கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அமைச்சரவை முடிவை ஆளுநர் மீற முடியாது - உயர்நீதிமன்றம்...



அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் - அமைச்சரவை முடிவை ஆளுநர் மீற முடியாது - உயர்நீதிமன்றம்...


ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்ததற்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 


அரசின் பரிந்துரையை மீண்டும் ஆளுநர் பரிசீலனை செய்ய நீதிமன்றம் உத்தரவு.


அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். அதனை அவர் மீற முடியாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி உத்தரவு.


தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி  தாக்கல் செய்த மனுவை மீண்டும் பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவு


கொலை வழக்கில் ஆயுள் தண்டணை கைதியாக புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாரதி என்பவர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார்.


அதில், முன்கூட்டியே விடுவிக்கும் அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.


அப்போது, "அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். ஆளுநர் அதனை மீற முடியாது" என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பட்டுள்ளது.



இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், வி.சிவஞானம் அமர்வு, பேரறிவாளன் உள்ளிட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை மேற்கோள்காட்டி, அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும், ஆளுநர் அதை மீற முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இதில், ஆளுநருக்கு தனிப்பட்ட தார்மீக உரிமை இல்லை எனக் கூறி, முன் கூட்டியே விடுதலை செய்ய மறுத்த உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் மனுவை மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட்டனர். அதுவரை வீரபாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

100 குறட்பாக்கள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ரூ.200 பரிசுத்தொகை - நன்னெறி வகுப்புகள் நடைபெறுவதை உறுதிப்படுத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவு...

  100 குறட்பாக்கள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ரூ.200 பரிசுத்தொகை - அரசுப் பள்ளிகளில் நன்னெறி வகுப்புகள் நடைபெறுவதை உறுதிப்படுத்த பள்ளிக் கல...