கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இஸ்லாம் மதத்திற்கு மாறிய BC/MBC/DNC/SC பிரிவினருக்கு BCM (BC Muslim) சாதிச் சான்றிதழ் (To Avail 3.5% BCM Reservation) வழங்கலாம் - தமிழ்நாடு அரசு அரசாணை G.O.Ms.No.31, Dated: 09-03-2024 வெளியீடு...


 இஸ்லாம் மதத்திற்கு மாறிய BC/MBC/DNC/SC பிரிவினருக்கு BCM (BC Muslim) சாதிச் சான்றிதழ் (To Avail 3.5% BCM Reservation) வழங்கலாம் - தமிழ்நாடு அரசு அரசாணை G.O.Ms.No.31, Dated: 09-03-2024 வெளியீடு...


G.O.Ms.No.31, Dated: 09-03-2024 - Welfare of Backward Classes - Tamil Nadu Act 33 of 2007- Converts to Islam from Backward Classes, Most Backward Classes and Denotified Communities or Scheduled Castes as Backward Class Muslim-Issue of Community Certificate-Clarifications-Issued...


பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலன்-தமிழ்நாடு சட்டம் 33 இன் 2007- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லீம் என அறிவிக்கப்பட்ட சமூகங்கள் அல்லது பட்டியலிடப்பட்ட சாதிகளில் இருந்து இஸ்லாத்திற்கு மாறியவர்கள் - சமூக சான்றிதழ் வழங்கல் - விளக்கங்கள் - வழங்கப்பட்டது...



>>> Click Here to Download G.O.Ms.No.31, Dated: 09-03-2024...


மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு...



 மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு...


பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு. 


பள்ளிப்படிப்பு, மேற்படிப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களின் வருமான வரம்பு 2 லட்சத்திலிருந்து 2.50 லட்சமாக உயர்வு. 


பள்ளி மேற்படிப்பு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயரவும், இடைநிற்றலை தவிர்க்கவும் இந்த திட்டம் உதவும் - தமிழக அரசு.

OBC பட்டியலில் எந்தெந்த ஜாதிகள்? இனி மாநிலங்களே முடிவு செய்யலாம்...


 ஓ.பி.சி., பட்டியலில் எந்தெந்த ஜாதிகள்? இனி மாநிலங்களே முடிவு செய்யலாம்...


கல்வி, வேலைவாய்ப்பில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, 27 சதவீத இட ஒதுக்கீட்டை, மத்திய அரசு வழங்கி வருகிறது. எந்தெந்த ஜாதியினர், இப்பட்டியலில் இடம் பெறலாம் என்பது குறித்து, மத்திய அரசே இதுவரை முடிவு செய்தது. இனி, மாநில அரசுகள் முடிவு எடுக்க அதிகாரம் அளிக்கும் வகையில், விரைவில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.


இட ஒதுக்கீடு

இதுகுறித்து, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பேரவை தலைவரும், வழக்கறிஞருமான ரவீந்திரன் துரைசாமி கூறியதாவது:கடந்த, 2018ல், மஹாராஷ்டிராவில் அதிகமாக இருக்கும் மராத்தா ஜாதியினருக்கு, அம்மாநில அரசு, 16 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்க சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து, பலரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதை விசாரித்த, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு, '50 சதவீதத்திற்கு மிகாமல், இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.


'இப்படி, ஒரு ஜாதிக்கு மட்டும் உள்ஒதுக்கீடாக, 16 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது, உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக அமையும்' எனக் குறிப்பிட்டு, மராத்தா ஜாதியினருக்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இது, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. மராத்தா ஜாதியை போல, நாடு முழுதும் பல ஜாதிகள் பெரும் எண்ணிக்கையில் உள்ளன.


அவற்றுக்கு உள் ஒதுக்கீடு கொடுப்பதில் தவறில்லை என்று, மத்திய அரசு கருதுகிறது. அது, அரசியல் ரீதியிலும், தங்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்றும் நினைக்கிறது. இதனால், ஓ.பி.சி., பட்டியலில் யாரை சேர்க்கலாம் என, தான் வைத்திருக்கும் அதிகாரத்தை, மாநில அரசுகளுக்கு கொடுத்து விடலாம் என்று முடிவு எடுத்துள்ளது. இதனால், மராத்தா உள் ஒதுக்கீடு போன்ற, பல குழப்பங்கள் தீர வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு நினைக்கிறது.


ஏற்கனவே, திருத்தப்பட்ட சட்டமாக இருக்கும் அரசியல் சட்டம், 102ல், மேலும் ஒரு திருத்தத்தை கொண்டு வந்து, அதை சட்டமாக்க, மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அதாவது, மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, 27 சதவீத ஓ.பி.சி., பட்டியலில், யார் இடம்பெற வேண்டும் என்பதை, இனி மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம். தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள நன்குடி வேளாளர் போன்ற பல ஜாதிகள், மத்திய அரசின், ஓ.பி.சி., பட்டியலில் இடம்பெறாமல் இருந்தன.


இனிமேல், அவர்களும் ஓ.பி.சி., பட்டியலுக்குள் வரலாம். ஆனால், மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் இடையே, இடஒதுக்கீடு விஷயத்தில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. உச்ச நீதிமன்றம், மொத்த இடஒதுக்கீடு, 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது என, தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு என, மத்திய அரசு புதிதாக அளித்துள்ள, 10 சதவீதத்தை சேர்த்தால், மொத்த இடஒதுக்கீட்டின் அளவு, 59.5 சதவீதமாகிறது.


குழப்பம் இருக்காது

அதை எதிர்த்தும் பலர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, அது நிலுவையில் இருக்கிறது. ஓ.பி.சி., பட்டியலில், எந்த ஜாதிகள் இடம் பெறும் என்பதை, இனி மாநில அரசே முடிவு செய்யும் என்ற, சட்டத் திருத்தம் வருவதால், மாநில பட்டியலில், பிற்படுத்தப்பட்டோர் ஜாதியில் இருந்தும், மத்திய அரசின், ஓ.பி.சி., பட்டியலில் இடம்பெற முடியாத குழப்பம் இருக்காது. ஆனால், மராத்தா ஜாதிக்கு வழங்கப்பட்ட சிறப்பு இட ஒதுக்கீடு போன்ற குழப்பங்கள் தீருமா என, தெரியவில்லை.


மராத்தா ஜாதிக்கு வழங்கப்பட்ட தனி உள் ஒதுக்கீடு போலவே, தமிழகத்தில் வன்னியர்களுக்கு, 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இனி, அந்த இட ஒதுக்கீடு செல்லுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் அருந்ததியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உள் ஒதுக்கீட்டுக்கும் பிரச்னை வரலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) சாதிச் சான்றிதழ் வழங்கும் பொழுது ஊதியம் மற்றும் விவசாய வருமானங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது - அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம் ந.க.எண்: 1002988/பிநசிபி/2021-1, நாள்: 05-07-2021 (Salary and Agricultural Income should not be taken into account while issuing caste certificate to Other Backward Classes (OBC) - Letter from the Principal Secretary to Government)...



இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) சாதிச் சான்றிதழ் வழங்கும் பொழுது ஊதியம் மற்றும் விவசாய வருமானங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது...


  >>> இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) சாதிச் சான்றிதழ் வழங்குதல் - அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம் ந.க.எண்: 1002988/பிநசிபி/2021-1, நாள்: 05-07-2021...


  >>> இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ் (OBC Certificate) பெறுதல் - நடைமுறைகள், அரசாணைகள் தொகுப்பு...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...