கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025-2026 - Application Form for Student Admission - EMIS Website



2025-2026 - மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் - EMIS வலைதளம்


2025-2026 - Application Form for Student Admission - EMIS Website 


அனைவருக்கும் வணக்கம் ! 


2025-2026 ஆம்  கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை பள்ளிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது .  அம்மாணவர்களுக்கான சேர்க்கை விவரங்களை உள்ளீடு செய்ய ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் EMIS School Login- யில் வழிவகை செய்யப்பட்டுள்ளது . 


மேலும் ,   விண்ணப்பப் படிவத்தில் உள்ளீடு செய்வதற்கான  வழிகாட்டு நெறிமுறைகள் கீழே உள்ள காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது. 


ஒரு மாணவருக்கு ஒரு பள்ளியில் மட்டுமே தரவுகள் பதிவேற்றம் செய்ய இயலும் .  


முழுமையான மற்றும் சரியான தகவல்கள் பெறப்படும் வகையில் ஏதேனும் , தரவுகள் தவறாக பதிவு செய்யப்பட்டால் அதை edit செய்யும் வழிமுறையும் , delete செய்யும் வழிமுறையும் கொடுக்கப்பட்டுள்ளது .


இவ்விண்ணப்பப் படிவம் கீழ்க்கண்ட மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்


அங்கன்வாடியில் பயின்ற மாணவர்கள்


சுயநிதி பள்ளிகளில் Pre KG முதல் XII வகுப்பு வரை பயின்ற மாணவர்கள்


பிற மாநில அல்லது பிற நாட்டில் பயின்ற மாணவர்கள்


புதிய நேரடி மாணவர் சேர்க்கை


குறிப்பு

முந்தைய கல்வி ஆண்டில் அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்றுள்ள மாணவர்களுக்கு இந்தப் படிவம் பொருந்தாது.




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-03-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-03-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: சான்றாண்மை...