கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட மோதலில் 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு - 3 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு - 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் (10th class student killed in clash in school premises - Case registered against 3 students - 3 Teachers Suspended)...

 


பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட மோதலில் 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு - 3 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு - 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் (10th class student killed in clash in school premises - Case registered against 3 students - 3 Teachers Suspended)...


திருச்சி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதில் 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.


திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தோளூர்பட்டியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்துவரும் கோபி என்பவரின் மகன் மௌலீஸ்வரன் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். 



இந்த நிலையில் இன்று பள்ளி வளாகத்தில் அமர்ந்து மாணவர்கள் படித்துள்ளனர். அப்போது சக மாணவர்கள் சிறு சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடியதாக தெரிகிறது. இதில் சில மாணவர்கள் மௌலீஸ்வரன் தான் கற்களை தூக்கி வீசியதாக தவறாக எண்ணி மாணவன் மௌலீஸ்வரனை 3 மாணவர்கள் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.



இதில் படுகாயம் அடைந்த மௌலீஸ்வரனை பள்ளி ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மாணவன் மௌலீஸ்வரன் கொண்டு செல்லப்பட்டார்.



மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மௌலீஸ்வரனின் பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனால் திருச்சி - நாமக்கல் சாலையில் போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் மூன்று மாணவர்களை தனியாக அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டார். அம்மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


கவனக்குறைவாக இருந்த தலைமையாசிரியர் ஈஸ்வரி, ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியை வனிதா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.










>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CM Formed Minister's Committee to consider the demands of various Tamil Nadu Government Officer Associations and find appropriate decisions on them

பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்...