கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அமைச்சரவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சரவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அமைச்சரவை முடிவை ஆளுநர் மீற முடியாது - உயர்நீதிமன்றம்...



அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் - அமைச்சரவை முடிவை ஆளுநர் மீற முடியாது - உயர்நீதிமன்றம்...


ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்ததற்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 


அரசின் பரிந்துரையை மீண்டும் ஆளுநர் பரிசீலனை செய்ய நீதிமன்றம் உத்தரவு.


அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். அதனை அவர் மீற முடியாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி உத்தரவு.


தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி  தாக்கல் செய்த மனுவை மீண்டும் பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவு


கொலை வழக்கில் ஆயுள் தண்டணை கைதியாக புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாரதி என்பவர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார்.


அதில், முன்கூட்டியே விடுவிக்கும் அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.


அப்போது, "அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். ஆளுநர் அதனை மீற முடியாது" என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பட்டுள்ளது.



இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், வி.சிவஞானம் அமர்வு, பேரறிவாளன் உள்ளிட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை மேற்கோள்காட்டி, அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும், ஆளுநர் அதை மீற முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இதில், ஆளுநருக்கு தனிப்பட்ட தார்மீக உரிமை இல்லை எனக் கூறி, முன் கூட்டியே விடுதலை செய்ய மறுத்த உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் மனுவை மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட்டனர். அதுவரை வீரபாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் - அமைச்சர்கள் மற்றும் துறைகளின் முன்னுரிமை - அரசாணை G.O.Ms.No.657, Dated:29.09.2024 வெளியீடு...


தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் - அமைச்சர்கள் மற்றும் துறைகளின் முன்னுரிமை - அரசாணை G.O.Ms.No.657, Dated:29.09.2024 வெளியீடு...


TO BE PUBLISHED IN AN EXTRA-ORDINARY ISSUE OF  THE TAMIL NADU GOVERNMENT GAZETTE DATED THE 29th September, 2024

ABSTRACT

MINISTERS - Inter-se-Seniority of Ministers and Subjects - Orders- Issued.


PUBLIC (SPECIAL.B) DEPARTMENT

G.O.Ms.No.657, Dated:29.09.2024.

Kurothi, Purattasi-13, Tiruvallurvar Aandu-2055


Read:

1. G.O.Ms.No.266, Public (Special-B) Department, Dated:07.05.2021 

2. G.O.Ms.No.267, Public (Special-B) Department, Dated:07.05.2021 

3. G.O.Ms.No.382, Public (Special-B) Department, Dated:12.07.2021 

4. G.O.Ms.No.795, Public (Special-B) Department, Dated:14.12.2022 

5. G.O.Ms.No.797, Public (Special-B) Department, Dated:14.12.2022 

6. G.O.Ms.No.302, Public (Special-B) Department, Dated:11.05.2023 

7.G.O.Ms.No.653, Public (Special-B) Department, Dated:28.09.2024 

8.G.O.Ms.No.654, Public (Special-B) Department, Dated:28.09.2024 

9. G.O.Ms.No.655, Public (Special-B) Department, Dated:29.09.2024 

10.G.O.Ms.No.656, Public (Special-B) Department, Dated:29.09.2024


ORDER:

Consequent on the induction of the new Minister in the Council of Ministers and the allocation of subjects among the Ministers as ordered in the G.Os seventh to tenth read above, the inter-se-seniority of the Council of Ministers of Tamil Nadu and the subjects allocated to them are as below:



>>> Click Here to Download G.O.Ms.No.657, Dated:29.09.2024...



Allotment of portfolios to 4 newly appointed ministers...



 புதிதாகப் பதவியேற்ற 4 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு...


Allotment of portfolios to 4 newly appointed ministers...


>>> ஆளுநர் மாளிகை செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




Press Release No. 45 Dated 29.9.2024

RAJ BHAVAN, TAMIL NADU - PRESS RELEASE

 On the recommendation of the Hon’ble Chief Minister of Tamil Nadu the Hon’ble Governor of Tamil Nadu has approved the subject allocation and designation for the newly sworn-in Ministers as noted against each:-


Sl. No.

Name of the Minister & Assembly Constituency Tvl.

Designation 

Allocation of portfolios


1. V. Senthilbalaji

(Karur Assembly Constituency)

Minister for Electricity, Prohibition and Excise

Electricity and Non-Conventional Energy Development, Prohibition & Excise.




2. Dr. Govi Chezhiaan

(Thiruvidaimarudur Assembly Constituency)

Minister for Higher Education

Higher Educationincluding Technical Education, Electronics, Science and Technology.




3. R. Rajendran

(Salem North Assembly Constituency)

Minister for Tourism

Tourism and Sugar, Sugarcane Excise and Sugarcane Development.


4. S.M. Nasar

(Avadi Assembly Constituency)

Minister for Minorities Welfare and Non-Resident Tamils WelfareMinorities Welfare

Non-Resident Tamils Welfare, Refugees & Evacuees and Wakf Board.

Released by / xxx

Public Relations Office


 Raj Bhavan, Chennai-22 

 Dated 29.09.2024 


அமைச்சரவை குழு புகைப்படம்...








🔴புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் விவரம்...


செந்தில் பாலாஜி - மின்சாரத்துறை


கோவி.செழியன் - உயர்கல்வித்துறை


நாசர் - சிறுபான்மையினர் நலத்துறை


ராஜேந்திரன் -  சுற்றுலாத்துறை.





கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை...


சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் புதிய அமைச்சர்கள் மரியாதை.


அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, கோவி.செழியன், ஆவடி நாசர், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் மலர்தூவி மரியாதை


புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்ற நிலையில், கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

Tamil Nadu Cabinet Reshuffle - Udhayanidhi Stalin becomes Deputy Chief Minister - 3 Ministers Removed - 4 New Ministers Inducted - 6 Ministers Changed Departments - RAJ BHAVAN, TAMILNADU Press Release No.44, Dated 28.9.2024...




தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் - துணை முதலமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின் - 3 அமைச்சர்கள் நீக்கம் - 4 புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்பு - 6 அமைச்சர்களின் துறைகள் மாற்றம் - ஆளுநர் மாளிகை செய்தி வெளியீடு RAJ BHAVAN, TAMILNADU Press Release No.44, Dated 28.9.2024...



>>> ஆளுநர் மாளிகை செய்தி வெளியீடு -  Press Release No.44, Dated 28.9.2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.


கோவி‌.செழியன், சேலம் ராஜேந்திரன், நாசர், செந்தில் பாலாஜி ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம். 


தமிழக அமைச்சரவையில் மாற்றம் - அறிவிப்பு...


அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு, நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் ஒதுக்கீடு...


மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விடுவிப்பு...


நாளை மாலை 3.30 மணிக்கு பதவியேற்பு விழா...


புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நாளை மாலை 3.30 மணிக்கு நடைபெறும் - ஆளுநர் மாளிகை அறிவிப்பு...


தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்!


☀️ பொன்முடி - வனத்துறை


☀️ மெய்யநாதன் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை


☀️ கயல்விழி செல்வராஜ் - மனிதவள மேம்பாட்டுத்துறை


☀️ மதிவேந்தன் -  ஆதி திராவிடர் நலத்துறை


☀️ ராஜகண்ணப்பன் - காதி மற்றும் பால்வளத்துறை


☀️ தங்கம் தென்னரசு - நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை...



Press Release No.44, Dated 28.9.2024

RAJ BHAVAN, TAMILNADU - PRESS RELEASE

The Hon'ble Chief Minister of Tamil Nadu has recommended to the Hon'ble Governor of Tamil Nadu to allot the portfolio of Planning and Development to Thiru Udhayanidhi Stalin, Minister for Youth Welfare and Sports Development, in addition to his existing portfolios and be designated as Deputy Chief Minister. Further the Hon'ble Chief Minister has recommended to induct Thiru V.Senthilbalaji, Dr. Govi. Chezhiaan, Thiru R.Rajendran and Thiru S.M.Nasar in the Council of Ministers. The Hon'ble Governor has approved the recommendations. The Swearing-in-Ceremony of the Ministers designate will be held on 29.9.2024, Sunday, at 3.30 P.M. in Raj Bhavan, Chennai.

The Hon'ble Governor has also approved the recommendation of Hon'ble Chief Minister to drop Thiru T. Mano Thangaraj, Minister for Milk & Dairy Development, Thiru Gingee K.S.Masthan, Minister for Minorities Welfare and Non-Resident Tamils Welfare and Thiru K. Ramachandran, Minister for Tourism, from the Council of Ministers.

The Hon'ble Governor has approved the recommendation of Hon'ble Chief Minister for change of portfolios and subject allocations of the following Ministers:-




தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்...


* துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

* மீண்டும் அமைச்சராகிறார்கள் செந்தில்பாலாஜி, ஆவடி நாசர்

* கோவி.செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்

* உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றம்

* சுற்றுச்சூழல் மற்றம் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம்

* ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக மாற்றம்

* வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக மாற்றம்

* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராக மாற்றம்

* நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் மற்றம் காலநிலை மாற்றத் துறை

மோடி 3.0 மத்திய அமைச்சரவை - துறைகள் ஒதுக்கீடு...


 ML Khattar gets power, Kiren Rijiju parliamentary affairs portfolios; Sarbananda Sonowal to continue as shipping minister...


Nitin Gadkari retains road transport ministry; Dharmendra Pradhan to continue as education minister


Shivraj Singh Chouhan is new agriculture and rural development minister; J P Nadda gets health ministry


S Jaishankar and Nirmala Sitharaman retain external affairs and finance portfolios respectively


Amit Shah retains home ministry, Rajnath Singh defence


மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சராக 3வது முறையாக நிதின் கட்கரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சாலை போக்குவரத்துறை இணை அமைச்சர்களாக ஹர்ஷ் மல்ஹோத்ரா, அஜய் தம்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


ஜெய்சங்கருக்கு மீண்டும் வெளியுறவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


அஷ்வினி வைஷ்ணவ்விற்கு மிண்டும் ரயில்வே துறை ஒதுக்கப்பட்டுள்ளது.


ராஜ்நாத் சிங்கிற்கு மீண்டும் பாதுகாப்புத்துறையை பிரதமர் நரேந்தி மோடி ஒதுக்கியுள்ளார்.


மோடி 3.0 மத்திய அமைச்சரவை - துறைகள் ஒதுக்கீடு...


நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் மீண்டும் அமித் ஷாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுகுறு நடுத்தர தொழில் துறை ஷோபாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


ராஜ்நாத் சிங் மீண்டும் பாதுகாப்பு துறை அமைச்சராக நியமனம். ஜெய்சங்கருக்கு மீண்டும் வெளியுறவுத்துறை இலாகாவும், ரயில்வே துறை அஸ்வினி வைஷ்ணவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.



>>> மத்திய அமைச்சர்கள் மற்றும் அவர்களின் துறைகள் (PDF)...



#BREAKING | தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவை - கேபினட் அமைச்சர்கள் பட்டியல்


▪️ ராஜ்நாத் சிங் - பாதுகாப்பு


▪️ அமித்ஷா - உள்துறை


▪️ ஜே.பி.நட்டா - சுகாதாரம், ராசாயனங்கள்


▪️ சிவ்ராஜ் சிங் சவுஹான் - வேளாண், ஊரக வளர்ச்சி


▪️ மனோகர் லால் கட்டார் - மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி


▪️ நிர்மலா சீதாராமன் - நிதி


▪️ ஜெய்ஷங்கர் - வெளியுறவு


▪️ அஷ்வினி வைஷ்ணவ் - ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி


▪️ மன்சுக் மாண்ட்வியா - தொழிலாளர் நலன், இளைஞர் நலன், விளையாட்டு


▪️ ஹர்தீப் சிங் புரி - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு


▪️ ஜித்தன் ராம் மஞ்சி - சிறு குறு நடுத்தர தொழில்கள்


▪️ தர்மேந்திர பிரதான் - கல்வி


▪️ குமாரசாமி - இரும்பு, கனரக தொழில்கள்


▪️ ராம்மோகன் ராயுடு - விமான போக்குவரத்து


▪️ பியூஷ் கோயல் - வணிகம் மற்றும் தொழில்துறை


▪️ ராஜீவ் ரஞ்சன் சிங் - பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை, பால்வளம்


▪️ சர்பானந்த சோனோவால் - கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், நீர்வழிகள்


▪️ வீரேந்திர குமார் - சமூக நீதி


▪️ அன்னபூர்ண தேவி - மகளிர், குழந்தைகள் மேம்பாடு


▪️ கிரண் ரிஜிஜு - நாடாளுமன்ற விவகாரங்கள், சிறுபான்மையினர் நலன்


▪️ சி.ஆர்.பாட்டீல் - ஜல் சக்தி


▪️ ப்ரகலாத் ஜோஷி - நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொதுவிநியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி


▪️ கிரிராஜ் சிங் - ஜவுளி


▪️ ஜூவல் ஓரம் - பழங்குடியினர் நல விவகாரம்


▪️ ஜோதிர்த்தியா சிந்தியா - கம்யூனிகேஷன், வடகிழக்கு நலன்


▪️ பூபேந்தர் யாதவ் - சுற்றுச்சூழல், வனம்


▪️ கஜேந்திர சிங் ஷெகாவத் - கலாச்சாரம் மற்றும் சுற்றுலா


▪️ கிஷன் ரெட்டி - நிலக்கரி மற்றும் சுரங்கங்கள்


▪️ சிராஜ் பஸ்வான் - உணவு பதப்படுத்தும் தொழில்கள்


மோடி அமைச்சரவை 3.0 - 30 கேபினட் அமைச்சர்கள், 41 இணை அமைச்சர்கள் யார்?



நரேந்திர தாமோதர்தாஸ் மோடி அமைச்சரவை 3.0 - 30 கேபினட் அமைச்சர்கள், 41 இணை அமைச்சர்கள் யார்?


நரேந்திர மோதி, ஜுன் 9-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, மூன்றாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். ஜவஹர்லால் நேருவுக்கு அடுத்து தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமரானவர் என்ற சிறப்பை மோதி பெற்றிருக்கிறார்.


நரேந்திர மோதியுடன், ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், நிதின் கட்கரி ஆகிய, முந்தைய மத்திய அமைச்சரவையில் இருந்தவர்கள் மீண்டும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.


அமைச்சரவையில் சில புதிய முகங்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.


யாரெல்லாம் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர், யாரெல்லாம் இணை அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர் என்ற முழு பட்டியல் இதோ.


கேபினட் அமைச்சர்கள் பட்டியல்


1) ராஜ்நாத் சிங் - பா.ஜ.க


2) அமித் ஷா - பா.ஜ.க


3) நிதின் கட்கரி - பா.ஜ.க


4) ஜே.பி.நட்டா - பா.ஜ.க


5) சிவராஜ் சிங் சௌஹான் - பா.ஜ.க


6) நிர்மலா சீதாராமன் - பா.ஜ.க


7) எஸ்.ஜெய்சங்கர் - பா.ஜ.க


8) மனோகர் லால் - பா.ஜ.க


9) ஹெச்.டி.குமாரசாமி - மதச்சார்பற்ற ஜனதா தளம்


10) பியுஷ் கோயல் - பா.ஜ.க


11) தர்மேந்திர பிரதான் - பா.ஜ.க


12) ஜிதன் ராம் மாஞ்சி - ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா


13) லல்லன் சிங் (ராஜீவ் ரஞ்சன்) - ஐக்கிய ஜனதா தளம்


14) சரபானந்த சோனோவால் - பா.ஜ.க


15) கிஞ்சரப்பு ராம் மோகன் - தெலுங்கு தேசம் கட்சி


16) வீரேந்திர குமார் - பா.ஜ.க


17) ஜுவால் ஓரம் - பா.ஜ.க


18) பிரகலாத் ஜோஷி - பா.ஜ.க


19) கிரிராஜ் சிங் - பா.ஜ.க


20) அஷ்வினி வைஷ்ணவ் - பா.ஜ.க


21) ஜோதிராதித்ய சிந்தியா - பா.ஜ.க


22) பூபேந்தர் யாதவ் - பா.ஜ.க


23) அன்னபூர்ணா தேவி - பா.ஜ.க


24) கஜேந்திர சிங் - பா.ஜ.க


25) கிரண் ரிஜிஜு - பா.ஜ.க


26) ஹர்தீப் சிங் புரி - பா.ஜ.க


27) மன்சுக் மாண்டவியா - பா.ஜ.க


28) ஜி கிஷன் ரெட்டி - பா.ஜ.க


29) சிராக் பாஸ்வான் - லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்)


30) சி.ஆர்.பாடில் - பா.ஜ.க



இணை அமைச்சர்கள் பட்டியல்


1) இந்தர்ஜித் சிங் - பா.ஜ.க


2) ஜிதேந்திர சிங் - பா.ஜ.க


3) அர்ஜுன் ராம் மேக்வால் - பா.ஜ.க


4) பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ் - சிவசேனா


5) ஜெயந்த் சிங் சௌதரி - ராஷ்ட்ரிய லோக் தளம்


6) ஜிதின் பிரசாதா - பா.ஜ.க


7) நித்யானந்த் ராய் - பா.ஜ.க


8) ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாய்க் - பா.ஜ.க


9) பங்கஜ் சௌதரி - பா.ஜ.க


10) எஸ்.பி சிங் பாகேல் - பா.ஜ.க


11) கிருஷண் பால் - பா.ஜ.க


12) ஷோபா கரண்ட்லாஜே - பா.ஜ.க


13) கீர்த்தி வர்தன் சிங் - பா.ஜ.க


14) ராம்தாஸ் அத்வாலே - இந்தியக் குடியரசுக் கட்சி


15) பி.எல்.வர்மா - பா.ஜ.க


16) ஷாந்தனு தாக்குர் - பா.ஜ.க


17) அனுப்ரியா படேல் - பா.ஜ.க


18) சுரேஷ் கோபி - பா.ஜ.க


19) வி.சோமண்ணா - பா.ஜ.க


20) எல்.முருகன் - பா.ஜ.க


21) அஜய் தம்தா - பா.ஜ.க


22) பெம்மாசனி சந்திரசேகர் - தெலுங்குதேசம்


23) பாகீரத் சௌதரி - பா.ஜ.க


24) அனுப்ரியா படேல் - அப்னா தளம் (சோனேலால்)


25) சதீஷ் சந்திர தூபே - பா.ஜ.க


26) சஞ்சய் சேத் - பா.ஜ.க


27) ரவ்னீத் சிங் பிட்டு - பா.ஜ.க


28) துர்கா தாஸ் உய்கே - பா.ஜ.க


29) ரக்ஷா நிகில் கட்ஸே - பா.ஜ.க


30) சுகந்தா மஜும்தார் - பா.ஜ.க


31) ராஜ்பூஷன் சௌதரி - பா.ஜ.க


32) பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா - பா.ஜ.க


33) ஹர்ஷ் மல்ஹோத்ரா - பா.ஜ.க


34) டோகன் சாஹு - பா.ஜ.க


35) நிமுபென் பம்பானியா - பா.ஜ.க


36) முரளிதர் மொஹோல் - பா.ஜ.க


37) ஜார்ஜ் குரியன் - பா.ஜ.க


38) பபித்ர மகெரிட்டா - பா.ஜ.க


39) சாவித்திரி தாக்குர் - பா.ஜ.க


40) கமலேஷ் பாஸ்வான் - பா.ஜ.க


41) ராம்நாத் தாக்குர் - ஐக்கிய ஜனதா தளம்


முதலமைச்சரின் பரிந்துரையில் அமைச்சர்களின் துறைகள் மாற்றம் - ஆளுநர் மாளிகை செய்தி வெளியீடு...



பிற்படுத்தப்பட்டோர் நலன் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் கூடுதலாக ஒதுக்கீடு...


ராஜகண்ணப்பன் வசம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் துறை, கைத்தறித்துறை அமைச்சர் காந்திக்கு கூடுதலாக ஒதுக்கீடு- முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல்


ஆளுநர் மாளிகை செய்தி வெளியீடு...




மத்திய அமைச்சரவை மாற்றம் - 3 அமைச்சர்கள் ராஜினாமா - இணை அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு (Union Cabinet Reshuffle - 3 Ministers Resign - Additional Charge to Union Ministers)...



மத்திய அமைச்சரவை மாற்றம் - 3 அமைச்சர்கள் ராஜினாமா - இணை அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு (Union Cabinet Reshuffle - 3 Ministers Resign - Additional Charge to Union Ministers)...

 

3 அமைச்சர்கள் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி

 

நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் சிங் படேல், ரேணுகா சிங் ஆகியோர் ராஜினாமா


 மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மத்திய அமைச்சர்கள் போட்டியிட்டிருந்தனர். பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பலருக்கு ஐந்து மாநில தேர்தலில் போட்டியிட்டிருந்தனர். அதில் பலர் வெற்றி பெற்றிருந்தனர்.

பிரகலாத் படேல்


இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர தோமர், பிரகலாத் படேல், ரேணுகா சிங் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் காரணமாக தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்தனர்.


நரேந்திர தோமர்

இந்நிலையில் அமைச்சர் நரேந்திர தோமர் ராஜினாமாவை அடுத்து, அர்ஜூன் முண்டாவுக்கு வேளாண் அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் நடத்திய போது நரேந்திர சிங் தோமர் தலைமையிலான விவசாயத்துறை அமைச்சகம்தான் அதைக் கையாண்டது. இத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட அமைச்சராகத்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஷோபா கரந்த்லாஜே உணவு பதப்படுத்தும் தொழில்துறை இணையமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜீவ் சந்திரசேகர் ஜல் சக்தி துறையின் இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரகலாத் படேல் ஜல்சக்தித் துறை அமைச்சராக இருந்தார்.


ரேணுகா சிங்


ரேணுகா சிங் பழங்குடியின விவகார அமைச்சகத்தின் இணையமைச்சராக இருந்த நிலையில் அவரது பதவியை ராஜினாமா செய்த நிலையில் பாரதி பவார் இணையமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது ரேணுகா சிங் சத்தீஷ்கர் மாநிலத்தின் முதல்வராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சும் உள்ளது.


 மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் முண்டா வேளாண் துறையை கவனிப்பார்

 

 தொழில்துறையை இணை அமைச்சர் சுஷ்ரி ஷோபா கவனிப்பார்

 

மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஜல் சக்தி துறை இணை  பொறுப்பை கவனிப்பார்

 

மத்திய இணை அமைச்சர் பார்தி பிரவின் பவார் பழங்குடியினர்   நலத்துறையை கவனிப்பார்.


31-10-2023 மாலை 6.30 மணிக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது - தலைமைச் செயலாளர் அறிவிப்பு (31-10-2023 at 6.30 PM Tamil Nadu Cabinet meeting will be held under the chairmanship of Hon'ble Chief Minister Mr.M.K.Stalin - Announcement by Chief Secretary)...



31-10-2023 மாலை 6.30 மணிக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது - தலைமைச் செயலாளர் அறிவிப்பு (31-10-2023 at 6.30 PM Tamil Nadu Cabinet meeting will be held under the chairmanship of Hon'ble Chief Minister Mr.M.K.Stalin - Announcement by Chief Secretary)...


>>>  தலைமைச் செயலாளர் அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு அமைச்சரவை - அமைச்சர்கள் வரிசை மற்றும் அவர்களுக்கான துறைகள் - பொதுத் (சிறப்பு) துறை அரசாணை (நிலை) எண்.302, நாள்:11.05.2023 வெளியீடு (TamilNadu Cabinet - Inter-se-Seniority of Ministers and Subjects (Departments) - Public (Special) Department G.O.(Ms) No.302, Dated:11.05.2023)...


>>> தமிழ்நாடு அமைச்சரவை - அமைச்சர்கள் வரிசை மற்றும் அவர்களுக்கான துறைகள் - பொதுத் (சிறப்பு) துறை அரசாணை (நிலை) எண்.302, நாள்:11.05.2023 வெளியீடு (TamilNadu Cabinet - Inter-se-Seniority of Ministers and Subjects (Departments) - Public (Special) Department G.O.(Ms) No.302, Dated:11.05.2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



 TO BE PUBLISHED IN AN EXTRA-ORDINARY ISSUE OF THE TAMIL NADU GOVERNMENT GAZETTE DATED THE 11`" May, 2023  

ABSTRACT 

MINISTERS - Inter-se-Seniority of Ministers and Subjects - Orders -Issued. 

PUBLIC (SPECIALS) DEPARTMENT 

G.O.Ms.No.302, Dated:11.05.2023. 

Sobakiruthu, Chithirai -28, Tiruvallurvar Aandu-2054 

Read: 

1. G.O.Ms.No.266, Public (Special-B) Department, Dated:07.05.2021 

2. G.O.Ms.No.267, Public (Special-B) Department, Dated:07.05.2021 

3. G.O.Ms.No.382, Public (Special -B) Department, Dated :12.07.2021 

4. G.O.Ms.No. 795, Public (Special-B) Department, Dated:14.12.2022 

5. G.O.Ms.No. 796, Public (Special-B) Department, Dated:14.12.2022 

6. G.O.Ms.No.797, Public (Special-B) Department, Dated:14.12.2022 

7. G.O.Ms.No.296, Public (Special -B) Department, Dated :09.05.2023 

8. G.O.Ms.No.300, Public (Special-B) Department, Dated:11.05.2023 

9. G.O.Ms.No.301, Public (Special'B) Department, Dated:11.05.2023

ORDER: 

Consequent on the induction of the new Minister in the Council of Ministers and the allocation of subjects among the Ministers as ordered in the G.Os 8th and 9th read above, the inter-se-seniority of the Council of Ministers of Tamil Nadu and the subjects allocated to them are as below: 


தமிழ்நாட்டில் அமைச்சரவை இன்று 11.05.2023 மாற்றம் - அமைச்சர்களின் துறை மாற்றம் - செய்தி வெளியீடு எண்: 17, நாள்: 11-05-2023 (Cabinet Reshuffle in Tamil Nadu Today 11.05.2023 - Ministers Department Change - Press Release No: 17, Date: 11-05-2023)...



>>> தமிழ்நாட்டில் அமைச்சரவை இன்று 11.05.2023 மாற்றம் - அமைச்சர்களின் துறை மாற்றம் - செய்தி வெளியீடு எண்: 17, நாள்: 11-05-2023 (Cabinet Reshuffle in Tamil Nadu Today 11.05.2023 - Ministers Department Change - Press Release No: 17, Date: 11-05-2023)...


*தமிழ்நாட்டின் நிதி அமைச்சராக இருந்த மாண்புமிகு பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கீடு.


*மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அவர்களுக்கு நிதித்துறை அமைச்சராக ஒதுக்கீடு.


*மாண்புமிகு சாமிநாதனுக்கு அவர்களுக்கு தமிழ் வளர்ச்சி துறை ஒதுக்கீடு.


*மாண்புமிகு மனோ தங்கராஜ் அவர்களுக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு.


*மாண்புமிகு டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கு தொழில்துறை ஒதுக்கீடு.









>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்(Change in TamilNadu Cabinet)...



பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சராக நியமனம்.


போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம்.






மத்திய அமைச்சரவையில் 07-07-2021 அன்று புதியதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களும் அவர்களின் துறைகளும்...

 


Newly appointed Ministers and their Departments in the Union Cabinet on 07-07-2021...

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳


பாரத பிரதமர் மாண்புமிகு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவையில்  இன்று புதிதாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள்...

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻



1️⃣ கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை மத்திய அமைச்சர் மாண்புமிகு. தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு ஒதுக்கீடு



2️⃣ மத்திய கேபினட் அமைச்சராக பதவியேற்ற மன்ஷுக் மாண்டவ்யாவுக்கு சுகாதாரத்துறை ஒதுக்கீடு


*மன்ஷுக் மாண்டவ்யாவுக்கு கூடுதலாக ரசாயனம் மற்றும் உரத்துறை ஒதுக்கீடு


3️⃣ ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை  மத்திய அமைச்சர் மாண்புமிகு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு ஒதுக்கீடு


4️⃣ மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஜவுளித்துறை ஒதுக்கீடு


5️⃣ உள்துறை அமைச்சர் மாண்புமிகு. அமித் ஷா அவர்களுக்கு கூடுதலாக கூட்டுறவுத்துறை இலாகா  பொறுப்பு


>>> மத்திய அமைச்சரவையில் 07-07-2021 அன்று புதியதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களும் அவர்களின் துறைகளும்...


மத்திய அரசின் முக்கியமான துறை அமைச்சர்கள் பதவி விலகல் - அமைச்சர்களாக புதிதாக பதவி ஏற்பவர்கள் பட்டியல்...

 முக்கிய அமைச்சரவை மறுசீரமைப்பிற்கு முன்னதாக மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத், ரமேஷ் போக்ரியால், ஹர்ஷ் வர்தன், சந்தோஷ் கங்வார் மற்றும் பலர் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி ஐந்து மாநிலங்களுக்கான முக்கியமான தேர்தல்களுக்கு முன்னதாக தனது அரசாங்கத்தில் மாற்றியமைக்கப் போவதால் பல மத்திய அமைச்சர்கள் புதிய மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்க மாட்டார்கள். கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் உடல்நலக் காரணங்களால் தனது பதவியில் தொடர விருப்பமில்லை என்று தெரிவித்தார். அவர் ராஜினாமா செய்துள்ளார், இனி அமைச்சரவையின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார். மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரும் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளனர். மோடி கேபினட் மறுசீரமைப்பில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மந்திரி டெபஸ்ரீ சவுத்ரிக்கு மேற்கு வங்கத்தில் ஒரு முக்கியமான நிறுவன பதவி வழங்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.


பிரதமர் மோடி தலைமையில் 2019-ம் ஆண்டு மே மாதம் பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றது. இந்த பா.ஜ.க அமைச்சரவையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரு கேபினட் அமைச்சருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. உதாரணமாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயம், கிராமப் புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், உணவு பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக உள்ளார்.


மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாந்த், ‘சட்டம் மற்றும் நீதி, தொலைதொடர்பு, தகவல்தொழில்நுட்பத்துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சர்களாக உள்ளார். அதேபோல, ஹர்ஷவர்த்தன், பியூஸ் கோயல், பிரகலாத் ஜோஷி ஆகியோரும் மூன்று துறைகளுக்கு அமைச்சர்களாக உள்ளனர். அதேபோல, மத்திய விவசாயத்துறை அமைச்சராக இருந்த அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்ஷிம்ரத் கவுர் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்த பிறகு, அனைத்து அமைச்சர்களும் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.


கூட்டணி கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படாமல் இருந்துவருகிறது. எனவே, மத்திய அமைச்சரவை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஒரு மாத காலத்துக்கு மேலாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது என்று ஊடகங்களில் செய்திகள் வந்தன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்றைய ஆளுநர்கள் நியமனம் இருந்தது.


இந்தநிலையில், இன்று மாலை 6 மணிக்கு புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. புதிய மற்றும் ஏற்கெனவே மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் என 43 பேர் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், சந்தோஷ் காங்வர், டேபாஸ்ரீ சவுத்ரி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.


அமைச்சரவையிலிருந்து விலகியவர்கள்:


 ஹர்ஷ் வர்தன், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் 


ரவிசங்கர் பிரசாத், தகவல் தொழில்நுட்ப அமைச்சர்


 ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், கல்வி அமைச்சர்


 பிரகாஷ் ஜவடேகர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்


 சந்தோஷ் கங்வார், தொழிலாளர் அமைச்சர் 


சதானந்த கவுடா, வேதியியல் மற்றும் உரத்துறை அமைச்சர் 


பாபுல் சுப்ரியோ, சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் கல்வி, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் 


சஞ்சய் தோத்ரே சாஹேப் பாட்டீல் டான்வே, மாநில நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் 


ரத்தன் லால் கட்டாரியா, ஜல் சக்தி மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர்


 பிரதாப் சாரங்கி, கால்நடை பராமரிப்பு, பால்வள மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் எம்.எஸ்.எம்.இ. 


டெபஸ்ரீ சதுரி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சின் மாநில அமைச்சர் 


தவர்சந்த் கெஹ்லோட், மத்திய அமைச்சர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்


 பிரதமர் நரேந்திர மோடி, 2019 ல் பாஜகவின் வெற்றியின் பின்னர் புதன்கிழமை முதல் பெரிய அமைச்சரவை மறுசீரமைப்புடன் புதிய அமைச்சர்கள் குழுவைப் பெற உள்ளார்.


அமைச்சர்களாக புதிதாக பதவி ஏற்பவர்கள் பட்டியல்...


43 அமைச்சர்களின் பெயர் பட்டியல்..


1) ஜோதிராதித்ய சிந்தியா


2)சோனோவால்


3) நாராயண் தாட்டு ரானே


4) கிஷன் ரெட்டி


5) ராமச்சந்திர பிரசாத் சிங்


6) அஸ்வினி வைஷ்ணவ்


7) கிரண் ரிஜிஜூ


8) பசுபதி குமார் பாரஸ்


9) ராஜ்குமார் சிங்


10) ஹர்தீப்சிங் புரி


11) மன்சுக் மாண்டாவியா


12) பூபேந்தர்


13) புருஷோத்தம் ரூபாலா


14) அனுராக் தாக்கூர்


15) பங்கஜ் சவுத்ரி


16) அனுப்ரியா சிங் படேல்


17) சத்யபால்சிங் பாகல்


18) ராஜீவ் சந்திரசேகர்


19) சோபா


20) பானுபிரதாப் சிங் வர்மா


21) தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்


23) எல்.முருகன்


24) மீனாட்சி லேகி


25) அன்னபூர்ணாதேவி


26) நாராயணசுவாமி


27) கவுசல் கிஷோர்


28) அஜய் பட்


29) பி.எல்.வர்மா


30) அஜய்குமார்


31) சவுகான் தேவ்சிங்


32) பக்வந்த் கவுபா


33) கபில் மோரேஷ்வர் படேல்


34) பிரதிமா பவுதிக்


35) சுப்ஹஸ் சர்கார்


36) பக்வத் கிஷன்ராவ் காரத்


37) ராஜ்குமார் ரஞ்சன் சிங்


38) பாரதி பிரவின் பவார்


39) பிஷ்வேஸ்வர்


40) சாந்தனு தாக்கூர்


41) முஞ்சப்பரா மகேந்திர பாய்


42) ஜான் பர்லா


43) நிதிஷ் பிரமானிக்









தவறு செய்தால் பணி நீக்கம் - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை...

 * தங்கள் துறைகளில் பதவி உயர்வு,  பணி மாறுதல் வெளிப்படையாக இருக்க வேண்டும். 



* 10 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லாத நிலையில் மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். 




* புள்ளி விவரங்கள் அனைத்தையும் தயாராக வைத்திருக்க வேண்டும். 




* தவறு செய்தால் பணி நீக்கம் செய்யப்படுவர் என முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை.







இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEE Proceedings to select and send 40 teachers from each block who have made the best contribution to the learning progress of the students through TNSED Manarkeni App

  ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் சிறந்த 40 ஆசிரியர்கள் தேர்வு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... மணற்கேணி செயலி மூலம் மாணவர்களின் ...