கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SLAS அறிக்கை - தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 1 திருச்சியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு



SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 1 திருச்சியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


 ஜூன் 23, 24 ஆகிய இரண்டு நாட்களும் 38 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அலுவலர்களுடன் ஒவ்வொரு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி குறித்தும் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினோம். அதில் மாநிலத் திட்டக்குழு நடத்திய SLAS (State Level Achievement Survey) மூலம் பெறப்பட்ட ஆய்வறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. 


“இதன் அடுத்த கட்டமாக மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும்” என அறிவித்திருந்தோம். அவ்வகையில் முதல் ஆய்வுக்கூட்டம் #திருச்சி -யில் எனது தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் SLAS அறிக்கையில் தரப்பட்டுள்ள புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு கலந்தாலோசித்தோம்.


மாவட்டத்தின் 5 கல்வி வட்டாரங்களில் இருந்து 463 தலைமையாசிரியர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். 2025-26 கல்வியாண்டில் சிறப்பான தேர்ச்சி விகிதத்தைப் பெறுவதற்கான அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கி, நம்பிக்கையோடு விடைபெற்றோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய ஆசிரியர்களை பணி சேர அனுமதிக்கும் முன்னர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் : பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

  புதிதாக பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர் பணிநாடுநர்களை பணியில் சேர அனுமதிக்கும் முன்னர் மேற்கொள்ள வேண்டிய அறிவுரைகள் தொடர்பாக பள்ளிக்கல்வி...