கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Sports லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Sports லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

FIFA World Cup Football Final: Spain wins the championship title

 



உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி : அர்ஜெண்டினா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின் அணி


FIFA World Cup Football Final: Spain wins the championship title


23வது பிபா உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்றது.


போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. இருப்பினும் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதியிலும் இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்றத் தவறின. இதனால் 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் இருந்தது.


இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் (90 3) போது அர்ஜெண்டினா வீரர் என்சோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால், அந்த அணி மீதி ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து ஆட்டம் கூடுதல் 30 நிமிடங்களுக்கு சென்றது. கூடுதல் நேரத்தின் போது ஆட்டத்தின் 106-வது நிமிடத்தில், மாற்று வீரர் நிக்கோ வில்லியம்ஸ் தலையால் முட்டிய பந்தைப் பெற்ற பெர்ரான் டோரஸ் அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெசுக்கு மிக நெருக்கத்தில் இருந்து சக்தி வாய்ந்த ஷாட் மூலம் கோலடித்து ஸ்பெயினின் நாயகனாக உருவெடுத்தார்.


அதன் பிறகு அர்ஜென்டினா சமநிலை கோலுக்காக கடுமையாக போராடிய போதிலும், ஸ்பெயின் வீரர்கள் சிறப்பாக தற்காப்பில் செயல்பட்டு முன்னிலையை தக்க வைத்தனர். இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின், 23-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2010-ம் ஆண்டு முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.


Sports Competitions | Tentative Schedule



2026-27 ஆம் கல்வி ஆண்டின் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி முடிப்பதற்கான உத்தேச வருடாந்திர செயல்திட்ட அட்டவணை


Tentative annual action plan schedule for conducting all types of sports competitions for the 2026-2027 academic year



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


3% விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்புகள் - SDAT செய்தி வெளியீடு



3% விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்புகள் - SDAT செய்தி வெளியீடு



செய்தி வெளியீடு எண்: 026 , நாள் : 15.05.2026


செய்தி வெளியீடு


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்


3% விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ துறையில் செவிலியர் உதவியாளர் நிலை -II பணிக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள் / திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக், பிற சர்வதேச அளவிலான போட்டிகளில், தேசிய, மாநில அளவில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள் / பொதுத்துறை நிறுவனங்களில் (PSUs) 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுவருகிறது.


எனவே, அரசாணை நிலை எண்.6. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை (S1) நாள்: 20.02.2019-ன் அடிப்படையில், விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் அரசுத் துறைகள் / பொதுத்துறை நிறுவனங்களில் 3% இடஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கு கீழ்காணும் விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிக்கப்பட்ட ஆண்டிற்கு முந்தைய கடந்த 5 ஆண்டுகளில் பெறப்பட்ட விளையாட்டு சாதனைகள் மட்டுமே தகுதியானவையாக கருதப்படும். குழு விளையாட்டுகளில், மாநில அளவில் குறைந்தது 50% போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.


சர்வதேச போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் / பங்கேற்றவர்கள்)


ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்,


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்


ஆசிய விளையாட்டுப் போட்டிகள்


சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (IOC) அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு


கூட்டமைப்பால் (ISF) 4 ஆண்டுகளுக் ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்ல ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள்.


4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை, IOC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF இன் கீழ் நடத்தப்படும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப்கள் போட்டிகள்.


4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது IOC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF இன் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப்கள் போட்டிகள்


தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகள்


பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்


ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்


சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் (IBSA) காது கேளாதோருக்கான


சர்வதேச விளையாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள்


மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள்.


தேசிய அளவிலான போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் மட்டும்)


தேசிய விளையாட்டுப் போட்டிகள்.


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட


தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள்.


மாநில அளவிலான சாம்பியன்ஷிப்போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் மட்டும்)


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் (SDAT) அங்கீகரிக்கப்பட்ட


மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் போட்டிகள்.


போட்டிகளின் அனைத்து நிலைகளிலும், சீனியர் அளவிலான போட்டிகள் மட்டுமே தகுதியான போட்டிகளாக கருதப்படும்.


Based on the above guidelines, the SDAT invited online application for filling up 31 vacancies for the post of Nursing Assistant Grade II in Tamil Nadu Medical Subordinate Service at Grade -II (Level of Pay: 1 (pre revised Grade Pay below Rs.2,400/-) under 3% Sports Quota. The vacancies details and other eligibility criteria framed by the Director of Medical Education and Research, Chennai.


Eligibility Criteria:


The sportspersons should fulfil all the minimum educational qualification


criteria prescribed for the post.


1) Must not have completed 32 years of age if recruited direct, provided that his age-limit shall not apply in case of any person transferred from a local fund or Municipal Institution in consequence of the transfer of such institution to the control of the State Government.


ii) Must have possess the SSLC from recognised school and


iii) Must posses the certificate for having successfully completed the


training course of Nursing Assistants in any of the Government Medical Institutions in the State.


Provided that a person who has rendered war services as Nursing Assistant if appointed shall pass the Departmental Examination for Nursing Assistant, failing which he shall not be granted increments:


முழுமையான விவரங்களை அறிய...


DIPR - P.R.No.026 - SDAT MRB Press Release -Date.15.05.2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற தடகள வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை



🔸2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற தடகள வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை


 ரூ.25 லட்சம்


 ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற தடகள வீராங்கனை எட்வினா ஜேசனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.



Apis Himalaya Honey, 500g + 500g (Buy 1 Get 1 Free) | 100% Pure 




Actual Price: Rs. 260

Offer Price : Rs. 212

Benefit : Rs. 48


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/3X3Pzyl


பாரதியார் தின & குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் - CEO கடிதம்



 பாரதியார் தின & குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் - கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் கடிதம்


Bharathiyar Day & Republic Day Sports Competitions - Letter from Karur District Chief Educational Officer



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



WD-40 Pidilite Multipurpose Spray, Lubricant, Rust Remover, Squeak Noise Remover, Stain Remover, And Cleaning Agent, 170G



Actual Price: Rs. 260

Offer Price : Rs. 214

Benefit : Rs. 46


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/3J3L1Vz


தேவையுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

அரசுப்பள்ளி மாணவியான கபடி வீராங்கனை கார்த்திகா, பக்ரைனில் நடைபெற்ற Asian Youth Games போட்டியில் விளையாடிய Super Raid

 


அரசுப்பள்ளி மாணவியான கபடி வீராங்கனை கார்த்திகா, பக்ரைனில் நடைபெற்ற Asian Youth Games போட்டியில் விளையாடிய Super Raid


சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவியான இளம் கபடி வீராங்கனை கார்த்திகா, பக்ரைனில் நடைபெற்ற Asian Youth Games போட்டியில் 18 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் கபடி அணியின்  துணை கேப்டனாக தனது முதல் சர்வதேசப் போட்டியில் பங்கேற்று, இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்ல தனது Super Raid மூலம் அணிக்கு முக்கிய பங்களிப்பை அளித்துள்ளார்.



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




WD-40 Pidilite Multipurpose Spray, Lubricant, Rust Remover, Squeak Noise Remover, Stain Remover, And Cleaning Agent, 170G



Actual Price: Rs. 260

Offer Price : Rs. 214

Benefit : Rs. 46


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/3J3L1Vz


தேவையுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

Schedule for Conducting and Completing Sports Competitions in 2025-2026 AY - DSE Proceedings

  

2025-2026ஆம் கல்வி ஆண்டில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி முடிப்பதற்கான உத்தேச வருடாந்திர செயல்திட்ட அட்டவணை - பள்ளிக் கல்வித் துறை இயக்குநரின் செயல்முறைகள் , நாள் : 10-06-2025


Proposed Annual Action Plan Schedule for Conducting and Completing Sports Competitions in the Academic Year 2025-2026 - Proceedings of the Director of School Education, Date: 10-06-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



RCB கிரிக்கெட் அணி வீரர்களை பார்ப்பதற்காக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு



 RCB கிரிக்கெட் அணி வீரர்களை பார்ப்பதற்காக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு


RCB வெற்றி விழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு


உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு


பெங்களூரு: IPL போட்டியில் கோப்பையை வென்ற Royal Challengers Bangaluru அணி வீரர்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு



 மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - டி.கே.சிவக்குமார்.


ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.


பெங்களூரு மற்றும் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.


கூட்ட நெரிசல் ஏற்படும் என்றுதான் திறந்தவெளி வாகன உலாவை ரத்து செய்தோம் - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்.




ஆர்சிபி கொண்டாட்டத்தில் துயரம்: பெங்களூரு மைதான கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்


ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதைக் கொண்டாட இன்று (ஜூன் 4) பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்; 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


18 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதை கொண்டாட பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியே சிறுவர்கள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.


ஆர்சிபி அணியை பாராட்ட கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) நடத்தும் நிகழ்ச்சிக்காக பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே கூட்டம் கூடியதைத் தொடர்ந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், காயமடைந்தவர்கள் மற்றும் மயக்கமடைந்தவர்களை சிவாஜி நகரில் உள்ள பவுரிங் மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். முன்னதாக, கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டது.


இந்தச் சம்பவம் குறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார், “இன்று கூடிய கூட்டம் கட்டுப்படுத்த முடியாதது. அதிக கூட்டத்துக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 5,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். இது ஓர் இளம் துடிப்பான கூட்டம், அவர்கள் மீது நாங்கள் லத்தியைப் பயன்படுத்த முடியாது” என்று கூறினார்.


நேற்று இரவு முதல் ஆர்சிபி வெற்றியை கொண்டாடும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இரவு முழுவதும், காவல் துறையினர் கூட்டத்தை நிர்வகிப்பதிலும், எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் பார்த்துக் கொள்வதிலும் முழுமையாக ஈடுபட்டுள்ளனர் என்று அரசு தெரிவித்துள்ளது.


புதன்கிழமை பெங்களூருவில் தரையிறங்கிய ஆர்சிபி அணியினரை கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வரவேற்றார். அவர் ஒவ்வொரு வீரருக்கும் பூங்கொத்துகளை வழங்கினார். குறிப்பாக விராட் கோலியை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அவருக்கு ஆர்சிபி அணியின் கொடி மற்றும் கன்னட கொடி இரண்டையும் அவர் வழங்கினார். இதனையடுத்து, ஆர்சிபி அணியினரை கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் விதான் சவுதாவில் அவர்களைப் பாராட்டினர். தற்போது ஆர்சிபியின் வெற்றிக் கொண்டாட்டம் பெருந்துயரமாக மாறியுள்ளது.


SDATன் கீழ் செயல்பட்டு வரும் 6 சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள் - மாணவர் சேர்க்கை - செய்தி வெளியீடு



கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 6 இடங்களில் செயல்பட்டு வரும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள்  - மாணவர் சேர்க்கை - செய்தி வெளியீடு எண்: 639, நாள் : 22-03-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Kasima, who won the title of world champion in the carrom tournament, received a prize of ₹1 crore



கேரம் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற காசிமாவுக்கு ₹1 கோடி பரிசு அறிவித்தது தமிழக அரசு.


Kasima, who won the title of world champion in the carrom tournament, received a prize of ₹1 crore


இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்கம் வென்ற மித்ராவுக்கு ₹50 லட்சம் பரிசு.


கேரம் உலக சாம்பியன் காசிமாவுக்கு தமிழ்நாடு அரசு ரூ. 1 கோடி பரிசு வழங்கி கௌரவித்தது.


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த நவம்பர் 10 முதல் 17ம் தேதி வரை நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த காசிமா 3 தங்கப் பதக்கங்களை வென்றார்.


மகளிர் தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு மற்றும் குழு பிரிவு என மூன்று பிரிவிலும் இவர் தங்கம் வென்றார்.


அண்மையில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழ்நாடு அரசு ரூ. 5 கோடி பரிசுத் தொகை வழங்கி கௌரவித்தது.


இதையடுத்து கேரம் விளையாட்டில் வெற்றிபெற்ற வீரர்களை தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.


இந்த நிலையில் கேரம் உலக சாம்பியன் காசிமாவுக்கு ஒரு கோடி ரூபாய்; குழுபோட்டியில் தங்கம் வென்ற மித்ராவுக்கு ₹50 லட்சம்; குழு போட்டியில் ஒரு தங்கம் & இரட்டையர் பிரிவில் ஒரு வெள்ளி வென்ற கே.நாகஜோதிக்கு ₹50 லட்சம் ஊக்கத்தொகையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார்.


IPL Auction: Teams and Players Prices



"IPL ஏலம் : அணிகளும், வீரர்களின் விலைகளும் "


IPL Auction: Teams and Players Prices


1. சென்னை சூப்பர் கிங்ஸ் 

டெவோன் கான்வே (6.25 கோடி), ரவிச்சந்திரன் அஸ்வின் (9.75 கோடி), ரச்சின் ரவீந்திரா (4 கோடி), நூர் அஹமத் (10 கோடி), கலீல் அகமது (4.80 கோடி), ராகுல் திரிபாதி (3.40 கோடி), விஜய் சங்கர் (1.20 கோடி), சாம் கர்ரன் (2.40 கோடி), ஷேக் ரஷீத் (30 லட்சம்), அன்ஷுல் கம்போஜ் (3.40 கோடி), முகேஷ் சவுத்ரி (30 லட்சம்), தீபக் ஹூடா (1.70 கோடி), குர்ஜப்னீத் சிங் (2.20 கோடி), நாதன் எல்லிஸ் (2 கோடி), ஜேமி ஓவர்டன் (1.50 கோடி), கமலேஷ் நாகர்கோடி (30 லட்சம்), ராமகிருஷ்ணா கோஷ் (30 லட்சம்), ஸ்ரேயாஸ் கோபால் (30 லட்சம்), வன்ஷ் பேடி (55 லட்சம்), ஆண்ட்ரே சித்தார்த் (30 லட்சம்)



2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்


வெங்கடேஷ் ஐயர் (23.75 கோடி), குயின்டன் டி காக் (3.60 கோடி), அன்ரிச் நார்ட்ஜே (6.50 கோடி), ரஹ்மானுல்லா குர்பாஸ் (2 கோடி), அங்கிரிஷ் ரகுவன்ஷி (3 கோடி), வைபவ் அரோரா (1.80 கோடி), மயங்க் மார்கண்டே (30 லட்சம்), ரோவ்மேன் பாவல் (1.50 கோடி), மணீஷ் பாண்டே (75 லட்சம்), ஸ்பென்சர் ஜான்சன் (2.80 கோடி), லுவ்னித் சிசோடியா (30 லட்சம்), அஜிங்க்யா ரஹானே (1.50 கோடி), அனுகுல் ராய் (40 லட்சம்) மொயின் அலி (2 கோடி), உம்ரான் மாலிக் (75 லட்சம்)



3. மும்பை இந்தியன்ஸ்


டிரென்ட் போல்ட் (12.50 கோடி), நமன் திர் (5.25 கோடி), ராபின் மின்ஸ் (65 லட்சம்), கரண் ஷர்மா (50 லட்சம்), ரியான் ரிக்கெல்டன் (1 கோடி), தீபக் சாஹர் (9.25 கோடி), அல்லா கஜான்ஃபர் (4.80 கோடி), வில் ஜாக்ஸ் (5.25 கோடி), அஷ்வனி குமார் (30 லட்சம்), மிட்செல் சான்ட்னர் (2 கோடி), ரீஸ் டாப்லி (75 லட்சம்), ஸ்ரீஜித் கிருஷ்ணன் (30 லட்சம்), ராஜ் அங்கத் பாவா (30 லட்சம்), சத்தியநாராயண ராஜு (30 லட்சம்), பெவோன் ஜேக்கப்ஸ் (30 லட்சம்), அர்ஜுன் டெண்டுல்கர் (30 லட்சம்), லிசாட் வில்லியம்ஸ் (75 லட்சம்), விக்னேஷ் புத்தூர் (30 லட்சம்)



4. பஞ்சாப் கிங்ஸ்


அர்ஷ்தீப் சிங் (18 கோடி), ஸ்ரேயாஸ் ஐயர் (26.75 கோடி), யுஸ்வேந்திர சாஹல் (18 கோடி), மார்கஸ் ஸ்டோனிஸ் (11 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (4.20 கோடி), நெஹால் வதேரா (4.20 கோடி), ஹர்ப்ரீத் பிரார் (1.50 கோடி), விஷ்ணு வினோத் (95 லட்சம்), விஜய்குமார் வைஷாக் (1.80 கோடி), யாஷ் தாக்கூர் (1.60 கோடி), மார்கோ ஜான்சன் (7 கோடி), ஜோஷ் இங்கிலிஸ் (2.60 கோடி), லாக்கி பெர்குசன் (2 கோடி), அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் (2.40 கோடி), ஹர்னூர் பன்னு (30 லட்சம்), குல்தீப் சென் (80 லட்சம்), பிரியன்ஷ் ஆர்யா (3.80 கோடி), ஆரோன் ஹார்டி (1.25 கோடி), முஷீர் கான் (30 லட்சம்), சூர்யன்ஷ் ஷெட்கே (30 லட்சம்), சேவியர் பார்ட்லெட் (80 லட்சம்), பைலா அவினாஷ் (30 லட்சம்), பிரவீன் துபே (30 லட்சம்)


5. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு


லியாம் லிவிங்ஸ்டன் (8.75 கோடி), ஃபில் சால்ட் (11.50 கோடி) ஜிதேஷ் சர்மா (11 கோடி), ஜோஷ் ஹேசில்வுட் (12.50 கோடி), ரஷிக் தார் (6 கோடி), சுயாஷ் சர்மா (2.60 கோடி), க்ருனால் பாண்டியா (5.75 கோடி), புவனேஷ்வர் குமார் (10.75 கோடி), டிம் டேவிட் (3 கோடி), ஸ்வப்னில் சிங் (50 லட்சம்), ரொமாரியோ ஷெப்பர்ட் (1.50 கோடி), நுவான் துஷாரா (1.60 கோடி), மனோஜ் பண்டாகே (30 லட்சம்), ஜேக்கப் பெத்தேல் (2.60 கோடி), தேவ்தத் படிக்கல் (2 கோடி), ஸ்வஸ்திக் சிகாரா (30 லட்சம்), லுங்கி என்கிடி (1 கோடி), அபிநந்தன் சிங் (30 லட்சம்), மோஹித் ரதீ (30 லட்சம்)


6. ராஜஸ்தான் ராயல்ஸ்


ஜோப்ரா ஆர்ச்சர் (12.50 கோடி), மகேஷ் தீக்ஷனா (4.40 கோடி), வனிந்து ஹசரங்கா (5.25 கோடி), ஆகாஷ் மத்வால் (1.20 கோடி), குமார் கார்த்திகேயா (30 லட்சம்), நிதிஷ் ராணா (4.20), துஷார் தேஷ்பாண்டே (6.50 கோடி), சுபம் துபே (80 லட்சம்), யுத்விர் சிங் (30 லட்சம்), ஃபாசல்ஹக் ஃபரூக்கி (2 கோடி), வைபவ் சூர்யவன்ஷி (1.10 கோடி), குவேனா மபாகா (1.50 கோடி), குணால் ரத்தோர் (30 லட்சம்), அசோக் சர்மா (30 லட்சம்)


7. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்


முகமது ஷமி (10 கோடி), இஷான் கிஷன் (11.25 கோடி), ஆடம் ஜம்பா (2.40 கோடி), ராகுல் சாஹர் (3.20 கோடி), ஹர்ஷல் படேல் (8 கோடி), அதர்வா டைடே (30 லட்சம்), அபினவ் மனோகர் (3.20 கோடி), சிமர்ஜீத் சிங் (1.50 கோடி), ஜீஷன் அன்சாரி (40 லட்சம்), ஜெய்தேவ் உனட்கட் (1 கோடி), பிரைடன் கார்ஸ் (1 கோடி), கமிந்து மெண்டிஸ் (75 லட்சம்), அனிகேத் வர்மா (30 லட்சம்), எஷான் மலிங்கா (1.20 கோடி), சச்சின் பேபி (30 லட்சம்)


8. குஜராத் டைட்டன்ஸ்


ககிசோ ரபாடா (10.75 கோடி), ஜோஸ் பட்லர் (15.75 கோடி), முகமது சிராஜ் (12.25 கோடி), பிரசித் கிருஷ்ணா (9.50 கோடி), நிஷாந்த் சிந்து (30 லட்சம்), மஹிபால் லோம்ரோர் (1.70 கோடி), குமார் குஷாக்ரா (65 லட்சம்), அனுஜ் ராவத் (30 லட்சம்), மானவ் சுதர் (30 லட்சம்), வாஷிங்டன் சுந்தர் (3.20 கோடி), ஜெரால்டு கோட்ஸி (2.40 கோடி), அர்ஷத் கான் (1.30 கோடி), குர்னூர் ப்ரார் (1.30 கோடி), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் (2.60 கோடி), சாய் கிஷோர் (2 கோடி), இஷாந்த் சர்மா (75 லட்சம்), ஜெயந்த் யாதவ் ( 75 லட்சம்), கிளென் பிலிப்ஸ் (2 கோடி), கரீம் ஜனத் (75 லட்சம்), குல்வந்த் கெஜ்ரோலியா (30 லட்சம்)


9. டெல்லி கேப்பிடல்ஸ்


மிட்செல் ஸ்டார்க் (11.75 கோடி), கே எல் ராகுல் (14 கோடி), ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் (9 கோடி), டி.நடராஜன் (10.75 கோடி), ஹாரி புரூக் (6.25 கோடி), கருண் நாயர் (50 லட்சம்), சமீர் ரிஸ்வி (95) லட்சம்), அசுதோஷ் சர்மா (3.80 கோடி), மோஹித் ஷர்மா (2.20 கோடி), ஃபாஃப் டு பிளெசிஸ் (2 கோடி), முகேஷ் குமார் (8 கோடி), தர்ஷன் நல்கண்டே (30 லட்சம்), விப்ராஜ் நிகம் (50 லட்சம்), துஷ்மந்தா சமீரா (75 லட்சம்), டோனோவன் ஃபெரீரா (75 லட்சம்), அஜய் மண்டல் (30 லட்சம்), மன்வந்த் குமார் (30 லட்சம்), திரிபுரானா விஜய் (30 லட்சம்), மாதவ் திவாரி (40 லட்சம்)


10. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்


ரிஷப் பண்ட் (27 கோடி), டேவிட் மில்லர் (7.50 கோடி), ஐடன் மார்க்ரம் (2 கோடி), மிட்செல் மார்ஷ் (3.40 கோடி), அவேஷ் கான் (7.75 கோடி), அப்துல் சமத் (4.20 கோடி), ஆர்யன் ஜுயல் (30 லட்சம்), ஆகாஷ் தீப் (8 கோடி), ஹிம்மத் சிங் (30 லட்சம்), எம் சித்தார்த் (75 லட்சம்), திக்வேஷ் சிங் (30 லட்சம்), ஷாபாஸ் அகமது (2.40 கோடி), ஆகாஷ் சிங் (30 லட்சம்), ஷமர் ஜோசப் (75 லட்சம்), பிரின்ஸ் யாதவ் (30 லட்சம்), யுவராஜ் சவுத்ரி (30 லட்சம்), ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் (30 லட்சம்), அர்ஷின் குல்கர்னி (30 லட்சம்), மேத்யூ பிரீட்ஸ்கே (75 லட்சம்


World Carrom Championship: Tamil Nadu's Kasima wins gold

 


உலக கேரம் போட்டி: தமிழ்நாடு வீராங்கனை காசிமா தங்கம் வென்று சாதனை


World Carrom Championship - Tamil Nadu's Kasima wins gold


உலக கேரம் சாம்பியன் ஆனார் தமிழ்நாட்டின் காசிமா.


அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கஷிமா(17) மூன்று பதக்கம் வென்று சாதனை.


புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான இவர் தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, குழு போட்டி என 3 பிரிவுகளிலும் வென்றுள்ளார்.


அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை காசிமா (17), 3 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். மகளிர் தனிநபர், இரட்டையர் பிரிவு, குழு பிரிவு என 3 பிரிவுகளிலும் அவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்து வரும் ஆறாவது உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி கோலகலமாக நடைபெற்றது. அதில் பல்வேறு நாடுகளைச் சேந்த வீரர்கள், வீராங்களைகள் பங்கேற்றனர். இந்நிலையில், இந்தச் சாம்பியன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த காசிமா (17) பங்கேற்றிருந்தார்.


மகளிர் தனிநபர், இரட்டையர், குழு என மூன்று பிரிவுகளில் தங்கம் வென்று சாம்பியன் ஆனார். இவர் சென்னை புது வண்ணாரப்பேட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் ஆவார். அமெரிக்காவில் நடந்த போட்டியில் தமிழக வீராங்கனைகள் காசிமா, நாகஜோதி, மித்ரா, மரிய இருதயம் ஆகியோர் பங்கேற்றனர்.




வரும் 21-ம் தேதி அமெரிக்காவில் இருந்து பதக்கத்தோடு வீராங்கனை காசிமா நாடு திரும்ப உள்ளார். காசிமாவின் தந்தை ஊடகப் பேட்டியில், “வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியான தருணம் இது. ஒட்டுமொத்த இந்தியாவும் வெற்றி பெற்றிருக்கிறது. எனது மகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.


எளிய பின்புலம் கொண்ட காசிமாவின் வெற்றியை, தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக இவருக்கு கடந்த ஜூலை மாதம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1.50 லட்சம் ரூபாய் பண உதவி செய்தது நினைவுக்கூரத்தக்கது.


உலக கேரம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை காசிமாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...



முதல்வர் பாராட்டு: உலக காரம் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள வீராங்கனை காசிமாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது #CarromWorldCup-இல் சென்னையைச் சேர்ந்த நம் தமிழ்மகள் காசிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! பெருமை கொள்கிறேன் மகளே... எளியோரின் வெற்றியில்தான் #DravidianModel-இன் வெற்றி அடங்கியிருக்கிறது!” என்று பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.


உலக கேரம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை காசிமாவுக்கு துணை முதல்வர் வாழ்த்து...



முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - இணையதள முன்பதிவு செய்து பங்கேற்கலாம் - செய்தி வெளியீடு எண் 1239, நாள்: 19.08.2024...



முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - இணையதள முன்பதிவு செய்து பங்கேற்கலாம் - செய்தி வெளியீடு எண் 1239, நாள்: 19.08.2024...


Chief Minister Cup Sports Tournaments - Online Booking and Participation - Press Release No. 1239, Dated: 19.08.2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளிக்கல்வித்துறை - உடற்கல்வி - பள்ளி மாணவ மாணவியருக்கான பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் (BDG), குடியரசு தின விளையாட்டு போட்டிகள் (RDG), குடியரசு தின தடகளப் போட்டிகள் (RDS) பாரதியார் தின / குடியரசு தினப் (BD/ RD) போட்டிகள் - நிலையான வழிகாட்டுதல்கள் - நடைமுறைப்படுத்த ஆணை வழங்குதல் - விளையாட்டு போட்டிகளுக்கான வயது பிரிவு, குறுவட்ட வருவாய் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள், போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள், அணி மற்றும் தனிநபர் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான தகுதி, பல்வேறு நிலை விளையாட்டு நிர்வாக குழுக்கள், தடகள மற்றும் விளையாட்டு போட்டிகளுக்கான பொதுவான விதிகள், திருத்தி அமைக்கப்பட்ட எடை பிரிவுகள் சார்ந்து - முதன்மை உடற்கல்வி ஆய்வாளரின் செயல்முறைகள் ந.க.எண்: 20250 / CIPE/ 2023, நாள்: 07-07-2023 (Department of School Education - Physical Education - Bharathiyar Day Games / Sports (BDG), Republic Day Games (RDG), Republic Day Sports /Athletics (RDS), Bharatiyar Day / Republic Day (BD/ RD) Sports Competitions for School Boys and Girls - Standard Guidelines - Issue of mandate for implementation - Age Division for Sports Competitions, Zonal, Revenue District and State Level Competitions, Rules for Participation in Competitions, Eligibility for Team and Individual Competitions, Various Levels of Sports Governing Bodies, General Rules for Athletics and Sports Competitions, Revised Weight Divisions - Regarding - Proceedings of Chief Physical Education Inspector Rc.No: 20250 / CIPE/ 2023, Date: 07-07-2023)...


>>> பள்ளிக்கல்வித்துறை - உடற்கல்வி - பள்ளி மாணவ மாணவியருக்கான பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் (BDG), குடியரசு தின விளையாட்டு போட்டிகள் (RDG), குடியரசு தின தடகளப் போட்டிகள் (RDS) பாரதியார் தின / குடியரசு தினப் (BD/ RD) போட்டிகள் - நிலையான வழிகாட்டுதல்கள் -  நடைமுறைப்படுத்த ஆணை வழங்குதல் - விளையாட்டு போட்டிகளுக்கான வயது பிரிவு, குறுவட்ட வருவாய் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள், போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள், அணி மற்றும் தனிநபர் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான தகுதி, பல்வேறு நிலை விளையாட்டு நிர்வாக குழுக்கள், தடகள மற்றும் விளையாட்டு போட்டிகளுக்கான பொதுவான விதிகள், திருத்தி அமைக்கப்பட்ட எடை பிரிவுகள் சார்ந்து - முதன்மை உடற்கல்வி ஆய்வாளரின் செயல்முறைகள் ந.க.எண்:  20250 / CIPE/ 2023, நாள்: 07-07-2023 (Department of School Education - Physical Education - Bharathiyar Day Games / Sports (BDG), Republic Day Games (RDG), Republic Day Sports /Athletics (RDS), Bharatiyar Day / Republic Day (BD/ RD) Sports Competitions for School Boys and Girls - Standard Guidelines - Issue of mandate for implementation - Age Division for Sports Competitions, Zonal, Revenue District and State Level Competitions, Rules for Participation in Competitions, Eligibility for Team and Individual Competitions, Various Levels of Sports Governing Bodies, General Rules for Athletics and Sports Competitions, Revised Weight Divisions - Regarding - Proceedings of Chief Physical Education Inspector Rc.No: 20250 / CIPE/ 2023, Date: 07-07-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக்கல்வி - 2023-2024ஆம் ஆண்டு - பள்ளி மாணவர்களுக்கான, விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 34753/ M/ S4/ 2023, நாள்: 04-07-2023 (SCHOOL EDUCATION - YEAR 2023-2024 - PROCEEDINGS OF THE DIRECTOR OF SCHOOL EDUCATION REGARDING CONDUCT OF SPORTS COMPETITIONS FOR SCHOOL STUDENTS RC.NO: 34753/ M/ S4/ 2023, DATED: 04-07-2023)...


>>> பள்ளிக்கல்வி - 2023-2024ஆம் ஆண்டு - பள்ளி மாணவர்களுக்கான, விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 34753/ M/ S4/ 2023, நாள்: 04-07-2023 (SCHOOL EDUCATION - YEAR 2023-2024 - PROCEEDINGS OF THE DIRECTOR OF SCHOOL EDUCATION REGARDING CONDUCT OF SPORTS COMPETITIONS FOR SCHOOL STUDENTS RC.NO: 34753/ M/ S4/ 2023, DATED: 04-07-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் - தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு அணி பங்கேற்காத விவகாரத்தில் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி அவர்கள் உத்தரவு(Suspension of Chief Physical Education Inspector Gopalakrishnan - Action on non-participation of TamilNadu team in national sports competition - Director of School Education, Order)...

தமிழ்நாடு முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம்...


* தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு அணி பங்கேற்காத விவகாரத்தில் நடவடிக்கை


* பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி அவர்கள் உத்தரவு...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கான விளையாட்டு & உடற்கல்வி உபகரணங்கள் பட்டியல், எண்ணிக்கை & தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் - மதிப்பீட்டுப் படிவம் (Sports & Physical Education Equipment List for Elementary / Middle / High / Higher Secondary Schools, Quantity & Technical Specifications - Evaluation Format)...

 

 


>>> தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கான விளையாட்டு & உடற்கல்வி உபகரணங்கள் பட்டியல், எண்ணிக்கை & தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் - மதிப்பீட்டுப் படிவம் (Sports & Physical Education Equipment List for Elementary / Middle / High / Higher Secondary Schools, Quantity & Technical Specifications - Evaluation Format)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்