீர்கள்.

நன்மை :


இந்த குருபெயர்ச்சியின் மூலமாக குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பின் மூலம் வியாபார பணிகளில் மேன்மையை உருவாக்கி புதிய இலக்குகளையும், அபிவிருத்தி தொடர்பான முயற்சிகளையும் செய்வீர்கள்.

கவனம் :


இந்த குருபெயர்ச்சியின் மூலம் செய்கின்ற சில பணிகளில் தடைகளும், உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகளும் காணப்படும்.

வழிபாடு :


வியாழக்கிழமைதோறும் காலபைரவரை வழிபாடு செய்துவர கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே...!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...