கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆலோசனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலோசனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், புதிய அறிவிப்புகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் ஆலோசனை - செய்தி வெளியீடு எண்: 360...

 பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிதி நிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், புதிய அறிவிப்புகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் ஆலோசனை - செய்தி வெளியீடு எண்: 360, நாள்: 01-07-2021...


💥பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிதி நிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், புதிய அறிவிப்புகள்  குறித்து தமிழ்நாடு முதல்வர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் ஆலோசனை.


💢முன்னதாக துறைரீதியாக பல்வேறு  அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்.


💢இம்மாத இறுதியில் இவ்வாண்டுக்கான நிதி நிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.










தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விவகாரம் ; அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் மாலை 4 மணிக்கு அமைச்சர்கள் காணொலி காட்சி மூலம் ஆலோசனை...

 தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விவகாரம் ; அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் மாலை 4 மணிக்கு அமைச்சர்கள் காணொலி காட்சி மூலம் ஆலோசனை...



பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த கருத்து கேட்பு - முதல்வரிடம் நாளை அறிக்கை தாக்கல்...

 


பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து, பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் அடங்கிய அறிக்கை, நாளை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. அதன்பின், பிளஸ் 2 தேர்வு ரத்தாகுமா அல்லது நடக்குமா என்பது குறித்த அறிவிப்பை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளார்.


கொரோனா தொற்று பரவல் தீவிரமாக உள்ளதால், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்து, பிரதமர் மோடி அறிவித்தார்.


துவக்கம்

மாநில அரசு பாட திட்டங்களில், தேர்வை ரத்து செய்வது குறித்து, அந்தந்த மாநிலங்களே முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டது. அதனால், பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து, மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் கருத்துகளை கேட்டு முடிவெடுக்க, தமிழக அரசு தீர்மானித்தது.


அதன்படி, கருத்து கேட்புகள் துவங்கின. தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பிரதிநிதிகள் போன்றோர், மாவட்ட ரீதியாக தங்கள் கருத்து களை, பள்ளி கல்வி அதிகாரிகளிடம் வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் பொறுப்பு ஆசிரியர்கள் வழியே, மாணவர்களை போனில் தொடர்பு கொண்டு, தேர்வை நடத்துவதா, ரத்து செய்வதா; வேறு எந்த வழியில் தேர்வை நடத்தலாம் என, நேற்று கருத்து கேட்கப்பட்டது.


இந்த கருத்துகள் அனைத்தும், பள்ளி வாரியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் வழங்கப்படுகின்றன. அவை மாவட்ட அளவில் தொகுக்கப்பட்டு, இன்று பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட உள்ளன. மாநில அளவில் ஆசிரியர் சங்கம், மாணவர் சங்கம், சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்பினர் உள்ளிட்டோருடனும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள். மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோரிடமும், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக கூட்டம் நடத்தி, இன்று கருத்துகள் கேட்கப்பட உள்ளன.


அறிக்கை தாக்கல்

கருத்துகளை கேட்டபின் முக்கிய அம்சங்களை தொகுத்து, தேர்வை ரத்து செய்வது தொடர்பாக, எந்த விதமான கருத்துகள் வந்துள்ளன என, நாளை முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.இதற்கான பணிகளை, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ், சென்னையில் தங்கியிருந்து இன்றும், நாளையும் மேற்கொள்ள உள்ளார்.


பின், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நாளை ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதில், பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்வதா அல்லது நடத்துவதா என்பது குறித்தும், ரத்து செய்தால், மதிப்பெண் வழங்கும் முறை குறித்தும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


'மதிப்பெண் வழங்க வழிகாட்டிநெறிமுறைகள் வெளியாகவில்லை'

தஞ்சாவூரில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி: பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து குறித்து, மற்ற மாநிலங்கள் போல அறிவிக்க முடியாது. இது, மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த விஷயம். பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஒரு சில மாநிலங்களில், தேர்வை ரத்து செய்யக்கூடாது என்ற கருத்தை தெரிவித்துள்ளனர்.இருப்பினும், மத்திய அரசு சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.


அவ்வாறு ரத்து செய்யப்பட்ட தேர்வுக்காக மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்கும் வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை.இன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் அமைப்பு, பெற்றோர் நல சங்கத்தினர், மருத்துவ நிபுணர்கள் குழு ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.


இதில் எடுக்கும் முடிவுகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, நாளை 5ம் தேதி, தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். சி.பி.எஸ்.இ., தேர்வை ரத்து செய்த மத்திய அரசு, 'நீட்' தேர்வை ரத்து செய்ய அறிவிப்பு வெளியிடவில்லை. ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதற்கான விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மற்ற வகுப்புகளை துவங்க பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் ஆலோசனை...

 


தமிழகம் முழுதும், ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் தலைமையில்,  ஆலோசனை நடக்க உள்ளது.


தமிழகத்தில், கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுரைப்படி, கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், ஜன., 19ல் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அரசு பள்ளி மாணவ – மாணவியருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், தொற்று பாதிப்பு மிக குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. பாதிப்புக்கு உள்ளானோருக்கு, அரசின் விதிமுறைப்படி, மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க, பள்ளி கல்வித் துறையும், சுகாதாரத் துறையும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளை துவங்க, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. பிப்., 1 முதல் நேரடி வகுப்புகளை துவங்கலாம் என, அதிகாரிகள் தரப்பில் அரசுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.


இது குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில்,  தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார், கமிஷனர் வெங்கடேஷ், பள்ளி கல்வி இயக்குனர்கள் கண்ணப்பன், கருப்பசாமி, பழனிசாமி, தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்க உள்ளனர்.


இந்த கூட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகள் துவங்கிய பின் ஏற்பட்ட விளைவுகள், மாணவர்களின் ஆர்வம் ஆகியவற்றையும், கொரோனா தாக்கம் இல்லாத நிலை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.


இதை பின்பற்றி ஒன்பது, பிளஸ் 1 மாணவர்களுக்கும், பிப்ரவரியில் பள்ளிகளை திறப்பது குறித்து, கருத்துரு அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது.அந்த அறிக்கை, தலைமைச் செயலர் மற்றும் சுகாதாரத் துறை செயலர் வழியே முதல்வருக்கு அனுப்பி, ஒப்புதல் பெறப்பட்டு, பள்ளிகள் திறக்கப்படும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...