ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்ட அரசுப் பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்
Govt school where teacher Ramani was murdered will be off for the whole week - School Education Minister Anbil Mahesh
தஞ்சாவூர் அருகே மல்லிப்பட்டினத்தில் அரசு மேனிலைப் பள்ளியில் பணியாற்றிய பெண் ஆசிரியர் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக அப்பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவித்துள்ளார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.
ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்ட அரசுப் பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை.. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்ட பிறகே வகுப்புகள் நடத்தப்படும்
-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்
தஞ்சாவூரில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட அரசுப் பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். தஞ்சை, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசுமேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்த செல்வி ரமணி (வயது 26) இன்று (நவ. 20) காலை பள்ளி வளாகத்தில் இருந்தபோது மதன்குமார் என்ற நபரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆசிரியை மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஆசிரியை கொலை செய்யப்பட்ட அரசுப் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்ட பிறகே பள்ளி திறக்கப்படும். மல்லிப்பட்டினம் அரசுப்பள்ளியில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொடூரமான செயல்களில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றார்.
தஞ்சாவூர் மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணி உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறினார்.