கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மழைக்காலங்களில் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை மேற்கொள்ள வேண்டிய மின்சார பாதுகாப்பு வழிமுறைகள் (Electricity safety measures to advise their school students during rainy season)...


 அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

மழைக்காலங்களில் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு  அறிவுரை மேற்கொள்ள வேண்டிய மின்சார பாதுகாப்பு வழிமுறைகள் (Electricity safety measures to advise their school students during rainy season)...


💡 மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள். மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் (Pillar Box) மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்!


💡 சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்!


💡 தாழ்வாகத் தொங்கிக்கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும்!


💡 ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க கூடாது!


💡 மின்வயர் இணைப்புகளைத் திறந்த நிலையில் இல்லாமல் (Insulation Tape) இன்சுலேசன் டேப் சுற்றி வெளிப்புற மின் காப்பு செய்ய வேண்டும்!


💡 வீடுகள் மற்றும் கட்டிடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்!


💡 மின்சார கசிவு, மின் அதிர்ச்சி ஏற்படும் நிகழ்வில் உடனே அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்… என  எடுத்துரைத்து தங்கள் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு  தெரிவிக்கப்படுகிறது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...