கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் இனியும் ஏமாற்றாமல் உடனே நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் இனியும் ஏமாற்றாமல் உடனே நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ் 


திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக  தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: இனியும் ஏமாற்றாமல் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்!


பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்,  தற்காலிகப் பணியாளர்கள் மற்றும் பகுதி நேர பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும், அரசுத்துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி   அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டணியான ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில்  இன்று சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் உண்ணாநிலை போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.


தமிழ்நாட்டில் சபிக்கப்பட்ட சமூகம் என்றால் அது ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தான் என்று கூறும் அளவுக்கு  அவர்களுக்கு எதிராக அடுக்கடுக்கான துரோகங்களை திமுக அரசு செய்து வருகிறது. அரசு ஊழியர்கள் சார்பில் முன்வைக்கப்படும் அனைத்துக் கோரிக்கைகளும் மிகவும் நியாயமானவை ஆகும். இந்தக் கோரிக்கைகள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருபவை தான். இன்னும் கேட்டால் எதிர்க்கட்சியாக இருந்த போது இந்தக் கோரிக்கைகளை திமுகவே வலியுறுத்தியது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்ற திமுக அரசு மறுத்து வருகிறது.


2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன்  தொடர்பாக 10 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரே ஒரு வாக்குறுதியை மட்டும் நிறைவேற்றிய திமுக அரசு, மீதமுள்ள 9 வாக்குறுதிகளையும் இன்னும் நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த திமுக, அதற்காக குழு ஒன்றை அமைத்து அதன் இறுதி அறிக்கையைக் கூட  இன்னும் பெறாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றி வருகிறது.


முனிவர் - விஷப்பாம்பு கதை ஒன்று சொல்லப்படுவதுண்டு. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த  நச்சுப்பாம்பை  பார்த்த முனிவர் அந்த பாம்புக்கு மருத்துவம் அளித்து காப்பாற்றினாராம். ஆனால், அந்த பாம்போ, கொஞ்சமும் நன்றி இல்லாமல் அந்த முனிவரையே  கொத்தியதாம். அதேபோல் தான் பத்தாண்டுகளாக ஆட்சிக்கு வர முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த  திமுகவை அரசு ஊழியர்கள் தான் ஆதரவளித்து ஆட்சியில் அமர்த்தினார்கள்.  ஆனால், அந்த நன்றி கொஞ்சமும் இல்லாமல்  அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை உரிமைகளைக் கூட  வழங்க மறுக்கிறது.


இந்தியாவின் எந்த மாநிலத்தையும் விட அதிகமாக தமிழ்நாடு 16% பொருளாதார வளர்ச்சி அடைந்து விட்டதாக ஒருபுறம் மார்தட்டிக் கொள்ளும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னொருபுறம்  நிதி நெருக்கடி என்ற பழைய பல்லவியை மீண்டும், மீண்டும் பாடி  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது ஏன்? இதற்கு பெயர் தானே இரட்டை வேடம்?



அரசு ஊழியர்கள் தான் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பு ஆவர்.  அரசின் நிர்வாக சுமைகளை சுமக்கும் அவர்களின் கோரிக்கைகளை  தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் வரும் தேர்தலில்  திமுகவை  வீட்டுக்கும் அனுப்பும் மக்கள் படையை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் முன் நின்று வழி நடத்துவார்கள். திமுக அரசு அகற்றப்படுவதை உறுதி செய்வார்கள்.


மருத்துவர். அன்புமணி ராமதாஸ் 

பாட்டாளி மக்கள் கட்சி


Portronics Mobike 4 Bike Phone Mount with 360° Rotational, Strong Hold for Bicycle, Motorcycle Compatible with 4.7 to 6.8 inch Devices (Black)


https://amzn.to/3KRgV8k




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10 & 12ஆம் வகுப்பு - செய்முறை தேர்வு தேதிகள் அறிவிப்பு

10 & 12ஆம் வகுப்பு - செய்முறை தேர்வு தேதிகள் அறிவிப்பு 10th & 12th Standard Practical Exams Dates Announced  10 & 12 ஆம் வகுப்பு...