தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6
ந.க.எண்.756/டி1/2022, நாள். 18.08.2022
பொருள் : தொடக்கக் கல்வி - சார்நிலைப்பணி - 2021 - 2022 - பொது மாறுதல் - பிற துறையில் இருந்து தொடக்கக் கல்வி துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெற தடையில்லா சான்று பெற்ற ஆசிரியர்களின் விண்ணப்பம் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.
பார்வை 1. அரசாணை (நிலை) எண்.176, பள்ளிக் கல்வி (பக5(1)) துறை, நாள்.17.12.2021
2. தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்.756/டி1/2022, நாள்.06.01.2022
பார்வை 1-ல் காணும் அரசாணையில் 2021 - 2022 -ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் மாறுதல், பணி நிரவல் மற்றும் பதவி உயர்வு சார்பாக பொது மாறுதல் கலந்தாய்வு கொள்கை வகுக்கப்பட்டு அதனை பின்பற்றி 2021 - 2022 -ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல், பதவி உயர்வு , பணிநிரவல் கலந்தாய்வுகள் மற்றும். மனமொத்த மாறுதல் கலந்தாய்வுகள் கல்வி மேலாண்மைத் தகவல் (8145) மூலம் நடைபெற்றது.
தற்போது அலகு விட்டு அலகு மாறுதலுக்கு தடையில்லா சான்று பெற்ற பிற துறையிலிருந்து, தொடக்கக் கல்வித் துறைக்கு மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள், தங்கள் விண்ணப்பங்களை 24.08.2022 மற்றும் 25.08.2022 இல் கல்வி மேலாண்மைத் தகவல் (EMIS Online) இணையதளத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளவும், அதனை அரசாணை (நிலை) எண்.176, பள்ளிக் கல்வி (பக5(1)) துறை, நாள்:17.12.2021- பத்தி 7( Unit Transfer) -ல் தெரிவித்துள்ள நிபந்தனைகளின்படி மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து ஆசிரியர்கள் பிற துறையில் இருந்து பெற்ற அலகு விட்டு அலகு மாறுதல் தடையின்மைச் சான்றை (Upload) செய்து இணைய வழியாக ஏற்பளிக்கவும் தெரிவிக்கப்படுகிறது. ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு, அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு 29.08.2022(பிற்பகல்) அன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்காண் தகவல்கள் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் மூலம் அனைத்து ஆசிரியர்களுக்கும் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு பணிகளை எவ்வித புகாருக்கும் இடமின்றி முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடக்கக்கல்வி இயக்குநர்
பெறுநர்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.