கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

OTP லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
OTP லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

SIR படிவம் - OTP குறித்த சிறப்பு எச்சரிக்கை

 

SIR படிவம் - OTP குறித்த சிறப்பு எச்சரிக்கை


நீங்கள் அனைவரும் SIR படிவத்தை நிரப்பும்போது உங்கள் மொபைல் எண்ணைக் கொடுக்கிறீர்கள்.


எங்கிருந்தும் உங்களுக்கு அழைப்பு வந்து உங்கள் மொபைலில் பெறப்பட்ட OTP ஐ உங்கள் SIR சரிபார்ப்புக்கு வழங்குமாறு கேட்டால், நான் தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று பேசிக் கொள்கிறேன் அல்லது எனது BLO விடம் மட்டுமே கொடுப்பேன் என்று நீங்கள் கூற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


இதற்குப் பிறகும், அவர்கள் உங்களை OTP சொல்லும்படி கேட்டு கட்டாயப்படுத்தினால், யாருக்கும் OTP கொடுக்க வேண்டாம்.



Whirlpool 7 kg Magic Clean 5 Star Fully Automatic Top Load Washing Machine Grey (MAGIC CLEAN 7.0 GENX GREY 5YMW)


https://amzn.to/3LPVx3A





Personal details in Employees' Provident Fund (EPFO) account can now be easily changed - Transfer is also easy



  தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி (EPFO) கணக்கில் தனிப்பட்ட விவரங்களை இனி எளிதாக மாற்றலாம் - டிரான்ஸ்பர் செய்வதும் எளிது


Personal details in Employees' Provident Fund (EPFO) account can now be easily changed - Transfer is also easy


தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர் சுயவிவரங்களைப் புதுப்பிப்பதற்கான ஆன்லைன் செயல்முறைகள் எளிதாக்கியுள்ளது. ஆதார் எண்ணை பயன்படுத்தி பயனர்கள் தங்கள் சுயவிவரத்தைப் புதுப்பிக்கலாம் - மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்


பிஎப் கணக்கில் தனிப்பட்ட விவரங்களை இனி ஆன்லைன் மூலம் எந்த சரிபார்ப்பும், ஒப்புதலும் இல்லாமல் எளிதாக மாற்றும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தில் (இபிஎப்ஓ) நாடு முழுவதும் 7.6 கோடி ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு இபிஎப்ஓ இணையதளம் மூலம் பல்வேறு ஆன்லைன் சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இபிஎப்ஓ ஆன்லைனில் 2 புதிய வசதிகளை ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.


இதன்படி, யுஏஎன் எண் UAN Number வழங்கப்பட்டுள்ள ஊழியர்கள் பிஎப் கணக்கில் உள்ள தங்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், தேசியம், தந்தை/தாய் பெயர், மனைவியின் பெயர், திருமண நிலை, பணியில் சேர்ந்த தேதி, விலகிய தேதி போன்ற தனிப்பட்ட விவரங்களை ஆன்லைன் மூலம் நேரடியாக திருத்தவோ மாற்றவோ முடியும். இதற்கு முன் இத்தகவல்களை மாற்றும் போது நிறுவனத்தின் மூலம் சரிபார்க்கப்பட்டு, இபிஎப்ஓ ஒப்புதல் பெற வேண்டும். இதனால் காலவிரயம் ஆவதால் தற்போது நேரடியாக தனிப்பட்ட தகவல்களை மாற்றும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதே போல, வேறு நிறுவனத்திற்கு மாறும் போது இ-கேஒய்சி  eKYC செய்த ஊழியர்கள் ஆதார் ஓடிபி Aadhar OTP மூலமாக தங்கள் கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்ற முடியும். இதற்கு முன் இதற்கு முந்தைய நிறுவனத்தின் ஒப்புதல் வேண்டும். தற்போது அந்த ஒப்புதல் இல்லாமல் நேரடியாக ஆன்லைன் பரிமாற்றத்தை இபிஎப்ஓவிடம் தாக்கல் செய்யலாம்.



பள்ளிக்கல்வித்துறை வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து பெற்றோர்கள் அறிய அவர்களின் Mobile OTP Verification செய்யப்படுதல் குறித்து பெற்றோருக்கு தெரியப்படுத்த - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கடிதம்...



 பள்ளிக்கல்வித்துறை வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து பெற்றோர்கள் அறிய அவர்களின் Mobile OTP Verification செய்யப்படுதல் குறித்து பெற்றோருக்கு தெரியப்படுத்த - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கடிதம்...











மாணவர் நல திட்டங்கள்: பெற்றோருக்கு 'வாட்ஸ் ஆப்' தகவல்

சென்னை: பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனருக்கு, பள்ளிக்கல்வித்துறை செயலர் குமர குருபரன் அனுப்பியுள்ள கடிதம்:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, 14 வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதுபற்றி பெற்றோருக்கு தெரிவிப்பதற்காக, அவர்களின் மொபைல் போன் எண்களை பெற வேண்டும்.

இதுவரை, 35 லட்சம் மாணவர்களின் பெற்றோர் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டதும், இலவச பொருட்கள் வழங்கப்பட உள்ளன. தலைமை ஆசிரியர்கள் துணையுடன், மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு, நலத்திட்டங்கள் குறித்த விபரங்களை எடுத்துரைக்க வேண்டும். பெற்றோரின் மொபைல் போன் எண்ணுக்கு, ஓ.டி.பி., அனுப்பப்படும் விபரத்தை, பெற்றோருக்கு தெரியப்படுத்தி, இப்பணியை செய்து முடிக்க வேண்டும். 'வாட்ஸ் ஆப்' யில் விரைந்து தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்