கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Personal details in Employees' Provident Fund (EPFO) account can now be easily changed - Transfer is also easy



  தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி (EPFO) கணக்கில் தனிப்பட்ட விவரங்களை இனி எளிதாக மாற்றலாம் - டிரான்ஸ்பர் செய்வதும் எளிது


Personal details in Employees' Provident Fund (EPFO) account can now be easily changed - Transfer is also easy


தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர் சுயவிவரங்களைப் புதுப்பிப்பதற்கான ஆன்லைன் செயல்முறைகள் எளிதாக்கியுள்ளது. ஆதார் எண்ணை பயன்படுத்தி பயனர்கள் தங்கள் சுயவிவரத்தைப் புதுப்பிக்கலாம் - மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்


பிஎப் கணக்கில் தனிப்பட்ட விவரங்களை இனி ஆன்லைன் மூலம் எந்த சரிபார்ப்பும், ஒப்புதலும் இல்லாமல் எளிதாக மாற்றும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தில் (இபிஎப்ஓ) நாடு முழுவதும் 7.6 கோடி ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு இபிஎப்ஓ இணையதளம் மூலம் பல்வேறு ஆன்லைன் சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இபிஎப்ஓ ஆன்லைனில் 2 புதிய வசதிகளை ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.


இதன்படி, யுஏஎன் எண் UAN Number வழங்கப்பட்டுள்ள ஊழியர்கள் பிஎப் கணக்கில் உள்ள தங்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், தேசியம், தந்தை/தாய் பெயர், மனைவியின் பெயர், திருமண நிலை, பணியில் சேர்ந்த தேதி, விலகிய தேதி போன்ற தனிப்பட்ட விவரங்களை ஆன்லைன் மூலம் நேரடியாக திருத்தவோ மாற்றவோ முடியும். இதற்கு முன் இத்தகவல்களை மாற்றும் போது நிறுவனத்தின் மூலம் சரிபார்க்கப்பட்டு, இபிஎப்ஓ ஒப்புதல் பெற வேண்டும். இதனால் காலவிரயம் ஆவதால் தற்போது நேரடியாக தனிப்பட்ட தகவல்களை மாற்றும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதே போல, வேறு நிறுவனத்திற்கு மாறும் போது இ-கேஒய்சி  eKYC செய்த ஊழியர்கள் ஆதார் ஓடிபி Aadhar OTP மூலமாக தங்கள் கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்ற முடியும். இதற்கு முன் இதற்கு முந்தைய நிறுவனத்தின் ஒப்புதல் வேண்டும். தற்போது அந்த ஒப்புதல் இல்லாமல் நேரடியாக ஆன்லைன் பரிமாற்றத்தை இபிஎப்ஓவிடம் தாக்கல் செய்யலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.3.1 - Updated on 18-07-2025

தற்போது TNSED Schools  App-ல் Break Fast & Noon Meal பதிவு செய்வதற்கான  புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: 0.3...