கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இளையோர் மூத்தோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளையோர் மூத்தோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மூத்தோர் இளையோர் ஊதிய நிர்ணயம் - தொடக்கக் கல்வித் துறையில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும் ஓரலகு என உள்ளதனை மாற்றம் செய்வது குறித்து ஆராய குழு அமைத்து அரசாணை (3டி) எண்: 15, நாள்: 22-09-2023 வெளியீடு (G.O. (3D) No: 15, Dated: 22-09-2023 Issued by setting up a committee to examine the conversion of each panchayat union is an Unit in the Department of Elementary Education regarding Senior Junior Pay Fixation)...

 

மூத்தோர் இளையோர் ஊதிய நிர்ணயம் - தொடக்கக் கல்வித் துறையில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும் ஓரலகு என உள்ளதனை மாற்றம் செய்வது குறித்து ஆராய குழு அமைத்து அரசாணை (3டி) எண்: 15, நாள்: 22-09-2023 வெளியீடு (G.O. (3D) No: 15, Dated: 22-09-2023 Issued by setting up a committee to examine the conversion of each panchayat union is an Unit in the Department of Elementary Education regarding Senior Junior Pay Fixation)...


>>> அரசாணை (3டி) எண்: 15, நாள்: 22-09-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

வெவ்வேறு ஒன்றியங்களில் பணி நியமனம் பெற்றோரின் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு சமன்செய்தல் - திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 635/ அ4/ 2022, நாள்: 24-03-2023 (Appointment in different Unions - Equalization of Pay Discrepancies of Juniors Seniors - Proceedings of Tirupur District Educational Officer R.C.No: 635/ A4/ 2022, Dated: 24-03-2023)...


>>> வெவ்வேறு ஒன்றியங்களில் பணி நியமனம் பெற்றோரின்  இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு சமன்செய்தல் - திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 635/ அ4/ 2022, நாள்: 24-03-2023 (Appointment in different Unions - Equalization of Pay Discrepancies of Juniors Seniors - Proceedings of Tirupur District Educational Officer R.C.No: 635/ A4/ 2022, Dated: 24-03-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஒன்றியத்தில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் திருமதி பிரேமா என்பவரது மூத்தோர் -  இளையோர் ஊதிய முரண்பாட்டை களைந்திடக்  கோரிய விண்ணப்பத்தை மதிப்புமிகு மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் மறுத்த நிலையில்,  மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டும், அதனை நடைமுறைப்படுத்தாமல், அரசு சார்பில் செய்யப்பட்ட   மேல்முறையீட்டினை  மாண்பமை சென்னை உயர்  நீதிமன்றம் ரத்து செய்தது.


அதன் பிறகும் ஊதிய முரண்பாடு களையப்படாத நிலையில், மனுதாரர் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 


 இதையடுத்து,  24.03.2023 அன்று மதிப்புமிகு திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அவர்கள், மேற்படி திருமதி பிரேமா அவர்களது மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாட்டைக்  களைந்து உத்தரவிட்டுள்ளார்.


இளையவர் வாங்கும் சம்பளத்தை பணியில் மூத்தவருக்கும் வழங்க வேண்டியது அரசின் கடமை - உயர்நீதிமன்றம் உத்தரவு (It is the duty of the government to pay the salary of the junior to the senior - High Court order)...


 இளையவர் வாங்கும் சம்பளத்தை பணியில் மூத்தவருக்கும் வழங்க வேண்டியது அரசின் கடமை - உயர்நீதிமன்றம் உத்தரவு (It is the duty of the government to pay the salary of the junior to the senior - High Court order)...



அரசு ஊழியர்களில் பணியில் இளையவர் அதிக சம்பளம் பெற்றால், அதே தொகையை பணியில் மூத்தவருக்கும் வழங்க வேண்டியது அரசின் கடமையாகும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


நாகை மாவட்டம், ஆயக்காரன்புலம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-


நான் 1988-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். இதற்கு மறுநாள், அதாவது அதே ஆண்டு ஜூலை 21-ந் தேதி செல்லப்பாண்டியன் என்பவர் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். 2002-ம் ஆண்டு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகவும், 2008-ம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்றேன்.


ஆனால், செல்லப்பாண்டியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக 2008ம் ஆண்டுதான் பதவி ஏற்றார். என்னைவிட பணியில் அவர் இளையவர். ஆனால், 2008-ம் ஆண்டு எங்கள் இருவருக்கும் சிறப்பு நிலை ஊதியம் உயர்வு வழங்கும்போது, என்னைவிட அவருக்கு ரூ.3 ஆயிரம் அதிகம் ஊதியம் வழங்கப்பட்டது.


இதுகுறித்து நான் அளித்த மனுவை நாகை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் நிராகரித்து 2011-ம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.



இவ்வாறு அதில் கூறியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் வி.காசிநாதபாரதி, மனுதாரரைவிட 6 ஆண்டுகளுக்கு பின்னர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி ஏற்ற செல்லப்பாண்டியன் ஊதியம் அதிகம் வாங்கியது மட்டுமல்ல, தற்போது அவர் வட்டார கல்வி அதிகாரியாகவும் பதவி உயர்வு பெற்று விட்டார்'' என்று வாதிட்டார். கல்வி துறை சார்பில் அரசு வக்கீல் சி.சதீஷ் வாதிட்டார்.


இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பிறப்பித்த உத்தரவில், ''நாகை தொடக்க கல்வி அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். அரசு பணி விதிகளின்படி, ஒரே பதவியில் உள்ள 2 அரசு ஊழியர்களில், இளையவரைவிட பணியில் மூத்தவர் குறைவாக ஊதியம் வாங்கக்கூடாது. ஒருவேளை இளையவர் அதிக ஊதியம் பெற்றால், அதே தொகையை பணியில் மூத்தவருக்கும் வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.


எனவே, 2008-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி முதல் ஊதிய உயர்வை கணக்கிட்டு, மனுதாரருக்கு 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...