ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி Samagra Shiksha திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 5% ஊதிய உயர்வு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 11-07-2025
5% pay hike for Consolidated Pay employees working under Samagra Shiksha Scheme - Proceedings of the State Project Director, Dated: 11-07-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு - பள்ளிக் கல்வித் துறையின் மாநில திட்ட இயக்குனர் உத்தரவு
தொகுப்பூதியத்தில் பணியாற்றும் புரோகிராமர், சிவில் பொறியாளர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர், எஸ்எம்சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், உதவியாளர் ஆகியோருக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்க உத்தரவு
இந்த ஊதிய உயர்வு நடப்பாண்டு ஜூன் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.
அரசுப் பணியில் உள்ள ஓய்வு பெற்றபின் பணியாற்றும் ஆலோசகர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு இது பொருந்தாது எனவும், ஊதிய உயர்வு பெற ஓராண்டு பணி அனுபவம் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.