வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கையேடு - 2023 (English)...
Presiding Officer Handbook
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கையேடு - 2023 (English)...
Presiding Officer Handbook
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
*PRESIDING OFFICER'S DIARY*
>>> வாக்குச் சாவடி தலைமை அலுவலரின் தேர்தல் விவரக் குறிப்பேடு (தமிழில்)....
>>> PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
*1. Name of the Constituency (In block letters) :*
1. தொகுதியின் பெயர் (பெரிய எழுத்துகளில்):
*2. Date of poll:*
2. வாக்குப் பதிவு நாள் :
*3. Number and Name of the Polling Station:*
3. வாக்குச்சாவடி எண் மற்றும் அமைவிடத்தின் பெயர் :
*Whether lcoated in -*
அமைவிட தன்மை-
*(i) Government or quasi - government building :*
(i) அரசுக் கட்டிடம் அல்லது அரசுச் சார்புடைய கட்டிடம் :
*(ii) Private Bulding :*
(ii) தனியார் கட்டிடம்.
*(iii) Temporary Structure:*
தற்காலிக கட்டுமானம் .
*4. Number of polling officers recruited locallly, if any:*
4. உள்ளுரில் அமர்த்தப்பட்ட வாக்கு பதிவு அலுவலர்களின் எண்ணிக்கை (எவரேனும் இருந்தால்):
*5. Appointment of polling officer made in the absence of duly appointed Polling Officer, if any, and the reasons of such appointment :*
5. முறையாக நியமிக்கப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர் வராததால் வாக்கு பதிவு அலுவலர் எவரேனும் நியமனம் செய்யப்பட்டிருந்தால் அது பற்றிய விவரம் மற்றும் அந்த நியமனத்திற்கான காரணம்:
*6.Electronic voting Machine -*
6. வாக்கு பதிவு இயந்திரம்-
*(i) Number of Control Units used:*
(i) பயன்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு கருவிகளின் எண்ணிக்கை:
*(ii) S.No. (s) of Control Unints used:*
(ii) பயன்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு கருவிகளின் தொடர் எண்(கள்):
*(iii) Number of balloting units used:*
(iii) பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு கருவிகளின் எண்ணிக்கை:
*(iv) S.No (s) of balloting units used:*
(iv) பயன்படுத் கப்பட்ட வாக்கு பதிவு கருவிகளின் தொடர் எண்(கள்):
*7.(i) Number of paper Seals used:*
7.(i) பயன்படுத்தப்பட்ட தாள் முத்திரைகளின் எண்ணிக்கை:
*(ii) S.Nos.of paper Seals used:*
(ii) பயன்படுத் கப்பட்ட தாள் முத்திரைகளின் தொடர் எண்கள் :
*7A. (i) Number of Special tags supplied:*
7A. (i) வழங்கப்பட்ட தனி விவர அட்டைகளின் எண்ணிக்கை:
*(ii) S.No.(s) of Special tags Supplied:*
(ii) வழங்கப்பட்ட தனி விவர அட்டைகளின் தொடர் எண்கள் :
*(iii) Number of special tags used:*
(iii) பயன்படுத்தப்பட்ட தனி விவர அட்டைகளின் எண்ணிக்கை:
*(iv) S.No.(s) of Special tags used:*
(iv) பயன்படுத்தப்பட்ட தனி விவர அட்டைகளின் தொடர் எண்கள்:
*(v) S.No.(s) of Special tags returned as unused:*
(v) பயன்படுத்தப்படாதவையென்று திருப்பிக் கொடுக்கப்பட்ட தனி விவர அட்டைகளின் தொடர் எண்கள்:
*7B. (i) Number of Strip Seals supplied:*
7B. (i) வழங்கப்பட்ட ஒட்டுதாள் முத்திரைகளின் எண்ணிக்கை:
*(ii) S.No.(s) of Strip Seals supplied :*
(ii) வழங்கப்பட்ட ஒட்டுதாள் முத்திரைகளின் தொடர் எண்கள் :
*(iii) Number of Strip Seals used:*
(iii) பயன்படுத்தப்பட்ட ஒட்டுதாள் முத்திரைகளின் எண்ணிக்கை:
*(iv) S.No.(s) of Strip Seals used:*
(iv) பயன்படுத்தப்பட்ட ஒட்டுதாள் முத்திரைகளின் தொடர் எண்(கள்):
*(v) S.No.(s) of Strip Seals returned as unused:*
(v) பயன்படுத்தப்படாதவையென்று திருப்பி கொடுக்கப்பட்ட ஒட்டுத்தாள் முத்திரைகளின் தொடர் எண்(கள்) :
*7C. Applicable in the polling Stations where VVPAT system in used*
7C. வாக்குச்சாவடிக்கு அச்சுப்பொறி(VVPAT) இயந்திரம் வழங்கப்பட்டால் மட்டுமே இதனை குறிப்பிடவும்:
*(i) No.of Printers used:*
(i) வழங்கப்பட்ட அச்சுப்பொறி இயந்திரங்களின் எண்ணிக்கை:
*(ii) S.No.(s) of printer(s) :*
(ii) அச்சுப்பொறி இயந்திரத்தின் தொடர் எண்(கள்):
*8. Number of candidates who had appointed polling agents at the polling stations:*
8. வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி முகவர்களை அமர்த்தியுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை:
*9.(i) Number of polling agents present at the commencement of poll:*
9.(i) வாக்குப்பதிவு துங்கும்போது வருகை தந்திருந்த வாக்குச்சாவடி முகவர்களின் எண்ணிக்கை:
*(ii) Number of polling agents who arrived late:*
(ii) வாக்குப்பதிவின் போது காலம் கடந்துவந்த வாக்குச்சாவடி முகவர்களின் எண்ணிக்கை:
*(iii) Number of polling agents present at the close of the poll:*
(iii) வாக்குப்பதிவு முடிவில் இருந்த வாக்குச்சாவடி முகவர்களின் எண்ணிக்கை:
*10. (i) Total number of voters assigned to the polling station:*
10. (i) வாக்குச்சாவடிக்கு ஒதுக்கப்பட்ட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை:
*(ii) Number of electors allowed to vote according to marked Copy of the electoral roll:*
(ii) வாக்காளர் பட்டியல் குறியீட்டு நகலின்படி வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை:
*(iii) Total number of electors as entered in the Resister of Voters (Form 17-A):*
(iii) வாக்காளர் பதிவேட்டின்படி ( படிவம் 17-A) வாக்களிக்க பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை:
*(iv) Number of votes recorded as per voting machine:*
(iv) வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை:
*(v) Number of voters deciding not to record vote , if any:*
(v) வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்து, வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குபதிவு செய்யாத வாக்காளர்கள் இருப்பின், அவ்வாக்காளர்களின் எண்ணிக்கை:
*Singnature of the first Polling Officer*
வாக்குபதிவு அலுவலர் -1 அவர்களின் கையொப்பம் .
*Signature of Polling Officer In-Charge of Register of voters.*
வாக்காளர் பதிவேட்டிற்கு பொறுப்புடைய வாக்குப் பதிவு அலுவலர் அவர்களின் கையொப்பம்.
*11.Number of electors who voted -*
11. வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை -
*Men*
ஆண்
*Women*
பெண்
*Third Gender*
மூன்றாம் பாலினம்
*12. Challenged Vote -*
12. எதிர்க்கப்பட்ட வாக்குகள் -
*Number allowed*
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை
*Number rejected*
தள்ளுபடி செய்யப்பட்ட எண்ணிக்கை
*Amount forfeited Rs.*
பரிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.
*13.Number of.persons Who have voted on production of Election Duty Certificat(EDC):*
13. தேர்தல் பணிச் சான்றிதழ் தாக்கல் செய்து வாக்களித்தோர் எண்ணிக்கை (தே.ப.சா):
*13A. Number of overseas who voted:*
(13A . வெளிநாடு வசிப்போர் என்ற வகைப்பாட்டில் வாக்களிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை)
*14.Number of electors who voted with the help of companions:*
14. உடன் வருபவர்களின் உதவியோடு வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை:
*15. Number of voters Cast through Proxy:*
15. பதிலி வாக்கு அளித்தவர்களின் எண்ணிக்கை:
*16.Number of tendered votes:*
16. ஆய்வுக்குரிய வாக்குகளின் எண்ணிக்கை:
*17.No.of electors - .*
17. வாக்காளர்களின் எண்ணிக்கை .
*(a) From whom declarations as to their age obtained*
(a) வயது பற்றிய உறுதிமொழி பெறப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை
*(b) Who refused to give such declaration*
(b) வயது பற்றிய உறுதிமொழி அளிக்க மறுத்த வாக்காளர்களின் எண்ணிக்கை
*18.whelher it was necessary to adjourn the poll and if so, the reasons for such adjournment :*
18. வாக்குப்பதிவை ஒத்தி வைக்கும் அவசியம் நேர்ந்ததா, ஆம் எனில் ஒத்தி வைத்தற்கான காரணங்கள்:
*19.Number of votes cast in every two hours -*
19. ஒவ்வொரு இரண்டு மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவுகளின் எண்ணிக்கை -
*From 7 a.m. to 9 a.m.*
7 மு.ப. முதல் 9. மு.ப. வரை
*From 9 a.m. to 11 a.m.*
9 மு.ப முதல் 11 மு.ப வரை.
*From 11 a.m. to 1 p.m.*
11 மு.ப. முதல் 1 பி.ப. வரை
*From 1 p.m. to 3 p.m.*
1 பி.ப. முதல் 3 பி.ப. வரை.
*From 3 p.m. to 5 p.m.*
3 பி.ப. முதல் 5 பி.ப வரை
*(Necessary Changes may be made depending on the hourse fixed for commecement and close of poll)*
(மேற்படி நிர்ணயம் செய்யப்பட்ட கால அளவானது வாக்கு பதிவு துவங்கும் மற்றும் முடியப் பெறும் நேரத்தின் அடிப்படையில் மாறுதலுக்கு உட்பட்டது)
*20. (a) Number of slips issued at the closing hour of the poll to electors standing in the queue:*
20. (a) வாக்குப் பதிவு முடிவுறும் நேரத்தில் வரிசையில் நிற்பவர்களுக்கு வழங்கப்பட்ட துண்டுச் சீட்டுகளின் எண்ணிக்கை:
*(b) Time at which poll finally closed after the last such elector cast his/her vote:*
(b) கடைசி வாக்காளர் வாக்கு பதிவு செய்து வாக்கு பதிவு முடிவுற்ற நேரம் :
*21. Electoral offences with details:*
21.தேர்தல் குற்றங்களும் அவற்றின் விவரங்களும்:
*(a) Canvassing within one hundred meters of the polling Station:*
(a) வாக்குச்சாவடியிலிருந்து நூறு மீட்டர் தொலைவிற்குள் ஆதரவு திரட்டிய நேர்வுகளின் எண்ணிக்கை:
*(b) Impersonation of voters:*
(b) ஆள் மாறாட்டம் செய்த நேர்வுகளின் எண்ணிக்கை:
*(c) Fraudulent defacing, destroying or removal of the list of notice or Other documents at the polling staton:*
(c) வாக்குச் சாவடியில் அறிவிப்புப் பட்டியல் அல்லது பிற ஆவணங்களை மோசடியாக உருக்குலைத்திடல், அழித்திடல் அல்லது அகற்றிடல் ஆகிய நேர்வுகளின் எண்ணிக்கை:
*(d) Bribing of voters:*
(d) வாக்காளர்களுக்கு கையூட்டு அளித்தல்:
*(e) Intimidation of voters and others persons:*
(e) வாக்காளர்களையும் பிறரையும் அச்சுறுத்தல்.
*(f) Booth Capturing:*
(f) வாக்குச் சாவடியைக் கைப்பற்றுதல்:
*22. Was the poll interrupted or obstructed by -*
22. பின்வரும் காரணங்களால் வாக்குப் பதிவுக்கு இடையூறு அல்லது தடை நேர்ந்ததா -
*(1) Riot :*
(1) கலவரம்.
*(2) Open violence:*
(2) வெளிப்படையான வன்முறை:
*(3) Natural Calamity:*
(3) இயற்கை இடர் :
*(4) Booth capturing:*
(4) வாக்குச்சாவடியைக் கைப்பற்றுதல்.
*(5) Failure of voting machine :*
(5) வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைதல்:
*(6) Any other cause:*
(6) ஏதேனும் பிற காரணம் -
*Please give details of the above.*
மேற்கண்டவற்றிற்கு விவரங்கள் தர வேண்டும்.
*23. Was the poll vitied by any voting machine used at the polling station having been -*
23. பின்வரும் காரணங்களால் வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட ஏதேனும் வாக்குப் பதிவு இயந்திரத்தின் மூலம் வாக்குப் பதிவு கேடுற்றதா -
*(a) Unlawfully taken out of the custody of presiding officer :*
(a) வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பொறுப்பிலிருந்த வாக்குப்பதிவு இயந்திரம் சட்டத்திற்கு முரணாக வெளியே எடுத்து செல்லப்படுதல்.
*(b) Accidently or intentionally lost or destroyed:*
(b) எதிர்பாரா வகையில் அல்லது வேண்டுமென்றே தொலைந்து விடுதல் அல்லது அழிக்கப்படுதல்.
*(c) Damaged or tampered with:*
(c) சேதப்படுத்துதல் அல்லது முறைகேடு செய்யப் படுதல்:
*Please give details*
மேற்கண்டவற்றிற்கு விவரங்கள் அளிக்கவும்.
*24. Serious complaints, if any, made by the candidate/ agents:*
24.வேட்பாளர்/முகவர்கள் கொடுத்த கடுமையான புகார்கள் ஏதேனும் இருப்பின்:
*25. Number of cases of breach of law and order :*
25. சட்டம் ஒழுங்கு மீறப்பட்ட நேர்வுகளின் எண்ணிக்கை:
*26. Report of mistakes and irregularities committed, if any, at the polling station:*
26. வாக்குச் சாவடியில் ஏதேனும் தவறுகள் மற்றும் முறைகேடுகள் ஏற்பட்டிருப்பின் அது பற்றிய அறிக்கை:
*27. Whether the declarations have been made before the commencement of the poll as necessary:*
27. வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்னும், வாக்குப்பதிவு நடைபெறுகையில் தேவைக்கேற்ப உறுதிமொழிகள் அளிக்கப்பட்டனவா :
*Place :*
இடம்.
*Date:*
நாள் :
*Presiding officer.*
*வாக்குச்சாவடி தலைமை அலுவலர் (கையொப்பம்)*
*This diary should be forwarded to the Returning officer with the voting machine, Visit sheet, 16 - Point Observer's Report and other sealed papers.*
*இந்த தேர்தல் விவரக் குறிப்பேடு , வாக்குப்பதிவு இயந்திரம், வருகை தாள்( Visit Sheet) , 16 - கருத்துக்கள் கொண்ட கண்காணிப்பாளரின் அறிக்கை மற்றும் ஏனைய முத்திரையிடப்பட்ட தாள்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பட வேண்டும்.*
- தகவலுக்காக ,
- நன்றி
நீங்கள் 2 அல்லது 3 பயிற்சிக்கூட்டங்களிலே இதுவரை கலந்து கொண்டிருப்பீர்கள். உங்களுக்கானப் பணிகளைத் தமிழில் வரிசைக்கிரமமாக எளிமைப்படுத்தித் தருகிறோம்.
இதன்படி, உங்கள் பணிகளை வரிசையாக மேற்கொண்டால் பதட்டமின்றியும் வெற்றிகரமாகவும் அமையும்.
1) உங்களுக்கென்று தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகள் இருந்தாலும், அதை மறந்து ஒரு தேர்தல் அலுவலராக நடுநிலையாக நடந்து கொள்ளுங்கள்.
நீங்கள் நேர்மையாகப் பணியாற்றுவது மிக முக்கியம்.. அதேபோல் நீங்கள் நேர்மையாகத்தான் நடந்து கொள்கிறீர்கள் என்ற தோற்றம் பிறர் பார்வையில் எழும்புவது அதைவிட மிக முக்கியம்.
2) உங்களுக்கான வாக்குப்பதிவு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்ட உடன், உங்கள் சக குழுவினரை அடையாளம் கண்டு கொண்டு, அந்த நொடியிலிருந்து ஒரே குழுவாக இயங்க ஆரம்பியுங்கள்.
3) தேர்தலுக்கு முதல்நாள் 1 மணிக்குள் முக மலர்ச்சியுடன் வாக்குப்பதிவு மையத்தைச் சென்றடைந்து, உங்கள் தொலைபேசி எண்ணிலிருந்து தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள App ல் உங்கள் வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள்..
4) 05.04.21 அன்று 2 மணிக்கு எல்லா அலுவலர்களும் உங்கள் மையத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார்களா என்பதை உறுதி செய்து கொண்டு, Appல் செய்தி அனுப்புங்கள்.
5) உங்கள் மையத்திற்குள் அரசியல் அடையாளங்கள், தலைவர்களின் படங்கள், வாசகங்கள் இல்லாமல் இருக்கிறதா என்பதைப் பாருங்கள்.
6) மையத்திலிருந்து 100 அடி மற்றும் 200 அடித் தொலைவில் அடையாளம் குறிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கவனியுங்கள்.
7) சக அலுவலர்களுடன் இணைந்து வாக்குப்பதிவு மையத்தை வாக்காளர்கள் எளிதாக வந்து செல்லும் வண்ணம் வடிவமையுங்கள். அலுவலர்கள், ஏஜெண்டுகள் அமர வேண்டிய இடத்தை முடிவு செய்யுங்கள்.
8 ) வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பெற்றுக் கொண்டு, அதனைச் சரி பாருங்கள். பேட்டரியை On செய்தும் Off செய்தும் இயக்கிப் பாருங்கள். வாக்குப்பதிவு இயந்திரங்களை #எப்படிஇணைப்பதுஎன்பதைஇத்துடன்இணைக்கப்பட்டுள்ள_வீடியோவைப் பார்த்து தெளிவடைந்து கொள்ளுங்கள்..
VVPAT என்ற வாக்களிப்பதை உறுதி செய்யும் அச்சு எந்திரத்தின் மீது நேரிடையாக ஒளி எதுவும் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். VVPAT - பின்பக்க பட்டன் Off position ல் இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
9) உங்களுக்கான மெட்டல் சீலைத் தனியாக எடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
தேர்தலுக்குப் பிறகு வாக்குச்சாவடி முகவர்களுக்கு வழங்க வேண்டிய படிவம் 17 C போதுமான அளவில் இருக்கிறதா என்பதைச் சரிபாருங்கள்..
உங்கள் தொகுதியில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்களோ அத்தனை எண்ணிக்கையில் அந்தப் படிவம் கைவசம் இருப்பது மிக முக்கியம்.
தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அந்தப் படிவம் போதுமான அளவில் நிச்சயம் வழங்கப்படாது.
எனவே இப்பொழுதே போதுமான அளவில் ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
10) உங்கள் மையத்திற்கான ஏஜெண்டுகளுக்கான நியமனக்கடிதம் வந்திருக்கிறதா என்பதைச் சரிபார்த்து, அவர்களுக்கான அடையாள அட்டைகளைத் தயார் செய்து, இரண்டையும் ஒரு கவரிலிட்டு தனியாக வையுங்கள். அவர்களைத் தொடர்பு கொண்டு, மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கே மாதிரி வாக்குப்பதிவிற்கு வரச் சொல்லி நினைவுபடுத்திவிடுங்கள்..
11) அடையாளமிடப்பட்ட வாக்காளர் பட்டியல், சரிபார்ப்பு வாக்காளர்பட்டியல் பெறப்பட்டிருக்கிறதா என்பதைச் சரி பார்த்து எத்தனை வாக்காளர்கள்? ஆண்.. பெண்.. எத்தனை பேர் என்பதை தனியாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். (பெரும்பாலான பேர் இதைச் சரிபார்க்க தவறிவிடுவர். வாக்காளர் பட்டியலில் எல்லா பக்கங்களும் வரிசைக்கிரமமாக இருக்கிறதா என்பதைக் கண்டிப்பாகப் பார்க்கவேண்டும். பின் அடிக்கிறபொழுது ஏதேனும் ஒரு தாள் தவறுதலாக விடப்பட்டிருந்தால்.. மறுநாள் மிகவும் சிரமப்படுவீர்கள்)
உங்கள் நிலையப் பகுதிக்குள் பிரபலமானவர்கள் எவரும் வாக்காளர்களாக இருக்கின்றார்களா என்பதை வாக்காளர் பட்டியலைப் பார்த்து வாசித்து தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்..
ஏனெனில் பிரபலஸ்தர்கள் வாக்களிக்க வரும் பொழுது பின்னாலேயே மீடியாக்கள்மீடியாக்கள் வரும் என்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டும்.. அவர்கள் யாருக்கு வாக்களிக்கின்றார்கள் என்பதை எவரும் புகைப்படம் எடுக்க அனுமதித்துவிடாதீர்கள்..
12) Tender votes
Challenged votes (ஐயத்திற்குரிய வாக்கு) என்பது பற்றி தெளிவாகிக் கொள்ளுங்கள்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை.. ஆனால் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அடையாள அட்டையைக் கையில் கொண்டு வந்திருக்கின்றார் என்பதற்காக அவரை வாக்களிக்க அனுமதிக்கவேகூடாது. அது தண்டனைக்குரிய குற்றம்.
13) தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள போஸ்டர்களை உரிய இடத்தில் ஒட்டி வையுங்கள்.
14) தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அலுவலரை மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கலாம். அவர்களும் வாக்காளர்கள் எந்தக்கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் என்பதைப் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை.
15) 06.04.21 அன்று காலை 5 மணிக்கே ஆயத்தமாகுங்கள். வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயார் செய்து, ஏஜெண்டுகளை உள்ளே அனுமதித்து, அடையாள வில்லை அவர்களுக்கு வழங்கி, 6.30 மணிக்குள் மாதிரி வாக்குப்பதிவை நடத்திக் காட்டுங்கள்.
Clear
Ballot
Close
Total
Result
Clear
என்ற வரிசையில் இயந்திரத்தை இயக்குங்கள்.
குறைந்தபட்சம் 50 மாதிரி வாக்குகளைப் பதியச் செய்யுங்கள்.. அதற்கான நேரமிருக்குமா என்று பலரும் கவலைப்படுவதைப் பார்க்கிறோம்..
ஒரு வாக்குப்பதிவிற்கு 10 நொடிகள்தான்.. எனில் 50 பதிவிற்கு 500 நொடிகள்.. அதாவது கிட்டத்தட்ட 8 முதல் 10 நிமிடங்கள் வரைதான் ஆகும்..
அதன் பிறகு சீல் வைப்பதற்கு தனியே 10 நிமிடங்களே அதிகம்..
உங்களுக்கோ 1 மணி நேர அவகாசம் இருக்கிறது..
எனவே அது பற்றி கவலைப்படாதிருங்கள்.. பதட்டமும் அடையாதீர்கள்..
VVPAT டிரேயில் உள்ள சிலிப்புகளை வெளியே எடுத்து அதில் Mock poll ballot sheet என்ற ரப்பர் முத்திரையைப் பதிவு செய்து, அதையும் சீலிட்டு அதற்குரிய பையில் பத்திரப்படுத்தி.. அதை ஒரு டப்பாவில் அடைத்து சீல் வைத்து, முகவர்களிடம் கையெழுத்து பெற்று, பத்திரமாக வைத்திடுங்கள்..
#மிகமுக்கியம்..
Mock poll முடிந்த உடன் அனைத்தும் சரிபார்த்தல் முடிந்த பின்னர் மறுபடியும் Total பட்டனை அழுத்தவும். Total vote 0 என உள்ளதா என சரி பார்த்து விட்டு பின் polling ஆரம்பிக்கவும்.. இது மிக முக்கியம். ஏனெனில் நிறைய இடங்களில் mock poll ஓட்டை clear பண்ணாமல் polling ஆரம்பித்து விட்டு சிரமப்படுகின்றனர்.. (எக்காரணத்தை முன்னிட்டும் Close பட்டனை தொட்டுவிடாதீர்கள்)
Mock poll certificate ல் வந்திருக்கும் முகவர்களிடம் கையெழுத்து பெற்றுக் கொள்ளுங்கள்.
எந்திரத்தை சீல் செய்யுங்கள்.
Green seal
Special tag
Strip seal
Address tag
எல்லாவற்றிலும் நீங்களும் கையெழுத்திட்டு, முகவர்களிடமும் கையெழுத்து பெற்று அதன்பின்னர் பொருத்துங்கள்.
6.30 மணிக்கு Mock Poll Completed என App ல் பதிவு செய்யுங்கள்.
16) சரியாக 7 மணிக்கு வாக்காளர் ரகசியம் பேணுவது சார்ந்த உறுதிமொழி எடுத்து வாக்குப்பதிவைத் துவக்குங்கள். VVPAT மற்றும் Control unit யை On செய்து கொள்ளுங்கள்..
17) 7 மணிக்கு தேர்தல் துவங்கிவிட்டது என்பதை App ல் பதிவிடுங்கள்..
18) அதன்பிறகு கீழ்க்கண்ட நேரங்களில் எத்தனை பேர் வாக்களித்திருக்கிறார்கள் என பதிவு செய்யுங்கள்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை Evm total மற்றும் வாக்காளர் பட்டியலில் tick செய்த மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையைச் சரிபார்க்க வேண்டும்
9 மணி : _ _ _
11மணி: _ _ _
1 மணி : _ _ _
3 மணி : _ _ _
3.30. : _ _ _
4. : _ _ _
4.30. : _ _ _
5. : _ _ _
5.30. : _ _ _
6. : _ _ _
6.30. : _
7.00. : _
வாக்குப்பதிவை முடிக்க வேண்டியநேரம் இது.
அவ்வப்பொழுது வாக்குப்பதிவு மையத்திற்கு வெளியே சூழ்நிலையைக் கவனியுங்கள்..
மாலை 7 மணிக்கு, வரிசையில் வாக்காளர்கள் நின்றால், வரிசையில் நிற்கும் கடைசி நபரிடமிருந்து வரிசை எண்ணிடப்பட்ட டோக்கனை வழங்குங்கள். அவர்களை மட்டும் வாக்களிக்க அனுமதித்து விட்டு வாக்குப்பதிவை நிறுத்துங்கள்.
இயந்திரத்தில் CLOSE பட்டனை அழுத்த மறந்துவிடாதீர்கள். முன்னதாக TOTAL சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
19) முதியோர்கள், கைக்குழந்தை வைத்திருக்கிறவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து வாக்களிக்க வசதி செய்து கொடுங்கள்.
20) BATTERY யை OFF செய்யுங்கள். சீல் வையுங்கள். இணைப்புகளைத் துண்டியுங்கள்.
21) Agent களுக்கு வாக்குப்பதிவு கணக்குச் சீட்டு வழங்குங்கள்.
22) எல்லா நிகழ்வுகளையும் PROCEEDING OFFICER DIARYல் அவ்வப்பொழுது பதிவு செய்து வாருங்கள். அதுதான் பின்னால் பிரச்சனைகள் எதுவும் எழும்பினால் உங்களைக் காப்பாற்றும்.
7.00 மணிக்கு கீழ்க்கண்ட பதிவுகளை அனுப்புங்கள்.
VM _ _ _
VF _ _ _
VT _ _ _
23) எல்லாப் படிவங்களையும் தயார் செய்துவிட்டு, மண்டல அலுவலர் வந்ததும் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு, ரசீது பெற்றுக்கொள்ளுங்கள். (மெட்டல் சீல் மிக முக்கியம்)
24) உங்களோடு பணியாற்ற வந்திருக்கும் பெண் அலுவலர்களுக்கும் / பெண் காவலர்களுக்கும் நீங்கள்தான் மூத்த சகோதரர் என்பதை மனதில் கொண்டு, தேர்தலுக்குப் பிறகு அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு திரும்பிச் செல்ல போதுமான வசதிகளும் பாதுகாப்பும் இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்..
அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுங்கள்.
எல்லாத் தேவைகளையும் குறிப்பால் உணர்ந்து உதவி செய்யுங்கள்..
அவர்கள் நம் சகோதரிகள்..
25) முதல்நாளே தேர்தல் அலுவலர்களுக்கான மதிப்பூதியத்தைக் கணக்கிட்டு, உங்கள் கைப்பணத்திலிருந்து கவர் தயார் செய்து பிரித்து வைத்துவிட்டீர்கள் என்றால்.. தேர்தல் முடிந்தபிறகு சில்லறைக்கு என்ன செய்வது .. எப்படிப் பிரித்துக் கொடுப்பது என்ற கவலை தோன்றாமல் இருக்கும்..
அவ்வளவுதான்.. பதட்டமில்லாமல் இயங்குங்கள்..
எந்த முறைகேட்டையும் அனுமதிக்காதிருங்கள்..
எல்லா பணிகளும் நிறைவு பெற்ற பிறகு,
Agent களுக்கும் சக பணியாளர்களுக்கும் நன்றி சொல்லி கை குலுக்கி சந்தோஷமாய் வெளியே வாருங்கள்.
All the best..
Duties of Presiding Officers (PrOs) and Polling Officers in Tamilnadu Legislative Assembly Election 2021...
Tamilnadu Legislative Assembly Election 2021 - Pre-Filled samples of forms (Presiding Officers Diary, Form 17C, Form 17A, Presiding Officers Declaration) used at the polling station ...
Username: Registered mobile number in Election
Login Password: Last four digits of your registered Mobile number
change password with New password...
Dear Presiding Officers, click the following link and install the PMS App in your Android Mobile.
>>> Click here to Download TNLA Election 2021 - PMS Android Mobile App...
தலைமை வாக்குப்பதிவு அலுவலர் ஆக செல்பவர்கள் கீழ்காணும் PRESIDING OFFICER DAIRY மாதிரியைக் கொண்டு மிக எளிமையாக பூர்த்தி செய்யலாம்...
>>> Click here to Download Presiding Officers Diary (Model)...
>>> Presiding Officers Diary & 17 C நிரப்பப்பட்ட மாதிரி படிவம் (2016)...
Tamilnadu Legislative Assembly Election - April 2021 - Rates of Remuneration Payable to Polling / Counting Personnel and others drafted for the Election duty...
Election Duty Remunerations:
PRO: Rs.1700
PO1, PO2, PO3 : Rs.1300.
>>> Click here to Download Chief Electoral Officer Letter...
TAMILNADU LEGISLATIVE ASSEMBLY ELECTION 2021 - TRAINING VIDEO - DUTIES OF PRESIDING OFFICERS & POLLING OFFICERS-1, 2, 3...
Presiding Officers (PrOs) Duty:
1-Pro dairy
2-Form 17 C.
3- 16 points observer report sheet.
4- visitor sheet.
5- pledge commencement of poll and after close the poll.
6- Mock poll certificate. மேற்கண்ட ஆறு படிவங்களை மிகவும் கவனமாக Pro பூர்த்தி செய்யவும்.
Polling Officer (PO) 1 duty .
1- elector identify is very important.
2.Marked copy of electoral roll . ஆண்வாக்காளராக இருந்தால் வரிசை எண்ணை நீல மை பேனாவால் வட்டமிடவேண்டும். பெயரை அடிகோடிடவேண்டும்
3-பெண் வாக்காளராக இருந்தால் சிகப்பு மை பேனாவால் வரிசை எண்ணை மட்டும் சுழிக்க வேண்டும்
Polling Officer (PO) 2 duty .
1- 17-A register. வாக்காளரின் வரிசை எண்ணை குறித்து
2-அடுத்த கட்டத்தில் Ep என்று எழுதி கடைசி நான்கு நம்பரை குறிக்க வேண்டும்
3 வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்
4- Voter slip. வரிசை எண்ணை குறித்து.வாக்காளரின் இடது கை ஆள் காட்டி விரலில் அழியா மை இடவேண்டும். Voter slip யை வாக்காளரிடம் கொடுக்கவும்.
Polling Officer (PO) 3 duty .
வாக்காளர் கொண்டுவரும் Voter slip யை பெற்றுக்கொண்டு Control unit. உள்ள Ballot பட்டனை அழுத்தவும்.
GENERAL INSTRUCTIONS...
49 0 என்றால் வாக்காளர் கையில் மை வைத்தபிறகு யாருக்கும் வாக்களிமாட்டேன் என்று வாக்காளர் அறிவித்தால் வாக்காளரின் பெயருக்கு நேரில் உள்ள Remarks காலத்தில் 49 -0 என்று குறிப்பிடவேண்டும் refused the Vote என்று எழுத வேண்டும். *49-M என்றால் வாக்களருக்கு மை வைத்தபிறகு Before enterd the vote he declared the symbol or candidate name சொன்னால் அந்தவாக்காளரை வாக்கு பதிவு எந்திரத்தில் வாக்களிக்க Pro அனுமதிக்ககூடாது. இந்நேர்வில் 17-A register ல் வாக்காளர் கையொப்பம் அடுத்து Remarks காலத்தில் 49-M என்று குறிப்பிடவேண்டும்.
49 MA என்றால் வாக்காளர்வாக்களித்தபின் அந்த வாக்காளர் நான் வாக்களித்த Symbol பதிலாக Vvpat ல் வேறு ஒரு Symbol பதிவாகிறது என்று தெரிவித்தாள் இந்நேர்வில் Pro அந்த வாக்காளரிடம் இதுவரை வாக்களித்தவர்கள் யாரும் இவ்வாறு தெரிவிக்கவில்லை நீங்கள் மட்டுமே தெரிவிக்கீரீர்கள் நான் உங்களுக்கு மறுபடியும் Testng vote வழங்குகிறேன் அதற்கு முன்பு நீங்க தெரிவித்த கருத்து தவறாக இருந்தால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்து உள்ளே இருக்கும் Polling agent மற்றும் வெளியே இருக்கும் காவல்துறை சார்ந்தவரை உள்ளே அழைத்து அந்த நபரை மீண்டும் வாக்களிக்க செய்யவேண்டும் இந்நேர்வில் 17-A registerல் மீண்டும் அந்த நபரின் வரிசை எண் Epic எண் குறித்து கையொப்பம் பெறவேண்டு Remarks காலத்தில் Testing vote என்று குறிப்பிடவேண்டும் இதற்கு முன்பாக Pro 49 MA படிவத்தில் அவருடைய பெயர் த/பெ. மற்றும் Part no,serial no, serial no in 17 A register of voters.குறித்து அந்த வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்.மறு வாக்கு பதிவின் போது வாக்காளர் தெரிவித்தது நிருபனம் ஆகவில்லை எனில் அவரை உடனடியாக. காவல்துறையிடம் ஒப்படைக்கவேண்டும்
1.Tendered votes ஆய்வுக்குரிய வாக்குகள்
2.Challenged votes எதிர்க்கப்பட்ட வாக்குகள்
3.Test votes
4.proxy votes
மேற்கண்ட நிகழ்வுகள் Maximum நடக்கவாய்ப்பில்லை இருந்த போதிலும் ELECTION RULES தெரிந்து வைத்திருப்பது நமக்கு மிகவும் அவசியம்.
குறிப்பு
தேர்தல் முடிந்தவுடன் CONTROL UNIT OFF செய்யவேண்டும். VVPAT ல் BATTERY ஐ கழற்றி விட வேண்டும். மறவாதீர்கள்
எவ்வித மனக்கசப்புக்கும் ஆளாகாமல் குழு ஒற்றுமையுடன் தேர்தல் பணி புரிவோம். தேர்தல் பணியை 100% எவ்வித இடையூறுமின்றி செய்வோம்
Duties of Presiding Officer and other Polling Officers on Polling Day...
ELECTION 2021: TRAINING MANUAL AND CHECKLIST FOR ZO & PrO...
Duties and Responsibilities of the Presiding Officer...
வாக்குச் சாவடி தலைமை அலுவலர் கவனிக்க வேண்டிய முக்கியமான சில குறிப்புகள் :
* வாக்குப் பதிவு கருவிகளின் எண்ணிக்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தது . உதாரணமாக 15 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டால் ஒரு வாக்குப் பதிவு இயந்திரமும் ( 15 வேட்பாளர்கள் + ஒரு Nota ) , 31 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டால் இரண்டு வாக்குப் பதிவு இயந்திரமும் ( 31 வேட்பாளர்கள் - ஒரு Nota ) , 47 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டால் மூன்று வாக்குப் பதிவு இயந்திரமும் ( 47 வேட்பாளர்கள் - ஒரு Nota ) , 63 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டால் நான்கு வாக்குப் பதிவு இயந்திரமும் ( 63 வேட்பாளர்கள் - ஒரு Nota ) பயன்படுத்தப்படும்.
* பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இயந்திரந்தின் வலது புறத்தின் மேல்புறத்தில் உள்ள Scrolling Switch ல் எண்கள் சரியான நிலையில் உள்ளதா என்பதனை சரிபார்க்க வேண்டும்.
* வாக்காளர் பட்டியல் நகல் ( Marked Copy / Reference Copy ) களில் அனைத்து பக்கங்களும் தொடர் எண் 1 முதல் வரிசையாக எண்ணிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.
* குறிப்பாக வாக்குச் சாவடி வழங்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் நகல்கள் எல்லா விதத்திலும் ஒரே மாதிரியாக உள்ளனவா என்பதையும் அவை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிக்கு உரியதுதானா என்பதையும் துணைப்பட்டியல்களுடன் கூடியதுதானா என்பதனையும் சரிபார்க்க வேண்டும் . மேலும் வாக்காளர் பட்டியலில் அஞ்சல் வாக்குச் சீட்டு மற்றும் தேர்தல் பணிச்சான்று வழங்கப்பட்டோர் குறித்த குறிப்புகள் ( PB , EDC , SV , AVSC AVPWD . AVCO ) தவிர வேறு குறிப்புகள் ஏதும் இல்லை என்பதனை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
* வாக்காளர் பட்டியலில் மையினால் கையொப்பமிட்ட சான்றிதழ் குறியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் மேல் ( Marked Copy ) இணைக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்க வேண்டும்.
• ஆய்வுக்குரிய வாக்குச் சீட்டுகளில் ( Tendered Ballot Papers ) உள்ள தொடர் எண்கள் சரி பார்க்கப்பட வேண்டும் . . போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது தேர்தல் முகவர்களின் மாதிரி கையொப்ப நகல் வழங்கப்பட்டுள்ளதா என்பதனை சரிபார்க்க வேண்டும் . இது வாக்குச் சாவடி முகவர்களின் நியமன கடிதத்தில் உள்ள வேட்பாளரின் கையொப்பத்தினை சரிபார்த்துக்கொள்ள உதவும்.
* வாக்குப் பதிவு முடியும் வரை , வாக்குப் பதிவின் போது குறிக்கப்படும் வாக்காளர் பட்டியலின் நகலினை வாக்குச் சாவடிக்கு வெளியே எடுத்துச் செல்ல வாக்குச் சாவடி 19 முகவர்களுக்கு அனுமதிக்கக் கூடாது . வாக்குச் சாவடிக்கு வெளியே வரும் ஒவ்வொரு முறையும் வாக்காளர் பட்டியலின் நகலினை , ( Relief ) மாற்று முகவரிடமோ அல்லது வாக்குச் சாவடி தலைமை அலவலரிடமோ கொடுக்க வேண்டும்.
* பச்சைத்தாள் முத்திரையை ஒட்டுவதற்கு முன் , தான் முத்திரையின் வெண்மைப் பகுதியில் வரிசை எண்ணை அடுத்து , கீழே வாக்குச் சாவடி தலைமை அலுவலர் அவருடைய முழு கையெழுத்தை இட வேண்டும் . அதில் , கையொப்பமிட விரும்பும் வேட்பாளர்கள் அல்லது அவர்களது வாக்குச் சாவடி முகவர்களின் கையொப்பம் பெறப்பட வேண்டும்.
* பச்சைத்தாள் முத்திரையின் ( Green Paper Seal ) வரிசை எண்ணை வாக்குச் சாவடி தலைமை அலுவலரும் குறித்துக்கொண்டு முகவர்களையும் குறித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் .
* வாக்குச்சாவடியிலுள்ள மற்றும் வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குட்பட்ட பகுதியில் செல்போன் , கார்டுலெஸ் போன் , வயர்லெஸ் செட் ( வாக்குச் சாவடி தலைமை அலுவலர் தவிர ) பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது .
>>> Click here to Download - TN Election 2021 - Presiding Officers Training Booklet (PDF)...
வாக்குச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் 3 வாக்குச் சாவடி அலுவலர்கள் உள்ள இடங்களில் அவர்களின் கடமைகள்...
வாக்குப் பதிவு அலுவலர் 1 :
இவரிடம் குறியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் இருக்கும். வாக்காளர்களை அடையாளம் காண்பதற்கும் அவரே பொறுப்பாவார்.
வாக்குப் பதிவு அலுவலர் 2 :
வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரலில் அழியாத மை இட்டு வாக்காளர் பதிவேட்டில் வாக்காளரின் பாகம் எண் , வரிசை எண் , ஆகியவற்றை எழுதி , வாக்காளர் காட்டும் புகைப்பட அடையாள அட்டை போன்ற அடையாள ஆவணத்தின் பெயரை பதிவேட்டின் 4 வது காலத்தில் , அதாவது குறிப்புகள் காலத்தில் அந்த ஆவணத்தின் எண்களை எழுத வேண்டும்.
அதன்பிறகு , வாக்காளரின் கையொப்பம் / பெருவிரல் ரேகைப் பதிவினை பெற்றுக் கொண்டு, வாக்காளர் துண்டுச் சீட்டினைவழங்க வேண்டும்.
வாக்காளர் பதிவேட்டினை நிரப்பி, வாக்காளர் துண்டுச் சீட்டினை அளிக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் வாக்காளர் வரிசை மெதுவாக நகரும் வாய்ப்பு உண்டு.
ஒரு வாக்குச் சாவடிக்கு ஒதுக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 1200 -க்கு மேல் இருக்குமானால் , கூடுதல் வாக்குப் பதிவு அலுவலர் 2 நியமிக்கப்பட வேண்டும். ( இவர் வாக்குப் பதிவு அலுவலர் 2B என்று அழைக்கப்படுவார் ) ( 25/10/2007 நாளிட்ட இந்தியத் தேர்தல் ஆணையக் கடிதம் ) 731
வாக்குப் பதிவு அலுவலர் 3
கட்டுப்பாட்டு கருவிக்கு பொறுப்பாவார். அவர் வாக்காளர்களிடம் இருந்து வாக்காளர் துண்டுச் சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும். வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் இடப்பட்டுள்ள அழியா மையை சரிபார்க்க வேண்டும் . முக்கியமாக கட்டுப்பாட்டு கருவியிலுள்ள வாக்குப் பதிவு பட்டனை அழுத்தி வாக்குப் பதிவு அடைப்புப் பகுதியில் உள்ள வாக்குப் பதிவுக் கருவியை வாக்களிக்க தயார் நிலையில் வைத்து , வாக்குப் பதிவு அடைப்புப் பகுதிக்குள் செல்ல வாக்காளர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
TN Assembly Election 2021 - Presiding Officers (PrOs) And Polling Officers (POs) First Training Guide...
>>> வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சிக் கையேடு...
01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ...