கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2020-2021 ஆம் கல்வி ஆண்டு - அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மானியத்தொகை விடுவிப்பு செய்து மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறைகள்...

 


2020-2021 ஆம் கல்வி ஆண்டு - அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மானியத்தொகை விடுவிப்பு செய்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண்: 1618/ ஆ5/ ஒபக/ 2020, நாள்: 07-11-2020...


2018-19 ஆம் ஆண்டு UDISE தரவின் அடிப்படையில் திட்ட ஒப்புதல் குழு அறிக்கையில் சில தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு பெறப்படவில்லை . ஆனால் அப்பள்ளிகளுக்கும் பள்ளி மானியம் வழங்குவது அவசியமாகிறது . ஏனவே மாவட்டங்களுக்கேற்ப மாணவர்களின் எண்ணிக்கை வரம்பு விளிம்பில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை மாற்றி அமைக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தொகைக்கு மிகாமல் மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது..

 

  அனுமதிக்கப்படும் தொகையினை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / நகராட்சி / மாநகராட்சி / நலத்துறை தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு வழங்கிடும் வகையில் சார்ந்த மாவட்ட திட்ட அலுவலக வங்கி கணக்கில் செலுத்தப்படும் . இத்தொகையினை சம்மந்தப்பட்ட பள்ளி மேலாண்மை குழு வங்கி கணக்கிற்கு 5 நாள்களுக்குள் அனுப்பிட வேண்டும் . 

 

அதன் விவரத்தினை படிவம் 1 - ல் பூர்த்தி செய்து மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்பப்பட வேண்டும். பள்ளி மானியத்தினை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வழிகாட்டுதல் ( Frame work for implementation of Samagra Shiksha ) வழிமுறைகளின்படி ( Norms ) கீழ்க்கண்டவாறு செலவினம் மேற்கொள்ள வேண்டும். தற்பொழுது காணப்படும் கோவிட் -19 சூழ்நிலைகளை சமாளிக்க திட்ட ஏற்பளிப்பு குழுவின் கூட்ட அறிக்கை பக்கம் 13 - ல் பள்ளி மானிய தொகையில் முன்னுரிமை அடிப்படையில் செலவு செய்யப்பட வேண்டியவைகள் பின்வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது . 

 

மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக கை கழுவும் வசதி ( Hand washing facility ) மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்கிட வேண்டும் . பள்ளி வளாகத்தில் சோப்பு மற்றும் Hand Sanitizer , கிருமி நாசினி , துப்புரவு செய்ய பயன்படும் பொருள்கள் போன்ற அத்தியாவசிய பொருள்கள் தேவையான அளவில் இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும் , 


* பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்திகரிப்பு பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் . 

 

* பள்ளிகளுக்கு தேவையான வெப்ப அளவீட்டுக் கருவியினை ( Thermal screening ) வாங்குவதற்கு பள்ளி மானியத்திலிருந்து செலவினம் மேற்கொள்ளலாம் . மேலும் 2018-19 - ஆம் கல்வியாண்டிலிருந்து பள்ளிகளுக்கு வழங்கப்படும் பள்ளி மானியத்தில் குறைந்த பட்சம் 10 % சதவிதம் முழுச் சுகாதார திட்டத்திற்குப் ( Swachhta Action Plan ) பயன்படுத்தப்பட்டு வருகிறது .


மாணவர்கள் கை கழுவும் வசதிக்கு முக்கியத்துவம் அளித்து பள்ளி வளர்ச்சி மேலாண்மைக் குழு தேவையின் அடிப்படையில் முடிவு செய்து அதற்கான தொகையினை முழு சுகாதார திட்டத்திலிருந்து பயன்படுத்த வேண்டும் .

 

பள்ளிகள் திறப்பின் போது மாணவர்கள் கல்வி கற்க உகந்த சூழலை வழங்கும் விதமாக அரசு பள்ளிக் கட்டிடங்களின் உள்கட்டமைப்பு வசதிகளான கை கழுவும் மேடை , சுத்தமான குடிநீர் , மின்சார வசதி , கழிவறை ஆகியவற்றினை சமுதாய பங்களிப்புடன் பராமரிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி இந்நிதியை பயன்படுத்த வேண்டும் .  

 

பள்ளிகளில் இயங்கா நிலையில் உள்ள கற்றல் உபகரணங்களை மாற்றவும் , பள்ளியில் ஏற்படும் சிறு தொடர் செலவினங்களான விளையாட்டு உபகரணங்கள் , நாளிதழ்கள் , மின்கட்டணம் , இணையதள வசதி , குடிநீர் , கற்றல் கற்பித்தல் பொருள்கள் , போன்றவற்றிற்கு இந்நிதியை பயன்படுத்த வேண்டும் . பள்ளி மேலாண்மை குழு வழியாக ( SMC ) செலவிடுவதற்கான நெறிமுறைகள் :

 

* பள்ளி மானியம் பெறப்பட்டவுடன் ஒருங்கிணைந்த பள்ளி மானியப் பதிவேட்டில் ( வ.எண் . பெற்ற தொகை , வங்கி பெயர் மற்றும் நாள் ) ஆகியவற்றை தலைமையாசிரியர் பதிவு செய்தல் வேண்டும் . 

 

* மேற்கூறிய இனங்களில் தேவையான பொருட்களை வாங்குவதற்கு அவசியமான பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அப்பொருட்களை பட்டியலிட வேண்டும் . பட்டியலிடப்பட்ட பொருட்கள் பள்ளி மேலாண்மைக் குழுவின் தீர்மானத்தின்படி தரமான பொருட்களாக மட்டுமே வாங்கப்பட வேண்டும் . 

 

* ஒரு செலவினம் ரூ .25,000 / -க்கு மேல் மிகுந்தால் சமக்ர சிக்ஷா நிதி மேலாண்மை மற்றும் கொள்முதல் கையேடு 2018 ( Financial Management and Procurement Manual ) அறிவுரையின்படி கொள்முதல் விதிகளைப் பின்பற்றி பள்ளி மேலாண்மைக் குழு அளவிலேயே கொள்முதல் செய்யப்பட வேண்டும் . General Financial Rules ( GFR ) 145,146 படி உரிய சான்றிதழில் தலைமையாசிரியர் / கொள்முதல் குழுவினர் கையொப்பமிட்டு Procurement file- ல் இணைக்க வேண்டும் . 

 

* கோவிட் 19 சூழ்நிலைகளை சமாளிக்க தேவையான கிருமிநாசினியை நுகர்பொருள் ( Consumable ) பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் . 31.12.2020 ( டிசம்பர் 2020 ) க்குள் பள்ளிகளுக்கு தேவையான பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டிருக்க வேண்டும் . 

 

• பள்ளி திறந்தவுடன் 15 நாள்களுக்கு மிகாமல் கட்டிட பழுதுப்பார்க்கும் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் . 

 

* நிதி ஆண்டு இறுதியில் ரொக்கக் கணக்குப் புத்தகம் இறுதி இருப்பு ஆகியவை கணக்காளரால் சரிபார்க்கப்பட்டு தலைமையாசிரியர் கையொப்பமிட வேண்டும்


* பள்ளி மானியத்தில் வாங்கப்பட்ட பொருள்களின் செலவு விவரத்தினை EMIS ல் பதிவு செய்ய வேண்டும் . 

 

* ஒவ்வொரு மாதமும் பள்ளி மேலாண்மைக்குழு கணக்கர் பள்ளி பார்வையின் போது அப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பள்ளி மானியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ரொக்கப் பதிவேட்டில் பதிவு செய்வதற்கு எதுவாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் வங்கி கணக்கு புத்தகம் , ரொக்க பதிவேடு மற்றும் செலவு மேற்கொண்டதற்கான பற்று சீட்டுகளை பள்ளி மேலாண்மைக்குழு களாக்கரிடம் ஒத்திசைவு செய்ய வேண்டும் . 

 

* பள்ளி மானியத் தொகை ( School Grant ) முறையாக செலவிடப்பட்டுள்ளதை உறுதி செய்து பயன்பாட்டுச் சான்றிதழ் ( Utilization Certificate - படிவம் -4 ) மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு 31.03.2021 - க்குள் அனுப்பி வைத்தல் வேண்டும் மாவட்ட அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் : 

 

* முதன்மைக் கல்வி அலுவலர் , உதவி திட்ட அலுவலர் , மாவட்ட கல்வி அலுவலர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பள்ளி பார்வையின் போது மானியம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டதையும் , பொருள்கள் வாங்கப்பட்டுள்ளதையும் , அதற்கான பற்றுச் சீட்டுகள் , ரொக்கப் பதிவேடு மற்றும் இருப்புப் பதிவேடு ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும் . 

 

* பள்ளி திறந்தவுடன் பள்ளிகளுக்கு தேவையான பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டதை உறுதி செய்ய வேண்டும் . 

 

* பள்ளி திறந்தவுடன் சிறு சிறு பழுதுப்பார்க்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டதை உறுதி செய்ய வேண்டும் . 

 

* முதன்மைக் கல்வி அலுவலர் ஒவ்வொரு வாரமும் மீளாய்வு கூட்டத்தில் ( Review meeting ) பள்ளி மானிய செயல்பாட்டு அறிக்கையை ஆய்வு செய்திடல் ( படிவம்- 2 மற்றும் 3 ) வேண்டும் , 

 

* ஒவ்வொரு பள்ளியும் பள்ளி மானியத்தில் வாங்கப்பட்ட பொருள்களின் செலவு விவரத்தினை EMIS ல் பதிவு செய்ததை உறுதி செய்ய வேண்டும் . 

 

* உதவி மாவட்டத் கிட்ட ஒருங்கிணைப்பாளர் , கல்வி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் , பள்ளி மானியத் தொகை ( School Grant ) முறையாக செலவிடப்பட்டுள்ளதை உறுதி செய்து பள்ளி வாரியாக பயன்பாட்டுச் சான்றிதழ் ( Utilization Certificate ) பெற்று மாவட்டத்திற்கான பயன்பாட்டுச் சான்றிதழ்களை 31.03.2021 - க்குள் மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும் கள ஆய்வு செய்யும் போது இதனை ஆய்வு செய்ய வேண்டும் . 

பள்ளிக் தலைமையாசிரியர்களுக்கு இப்பொருள் குறித்து உரிய விவரங்களைத் தெரிவித்து ஒப்புதல் பெறவேண்டும் . இச்செயல்முறை ஆணையினை பெறப்பட்டமைக்கு ஒப்புதலை மறு அஞ்சலில் தவறாது மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் / முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்...

>>> ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண்: 1618/ ஆ5/ ஒபக/ 2020, நாள்: 07-11-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns