மின் இணைப்பு - ஆதார் எண் இணைப்பு - எழும் ஐயங்களும் பதில்களும் (FAQs) - ஒன்றிற்கு மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே ஆதார் எண்ணுடன் இணைக்கலாமா? - முழு விவரம் (EB Power Connection - Aadhaar Number Linking - Frequently Asked Questions and Answers (FAQs) - Can more than one EB power connection be linked to the same Aadhaar number? - Full Details)...



>>> மின் இணைப்பு - ஆதார் எண் இணைப்பு - எழும் ஐயங்களும் பதில்களும் (FAQs) -  ஒன்றிற்கு மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே ஆதார் எண்ணுடன் இணைக்கலாமா? - முழு விவரம் (EB Power Connection - Aadhaar Number Linking - Frequently Asked Questions and Answers (FAQs) - Can more than one EB power connection be linked to the same Aadhaar number? - Full Details)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 

தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டது.


இதனிடையே நுகர்வோர்களுக்கு இந்த இணைப்பு குறித்து எழும் சில கேள்விகளுக்கான பதில்களை இங்கு பார்க்கலாம்.


1. மின் இணைப்புடன் ஆதாரை எப்படி இணைப்பது?


ஆதாரை இணைக்க https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்களின் மின் இணைப்பு பதிவை உள்ளிட்டு ஆதார் எண்ணை இணைக்கலாம் அல்லது மின் வாரிய அலுவலகத்துக்கு நீங்களே நேரில் சென்று ஆதார் எண்ணை இணைக்கலாம்.


2. இணையம் மூலம் எவ்வாறு ஆதார் எண்ணை இணைப்பது?


Step 1 : ஆதாரை இணைக்க https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்கள் மின் இணைப்பு எண்ணை பதிவு செய்யவும்.


Step 2 : உங்கள் மின் இணைப்பில் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும். அந்த OTPயை பதிவிட்ட பிறகு, உங்களின் ஆதார் கார்டையும், ஆதார் எண்ணையும் பதிவிட வேண்டும்.


Step 3 : நீங்கள் அந்த வீட்டிற்கு உரிமையாளரா அல்லது வாடகைக்கு குடியிருப்போரா அல்லது நீங்கள் அந்த வீட்டின் உரிமையாளர் ஆனால் மின் இணைப்பு வேறு ஒருவர் பெயரில் உள்ளதா என்ற ஆப்ஷன்களை தோன்றும். அதில் உங்களுக்கான விருப்பத்தை தேர்வு செய்து சப்மிட் செய்தால் போதும். உங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைத்துவிடலாம். இதையடுத்து ஒப்புகை ரசீது வரும். அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


3. நான் வாடகை வீட்டில் உள்ளேன். என் ஆதாரை நான் குடியிருக்கும் வீட்டின் மின் இணைப்போடு இணைக்க வேண்டுமா?


வீட்டின் உரிமையாளர் அனுமதி தந்தால் வாடகை வீட்டில் உள்ளவரே பதிவு செய்துகொள்ள முடியும்.


4. யாரெல்லாம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்?


வீடு, விசைத்தறி, விவசாயம் மற்றும் குடிசை வீட்டு மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.


5. வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் எண்ணை இணைத்தால், மின் இணைப்பு அவரது பெயருக்கு மாறிவிடுமா?


இல்லை. ஆதார் இணைப்பு என்பது ஒரு விவரம் மட்டுமே. வீட்டின் உரிமையாளர் மட்டுமே மின் இணைப்பின் பெயரில் மாற்றம் செய்ய முடியும்.


6. வாடகைதாரர் மாறும்பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்?


வாடகைதாரர் மாறும்போது, புதிதாக குடியிருக்க வருவோரின் ஆதாரை இணைக்கலாம்.


7. நான் 5 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளேன். ஒவ்வொரு வீட்டுக்கும் தனித் தனி மீட்டர்கள் உள்ளன. நான் எப்படி ஆதாரை இணைப்பது?


உங்கள் ஆதார் எண்ணையே அனைத்து இணைப்புகளுக்கும் வழங்க முடியும். அதனால், எந்தப் பாதிப்பும் இல்லை.


8. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் என்னவாகும்?


ஆதாரை இணைக்க காலக்கெடு இல்லை; ஆனால் மானியம் பெறுபவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.


9. ஆதார் எண்ணை இணைத்தால்தான் நான் மின் கட்டணத்தை செலுத்த முடியுமா?


ஒரே நேரத்தில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க அதிக நுகர்வோர் முயற்சித்ததால், சர்வர் முடங்கியது. இதையடுத்து, 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி மின் வாரியம் உத்தரவிட்டது. மேலும், ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும், மின் வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தலாம். ஆனால், ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே, ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.


10. என் தாத்தா/அப்பா பெயரில் மின் இணைப்பு உள்ளது. ஆனால், அவர் இறந்துவிட்டார். நான் எப்படி ஆதாரை இணைப்பது?


மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யாவிட்டாலும், யார் பெயரில் மாற்றம் செய்ய உள்ளீர்களோ அவரது பெயரில் உள்ள ஆதார் எண்ணை இணைக்கலாம். உங்களுடைய பெயரில் நீங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமானால், உங்களுடைய ஆதார் கார்டை பதிவேற்றம் செய்தால் போதும்.


11. ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமா?


கட்டாயம் ரத்து செய்யப்படபடாது. அப்படி யாரும் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


12. ஆதாரை எவ்வளவு நாளில் இணைக்க வேண்டும்?


ஆதாரை இணைக்க காலக்கெடு எதுவும் இல்லை. ஆனால், கட்டாயம் இணைக்க வேண்டும்.


13. எங்களிடம் இணையதள வசதி இல்லை. நான் எப்படி இணைப்பது?


டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் எண்களை மின் இணைப்புடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...