>>> பள்ளி மேலாண்மைக் குழு - ஆகஸ்ட் 2022 (SMC August Month Meeting Minutes)...
💥 பள்ளி நிர்வாக எல்லைக்கு உட்பட்ட குடியிருப்புகளில் உள்ள மாணவர்கள் அனைவரையும் பள்ளியில் சேர்ப்பதற்கு அனைத்து ஆசிரியர்களும் முயற்சி எடுக்க வேண்டும்.
💥 பள்ளியில் சேர்க்கப்பட்ட அனைத்து மாணவர்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
💥 கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு அட்டவணையை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் .
💥 கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பினை அனைத்து மாணவர்களும் பார்ப்பதற்கு , அனைத்து ஆசிரியர்களும் நடவடிக்கை மேற்கொண்டு, கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்து அனைத்து மாணவர்களுடனும் ஆசிரியர்கள் தினசரி உரையாட வேண்டும்.
💥 உரையாடிய விவரத்தினை தினசரி குறிப்பேடுகளில் ஆசிரியர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
💥 கல்வி ஒளிபரப்பு குறித்து மாணவர்களுக்கு சிறுசிறு ஒப்படைவு, சிறுசிறு பயிற்சிகளை வழங்கி அதனை ஆசிரியர்கள் இணைய வழியாகவோ அல்லது சமூக இடைவெளியை கடைப்பிடித்து பயிற்சி தாள்களை சரிபார்த்து திருத்தி ,மீள்பயிற்சியும், வலுவூட்டுதல் பயிற்சியும் வழங்கிட வேண்டும்.
💥 கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் எந்தவிதமான இடையூறும் இன்றி பேரிடர் காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கு, ஆசிரியர்கள் அனைவரும் முன் வரவேண்டும்.
💥 அரசின் அறிவிப்புகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும்,
💥 மேற்கண்டவாறு இயக்குனர் அவர்களுடைய அறிவுரைகளை, சுற்றறிக்கை பதிவேட்டில் பதிவு செய்து அனைத்து ஆசிரியரிடமும் கையொப்பம் பெற்று பராமரிக்க வேண்டும்
💥 மேலும், இயக்குனர் அவர்களுடைய அறிவுரையை முழுமையாக தங்கள் பள்ளியில் கடைப்பிடிப்பதற்கு, நடைமுறைப் படுத்துவதற்கு அனைத்து ஆசிரியர்களும், உடனே தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்.
19.01.2021அன்று, அந்தந்த மாவட்ட NIC centre-ல் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான National Informatics Centre (NIC) மூலம் காணொலிக் காட்சி(Video Conference) வாயிலாக நடைபெற இருந்த ஆய்வுக் கூட்டம் 21.01.2021 அன்று முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை நடைபெறும்.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 6
ந.க.எண்.010390/ஜெ2/2020, நாள்.12 .01.2021
பொருள்
கல்வி - தொடக்கக் கல்வி அனைத்து வட்டாரக் அலுவலர்களுடன் 19.01.2021 அன்று காணொலி காட்சி வாயிலாக (Video Conference) நடைபெற இருந்த கூட்டம் 21.01.2021அன்று நடத்துவது - சார்ந்து.
பார்வை
1 1முதல் 13 முடிய கூட்டப்பொருள் விவரங்கள்.
2. தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6,ந.க.எண்.010390 /ஜெ2/2020, நாள்.05.012021
பார்வை 2ல் காணும் இவ்வியக்கக செயல்முறைகளின்படி, 19.012021அன்று, அந்தந்த மாவட்ட NIC centre-ல் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான National Informatics Centre (NIC) மூலம் காணொலிக் காட்சி(Video Conference) வாயிலாக நடைபெற இருந்த ஆய்வுக் கூட்டம் 21.01.2021 அன்று முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஆய்வுக் கூட்டம் தொடர்பாக, ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி உரிய விவரங்களுடன் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தயார் நிலையில் வருகை புரிய வேண்டும் எனவும், கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களும் போதுமான சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.
மேலும், கூட்டப்பொருள் சார்ந்த தொகுப்பு அறிக்கையினை முன்னதாக 18.012021 அன்று பிற்பகல் 03.00 மணிக்குள் இவ்வியக்கக deesections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இணைப்பு கூட்டப்பொருள் 1 முதல் 13 முடியவிவரங்கள்.
தொடக்கக்கல்வி இயக்குநர் காக..
பெறுநர்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்
அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழியாக
நகல்
1 அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...