கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Special TETக்கு பயிற்சி வழங்குதல் - இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்



இணையதளம் வழியாக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 08.06.2026 முதல் 30.06.2026 வரை பயிற்சி வழங்குதல் சார்ந்து  பள்ளிக்கல்வி , மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு அரசு சார்பாக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆன்லைன் வழியாக சிறப்பு பயிற்சி 8.6.2026 முதல் - 30.6.2026 வரை நடைபெற உள்ளது அதற்கு கீழ்க்கண்ட Link ல் செல்லவும்.  அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்புங்கள்.  இறுதியாக submit கொடுக்கவும்.

 அடுத்து Telegram link இருக்கும் அதிலும் நீங்கள் join செய்து கொள்ளுங்கள்


படிவம் இணைப்பு : 

https://forms.gle/ZD9BTptudmq7T1yo7



SCERT Special TET Refreshment Courses Telegram குழுவில் இணைய 


https://t.me/scertspecialtet




பள்ளிக் கல்வி இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள், சென்னை-06.


ந.க.எண்.44750/எஃப்-3/2024 நாள். 05.06.2026.


பொருள்


பயிற்சி - பள்ளிக்கல்வி மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சிறப்பு அனுமதி வழக்கின் (SLP) தீர்ப்பாணையின் அடிப்படையில் தற்போது சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை எதிர்கொள்ளுதல் குறித்து இணையதளம் வழியாக பயிற்சி வழங்குதல் 08.06.2026 முதல் 30.06.2026 முடிய பயிற்சி வழங்குதல் தொடர்பாக. அறிவுரை வழங்குதல்


பார்வை


1 அரசாணை (நிலை) எண்.231 பள்ளிக்கல்வித் துறை, நாள் : 13.10.2025.


2 சென்னை-09, தலைமைச் செயலகம், பள்ளிக்கல்வித் துறை. அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம் எண். 449/ஆ.தே.வா/2025. நாள்.13.10.2025. 


3. இந்நிறுவன இயக்குநரின் செயல்முறைக் கடிதம் ந.க. எண்.44750/எஃப்-3/2024, நாள் 22.10.2025 மற்றும் 03.06.2026


பார்வை (1) இல் காணும் அரசாணையில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் தற்போது சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள், அத்தேர்வினை 2026 ஆம் ஆண்டில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், இத்தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.


பார்வை (3) இல் காணும் கடிதத்தின்படி, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை (Special TET) எதிர்கொள்ளும் ஆசிரியர்களுக்கு 08.06.2026 முதல் 30.06.2026 முடிய பயிற்சி இணையதளம் வாயிலாக வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி மாலை 06.30 மணி முதல் 08.00 மணி முடிய நடைபெறவுள்ளது.


இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Google படிவத்திற்கான Link-ஐ சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி இணையப் பயிற்சியில்


கலந்து கொள்ள விருப்பமுள்ள ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


இயக்குநர்

தொடக்கக் கல்வி


இயக்குநர்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்


இயக்குநர்

பள்ளிக் கல்வி



இணைப்பு


1. பயிற்சி கால அட்டவணை


2 தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) ஆன்லைன் வலுவூட்டுதல் பயிற்சிக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP)


3. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு வலுவூட்டும் பயிற்சி-அணுகுவதற்கான வழிமுறைகள்


பெறுநர்


அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்


அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்விமற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள்


அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்


அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள்


நகல்


கூடுதல் முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வித்துறை அவர்களுக்கு தகவலுக்காகப் பணிந்து அனுப்பப்படுகிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Special TETக்கு பயிற்சி வழங்குதல் - இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்

இணையதளம் வழியாக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 08.06.2026 முதல் 30.06.2026 வரை பயிற்சி வழங்குதல் சார்ந்து  பள்ளிக்கல்வி , மாநில கல்வியி...