கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

19-12-2024 - School Morning Prayer Activities

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-12-2024 - School Morning Prayer Activities


திருக்குறள்:

"பால் : பொருட்பால்

அதிகாரம் : சூது

குறள் எண்:938

பொருள்கெடுத்துப் பொய்மேல் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.

பொருள்:சூது, உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற் கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகை யிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்."


பழமொழி :
It is easier to destroy than to create

அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்


இரண்டொழுக்க பண்புகள் : 

  *இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் விரைவாக தூங்கி அதிகாலையில் எழுவேன்.

*தினமும் அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வேன்.


பொன்மொழி :

செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றி தான்.


பொது அறிவு :

உலகின் மிகச் சிறிய பறவை எது?

விடை: ஹம்மிங் பறவை

2. மனிதனின் இதயம் எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது?

விடை: கார்டியாக் தசை


English words & meanings :

Knitting.    -     பின்னல்

Magic.         -        மாயை


டிசம்பர் 19

கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் நினைவுநாள்

கி. ஆ. பெ. விசுவநாதம் (10 நவம்பர் 1899 - 19 திசம்பர் 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, என அழைக்கப்படுபவர், தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர். இவர் எழுதியுள்ள நூல்கள் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

2000ஆம் ஆண்டிலிருந்து கி. ஆ. பெ. விசுவநாதம் விருது அவர்களின் பெயரில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்நெறியில் தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இவரது நினைவில் ஐந்து ரூபாய் தபால் தலை இந்திய தபால் துறை சார்பில் வெளியிடப்பட்டது. 1997ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி திருச்சியில் துவக்கிய மருத்துவக் கல்லூரிக்கு கி. ஆ. பெ.யின் பெயர் சூட்டப்பட்டது



நீதிக்கதை

மந்திர கிணறு

முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்துல அரவிந்த் என்ற நில உரிமையாளர் இருந்தார். அவர் ரொம்ப ஒழுக்கமானவர் தினமும் காலையில சேவல் கூவும்போது எழுந்திடுவார்.

சந்திரன் மற்றும் சூரி அரவிந்திடம் புதுசா வேலைக்கு சேர்ந்தவர்கள.

ஆனா அவங்க ரொம்ப பெரிய சோம்பேறிகளாக இருந்தார்கள். தினமும் எழுந்து வேலைக்கு போவது அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.

தினமும் ரெண்டு பேரும் ஒரு கிணற்றுக்கு பக்கத்தில் தான் தூங்குவாங்க அப்ப ஒரு நாள் சந்திரன் சூரிகிட்ட “தினமும் காலையில் எழுந்து வேலைக்கு போகிறது ரொம்ப கஷ்டமா இருக்குடா” என்றான். அதற்கு “நானும் அப்படி தான் யோசிக்கிறேன்” என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

இவர்கள் பேசியதை கேட்ட நில உரிமையாளர் அவங்க இரண்டு பேரின் குணங்களையும் தினமும் கவனித்தார். கடைசியா அவர் அந்த இரண்டு பேருக்கும் ஒரு பாடம் கற்றுக் கொடுக்க முடிவு செய்தார்.

ஒரு நாள் அந்த இரண்டு பேரும் கிணற்றுக்கு பக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்போது கிணற்றுக்கு அடியில் இருந்து ஒரு குரல்கேட்டது.

“சூரி,சந்திரன் இன்னும் எவ்வளவு நேரம் தான் தூங்குவீர்கள்! உடனே சென்று வேலையை பாருங்கள் இல்லையேனில் உங்களை விழுங்கி விடுவேன் ” என்று அந்த குரல் சொன்னது.

ஒரே நேரத்துல ரெண்டு பேரும் ரொம்ப பயத்தோட எழுத்து ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கொண்டிருக்க, “டேய் சூரி உனக்கு அந்த சத்தம் கேட்டதா” என்று சந்திரன் சூரியிடம் கேட்டான்.

“ஆமா, நான் ரொம்ப பயந்துட்டேன் அது ஒரு கெட்ட கனவு இல்லை அந்த சத்தம் இந்த கிணற்றுக்குள் இருந்து தான் வருது நான் வேலைக்கு கிளம்புறேன் உனக்கு வேணும்னா நீயும் வா” என்று கூறி சூரி வேலைக்கு செல்ல தயாரானான்.

“நில்லுடா நானும் உன்னோட வரேன்” என்று சந்திரனும் வேலைக்கு சென்றான்.தினமும் அந்த சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

இவர்கள் வேலையின் அருமையை அறிந்து கஷ்டப்பட்டு உழைத்த நாள் அன்று அந்த சத்தம் கேட்கவில்லை.

கஷ்டப்பட்டு வேலை செய்யும் போது கிடைக்கும் பலனை மனதார உணர்ந்து கொண்டனர்.

சந்திரன் மற்றும் சூரி அவங்க கேட்ட அந்த மோசமான சத்தத்தை பற்றி சொன்னார்கள். நில உரிமையாளர் இதைக்கேட்டு சத்தமாக சிரித்தார்.

“அது ஒரு மாயமும் இல்லை, கனவும் இல்லை நீங்க இரண்டு பேரும் சோம்பேறியா இருப்பதை நான் கவனித்தேன். உங்களுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று  தான் கிணற்றுக்கு அந்தப் பக்கமாக உட்கார்ந்து அந்த பயங்கரமான சத்தங்களை ஏற்படுத்தினேன். இப்போ உங்களுக்கு புரிகிறதா, இப்ப இருந்து உங்க சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு உங்கள் வேலைகளை ஒழுங்காக பண்ணுங்கள்” என்றார்.

அன்றிலிருந்து சூரி மற்றும் சந்திரன் அவர்கள் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டார்கள். அவர்கள் இரண்டு பேரும் ரொம்ப கடினமாக நிலத்தில் உழைத்து, சம்பாதித்து ரொம்ப சந்தோஷமா இருந்தார்கள்.


இன்றைய செய்திகள்

19.12.2024

* தமிழகத்தில் 10 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் திறந்து வைத்தார்.

* தொடர் மழை காரணமாக மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 7,368 கன அடியாக அதிகரித்​துள்ளது.

* கடும் எதிர்ப்புக்கு இடையே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா தாக்கல்: ஜேபிசி பரிசீலனைக்கு அனுப்ப பரிந்துரை.

* ஜார்ஜியாவில் இந்திய உணவகத்தில் விஷவாயு தாக்கி 12 இந்தியர்கள் உயிரிழப்பு.

* ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்: முதலிடத்திற்கு முன்னேறினார் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்.


Today's Headlines

* 10 new government vocational training institutes in Tamil Nadu were inaugurated by Labour Welfare and Skill Development Minister C.V. Ganesan.

* Water inflow into Mettur dam has increased to 7,368 cubic feet per second due to continuous rains.

* 'One Nation, One Election' Bill tabled amid strong opposition: Recommendation to send it for JPC review.

* 12 Indians killed in gas attack at Indian restaurant in Georgia.

* ICC Test rankings: England's Joe Root moves up to number one.


Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

How to Update General Profile, Enrollment Profile & Facility Profile of Students on UDISE + Site

 மாணவர்களின் General Profile, Enrolment Profile & Facility Profile விவரங்களை UDISE + தளத்தில் Update செய்யும் வழிமுறை Procedure to Updat...