Indian Railways : நாட்டிலேயே முதல் முறையாக சென்னை ICF ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட, ஹைட்ரஜன் ரயில்
https://kalvianjal.blogspot.com/2025/08/hydrogen-train.html
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் டெல்லி புறப்பட்டது. விரைவில் ஹைட்ரஜன் ரயில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிவிட்டுள்ளார். நாட்டிலேயே முதல் முறையாக ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட, ஹைட்ரஜன் ரயில் இன்று புறப்பட்டு சென்றது. அரியானா மாநிலம் சோனி பட்டில் இருந்து- ஜிந்த் வரை விரைவில் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட உள்ளது.
ஐ.சி.எஃப். ஆலையில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில், சென்னையில் இருந்து ஹரியானாவுக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. இந்த ரயிலை, அடுத்த சில மாதங்களுக்கு பல்வேறு கட்ட சோதனையில் ஈடுபடுத்த உள்ளனர்.
https://kalvianjal.blogspot.com/2025/08/hydrogen-train.html
உலக புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான சென்னை ஐ.சி.எஃப் ஆலையில், வந்தே பாரத் ரயில், எல்எச்பி பெட்டிகள் கொண்ட ரயில், மெட்ரோ ரயில், அம்ரித் பாரத் ரயில் உள்பட பல்வேறு ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன.
இதற்கிடையில், இங்கு நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் ரூ.118 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், நீராவியை மட்டுமே வெளியிடுவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. மின்சாரத்தில் இயங்கும் ரயிலை விட, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்புக்கு உகந்தது. முக்கிய நகரங்களில் இருந்து, குறுகிய துாரத்துக்கு மட்டுமே, தற்போது இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
https://kalvianjal.blogspot.com/2025/08/hydrogen-train.html
அதிகபட்சமாக 50 முதல் 80 கி.மீ. தூரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயிலில் 10 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 84 பேர் பயணம் செய்யலாம். ரயில் இன்ஜின் 1,200 குதிரை திறன் கொண்டது, அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும். இந்நிலையில், இந்த ரயில் வேறொரு இன்ஜினில் இணைக்கப்பட்டு, சென்னையில் இருந்து ஹரியானாவுக்கு நேற்று அதிகாலை கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து, ஐ.சி.எஃப் அதிகாரிகள் கூறியதாவது: ரயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி, பல்வேறு கட்ட சோதனை நடத்தப்படும். சோதனை இறுதி செய்த பிறகு, ரயில்வே பாதுகாப்பு ஆணையரகம் ஒப்புதல் பெறப்படும். பிறகு, ஹரியானா மாநிலம் சோனிபேட் – ஜிந்த் இடையே சில வாரங்களுக்கு வெறும் ரயில் மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் இயக்கம், பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்த பிறகு, பயணிகளின் சேவைக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
https://kalvianjal.blogspot.com/2025/08/hydrogen-train.html
ஹைட்ரஜன் ரயில் என்பது, இயற்கையை மாசுப்படுத்தாமல் இயங்கும் ஒரு சுத்தமான, பசுமையான போக்குவரத்து வகையாக உலக நாடுகளில் பரந்து வளர்ந்து வருகிறது. இது மிதமான காற்று வெளியீடு, குறைந்த சத்தம் மற்றும் நீடித்த சக்தியை வழங்குவதால், எதிர்காலத்தின் சுத்தமான போக்குவரத் தீர்வாகக் கருதப்படுகிறது.ஹைட்ரஜன் ரயில்களில் ஃப்யூஎல் செல் (Fuel Cell) என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
https://kalvianjal.blogspot.com/2025/08/hydrogen-train.html.
இது ஹைட்ரஜன் வாயுவையும் ஆக்ஸிஜனை இணைத்து, மின் சக்தியாக மாற்றுகிறது.அந்த மின்சக்தி ரயிலின் மோட்டாரை இயக்கி பயணத்தை நடத்துகிறது.இதனால் மாற்றுப் பயன்களாக நீர் (H₂O) மற்றும் வெப்பம் மட்டும் வெளியேறும்.ஜெர்மனி தான் முதலில் ஹைட்ரஜன் ரயில்களை வழிநடத்தத் தொடங்கிய நாடாகும்.2018ல் Coradia iLint என்ற ரயிலை அறிமுகப்படுத்தியது.இந்திய ரயில்வே, 2030க்கு முன் net-zero carbon emission இலக்கை நோக்கி முன்னேறுகிறது.வாரணாசியில் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை முறையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. Hydrogen for Heritage" எனும் திட்டத்தின் கீழ், பாரம்பரிய இடங்களில் சுற்றுச்சூழலுக்கு இனிய ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.