கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆம்புலன்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆம்புலன்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆம்புலன்ஸ் வசதி இருக்க வேண்டும்: உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு...



 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆம்புலன்ஸ் வசதி இருக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு...


கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்காமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: 

என் மனைவியை பிரசவத்திற்காக கடந்த 25.6.2012ல் ராஜாக்காமங்கலம் ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தேன். மறுநாள் காலை பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பிரசவத்திற்கு பின் அதிகளவில் ரத்தம் வெளியேறியது. சிகிச்சையளித்த மருத்துவர்கள், உடனடியாக என் மனைவியை ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறினர். ஆனால் அங்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லாததாலும், தாமதமாக அழைத்துச் செல்லப்பட்டதாலும் அங்கு என் மனைவி இறந்தார். எனவே, என் மனைவி இறப்புக்காக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.



இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: 

மனுதாரரின் மனைவிக்கு உடனடியாக மருத்துவர்களும் தேவையான மருந்து மற்றும் முதலுதவியை கொடுத்துள்ளனர். ஆனாலும், ரத்தக்கசிவு நிற்கவில்லை. இதனால் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு மாற்றக் கூறியுள்ளனர். ஆம்புலன்ஸ் இல்லாததால்தான் பிரச்னை துவங்கியுள்ளது. ஆம்புலன்ஸ் வருவதற்காக அரைமணி நேரம் வீணாகியுள்ளது. சுமார் 1.15 மணி நேரத்திற்கு பிறகே இறந்துள்ளார். தாமதமின்றி அவரை மாற்றியிருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம். இதுபோன்ற நேரத்தில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வசதி இருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் இருக்கக் கூடாது. காத்திருந்த நேரத்தில் அதிகளவு ரத்தம் வெளியேறியதே இறப்புக்கு காரணமாகியுள்ளது. எனவே, பொது சுகாதாரத்துறை முதன்மை செயலர் தரப்பில் மனுதாரருக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டை மூலதன நிதியில் இருந்து 8 வாரத்திற்குள் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


2000 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குகிறது ரிலையன்ஸ் நிறுவனம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

 தினந்தோறும் 2000 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தலா 50 லிட்டர் வீதம் எரிபொருள் வழங்க ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது 

- மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்




🍁🍁🍁 விரைவில் 108 ஆம்புலன்ஸ்க்கான ஆண்ட்ராய்டு செயலி - சுகாதாரத்துறை அமைச்சர்...

 தமிழகத்தில் கொரோனா காலத்தில் சுமார் 50 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் 108 ஆம்புலன்ஸ்க்கான ஆண்ட்ராய்டு செயலி வெளியிடப்படும். உபேர், ஓலா செயலிகள் போல ஆம்புலன்ஸ் வாகனத்தையும் ஜிபிஎஸ் டிராக்கிங் மூலம் பொதுமக்கள் காண முடியும்.

8 நிமிடத்திற்குள் ஆம்புலன்ஸ் சேவையை வழங்க இலக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

22-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...