இடுகைகள்

இடமாற்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாற்றுப்பணி ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம்...

படம்
 பள்ளிக் கல்வி இயக்குனரகத்தில் மாற்றுப் பணியில் இருந்த ஆசிரியர்கள், அவரவர் பள்ளிகளுக்கு அதிரடியாக இடம் மாற்றப்பட்டு உள்ளனர். ஆசிரியர்கள் அலுவலக பணி பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறுகின்றன. பள்ளி கல்வி அமைச்சரான மகேஷ், துறையின் பொறுப்பை கவனித்தாலும், முதல்வர் ஸ்டாலினின் நேரடி பார்வையில் நிர்வாகம் நடக்கிறது. பள்ளி கல்வி செயலர் உஷா, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.அந்த வகையில், பள்ளி கல்வி இயக்குனரகத்தில் பல ஆண்டுகளாக அலுவலக பணிகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் அதிரடியாக இடம் மாற்றப் பட்டு உள்ளனர். கற்பித்தல் பணிக்கு வந்த ஆசிரியர்கள், அலுவலக பணிகளை பார்க்கக் கூடாது என உத்தர விடப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து, பள்ளி கல்வி இயக்குனரகத்தில் அலுவலர்களாக பணி யாற்றியவர்கள், அவரவர் நியமிக்கப்பட்ட இடங்களுக்கே மாற்றப்பட்டு உள்ளனர். சென்னையில் துவங்கியுள்ள இந்த மாற்றம் படிப்படியாக, ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்களிலு

🍁🍁🍁 தமிழகத்தில் 8 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் இடமாற்றம்...

 பல்வேறு மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது..  அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மகேஸ்வரி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த மலர்விழியை கரூர் மாவட்ட ஆட்சியராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர் ஆட்சியர் அன்பழகன் மதுரைக்கும், பெரம்பலூர் ஆட்சியர் சாந்தா திருவாரூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  தர்மபுரி ஆட்சியராக  கார்த்திகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  கன்னியாகுமரி ஆட்சியராக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த வினய் சேலம் பட்டுப்புழு வளர்ப்பு துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சுகாதாரத்துறை திட்ட இணை செயலாளராக இருந்த சிவஞானம் சுகாதாரத்துறை திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக நிர்மல் குமாரும், சுகாதாரத்துறை இணை செயலாளராக அஜய் யாதவும்,  கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா விளையாட்டு மேம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...