கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Review Meeting லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Review Meeting லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

CPS Updation - கருவூலத்துறை ஆணையர் & நிதித்துறை துணை செயலாளர் ஆய்வுக் கூட்ட கருத்துகள்



CPS Updation தொடர்பாக கருவூலத்துறை ஆணையர் மற்றும் நிதித்துறை துணை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்ட கருத்துகள்


1. CPS Final settlement Updation 

2. CPS Number available in GDC but not available in IFHRMS

3. Data Cleansing work pending in IFHRMS.


முழுமையான தகவல் அறிய



>>> இங்கே சொடுக்கவும்...


SLAS அறிக்கை - திருப்பூரில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 5



SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 5 திருப்பூரில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடினோம்.


5 கல்வி வட்டாரங்களில் இருந்து 600 பள்ளித் தலைமையாசிரியர்கள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். மாநிலத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட #SLAS அறிக்கையின் அடிப்படையில், தேர்ச்சி விகிதம் மற்றும் கற்றல் கற்பித்தல் மேம்பாட்டிற்காக எடுத்துவரும் முயற்சிகள் குறித்து எடுத்துரைத்தார்கள். அவர்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துகள் கூறி நம்பிக்கையளித்தோம்.


மாவட்டம் வாரியாக நடத்துகின்ற ஆய்வுக் கூட்டத்தின் 5ஆவது மாவட்டமாக திருப்பூர் அமைந்தது.


NMMS தேர்வில் 18 மாணவர்கள் வெற்றி - தலைமை ஆசிரியர் & ஆசிரியருக்கு அமைச்சர் பாராட்டு



NMMS தேர்வில் 18 மாணவர்கள் வெற்றி - தலைமை ஆசிரியர் & ஆசிரியருக்கு அமைச்சர் பாராட்டு


திருச்சி மாவட்டம் ஊருடையாப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 18 மாணவர்கள் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வில் (National Means-cum-Merit Scholarship-NMMS) வெற்றி பெற்றுள்ளார்கள்.


இச்சாதனைக்கு உறுதுணையாக இருந்த அப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமிகு.ராணி அவர்களையும், பயிற்சியளித்த ஆசிரியர் திருமிகு.மணிகண்டன் அவர்களையும் திருச்சியில் நடைபெற்ற பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் கெளரவித்தோம்.


SLAS அறிக்கை - தர்மபுரியில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 4



 SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 4 தர்மபுரியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களுடனான இரண்டு நாள் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி முடித்த மறுநாளே, மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களை நேரடியாகச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.


அந்த வரிசையில் 4-ஆவது ஆய்வுக் கூட்டத்தை தர்மபுரியில் நடத்தினோம். “தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு எனும் ஒற்றை குறிக்கோளை நோக்கி ஓராண்டு பயணிப்போம். தங்களின் முயற்சிகளும், உற்சாகமும் பெரும் நம்பிக்கை அளிக்கிறது” என உரையாற்றினோம்.


#SLAS அறிக்கையை கையிலெடுத்து அனைத்து மாவட்டங்களுக்கும் பயணிக்கவுள்ளோம். இப்பயணம் நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கானது!


SLAS அறிக்கை - கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 3



 SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 3 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


மாவட்ட வாரியாக பள்ளித் தலைமையாசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டத்தின் 3ஆவது சந்திப்பு ஓசூரில் எனது தலைமையில் இன்று நடைபெற்றது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். #SLAS அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை முன்வைத்து, மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டோம்.


“அடுத்தாண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் கற்றல் அடைவுகளில் முன்னேறியுள்ளது என #SLAS அறிக்கையின் முடிவுகளில் வர வேண்டும். அதற்கான முயற்சிகளை இன்றிலிருந்தே மேற்கொள்ளுங்கள். உங்களின் முயற்சிகளுக்கு துணை நிற்போம்” என ஊக்கமளித்து விடைபெற்றோம்.


SLAS அறிக்கை - நாகையில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 2



SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 2 நாகையில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


திருச்சி மாவட்டத்தைத் தொடர்ந்து 2ஆவது மாவட்டமாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளித் தலைமையாசிரியர்களுடன் இன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினோம்.


மாநிலத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட கற்றல் அடைவு #SLAS அறிக்கையை முன்வைத்து இந்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம். 2 கல்வி வட்டாரங்களில் இருந்து மொத்தம் 170 தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டு, கற்பித்தல் முறைகளில் தாங்கள் அடுத்து மேற்கொள்ளவுள்ள முயற்சிகள் பற்றி எடுத்துரைத்தார்கள்.


‘நாகை மாவட்டம் கற்றல் கற்பித்தலில் முன்னேறியுள்ளது’ என அடுத்தாண்டு #SLAS அறிக்கை தெரிவிக்க வேண்டும்’ என ஊக்கமளித்து விடைபெற்றோம்.


SLAS அறிக்கை - தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 1 திருச்சியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு



SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 1 திருச்சியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


 ஜூன் 23, 24 ஆகிய இரண்டு நாட்களும் 38 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அலுவலர்களுடன் ஒவ்வொரு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி குறித்தும் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினோம். அதில் மாநிலத் திட்டக்குழு நடத்திய SLAS (State Level Achievement Survey) மூலம் பெறப்பட்ட ஆய்வறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. 


“இதன் அடுத்த கட்டமாக மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும்” என அறிவித்திருந்தோம். அவ்வகையில் முதல் ஆய்வுக்கூட்டம் #திருச்சி -யில் எனது தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் SLAS அறிக்கையில் தரப்பட்டுள்ள புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு கலந்தாலோசித்தோம்.


மாவட்டத்தின் 5 கல்வி வட்டாரங்களில் இருந்து 463 தலைமையாசிரியர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். 2025-26 கல்வியாண்டில் சிறப்பான தேர்ச்சி விகிதத்தைப் பெறுவதற்கான அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கி, நம்பிக்கையோடு விடைபெற்றோம்.


ஆய்வுக்கூட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்களின் பதிவு



 ஆய்வுக்கூட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் பதிவு


பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக மாநாட்டுக் கூட்ட அரங்கில் எனது தலைமையில் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தொடங்கியது. 


மாவட்டம் வாரியாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளவுள்ளோம். இன்றும், நாளையும் (23, 24.06.2025) மூன்று அமர்வுகளாக இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.


மாவட்டம் தோறும் கல்வி அலுவலர்கள் மேற்கொண்டுள்ள சாதனைப் பணிகள், மாணவர்களின் இடைநிற்றல், 14417 உதவி எண்ணிற்கு அம்மாவட்டங்களில் இருந்து வந்துள்ள புகார்கள் - கருத்துகள் போன்ற பல்வேறு கூறுகளில் கல்வி அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறோம். கல்வி வளர்ச்சி சார்ந்த அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து வருகிறோம் - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் பதிவு



Discussed Matters of CEO Review Meeting on 23.06.2025



மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 23-06-2025 அன்று நடைபெற்ற  முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துகள்


Views discussed at the review meeting for Chief Education Officers held on 23-06-2025 under the chairmanship of the Hon'ble Minister of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


School Education Minister's Review Meeting - DEE Agenda


பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆய்வுக் கூட்டம் - தொடக்கக் கல்வித் துறைக்கான கூட்டப் பொருள்


School Education Minister's Review Meeting - Agenda for the Elementary Education Department



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Review Meeting for all District Chief Education Officers – DSE Proceedings


அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெறுதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Review Meeting for all District Chief Education Officers – Director of School Education Proceedings 


பள்ளிக் கல்வித் துறை - அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 16.12.2024 மற்றும் 17.12.2024 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூரில் நடைபெறுதல் - தகவல் தெரிவித்தல் - சார்பாக - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Chief Minister's Review Meeting in school education department On 08-11-2024



08-11-2024 அன்று முதலமைச்சர் அவர்கள் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டம் 


 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்கள் வருகின்ற 8ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தை நடந்த உள்ளார்கள்.


அதனை முன்னிட்டு  மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் Tamilnadu School Education Department இயக்ககங்களின் இயக்குநர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அறிவிக்கப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.


 

Agenda of the review meeting for all District Chief Education Officers to be held at Chennai on 27-09-2024...


 27-09-2024 அன்று சென்னையில் நடைபெறவுள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான மீளாய்வுக் கூட்ட கூட்டப்பொருள்...


Agenda of the review meeting for all District Chief Education Officers to be held at Chennai on 27-09-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


முதன்மை கல்வி அலுவலர்கள் /மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் - செய்தி வெளியீடு...



முதன்மை கல்வி அலுவலர்கள் /மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு  அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் - செய்தி வெளியீடு...


>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



முதன்மை கல்வி அலுவலர்கள் /மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் 22-08-2024 மற்றும் 23-08-2024 நடைபெறுதல் கூட்டப்பொருள் & நிகழ்ச்சி நிரல் - பள்ளிக்கல்வி இயக்குநர் கடிதம்...



>>> கூட்டப்பொருள் & நிகழ்ச்சி நிரல் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

ஓய்வூதியத் திட்டம் மறு ஆய்வு செய்யும் குழு - ஆலோசனைக் கூட்டம் - மத்திய நிதித்துறைச் செயலாளர் தலைமையில் டெல்லியில் 14-03-2024 அன்று நடைபெற்றது...

  ஓய்வூதியத் திட்டம் மறு ஆய்வு செய்யும் குழு -  ஆலோசனைக்  கூட்டம் - மத்திய நிதித்துறைச் செயலாளர் தலைமையில் டெல்லியில் 14-03-2024 அன்று நடைபெற்றது...


Pension Scheme Review Committee - Consultative meeting - chaired by Union Finance Secretary held at Delhi on 14-03-2024...



பள்ளிக்கல்வி - மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களின் ஆய்வு கூட்டம் 20.12.2023 அன்று நடைபெறுதல் - விவரம் கோருதல் - தொடர்பாக - அரசு செயலாளர் கடிதம் (School Education - Hon'ble Minister of School Education's review meeting to be held on 20.12.2023 - seeking details - regarding - letter from Secretary to Government)...


பள்ளிக்கல்வி - மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களின் ஆய்வு கூட்டம் 20.12.2023 அன்று நடைபெறுதல் - விவரம் கோருதல் - தொடர்பாக - அரசு செயலாளர் கடிதம் (School Education - Hon'ble Minister of School Education's review meeting to be held on 20.12.2023 - seeking details - regarding - letter from Secretary to Government)...



>>> அரசு செயலாளர் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 24.11.2023 முதல் 26.11.2023 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது & பள்ளிக்கல்வி இயக்குனரின் கடிதம், நாள்: 10-11-2023 (Review meeting for all District Chief Education Officers and District Education Officers in Krishnagiri District for 3 days from 24.11.2023 to 26.11.2023 - Letter from Director of School Education, dated: 10-11-2023)...

 

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 24.11.2023 முதல் 26.11.2023 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது -  பள்ளிக்கல்வி இயக்குனரின் கடிதம், நாள்: 10-11-2023 (Review meeting for all District Chief Education Officers and District Education Officers in Krishnagiri District for 3 days from 24.11.2023 to 26.11.2023 - Letter from Director of School Education, dated: 10-11-2023)...



>>> பள்ளிக்கல்வி இயக்குனரின் கடிதம், நாள்: 10-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் (CEO) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் (DEO) கூட்டம்.


கிருஷ்ணகிரியில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் வரும் 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு.


கூட்டத்தில் அனைத்து அலுவலர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.


முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான (CEO / DEO) செப்டம்பர் 2023 மாத ஆய்வுக் கூட்டம் 21-09-2023 முதல் 23-09-2023 வரை திருச்சியில் நடைபெறுதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் (DSE) செயல்முறைகள் (September Review Meeting for Chief Education Officers and District Education Officers (CEO / DEO) to be held at Trichy from 21-09-2023 to 23-09-2023 - Proceedings of Director of School Education - DSE)...

 

முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான (CEO / DEO) செப்டம்பர் 2023 மாத ஆய்வுக் கூட்டம் 21-09-2023 முதல் 23-09-2023 வரை திருச்சியில் நடைபெறுதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் (DSE) செயல்முறைகள் (September Review Meeting for Chief Education Officers and District Education Officers (CEO / DEO) to be held at Trichy from 21-09-2023 to 23-09-2023 - Proceedings of Director of School Education - DSE)...


>>> பள்ளிக்கல்வி இயக்குநரின் (DSE) செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மண்டல ஆய்வுகள் - கல்வி இணை செயல்பாடுகள் - ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் - மாவட்ட வாரியாக இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், கடிதம் ந.க.எண்: 52444/ அ1/ இ4/ 2023, நாள் : 13.09.2023 (Tamil Nadu Chief Minister's Zonal Review Meeting - School Forum Activities - Conduct of Review Meeting - District wise Director and Joint Directors appointed as Officers in Charge - Proceedings of Director of School Education, Dated : 13.09.2023)...

 

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மண்டல ஆய்வுகள் - கல்வி இணை செயல்பாடுகள் - ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் - மாவட்ட வாரியாக இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், கடிதம் ந.க.எண்: 52444/ அ1/ இ4/ 2023, நாள் : 13.09.2023 (Tamil Nadu Chief Minister's Zonal Review Meeting - School Forum Activities - Conduct of Review Meeting - District wise Director and Joint Directors appointed as Officers in Charge - Proceedings of Director of School Education, Dated : 13.09.2023)...


>>> பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், கடிதம் ந.க.எண்: 52444/ அ1/ இ4/ 2023, நாள் : 13.09.2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தலைமைச் செயலாளரின் ஆய்வுக்கூட்டம் - அரசுப் பணியாளர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பான விவரங்கள் கோருதல் - அரசுச் செயலாளரின் கடிதம், நாள்: 17-08-2023(Chief Secretary's Review Meeting - Seeking details regarding demands of Government Employees Unions - Secretary's letter, Dated: 17-08-2023)...



>>> தலைமைச் செயலாளரின் ஆய்வுக்கூட்டம் - அரசுப் பணியாளர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பான விவரங்கள் கோருதல் - அரசுச் செயலாளரின் கடிதம், நாள்: 17-08-2023(Chief Secretary's Review Meeting - Seeking details regarding demands of Government Employees Unions - Secretary's letter, Dated: 17-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாவட்ட மாறுதலுக்கான (Inter District) முதுகலை ஆசிரியர் (P.G. Teacher) காலிப் பணியிட விவரங்கள் வெளியீடு

   மாவட்ட மாறுதலுக்கான (Inter District) முதுகலை ஆசிரியர் காலிப் பணியிட விவரங்கள் வெளியீடு >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...