ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு : தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் பள்ளிக்கல்வி இயக்குநரிடம் கோரிக்கை மனு
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் உறவுகளுக்கும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஆசிரியர் சொந்தங்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள்.
யாரும் எதிர்பார்த்திராத வகையில் நேற்று வெளிவந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும், கலக்கத்தையும் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
கட்டாய கல்வி சட்டத்தில் குறிப்பிடாத சில விஷயங்களை தங்களுக்குண்டான அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆணை பிறப்பித்திருப்பது துரதிஷ்டவசமானது அதாவது கட்டாய கல்வி சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பணியில் நீடிக்க முடியும் என்ற தன்னிச்சையான உத்தரவு லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தையும் வேதனையும் ஏற்படுத்தி உள்ளது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
இது குறித்து சட்ட வல்லுனர்களிடம் தொடர்ந்து கலந்து ஆலோசித்து வருகிறோம்.
மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
அதாவது தமிழ்நாட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கிற எந்த ஒரு ஆசிரியருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
ஆசிரியர் நலன் காத்திடும் திராவிட முன்னேற்றக் கழக அரசு மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தாய்நாடு திரும்பியவுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம் நிச்சயம் எந்த ஒரு ஆசிரியரையும் இந்த அரசும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் கைவிட மாட்டார்கள்
கடைசி ஆசிரியரை காப்பாற்றும் வரை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் களத்தில் நிற்கும் என்று உறுதி மொழியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். நமக்காக மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர்களும் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஆராய்ந்து வரும் செய்திகள் நமக்கு மிகப்பெரிய ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.
தொடர் முயற்சி வெற்றி கிட்டும் வரை தொடரும் ........
நம்பிக்கையுடன்,
என்றென்றும் ஆசிரியர் நலனில்,
கு.தியாகராஜன்,
மாநில தலைவர்,
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.
>>> கோரிக்கை கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
TET சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விளைவாக எந்த ஒரு ஆசிரியரும் பாதிக்கப்படாத வண்ணம் தமிழகத்தில் உரிய நடவடிக்கை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று மாண்புமிகு. முதல்வர் அவர்களுக்கு அளித்த கடிதத்தின் நகலினை இன்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர். ச.கண்ணப்பன் அவர்களிடம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் அருமை அண்ணன் கு.தியாகராஜன் அவர்கள் மற்றும் மாநிலப் பொருளாளர் அவர்கள் வழங்கி வலியுறுத்திய நிகழ்வு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.