கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நடுநிலைப்பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடுநிலைப்பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் - குறைந்தபட்சம் 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு முடிய 175 மாணவர்கள் மற்றும் ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் உள்ள 66 பள்ளிகளுக்கு மட்டும் ஏற்கனவே அந்த பள்ளிகளில் உள்ள 216 பட்டதாரி பணியிடங்களை தவிர்த்து கூடுதலாக அப்பள்ளிகளுக்கு 114 பட்டதாரி பணியிடங்கள் அனுமதி அளித்து ஆணை - பள்ளிக்கல்வித்துறை அரசாணை (நிலை) எண்: 54, நாள்: 28-02-2024 வெளியீடு...


அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் - குறைந்தபட்சம்  6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு முடிய 175 மாணவர்கள் மற்றும் ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் உள்ள 66 பள்ளிகளுக்கு மட்டும் ஏற்கனவே அந்த பள்ளிகளில் உள்ள 216 பட்டதாரி பணியிடங்களை தவிர்த்து கூடுதலாக அப்பள்ளிகளுக்கு 114 பட்டதாரி பணியிடங்கள் அனுமதி அளித்து ஆணை - பள்ளிக்கல்வித்துறை அரசாணை (நிலை) எண்: 54, நாள்: 28-02-2024 வெளியீடு... 



>>> பள்ளிக்கல்வித்துறை அரசாணை (நிலை) எண்: 54, நாள்: 28-02-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



6-8 வகுப்புகளில் குறைந்தபட்சம் 175 மாணவர்கள் மற்றும் 6-8 வகுப்புகளில் தலா 35 மாணவர்கள் என்ற இரண்டு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து அரசாணை வெளியீடு...

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் குறித்த தகவல்கள்...



நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் குறித்த தகவல்கள்...


மொத்த நடுநிலைப் பள்ளிகள் 6941

தற்போது பணியிலுள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் Middle School HMs 5760.


தற்போது காலியாக உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் 1181


ஓய்வு பெறவுள்ளோர் விவரம்

31.5.24 - 231 பேர்

31.5.25 - 447

31.5.26 - 568

31.5.27 - 624

31.5.28 - 742

31.5.29 - 809

31.5.30 - 839

31.5.31 - 653

31.5.32 - 210

31.5.33 - 94

31.5.34 - 89

31.5.35 - 99

31.5.36 - 62

31.5.37 - 66

31.5.38 - 19

31.5.39 - 32

31.5.40 - 27

31.5.41 - 31


5760 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் வெளியீடு - DEE செயல்முறைகள்...


01-01-2024ன் படி 31-12-2022 வரை பதவி உயர்வு பெற்ற 5760 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் - Middle School HM State Seniority As On 01.01.2024  வெளியீடு - DEE செயல்முறைகள் - State Level Priority List of 5760 Middle School Headmasters - DEE Proceedings...



>>> தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 000030/ ஐ1/ 2024, நாள்: 03-01-2024...



>>> 5760 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல்...


அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று ...

 அரசு நடுநிலைப் பள்ளிக்கு ISO தரச்சான்று 

 


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டை அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. ஆவணத்தான்கோட்டை மேற்கில் 1936-ல் தொடங்கப்பட்ட தொடக்கப்பள்ளி பின்னர், 1986-ல் நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.


166 மணவ, மாணவிகள் பயிலும் இப்பள்ளியில், தலைமை ஆசிரியர் உட்பட 7 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளி மாணவர்களுக்குத் தனி வாகனம், மாணவர்களுக்குக் காலை உணவு திட்டம், நேர்மை அங்காடி, நவீன கழிப்பறை, இறகுப் பந்து மைதானம், சிறுவர் பூங்கா, ஏசியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை ஆகிய வசதிகளுடன் பிளாஸ்டிக் பயன்பாடில்லாத பள்ளியாகவும் உள்ளது. மேலும், தனித்தனி பயிற்சியாளர்கள் மூலம் கராத்தே, யோகா, சிலம்பம், கணினி, ரோபோ, எழுத்துப் பயிற்சி ஆகியவை அளிக்கப்படுகின்றன. 


எங்கு போட்டி நடந்தாலும் மாணவர்களைப் பங்கேற்கச் செய்கின்றனர். ஆசிரியர்களின் திறமைகளைப் பாராட்டி இப்பள்ளியைச் சேர்ந்த 7 ஆசிரியர்களுக்கும் 'புதுமை ஆசிரியர்கள்' எனும் சான்றிதழை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி அண்மையில் வழங்கினார். 


 இதன் அடிப்படையில் தங்கள் பள்ளியை ஆய்வு செய்து ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்குமாறு டெல்லியிலுள்ள ஒரு தரச்சான்று நிறுவனத்திடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் ப.கலைச்செல்வி விண்ணப்பித்தார். இதைத் தொடர்ந்து, பள்ளியைப் பல கட்டங்களாக அந்த நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர். பின்னர், அந்நிறுவனத்தின் மூலம் பள்ளிக்கு ஐஎஸ்ஓ 9001:2015 எனும் சர்வதேச தரச் சான்று பிப்.15-ஆம் தேதி வழங்கப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டத்திலேயே சர்வதேச தரச் சான்று பெற்ற முதல் அரசு நடுநிலைப் பள்ளியாக ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி விளங்குகிறது. சர்வதேச தரச்சான்று பெறும் அளவுக்கு பள்ளியை உயர்த்திய ஆசிரியர்களைக் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். 


 தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அதிகமான அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் சேர்ந்தது, பொதுத்தேர்வு முடிவில் தொடர்ந்து சிறப்பிடம், விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்கும் திறமையும் கொண்டுள்ளதோடு நடுநிலைப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றும் கிடைத்திருப்பது கல்விக்குக் கிடைத்த கூடுதல் அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.


இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி கூறுகையில், "தமிழக அரசின் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தியதால் கல்வித் தரமும், மாணவர்களின் கற்றல் திறனும் மேம்பட்டு, மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 


 இதன் அடிப்படையிலேயே தரச்சான்றும் கிடைத்துள்ளது. சிறந்த முறையில் செயல்பட்ட ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...