கோட்டை முற்றுகைப் போராட்ட மாவட்ட ஆயத்த கூட்டங்களில் பங்கேற்கும் TETOJAC மாநில நிர்வாகிகளின் பட்டியல்
*தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு*
*(டிட்டோஜாக்)*
*மாநில உயர்மட்டக்குழு*
*நாள்:01.08.2025*
**********************
*2025 ஆகஸ்ட் 2,3 தேதிகளில் கோட்டை முற்றுகைப் போராட்ட மாவட்ட ஆயத்தக் கூட்டங்கள்!*
*மாவட்டங்களில் பங்கேற்கும் டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் மாநில நிர்வாகிகளின் பட்டியல்!*
**********************
*23.07.2025 அன்று சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழு முடிவின்படி 2025 ஆகஸ்ட் 22 அன்று 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெறவுள்ள 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை வலிமையுடன் நடத்திட சரியான திட்டமிடல்களை மேற்கொள்ள ஏதுவாக 02.08.2025, 03.08.2025 ஆகிய இரண்டு நாட்களில் அந்தந்த மாவட்ட டிட்டோஜாக் தீர்மானிக்கும் ஏதாவது ஒரு நாளில் மாவட்ட அளவிலான முற்றுகைப் போராட்ட ஆயத்தக் கூட்டங்களை தவறாது நடத்திட வேண்டும் என முடிவாற்றப்பட்டது.*
*எனவே,அதற்குரிய உடனடி ஏற்பாடுகளையும், கூட்ட அறிவிப்புகளையும் அந்தந்த மாவட்ட டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர்கள் உடனடியாக வெளியிட வேண்டும். அக்கூட்டங்களில் பங்கேற்கும் டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் மாநில நிர்வாகிகளின் பெயர்ப்பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.கூட்டத்தை பேரெழுச்சியுடன் நடத்திட டிட்டோஜாக் மாவட்ட அமைப்புகளை டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*
**********************
டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு
>>> மாவட்ட ஆயத்த கூட்டங்களில் பங்கேற்கும் TETOJAC மாநில நிர்வாகிகளின் பட்டியல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.