கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குஜராத் மோர்பி மச்சு நதி தொங்கு பாலம் அறுந்து விழும் சிசிடிவி காட்சி (Gujarat Morbi Machu river suspension cable bridge collapsing CCTV footage)...



>>> குஜராத் மோர்பி மச்சு நதி தொங்கு பாலம் அறுந்து விழும் சிசிடிவி காட்சி (Gujarat Morbi Machu river suspension cable bridge collapsing CCTV footage)...


குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து குறித்த வழக்கை வரும் 14-ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. புதுடெல்லி, குஜராத் தொங்கும் பாலம் விபத்து குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக்கோரி பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை வரும் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி லலித் ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் பழமைவாய்ந்த பொது கட்டமைப்புகளில் பாதுகாப்பு தணிக்கை நடத்தவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தொங்கும் பாலம் அறிந்து ஆற்றில் விழுந்ததில் இதுவரை 141 பேர் இறந்ததால் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனிடையே, குஜராத் மோர்பி தொங்கும் பாலம் அறுந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



அறுந்து விழும் குஜராத் மோர்பி பாலம்;  சிசிடிவி காட்சி...


குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள மோர்பி என்ற இடத்தில் மச்சு ஆற்றுக்கு மேல் தொங்கு பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தொங்கு பாலம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 230மீ நீளமுடைய இந்த தொங்கு பாலம் கட்டப்பட்டு 140 வருடங்களுக்கு மேல் ஆகிறது. கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருந்த பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு 4 நாட்களுக்கு முன்புதான் இந்த பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.



இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிறு மாலை 6 மணி அளவில், 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அந்த பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். அந்த சமயத்தில், பாலத்தில் இருந்த மக்கள் உற்சாகத்தில் ஓடி விளையாடியுள்ளனர். இதனால், அந்த தொங்கு பாலமும் ஆடத் தொடங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், என்ன செய்வது என யோசிப்பதற்குள் அவர்களின் எடையைத் தாங்க முடியாத மோர்பி தொங்கு பாலம் திடீரென அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது.



அதன் பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த தேசியப் பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநிலப் பேரிடர் மீட்புப்படையினரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயங்கர விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் என்று தெரிகிறது. ஆனால், ஆற்றுக்குள் இன்னும் பலர் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்த குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் மீட்புப்பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.


இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, “குஜராத் தொங்குபாலம் விபத்தில் என் நெஞ்சே வலிக்கிறது. ஒருபுறம் வலி நிறைந்த இதயம் இருந்தாலும், மறுபுறம் கடமைக்கான பாதையும் இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என வருத்தம் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் மோர்பி தொங்கு பாலம் அறுந்துவிழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பார்ப்பவர்களைப் பதற வைக்கும் இந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Income Tax Calculation Statement 2025-2026

  வருமான வரி கணக்கீட்டு அறிக்கை படிவம் 2025-2026 நிதியாண்டு (2026-2027 கணக்கீட்டு ஆண்டு) IT Statement PDF Format   Income Tax Calculation St...