கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Summative Assessment-ல் மொட்டு நிலை மாணவர்களுக்கு மலர் நிலை கேள்விகள் - TN EE Misson Admin பதில் (Malar Level Questions for Mottu Level Students in Summative Assessment - TN EE Misson Admin Answer)...

 

Summative Assessment-ல் மொட்டு நிலை மாணவர்களுக்கு மலர் நிலை கேள்விகள் - TN EE Misson Admin பதில் (Malar Level Questions for Mottu Level Students in Summative Assessment - TN EE Misson Admin Answer)...


இரண்டாம் பருவத்திற்கான கணிதத்திற்கான R.P Training-ல் DIET - ல் மாணவர்களுக்கு மாதத் தேர்வு நடத்தும் பொழுது அந்த நிலைக்குரிய கேள்விகளை மட்டும் மதிப்பிட்டால் போதும் என்று கூறினார்கள். பயிற்சிப் புத்தகத்திலும் அந்த மாணவர் எந்த நிலையில் உள்ளாரோ அந்த பயிற்சிகளை மட்டும் செய்ய வைத்தால் போதும் என்று கூறினார்கள். ஆனால் தற்பொழுது Summative assessment-ல் மொட்டு நிலை மாணவர்களுக்கு 10 கேள்விகள் விடையளித்தப் பின் அடுத்ததாக மலர் நிலை கேள்விகளும் இடம் பெற்றுள்ளன ஏன் இந்த முரண்பாடு?


மாணவர்கள் தங்கள் நிலைக்குரிய வினாக்களுக்கு பதில் அளிக்கும் விதத்தை பொறுத்து அதற்கடுத்த நிலைகளுக்கு உண்டான வினாக்கள் தோன்றலாம்.

மூன்றாம் வகுப்பில் மொட்டு நிலையில் ஒரு மாணவர் இருந்தால் அந்நிலைக்குரிய வினாக்களுக்கு அவர் விடை அளித்த பிறகு மலர் நிலைக்குறிய வினாக்கள் தோன்றும்.




 பயிற்சிப்புத்தகத்தில் அந்தந்த நிலைக்குரிய பயிற்சிகளை மட்டும் செய்யும் பொழுது மாணவர்கள் எவ்வாறு மலர் நிலைக்கான கேள்விகளுக்கு விடையளிக்க முடியும் சார்?


நீங்கள் இதில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். பயிற்சி நூலைப் பொருத்தமட்டில் மாணவர்கள் அவர்களின் கற்றல் நிலைக்குரிய செயல்பாடுகளை மட்டும் செய்தால் போதுமானது. அதேசமயம் மாணவர் அவருடைய நிலைக்கு அடுத்த நிலைக்கு உண்டான செயல்பாடுகளை பயிற்சி நூலில் செய்ய முன்வந்தால் அவர்களை ஊக்குவிக்க வேண்டியது நம்முடைய கடமையும் கூட.


அதேபோல் தான் மதிப்பீடும் அவருடைய நிலைக்குண்டான கேள்விகளுக்கு முதலில் பதில் அளிப்பார்.அதுதான் மதிப்பெண் கணக்ககீட்டிற்கும்  எடுத்துக் கொள்ளப்படும்.அவருடைய நிலைக்கு உண்டான வினாக்களுக்கு அவர் பதில் அளிக்கும் விதத்தை பொறுத்து அதற்கு அடுத்த நிலைக்கு உண்டான வினாக்கள் தோன்றும் அதற்கு அவர் பதில் அளிப்பதை நீங்கள் பதிவு செய்தால் போதும்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...