கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27-02-2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27-02-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை.


குறள் 73:


அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு.


விளக்கம்:


உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.



பழமொழி : 


The law-maker showld not be a law breaker.


வேலியே பயிரை மேய்ந்தால், விளைவதெப்படி?



பொன்மொழி:


 “In the middle of every difficulty lies opportunity.”


 ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் மத்தியிலும் வாய்ப்பு உள்ளது.



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 இரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர் - மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்

டி.என்.ஏ. ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படும் நிகழ்ச்சி - படியெடுத்தல்

முழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது - சைகோட்

நெல்லில் காணப்படும் கனி வகை - காரியாப்சிஸ்

ரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள் - கோமோஸ் விதைகள்



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Except - தவிர 

Expand - விரிவாக்கு

Excuse - மன்னித்து விடு 

Expenses - செலவு 

Explain - விளக்கு 


ஆரோக்கியம்


வெற்றிலை: இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்துகிறது. நரம்புத் தளர்ச்சி, தலைவலி, தொண்டை அழற்சி, தீப்புண் இவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.



இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 27


1951 – ஐக்கிய அமெரிக்காவில் அரசுத்தலைவர் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதவாறு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.


1964 – பீசாவின் சாய்ந்த கோபுரம் மேலும் சரிவதைத் தடுக்க இத்தாலிய அரசு உதவி கோரியது.



பிறந்த நாள் 

-


நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்


தேசிய மருத்துவர்கள் நாள் (வியட்நாம்)

மராட்டி மொழி நாள் (மகாராட்டிரம்)

விடுதலை நாள் (டொமினிக்கன் குடியரசு, எயிட்டியிடம் இருந்து 1844)

பன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்புகளின் நாள்




நீதிக்கதை



சிங்கமும் தந்திரமான முயலும் 


முன்னொரு காலத்தில், காட்டுக்குள்ளே எல்லா விலங்குகளும் ஒன்று கூடி சிங்கராஜா பத்தி பேசிட்டு இருந்தாங்க. அதில் கரடி சொல்லிச்சு, “நம்ம எல்லாரும் இங்கே எதுக்காக ஒன்று கூடி இருக்கோம்னா, சிங்கராஜாவை எப்படி  காட்டில் இருந்து விரட்டி அடிக்கலாம் என்று யோசிக்க தான்”. “அவர் நமக்கு நிறையவே பிரச்சனையை கொடுக்குறாரு, அவருக்கு பசி எடுக்கும் போதெல்லாம் நம் உறவினர்களையும் நண்பர்களையும் பிடித்து சாப்பிடுகிறார்”.


அதற்கு முயல் சொல்லுச்சாம் நம்ம, “நம்மளோட நண்பர்களை அடிக்கடி இழந்திட்டே வரோம். அதனால எப்படியாச்சும் இந்த சிங்கத்தை காட்டை விட்டு விரட்டி ஆகணும், ஆனால் அது எப்படி நம்மளால முடியும்”.


முயல் ஒரு திட்டம் போட்டிச்சு, எல்லோர் கிட்டயும் தன் திட்டத்தை சொல்லிச்சு. தங்களோட திட்டப்படியே சிங்க ராஜாவை எல்லோரும் சந்திக்க போனாங்க. அந்த சிங்கமோ மகாராஜா அரியணையில் அமர்ந்திருப்பது போல அமர்ந்திருந்தது. மற்ற எல்லா விலங்குகளும் தலையைத் தாழ்த்தியபடி அந்த சிங்கத்துக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தாங்க.



“எதுக்காக எல்லாரும் சேர்ந்து இங்கே என்ன பார்க்க வந்திருக்கீங்க” அப்படி சிங்கம் கேட்டது. அதற்கு கரடி சொன்னது “நாங்க எல்லாரும் ஒரு திட்டம் போட்டிருக்கிறோம் அதன்படி நீங்க எப்பவுமே இங்கு அமர்ந்து இருந்தா போதும், உங்களுக்கு தேவையான உணவை நாங்களே கொண்டு வருவோம்” என்று சொன்னது. சிங்கராஜா ரொம்பவே சந்தோஷமா அந்தத் திட்டத்தை ஏத்துகிட்டாரு.



மறுநாள் அவங்க திட்டப்படி முயல் அந்த சிங்கத்துக்கு உணவாக போச்சு. முயல் ரொம்பவே தாமதமாக  சென்றது. அந்த சிங்கம் முயலிடம் மிகவும் கடினமாக நடந்து கொண்டது, “ஏன் இவ்வளவு தாமதம், அதுமட்டுமல்ல உன்னை  மட்டும் உண்பதால் என்னுடைய பசி எப்படி தீரும்” என்று அந்த சிங்கம் மிகவும் கோபமாக கேட்டது. 


அதற்கு முயல் சொன்னது, “என்னை மன்னித்துவிடுங்கள் சிங்கராஜா நானும் என் குடும்பத்தாரும் மொத்தம் பத்து பேர்தான் உங்களுக்கு உணவாக வந்து கொண்டிருந்தோம், ஆனால் வரும் வழியில் இன்னொரு பெரிய சிங்கம் என் குடும்பத்தார் அனைவரையும் கொன்று சாப்பிட்டது, நான் மட்டும் எப்படியோ தப்பித்து இங்கே உங்களுக்கு உணவாக வந்தேன்” என்றது. 



அதைக் கேட்ட சிங்கம் மிகவும் கோபம் பட்டது, “என்ன… என்னை விட வலிமையான வேறு சிங்கம் இங்கே எப்படி இருக்கமுடியும், அவன் எங்கே?”என்று கேட்டது. அதற்கு முயல், “நான் உங்களுக்கு அவனை காட்டித் தருகிறேன்” என்று சிங்க ராஜாவைப் கூட்டிக்கொண்டு ஒரு கிணற்றுக்கு அருகே சென்றது. 


“கிணற்றுக்குள்ளே அந்த வலிமையான சிங்கம் இருப்பதாக முயல் சொன்னது”. அதைக்கேட்ட சிங்கராஜா கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தது தன்னுடைய உருவம் அங்கே தெரிந்ததை பார்த்து ஏமாந்து போன சிங்கராஜா அந்த கிணற்றுக்குள்ளே இருக்கும் இன்னொரு சிங்கத்தை தாக்கப் போவதாக சொல்லி அந்த கிணற்றுக்குள்ளே குதித்தது. சிங்கராஜா கிணற்றில் இருந்து வெளியே வர முடியாமல் உள்ளே தண்ணீரில் மூழ்கி விட்டது.



முயல் சந்தோஷத்தில் மிகவும் சத்தமாக கத்த தொடங்கியது. மற்ற எல்லா விலங்குகளும் ஓடிவந்து சிங்கராஜா தண்ணிக்குள் மூழ்கியதைக் கண்டு மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.


நீதி : உடல் வலிமையை விட அறிவுதான் வலிமையானது.




இன்றைய முக்கிய செய்திகள் 


27-02-2024 


பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.10,417.22 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...


பிரதமர் மோடி இன்று தமிழகம் வருவதையொட்டி காலை முதல் மாலை வரை கோவை மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...


குப்பை கிடங்கில் உள்ள திடக்கழிவுகளை உயிரி அகழாய்வு முறையில் அகற்ற அனுமதி: நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை...


25 ஆண்டுகளுக்கு மேல் விபத்தில்லாமல் பணிபுரிந்த ஓட்டுநருக்கு 04 கிராம் தங்க நாணயம் வழங்கினார் அமைச்சர் சிவசங்கர்...


மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடமும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தையும் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...


446 ஊர்ப்புற நூலகர்களுக்கு மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியீடு...


இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி; 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி: தொடரையும் கைப்பற்றியது...





Today's Headlines:

27-02-2024


Chief Minister M. K. Stalin will inaugurate projects worth Rs. 10,417.22 crore on behalf of various departments today... 


Traffic change in Coimbatore district from morning to evening due to Prime Minister Modi's visit to Tamil Nadu today: Coimbatore Superintendent of Police... 


Permission to dispose of solid waste in landfill by bio-excavation method: Municipal Administration and Water Supply Department...


Minister Sivashankar presented a 04 gram gold coin to a driver who worked for more than 25 years without an accident... 


Chief Minister M.K.Stalin inaugurated the renovated Anna Memorial and the Kalaignar memorial on a grand scale at Marina Beach... 


Promulgation of ordinance promoting 446 village librarians to third level librarians... 


4th Test against England; Indian team won by 5 wickets: also won the series...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...