கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

D.A. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
D.A. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

D.A. Hike - Pensionersக்கான தகவல்

 

அகவிலைப்படி உயர்வு - ஓய்வூதியர்களுக்கான தகவல்


Dearness Allowance Increase - Information for Pensioners


 பேரன்புடையீர், வணக்கம். 

தங்களின் கனிவான கவனத்திற்கு தெரிவிக்க விரும்புகிறோம். இன்றைய தினம் (25.11.2025) ஓய்வூதியம் வழங்கும் அலுவலர், சென்னை அவர்களிடம் தொடர்பு கொண்டு விசாரித்ததில், நவம்பர் 2025 மாதத்திற்கு வழங்கப்படவுள்ள ஒய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்துடன், அண்மையில் உயர்த்தப்பட்ட 3% அகவிலைப்படி, (ஜுலை 2025 முதல் அக்டோபர் 2025 முடிய நான்கு மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையும் சேர்த்து), அத்துடன் நவம்பர் 2025க்கான 3% அகவிலைப்படியும் சேர்த்து வழங்கப்படும் எனவும், வரும் 28.11.2025 அன்றே அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என PPO அவர்கள் தெரிவித்தார். எனவே தாங்கள் சென்ற மாதம் பெற்ற ஒய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்துடன் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 3% ஐந்து மாதங்களுக்குண்டான  தொகையும் சேர்க்கப்பட்டுள்ளதா என கணக்கிட்டு பார்த்துக் கொள்ள வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம். (கணக்கீடு உதாரணம் : அடிப்படை ஒய்வூதியம் (அல்லது) குடும்ப ஒய்வூதியம் ÷100×3×4=நான்கு மாதங்களின் நிலுவைத்தொகை உடன் நவம்பர் மாத 3% உயர்வும் சேர்த்து ) அகவை 80க்கு மேலுள்ளவர்கள் பெறும் கூடுதல் ஓய்வூதியத்திற்கும் அகவிலைப்படி உயர்வு உண்டு.


OnePlus 15 | 16GB+512GB | Sand Storm | India's First Snapdragon® 8 Elite Gen 5 | 7300mAh Battery | Personalised AI | Game-Changing 165Hz Display | Triple 50MP Camera with 4K 120fps Dolby Vision


https://amzn.to/4pyVFCX





Dearness Allowance உயர்வு தொடர்பான அரசாணைகள் விவரம் 7/2016 முதல் 7/2025 வரை


அகவிலைப்படி உயர்வுகள் சார்ந்த அரசாணைகள் விவரம் - ஜூலை 2016 (7/2016) முதல் ஜூலை 2025 (7/2025) வரை


Government Orders regarding Dearness Allowance Hike from July 2016 to July 2025


G.O.s regarding D.A. Hike from 7/2016 to 7/2025

-----------------------------------

G.O. Ms. No. 303

Dated : 11-10-2017

7/2016ல்                 2%


  1/2017ல்               4%


7/2017ல்                 5%


G.O. Ms. No. 123

Dated : 11-4-2018.  

1/2018ல்                 7%


G.O. Ms. No. 313

Dated : 18-9-2018

7/2018ல்                 9%


G.O. Ms. No. 151

Dated : 20-5-2019

1/2019. ல்             12%


G.O. Ms. No. 323

Dated : 17-10-2019

7/2019 ல்              17%


1-1-2020 TO

Dated : 31-12-2021

வரை                    17%


G.O. Ms. No. 3

Dated : 1-1-2022

1/2022ல்               31%


G.O. Ms. No. 254

Dated : 18-8-2022

7/2022ல்               34%


G.O. Ms. No. 7

Dated : 6-1-2023

1/2023ல்               38%


G.O. Ms. No. 142

Dated : 17-5-2022

4/2023ல்              42%


G.O. Ms. No. 310

Dated : 27-10-2023ல்     

7/2023ல்               46%


G.O. Ms. No. 132

Dated : 12-3-2024

1/2024 ல்              50%


G.O. Ms. No. 317

Dated : 18-10-2024

7/2024 ல்              53%


G.O. Ms. No. 95

Dated : 28-4-2025

1/2025ல்               55%


G.O. Ms. No. 247

Dated : 13-11-2025

7/2025 முதல்      58%



அனைத்து அரசு ஆணைகளும் தமிழ்நாடு அரசின் நிதித்துறை வலைதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் 



VENUS ZYLO 3 Litre Instant water heater with 3kW copper element | Instant Geyser for Bathroom and Kitchen | Fast Heating | Compact & Durable | Auto Shut-Off | 5 Year Inner tank warranty.


https://amzn.to/4pu6Pca




அகவிலைப்படி 58% சதவீதமாக உயர்வு




மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 58% சதவீதமாக உயர்வு


அகவிலைப்படி 55%லிருந்து 58% சதவீதமாக உயர்வு : மத்திய அரசு அமைச்சரவை ஒப்புதல்


மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைபடி உயர்வு. ஜூலை 1 முதல் முன் தேதியிட்டு வழங்க ஒப்புதல்.


அகவிலைப்படி உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு


மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 3% சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்


அகவிலைப்படி 55% லிருந்து 58% சதவீதமாக உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு


👉 பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்


👉 தீபாவளி பரிசாக அகவிலைப்படி உயர்வு - மத்திய அரசு


👉 மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்தி வழங்க, பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்


👉 3% அகவிலைப்படி உயர்வுக்கு, பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல்


👉 மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 55%லிருந்து 58%ஆக அதிகரித்து வழங்க கேபினட் ஒப்புதல்


👉 3% அகவிலைப்படி உயர்வை நடப்பாண்டின் ஜூலை 1ஆம் தேதியிட்டு வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்


Cabinet

Cabinet approves additional instalment of three per cent Dearness Allowance to Central Government employees and Dearness Relief to Pensioners

Posted On: 01 OCT 2025 3:06PM by PIB Delhi

The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi today has approved to release an additional instalment of Dearness Allowance (DA) to Central Government employees and Dearness Relief(DR) to pensioners w.e.f 01.07.2025 representing an increase of 3% over the existing rate of 55% of the Basic Pay/Pension, to compensate against price rise.

The combined impact on the exchequer on account of increase in both Dearness Allowance and Dearness Relief would be Rs.10083.96 crore per annum. This will benefit about 49.19 lakh Central Government employees and 68.72 lakh pensioners.

This increase is in accordance with the accepted formula, which is based on the recommendations of the 7th

Central Pay Commission.

MJPS/SKS

(Release ID: 2173541)



மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு. மத்திய அரசு அறிவிப்பு. தசரா மற்றும் தீபாவளி பரிசாக அமையும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்.

1. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது அவர்களுக்கு தசரா பரிசாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2. பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றை அறிவிக்கிறது.

3. கடந்த மார்ச் மாதம், ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை 2% உயர்வுடன் மத்திய அரசு அறிவித்தது. இந்த உயர்விற்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி 53% லிருந்து 55% ஆக அதிகரித்தது.

4. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த 3% அகவிலைப்படி உயர்வால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி 58% ஆக உயர்ந்துள்ளது.

5. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

6. இந்த 3% அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் பின்னோக்கி அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

7. இந்த உயர்வால் 1.15 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.


மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி ( D.A.) உயர்வு - விரைவில் அறிவிப்பு

 

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி ( Dearness Allowance) உயர்வு - விரைவில் அறிவிப்பு


ஜூலை 2025 இல் அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு கிடைக்கலாம் - கணக்கீட்டைப் பார்க்கவும்.
ஜூன் 2025 இல் AICPI-IW குறியீடு 0.5 புள்ளிகள் உயர்ந்து 144.5 ஐ எட்டினால், 12 மாத சராசரி AICPI சுமார் 144.17 ஆக அதிகரிக்கும். 7வது சம்பளக் கமிஷன் சூத்திரத்தின்படி இந்த சராசரியை சரிசெய்த பிறகு, மத்திய அரசு ஊழியர்களுக்கான எதிர்பார்க்கப்படும் அகவிலைப்படி (DA) தோராயமாக 58.85% ஆக இருக்கும்.

DA இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.
கடந்த 12 மாதங்களின் சராசரி AICPI-IW தரவுகளின் அடிப்படையில் DA கணக்கிடப்படுகிறது. இது 7வது சம்பளக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஜனவரி முதல் மே வரையிலான புள்ளிவிவரங்கள் பெறப்பட்டுள்ளன, மேலும் அவை 3% அதிகரிப்புக்கான அடிப்படையை உருவாக்குகின்றன. இப்போது ஜூன் மாத புள்ளிவிவரம் இறுதி DA உயர்வை தீர்மானிக்கும்.

DA (%) = [(கடந்த 12 மாதங்களின் CPI-IW சராசரி) – 261.42] ÷ 261.42 × 100

இங்கு 261.42 என்பது குறியீட்டின் அடிப்படை மதிப்பு. இந்த சூத்திரம் CPI-IW இன் மாதாந்திர சராசரியை அடிப்படையாகக் கொண்டு DA ஐ தீர்மானிக்கிறது.

அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்படும்?
புதிய அகவிலைப்படி ஜூலை 2025 முதல் அமலுக்கு வந்தாலும், அரசாங்கம் வழக்கமாக செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில், பண்டிகைக் காலத்தை ஒட்டி அறிவிப்பது வழக்கம். இந்த முறையும், அதுவே நடக்க வாய்ப்புள்ளது, மேலும் இந்த அறிவிப்பு தீபாவளியை ஒட்டி வெளியிடப்படலாம்.

7வது சம்பள கமிஷன் இறுதி கட்டத்தில், 8வது கமிஷன் இன்னும் இழுபறியில் உள்ளது.
7வது சம்பளக் குழுவின் பதவிக்காலம் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைவதால், ஜூலை-டிசம்பர் 2025 இல் இந்த அகவிலைப்படி உயர்வு கடைசியாக திட்டமிடப்பட்ட அதிகரிப்பாக இருக்கும்.


8வது சம்பள கமிஷன் ஜனவரி 2025 இல் அறிவிக்கப்பட்டாலும், தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களின் பெயர்களை அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை. குறிப்பு விதிமுறைகளும் (ToR) இன்னும் வரவில்லை. ஏப்ரல் மாதத்திற்குள் ToR தயாராகிவிடும் என்றும் கமிஷன் பணியைத் தொடங்கும் என்றும் அரசாங்கத்திடமிருந்து அறிகுறிகள் இருந்தன, ஆனால் இதுவரை உறுதியான புதுப்பிப்பு எதுவும் இல்லை.

8வது சம்பள கமிஷன் 2 ஆண்டுகள் தாமதமாகலாம்.
முந்தைய சம்பள கமிஷன்களின் வரலாற்றைப் பார்த்தால், எந்தவொரு கமிஷனின் பரிந்துரைகளும் செயல்படுத்தப்பட 18 முதல் 24 மாதங்கள் ஆகும். இதுபோன்ற சூழ்நிலையில், 8வது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் 2027 ஆம் ஆண்டுக்குள் மட்டுமே செயல்படுத்தப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதி. இதன் பொருள் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் தற்போதைய அடிப்படை சம்பளத்தில் இன்னும் பல அகவிலைப்படி உயர்வைப் பெறுவார்கள்.

ஆறுதலான விஷயம்: நிலுவைத் தொகை பெறப்படும்.

தாமதம் ஏற்பட்டாலும், 8வது சம்பளக் குழுவின் கீழ் சம்பளம் மற்றும் ஓய்வூதியப் பலன்களை அரசாங்கம் நிலுவைத் தொகையாக வழங்கும், அவை ஜனவரி 1, 2026 முதல் பொருந்தும் என்று கருதுகிறது. அதாவது, ஊழியர்களுக்குப் பலன் கிடைப்பது மட்டுமல்லாமல், நிலுவைத் தொகையும் மொத்தமாக வழங்கப்படும்.




IFHRMSல் DA நிலுவை கணக்கீடு விளக்கம்

 


IFHRMSல் அகவிலைப்படி  நிலுவை கணக்கீடு DA Arrear Calculation  விளக்கம்


அனைவருக்கும் வணக்கம்!! 

DA நிலுவை தவறாக இருப்பின் Pay Sevice இல் Element Delete இல் Retro dearness allownce -M என்று உள்ள நான்கையும் Delete கொடுத்து விட்டு Approve செய்து விடுங்கள்!! 

பின்னர் Dues and deduction மூலம் Retro dearness allowance-M என ஒவ்வொரு மாதத்திற்கும் அந்த மாத கடைசி தேதியை Earned கொடுத்து உரிய தொகையை உள்ளீடு செய்து விட்டு அதையும் Approve செய்து விட்டு Mark For Recalculation கொடுத்தால் உரிய தொகை வந்து விடுகிறது!! 

CPS பிடித்தம் இருப்பின் அதையும் மேற்கண்டவாறு சரி செய்திட வேண்டும்!!

நன்றி 


உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்குதல் தொடர்பாக - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநரின் கடிதம்

 

 

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்குதல் தொடர்பாக - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநரின் கடிதம்


மே 2025 மாத ஊதியத்துடன் அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படும் - கருவூலம் மற்றும் கணக்குத் துறை தகவல்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



From

Tmt. T. Charusree, I.A.S.,

Director of Treasuries and Accounts,

3rd Floor, Perasiriyar K.Anbazhagan Maaligai,

571, Anna Salai, Nandanam,Chennai -600 035


Rc.No. 1438021/D1/2025, Dated: 15.05.2025


Sub:

 Enhancement of Dearness Allowances - claiming the Arrear of DA - instructions -issued -regarding.


Ref

1. G.O.Ms.No.192, Finance (Treasuries and Accounts - II) department, dated:31/05/2024.

2. G.O.Ms.No.95, Finance (Allowances) department dated:28/04/2025.

3. G.O.Ms.No.98, Finance (Allowances) department dated:28/04/2025.

4. G.O.No.99, Finance (Allowances) department dated:28/04/2025.


Sir/ Madam,


I invite kind reference to the Goverment orders above cited.

In the reference 1s cited , the Goverment have issued orders amending the Subsidiary rule 14 under Treasury rule 16 in Tamil Nadu Treasury Code, Volume -I as

"Provided that the Dearness Allowance (DA) arrear shall be claimed in the monthly salary bill along with arrear, if any, positively on the same month consequent on the enhancement of the Dearness Allowance as ordered by the Government from time to time"

In the reference 2nd, 3d and 40 cited, Government have issued orders for enhancement of Dearness Allowance from 01/01/2025 for employees and Pensioners.

In this regard, it is informed that the arrears of Dearness Allowance for employees and pensioners may be admitted/claimed along with the pay bill of this month(05/2025).

Sd. T. Charusree

Director of Treasuries and Accounts

Copy To

1. All Officers ,0/0 DTA, Chennai.

2. All Regional Joint Directors, Treasuries and Accounts Department, Chennai

3. All Senior Superintendents/Superintendents, 0/0 bTA, Chennal.

4. Stock File.

//Forwarded By Order//

Additional Director (Schemes)

 Directorate of Treasuries and Accounts



அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இம்மாத ஊதியத்துடனும் ஓய்வூதியர்களுக்கு இம்மாத ஓய்வூதியத்துடனும் 4 மாத (ஜனவரி - ஏப்ரல் 2025) அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை (DA Arrears) கிடைக்கும்.

01-01-2025 முதல் அகவிலைப்படி 55% ஆக உயர்வு - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

 

01-01-2025 முதல் அகவிலைப்படி 55% ஆக உயர்வு - தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண் : 95, நாள் : 28-04-2025 வெளியீடு


D.A. Hike G.O. Ms No : 95, Dated 28.04.2025


53%லிருந்து 2% உயர்த்தப்பட்டு 55% ஆக நிர்ணயிக்கப்பட்ட DA க்கான அரசாணை


Dearness Allowance increased to 55% from 01-01-2025 - Tamil Nadu Government Order G.O. (Ms) No.: 95, Dated: 28-04-2025 Issued



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...





அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை விதி 110-ன்கீழ் வெளியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை...




Speech by Hon'ble Chief Minister of Tamil Nadu, Shri. M.K. Stalin in the Tamil Nadu Legislative Assembly, issuing various notifications under Rule 110 for the welfare of Government Employees, Teachers and Pensioners - Press Release


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை விதி 110-ன்கீழ் வெளியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை - செய்தி வெளியீடு


 அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்காலத்தில் தேவை அடிப்படையில் திருமண முன் பணம் தொகை 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்


பொங்கல் போனஸ் சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியம் ஆயிரமாக உயர்வு


மகப்பேறு விடுப்பு காலங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்


பழைய ஓய்வூதியம் திட்டம் தொடர்பாக ஆராயும் குழு செப்டம்பர் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கும்


அரசு ஊழியர்கள் குழந்தைகள் உயர்கல்விக்கு தொழில்நுட்பக் கல்லூரிக்கு ரூ. 1 லட்சம்


 - முதல்வர் ஸ்டாலின்


DIPR - TNLA No - 38 - Hon'ble CM Speech - 110 Statement - Govt Servants welfare - Date 28.04.2025


செய்தி வெளியீடு


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை விதி 110-ன்கீழ் வெளியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை


*முதல் அறிவிப்பு; கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திலே, அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை, 01.04.2026 முதல், 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்திட 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.


இருந்தாலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த அறிவிப்பை, இந்த ஆண்டே செயல்படுத்திட கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.


அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய கோரிக்கையைப் பரிசீலித்து, ஈட்டிய விடுப்பு நாட்களில், 15 நாட்கள் வரை 1.10.2025 முதல் சரண் செய்து பணப்பயன் பெறலாம் என்பதை இந்த அவையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த அறிவிப்பின்படி, சுமார் 8 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 3 ஆயிரத்து 561 கோடி ரூபாய் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.


இரண்டாவது அறிவிப்பு: 01-01-2025 முதல் 2 விழுக்காடு அகவிலைப்படியினை


ஒன்றிய அரசு அலுவலர்களுக்கு உயர்த்தி வழங்கிட அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 01-01-2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வினை நடைமுறைப்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 1252 கோடி ரூபாய் கூடுதல் நிதி செலவிடப்படும்.


மூன்றாவது அறிவிப்பு: அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவர்களுடைய


குடும்பத்தினருடன் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில், ஏற்கெனவே இதுவரை வழங்கப்பட்டு வரும் பத்தாயிரம் ரூபாய் பண்டிகை கால முன்பணம் தற்போது இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 இலட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.


நான்காவது அறிவிப்பு; அரசுப் பணியாளர்களுடைய குழந்தைகள் உயர்கல்வி


பயில்வதில் இந்த அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இந்த அடிப்படையில், அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டிலிருந்து தொழிற்கல்வி பயில ஒரு இலட்சம் ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் பயில ஐம்பதாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இந்தக் கல்வி முன்பணம் உயர்வால் தங்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில விரும்பும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.



ஐந்தாவது அறிவிப்பு: அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், தமது


பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஆண்களுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை பலமடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


ஆறாவது அறிவிப்பு: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முன்னாள் கிராம


பணியமைப்பு உட்பட C மற்றும் D பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகை ஐந்நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த உயர்வால் சுமார் நான்கு இலட்சத்து எழுபத்து ஓராயிரம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசிற்கு ஏற்படும் கூடுதல் செலவினம் சுமார் 24 கோடி ரூபாயாக இருக்கும்.


ஏழாவது அறிவிப்பு: ஓய்வூதியதாரர்கள் அவர்தம் குடும்பத்தினருடன் பண்டிகையைச்


சிறப்பாக கொண்டாடிட, தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம், நான்காயிரம் ரூபாயிலிருந்து ஆறாயிரமாக உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த உயர்வால், சுமார் 52 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதனால் பத்து கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.


எட்டாவது அறிவிப்பு: அண்மையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு


ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்து, அந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. பல்வேறு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், இந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் சமர்ப்பித்திட அறிவுறுத்தப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


ஒன்பதாவது அறிவிப்பு; திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாத காலமாக இருந்த விடுப்பை 01.07.2021 முதல் ஓராண்டு காலமாக உயர்த்தப்பட்டு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது உள்ள விதிகளின்படி மகப்பேறு விடுப்பு காலம் தகுதிகாண் பருவத்திற்கு (Probation period) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாக அரசு பணிகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான இளம் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால். தகுதிகாண் பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல் அவர்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பினை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது. மகளிர் முன்னேற்றத்திற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் இந்த அரசு, அரசுப் பணிகளில் பணியாற்றிவரும் மகளிரின் பணி உரிமைகளை பாதுகாக்கும் வகையில், இனிவரும் காலங்களில் அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தினை அவர்களது தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளது.



>>> முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு D.A Hike

 

 மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு


Dearness allowance hike for central government employees


மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு D.A.Hike


ஊழியர்களுக்கு தற்போதைய அகவிலைப்படி 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக உயர்வு


- மத்திய அமைச்சரவை ஒப்புதல்



3 month's D.A. arrears and October salary - Information



மூன்று மாத அகவிலைப்படி நிலுவை மற்றும் அக்டோபர் மாத ஊதியம் குறித்த தகவல்


Information about 3 month's D.A. arrears and October salary 


2024 ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மூன்று மாத அகவிலைப்படி நிலுவையும், அக்டோபர் இம்மாதம் 53℅ அகவிலைப்படியுடன் ஊதியமும் ஒரே தொகையாக அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது


வருமான வரி கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளதால் ஊதியத்தில் வித்தியாசம் வரலாம்


 களஞ்சியம் செயலியில் அவரவர் சம்பள பட்டியலை சரிபார்த்துக் கொள்ளவும்.


3% அகவிலைப்படி உயர்வுக்கு அரசு அலுவலர்கள் & ஆசிரியர்கள் சங்கங்கள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பு...

 அகவிலைப்படி 3% உயர்வுக்கு அரசு அலுவலர்கள் & ஆசிரியர்கள் சங்கங்கள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்...




D.A. Arrear Generate Procedure in IFHRMS

 

IFHRMSல் அகவிலைப்படி உயர்வு - D.A. Arrear நிலுவைத் தொகை பட்டியல் தயார் செய்யும் வழிமுறை



 D.A. Arrear Generate Procedure in IFHRMS



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


3% increase in D.A. for Government servants and teachers with effect from 01.07.2024...


01.07.2024 முதல் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு...


அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...


Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M.K.Stalin has announced that the 50 percent dearness allowance for government officials and teachers will be increased to 53 percent from 01.07.2024...





DA 3% Hiked for central government Employees


மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: 01-07-2024 முதல் முன் தேதியிட்டு வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்...


இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 50% இலிருந்து 53% ஆக அகவிலைப்படி இருக்கும்...


DA 3% Hiked for central government Employees...


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2024 முதல் 3 % அகவிலைப்படி உயர்வு....



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Cabinet approves additional instalment of three percent of Dearness Allowance to Central Government employees and Dearness Relief to Pensioners


Posted On: 16 OCT 2024 3:20PM by PIB Delhi


The Union Cabinet, chaired by the Prime Minister Shri Narendra Modi, has approved an additional instalment of Dearness Allowance (DA) to Central Government employees and Dearness Relief (DR) to pensioners w.e.f. 01.07.2024 representing an increase of three percent (3%) over the existing rate of 50% of the Basic Pay/Pension, to compensate against price rise.

This increase is in accordance with the accepted formula, which is based on the recommendations of the 7 Central Pay Commission.  The combined impact on the exchequer on account of both DA and DR would be Rs.9,448.35 crore per annum.

This will benefit about 49.18 lakh central government employees and 64.89 lakh


உயர்த்தி அறிவிக்கப்பட்ட 4% அகவிலைப்படியை மாத ஊதியத்தில் சேர்த்தல் & நிலுவைத்தொகை தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையரின் கடிதம்...

 

 சமீபத்தில் உயர்த்தி அறிவிக்கப்பட்ட 4% DA இம்மாத சம்பளத்தில் வழங்கப்படமாட்டாது.  அது ஏப்ரல் 2024 மாதம் முதல் சம்பளத்தில் சேர்த்து வழங்கப்படும். மேலும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி  Jan,Feb & March -2024 ஆகிய மூன்று மாதங்களுக்கும் சேர்த்து ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் நிலுவையாக  வழங்கப்படும்..


Treasuries and Accounts - Kalanjiyam (IFHRMS 2.0) - Dearness Allowance enhanced from 46% to 50% w.e.f Jan 2024 Instructions - Letter from Commisioner of Treasuries and Accounts...


 உயர்த்தி அறிவிக்கப்பட்ட 4% அகவிலைப்படியை மாத ஊதியத்தில் சேர்த்தல் & நிலுவைத்தொகை தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையரின் கடிதம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


01-01-2024 முதல் அறிவிக்கப்பட்டுள்ள 4% அகவிலைப்படி உயர்வினால், அடிப்படை ஊதியத்தைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாதம் எவ்வளவு அகவிலைப்படி உயரும்? - கணக்கீடு - 4% D.A., Hike...

 


>>> 01-01-2024 முதல் அறிவிக்கப்பட்டுள்ள 4%  அகவிலைப்படி உயர்வினால், அடிப்படை ஊதியத்தைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாதம் எவ்வளவு அகவிலைப்படி உயரும்? - கணக்கீடு (As per 4% increase in D.A., how much will each Person's Dearness Allowance increase per month based on basic pay? - Calculation)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - 01-01-2024 முதல் 46% லிருந்து 50% ஆக உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 539, நாள்: 12-03-2024...


 தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு  4% அகவிலைப்படி உயர்வு - 01-01-2024 முதல் 46% லிருந்து 50% ஆக உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 539, நாள்: 12-03-2024...




4% Increase in Dearness Allowance to Tamil Nadu Govt Servants, Teachers, Pensioners, Family Pensioners - Increase from 46% to 50% with effect from 01-01-2024 - Chief Minister Announced - Tamil Nadu Government Press Release No: 539, Date: 12-03-2024...





மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - 01-01-2024 முதல் 46% லிருந்து 50% ஆக உயர்வு - நிதித்துறை அலுவலகக் குறிப்பாணை...


 மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - 01-01-2024 முதல் 46% லிருந்து 50% ஆக உயர்வு - நிதித்துறை அலுவலகக் குறிப்பாணை வெளியீடு...


4% Increase in Dearness Allowance for Central Government Employees - Increase from 46% to 50% w.e.f. 01-01-2024 - Finance Department Office Memorandum Issued...



>>> Click Here to Download Finance Department Office Memorandum...


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படியினை உயர்த்தி வழங்கியமைக்காக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர் (Executives of Tamil Nadu Government Employees and Teachers Unions met Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M.K.Stalin and expressed their gratitude for increasing the 4% Dearness Allowance)...


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படியினை உயர்த்தி வழங்கியமைக்காக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர் (Executives of Tamil Nadu Government Employees and Teachers Unions met Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M.K.Stalin and expressed their gratitude for increasing the 4% Dearness Allowance)...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...















>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

01-07-2023 முதல் 4% அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியீடு - G.O.(Ms).No.310, Dated: 27-10-2023 - Allowances - Dearness Allowance - Enhanced Rate of Dearness Allowance from 1st July 2023 - Orders - Issued...


 அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியீடு - G.O.(Ms).No.310, Dated: October 27, 2023 - Allowances - Dearness Allowance - Enhanced Rate of Dearness Allowance from 1st July 2023 - Orders - Issued...



>>> Click Here to Download G.O.(Ms).No.310, Dated: October 27, 2023...



>>> 01-07-2023 முதல் அறிவிக்கப்பட்டுள்ள 4%  அகவிலைப்படி உயர்வினால், அடிப்படை ஊதியத்தைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாதம் எவ்வளவு அகவிலைப்படி உயரும்? - கணக்கீடு...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Dr. Radhakrishnan Awardக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்  >>> தரவிறக்கம் செய்...