கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தலைமை அலுவலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலைமை அலுவலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒரு வாக்குச்சாவடியின் தலைமை வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேவையான 45 படிவங்கள் எவ்வாறு நிரப்புவது என்பதற்கான நிரப்பப்பட்ட மாதிரி படிவங்கள்...

 


>>> வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் (Presiding Officers) கொடுக்க வேண்டிய படிவங்கள் (நிரப்பப்பட்ட 45 பக்க மாதிரி படிவங்கள்)...


தேர்தல் பணிக்கு செல்பவர்களுக்கு சில முக்கிய குறிப்புகள்...

Presiding Officers (PrOs) Duty:


1-Pro dairy


2-Form 17 C.


3- 16 points observer report  sheet.


4- visitor sheet.


5- pledge commencement of poll and after close the poll.


 6- Mock poll certificate.  மேற்கண்ட ஆறு படிவங்களை மிகவும் கவனமாக Pro பூர்த்தி செய்யவும்.




Polling Officer (PO) 1 duty . 


 1- elector identify is very important.


2.Marked copy of electoral roll . ஆண்வாக்காளராக இருந்தால் வரிசை எண்ணை நீல மை பேனாவால்  வட்டமிடவேண்டும். பெயரை அடிகோடிடவேண்டும் 

3-பெண் வாக்காளராக இருந்தால் சிகப்பு மை பேனாவால் வரிசை எண்ணை மட்டும் சுழிக்க வேண்டும்              



Polling Officer (PO) 2 duty . 


1- 17-A register. வாக்காளரின் வரிசை எண்ணை குறித்து 

2-அடுத்த கட்டத்தில் Ep என்று எழுதி கடைசி நான்கு நம்பரை குறிக்க வேண்டும்


3 வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்


4- Voter slip. வரிசை எண்ணை குறித்து.வாக்காளரின் இடது கை  ஆள் காட்டி விரலில் அழியா மை இடவேண்டும். Voter slip யை வாக்காளரிடம் கொடுக்கவும்.       


Polling Officer (PO) 3 duty . 


 வாக்காளர் கொண்டுவரும் Voter slip யை பெற்றுக்கொண்டு Control unit. உள்ள Ballot பட்டனை அழுத்தவும்.


GENERAL INSTRUCTIONS...


    49 0 என்றால் வாக்காளர் கையில் மை வைத்தபிறகு யாருக்கும் வாக்களிமாட்டேன் என்று வாக்காளர் அறிவித்தால் வாக்காளரின்  பெயருக்கு  நேரில் உள்ள Remarks காலத்தில் 49 -0 என்று குறிப்பிடவேண்டும்   refused the Vote என்று எழுத வேண்டும்.              *49-M என்றால் வாக்களருக்கு மை வைத்தபிறகு Before  enterd the vote he declared the symbol or candidate name சொன்னால் அந்தவாக்காளரை வாக்கு பதிவு எந்திரத்தில் வாக்களிக்க Pro அனுமதிக்ககூடாது. இந்நேர்வில் 17-A register ல் வாக்காளர் கையொப்பம் அடுத்து Remarks காலத்தில் 49-M என்று குறிப்பிடவேண்டும்.


 49 MA என்றால் வாக்காளர்வாக்களித்தபின் அந்த வாக்காளர் நான் வாக்களித்த Symbol பதிலாக Vvpat ல் வேறு ஒரு Symbol பதிவாகிறது என்று  தெரிவித்தாள் இந்நேர்வில் Pro அந்த வாக்காளரிடம் இதுவரை வாக்களித்தவர்கள் யாரும் இவ்வாறு தெரிவிக்கவில்லை நீங்கள் மட்டுமே  தெரிவிக்கீரீர்கள் நான் உங்களுக்கு மறுபடியும் Testng vote வழங்குகிறேன் அதற்கு முன்பு நீங்க தெரிவித்த கருத்து தவறாக இருந்தால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்து உள்ளே இருக்கும் Polling agent மற்றும்  வெளியே இருக்கும் காவல்துறை சார்ந்தவரை உள்ளே அழைத்து அந்த நபரை மீண்டும் வாக்களிக்க செய்யவேண்டும் இந்நேர்வில் 17-A registerல் மீண்டும் அந்த நபரின் வரிசை எண் Epic எண் குறித்து கையொப்பம் பெறவேண்டு Remarks காலத்தில் Testing vote என்று குறிப்பிடவேண்டும் இதற்கு முன்பாக Pro 49 MA படிவத்தில் அவருடைய பெயர் த/பெ. மற்றும் Part no,serial no, serial no in 17 A register of voters.குறித்து அந்த வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்.மறு வாக்கு பதிவின் போது வாக்காளர் தெரிவித்தது நிருபனம் ஆகவில்லை எனில் அவரை உடனடியாக. காவல்துறையிடம் ஒப்படைக்கவேண்டும்


1.Tendered votes ஆய்வுக்குரிய வாக்குகள்


2.Challenged votes எதிர்க்கப்பட்ட வாக்குகள்


3.Test votes


4.proxy votes


மேற்கண்ட நிகழ்வுகள் Maximum நடக்கவாய்ப்பில்லை இருந்த போதிலும் ELECTION RULES தெரிந்து  வைத்திருப்பது நமக்கு மிகவும் அவசியம். 

 

குறிப்பு


தேர்தல் முடிந்தவுடன் CONTROL UNIT OFF செய்யவேண்டும். VVPAT ல் BATTERY ஐ கழற்றி விட வேண்டும். மறவாதீர்கள்


எவ்வித மனக்கசப்புக்கும் ஆளாகாமல் குழு ஒற்றுமையுடன் தேர்தல் பணி புரிவோம். தேர்தல் பணியை 100% எவ்வித இடையூறுமின்றி செய்வோம்

வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் பிற வாக்குப்பதிவு அலுவலர்களின் கடமைகள்...

 Duties of Presiding Officer and other Polling Officers on Polling Day...


>>> வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் பிற வாக்குப்பதிவு அலுவலர்களின் கடமைகள்...


வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் பணிகளும், பொறுப்புகளும்...

ELECTION 2021: TRAINING MANUAL AND CHECKLIST FOR ZO & PrO...

Duties and Responsibilities of the Presiding Officer...

 


வாக்குச் சாவடி தலைமை அலுவலர் கவனிக்க வேண்டிய முக்கியமான சில குறிப்புகள் : 


* வாக்குப் பதிவு கருவிகளின் எண்ணிக்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தது . உதாரணமாக 15 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டால் ஒரு வாக்குப் பதிவு இயந்திரமும் ( 15 வேட்பாளர்கள் + ஒரு Nota ) , 31 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டால் இரண்டு வாக்குப் பதிவு இயந்திரமும் ( 31 வேட்பாளர்கள் - ஒரு Nota ) , 47 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டால் மூன்று வாக்குப் பதிவு இயந்திரமும் ( 47 வேட்பாளர்கள் - ஒரு Nota ) , 63 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டால் நான்கு வாக்குப் பதிவு இயந்திரமும் ( 63 வேட்பாளர்கள் - ஒரு Nota ) பயன்படுத்தப்படும்.


 * பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இயந்திரந்தின் வலது புறத்தின் மேல்புறத்தில் உள்ள Scrolling Switch ல் எண்கள் சரியான நிலையில் உள்ளதா என்பதனை சரிபார்க்க வேண்டும்.


* வாக்காளர் பட்டியல் நகல் ( Marked Copy / Reference Copy ) களில் அனைத்து பக்கங்களும் தொடர் எண் 1 முதல் வரிசையாக எண்ணிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.


* குறிப்பாக வாக்குச் சாவடி வழங்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் நகல்கள் எல்லா விதத்திலும் ஒரே மாதிரியாக உள்ளனவா என்பதையும் அவை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிக்கு உரியதுதானா என்பதையும் துணைப்பட்டியல்களுடன் கூடியதுதானா என்பதனையும் சரிபார்க்க வேண்டும் . மேலும் வாக்காளர் பட்டியலில் அஞ்சல் வாக்குச் சீட்டு மற்றும் தேர்தல் பணிச்சான்று வழங்கப்பட்டோர் குறித்த குறிப்புகள் ( PB , EDC , SV , AVSC AVPWD . AVCO ) தவிர வேறு குறிப்புகள் ஏதும் இல்லை என்பதனை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.


* வாக்காளர் பட்டியலில் மையினால் கையொப்பமிட்ட சான்றிதழ் குறியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் மேல் ( Marked Copy ) இணைக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்க வேண்டும்.


• ஆய்வுக்குரிய வாக்குச் சீட்டுகளில் ( Tendered Ballot Papers ) உள்ள தொடர் எண்கள் சரி பார்க்கப்பட வேண்டும் . . போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது தேர்தல் முகவர்களின் மாதிரி கையொப்ப நகல் வழங்கப்பட்டுள்ளதா என்பதனை சரிபார்க்க வேண்டும் . இது வாக்குச் சாவடி முகவர்களின் நியமன கடிதத்தில் உள்ள வேட்பாளரின் கையொப்பத்தினை சரிபார்த்துக்கொள்ள உதவும். 


* வாக்குப் பதிவு முடியும் வரை , வாக்குப் பதிவின் போது குறிக்கப்படும் வாக்காளர் பட்டியலின் நகலினை வாக்குச் சாவடிக்கு வெளியே எடுத்துச் செல்ல வாக்குச் சாவடி 19 முகவர்களுக்கு அனுமதிக்கக் கூடாது . வாக்குச் சாவடிக்கு வெளியே வரும் ஒவ்வொரு முறையும் வாக்காளர் பட்டியலின் நகலினை , ( Relief ) மாற்று முகவரிடமோ அல்லது வாக்குச் சாவடி தலைமை அலவலரிடமோ கொடுக்க வேண்டும்.


* பச்சைத்தாள் முத்திரையை ஒட்டுவதற்கு முன் , தான் முத்திரையின் வெண்மைப் பகுதியில் வரிசை எண்ணை அடுத்து , கீழே வாக்குச் சாவடி தலைமை அலுவலர் அவருடைய முழு கையெழுத்தை இட வேண்டும் . அதில் , கையொப்பமிட விரும்பும் வேட்பாளர்கள் அல்லது அவர்களது வாக்குச் சாவடி முகவர்களின் கையொப்பம் பெறப்பட வேண்டும்.


 * பச்சைத்தாள் முத்திரையின் ( Green Paper Seal ) வரிசை எண்ணை வாக்குச் சாவடி தலைமை அலுவலரும் குறித்துக்கொண்டு முகவர்களையும் குறித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் .


* வாக்குச்சாவடியிலுள்ள மற்றும் வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குட்பட்ட பகுதியில் செல்போன் , கார்டுலெஸ் போன் , வயர்லெஸ் செட் ( வாக்குச் சாவடி தலைமை அலுவலர் தவிர ) பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது .


>>> Click here to Download - TN Election 2021 -  Presiding Officers Training Booklet (PDF)...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teachers suffer as online training links are not available - Daily News

 இணையதள பயிற்சி இணைப்பு கிடைக்காதால் ஆசிரியர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி  Teachers suffer as online training links are not available - Dail...