கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 2023 ஜனவரி 31ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி (Old Pension Scheme will be implemented by January 31, 2023 if Aam Aadmi Party comes to power in Gujarat - Delhi CM Arvind Kejriwal promises)...

குஜராத்தில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றால் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என குஜராத்தில் கெஜ்ரிவால் உறுதியளித்தார்.

ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்தில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், ஜனவரி 31, 2023-க்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிடப் போவதாக தேர்தல் பரப்புரையின் போது உறுதியளித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில்... இந்த வாக்குறுதி பொய்யானவை அல்ல, பஞ்சாபில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆயிரக்கணக்கான குஜராத் அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் வீதிகளில் போராட்டம் நடத்தி வந்தனர் என அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்தார்.

குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

From 01.01.2025 applications all types of leave through Kalanjiyam App only – DSE Proceedings

  01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ...