கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உச்சநீதிமன்றத்திற்கு புதிய இணையதளம் தொடக்கம் - வழக்கு விசாரணையை நேரலையில் காணலாம்...



உச்சநீதிமன்றத்திற்கு புதிய இணையதளம் தொடக்கம் - வழக்கு விசாரணையை நேரலையில் காணலாம்...


புதுடெல்லி: நீதித்துறையின் சேவைகள் மக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கிடைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் ஆர்வம் காட்டி வருகிறார். மத்திய அரசும், நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்கும் பணிக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் பணிகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுப்ரீம் கோர்ட்டுக்கு என்று https://www.sci.gov.in என்ற புதிய இணையதளம் ஒன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதன் முழு செயல்பாடு புதன்கிழமை முதல் தொடங்கியது. இந்த இணையதளத்தில் வழக்கு விவரங்கள், அதன் தற்போதைய நிலைப்பாடு, தீர்ப்புகள் ஆகியவற்றை மக்கள் மிக எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளம் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் உச்சநீதிமன்றம் மூலம் வழங்கப்படும் ஆன்லைன் சேவைகளான வழக்கு தாக்கல், உச்சநீதிமன்றத்தில் பார்வையாளருக்கு வழங்கப்படும் 'இ-பாஸ்', தீர்ப்பு நகல்கள் பெறுவது உள்பட அனைத்து சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns