மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் - குறைந்தபட்சம் 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு முடிய 175 மாணவர்கள் மற்றும் ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் உள்ள 66 பள்ளிகளுக்கு மட்டும் ஏற்கனவே அந்த பள்ளிகளில் உள்ள 216 பட்டதாரி பணியிடங்களை தவிர்த்து கூடுதலாக அப்பள்ளிகளுக்கு 114 பட்டதாரி பணியிடங்கள் அனுமதி அளித்து ஆணை - பள்ளிக்கல்வித்துறை அரசாணை (நிலை) எண்: 54, நாள்: 28-02-2024 வெளியீடு...
6-8 வகுப்புகளில் குறைந்தபட்சம் 175 மாணவர்கள் மற்றும் 6-8 வகுப்புகளில் தலா 35 மாணவர்கள் என்ற இரண்டு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து அரசாணை வெளியீடு...
நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் முன்னுரிமைப் பட்டியல் 2003-04, 04- 05, 05-06, 06-07 & 2014 - Middle Schools B.T Seniority list 2003-04, 04- 05, 05-06, 06-07 & 2014...
>>> 2003 - 2004ஆம் ஆண்டு - கணக்கு...
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் குறித்த தகவல்கள்...
மொத்த நடுநிலைப் பள்ளிகள் 6941
தற்போது பணியிலுள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் Middle School HMs 5760.
தற்போது காலியாக உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் 1181
ஓய்வு பெறவுள்ளோர் விவரம்
31.5.24 - 231 பேர்
31.5.25 - 447
31.5.26 - 568
31.5.27 - 624
31.5.28 - 742
31.5.29 - 809
31.5.30 - 839
31.5.31 - 653
31.5.32 - 210
31.5.33 - 94
31.5.34 - 89
31.5.35 - 99
31.5.36 - 62
31.5.37 - 66
31.5.38 - 19
31.5.39 - 32
31.5.40 - 27
31.5.41 - 31
01-01-2024ன் படி 31-12-2022 வரை பதவி உயர்வு பெற்ற 5760 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் - Middle School HM State Seniority As On 01.01.2024 வெளியீடு - DEE செயல்முறைகள் - State Level Priority List of 5760 Middle School Headmasters - DEE Proceedings...
>>> தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 000030/ ஐ1/ 2024, நாள்: 03-01-2024...
>>> 5760 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல்...
நடுநிலைப்பள்ளி தலைமையாசியர்கள் வரும் 12.06.2023 மற்றும் 13.06.2023 ஆகிய இரு தினங்களுக்கு TNSED Attendance App இல் வருகைப்பதிவினை மேற்கொள்ளும் முறை (Middle School HeadMasters - Procedure to register attendance on TNSED Attendance App for the coming two days 12.06.2023 and 13.06.2023)...
*1 முதல் 5 வகுப்புகளுக்கு ஜூன் 14 ஆம் தேதியும், 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜுன் 12ம் தேதியும், திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பின்படி
*அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 வகுப்புகளுக்கு 14.06.2023 அன்று பள்ளிகள் திறக்கப்படும்.
*எனவே, தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 5 வகுப்புகளைக் கையாளும் இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை எனவும்,
*ஆனால் வரும் 12.06.2023 அன்று 6 முதல் 10ஆம் வகுப்பிற்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் நடுநிலைப்பள்ளியில் 6 முதல் 8 வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
*நடுநிலைப்பள்ளி தலைமையாசியர்கள் வரும் 12.06.2023 மற்றும் 13.06.2023 ஆகிய இரு தினங்களுக்கு TNSED Attendance App இல் வருகைப்பதிவினை கீழ்க்கண்டவாறு குறிக்கப்பட வேண்டும்.
*Today's status இல் Partially working என கொடுத்துவிட்டு working class இல் VI, VII, VIII மட்டும் தேர்வு செய்யவும்.
*Teacher attendance App இல் 1 முதல் 5 வகுப்புகளைக் கையாளும் இடைநிலை ஆசிரியர்களுக்கு NA (Not Applicable ) என பதிவிடவும்.
*மற்ற BT Assistant ஆசிரியர்களுக்கு வருகைப் பதிவினைக் குறிக்கவும்.
EMIS Team
*📚EMIS ATTENDANCE REGARDING*
Respected HMs of all types of Govt & Aided schools...
Please ensure that all are using TNSED Attendance live app from Google play store.
TNSED Attendance
App latest Version - 7.0
Kindly log out and log in to continue marking the attendance from tomorrow after appropriately choosing today's status...
Staff attendance twice (TS 1 - Morning attendance and TS 2 - Afternoon attendance)
Student's attendance once for all students in all sections and
Local body staff attendance.
Recently transferred teachers name, newly added sections and students are visible on the app now. Please check and confirm the same.
If any errors, first pls check if version number is present in screenshot. Pls make sure everyone is using the live app from playstore.
Thank you🙏
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
Kind attention to all ,
_Teachers who have been deployed or transferred in this counselling - their profiles are currently being moved to their new schools. Their profile should reflect in the new schools by tonight itself._
- STATE EMIS TEAM
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
1) TNSED Schools App Download Link...
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
2) TNSED ATTENDANCE App Download Link...
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedattendance.tnemis
01-08-2021 நிலவரப்படி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் செய்தல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:9736/இ1/2021, நாள்:13-08-2021...
அரசு நடுநிலைப் பள்ளிக்கு ISO தரச்சான்று
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டை அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. ஆவணத்தான்கோட்டை மேற்கில் 1936-ல் தொடங்கப்பட்ட தொடக்கப்பள்ளி பின்னர், 1986-ல் நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
166 மணவ, மாணவிகள் பயிலும் இப்பள்ளியில், தலைமை ஆசிரியர் உட்பட 7 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளி மாணவர்களுக்குத் தனி வாகனம், மாணவர்களுக்குக் காலை உணவு திட்டம், நேர்மை அங்காடி, நவீன கழிப்பறை, இறகுப் பந்து மைதானம், சிறுவர் பூங்கா, ஏசியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை ஆகிய வசதிகளுடன் பிளாஸ்டிக் பயன்பாடில்லாத பள்ளியாகவும் உள்ளது. மேலும், தனித்தனி பயிற்சியாளர்கள் மூலம் கராத்தே, யோகா, சிலம்பம், கணினி, ரோபோ, எழுத்துப் பயிற்சி ஆகியவை அளிக்கப்படுகின்றன.
எங்கு போட்டி நடந்தாலும் மாணவர்களைப் பங்கேற்கச் செய்கின்றனர். ஆசிரியர்களின் திறமைகளைப் பாராட்டி இப்பள்ளியைச் சேர்ந்த 7 ஆசிரியர்களுக்கும் 'புதுமை ஆசிரியர்கள்' எனும் சான்றிதழை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி அண்மையில் வழங்கினார்.
இதன் அடிப்படையில் தங்கள் பள்ளியை ஆய்வு செய்து ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்குமாறு டெல்லியிலுள்ள ஒரு தரச்சான்று நிறுவனத்திடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் ப.கலைச்செல்வி விண்ணப்பித்தார். இதைத் தொடர்ந்து, பள்ளியைப் பல கட்டங்களாக அந்த நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர். பின்னர், அந்நிறுவனத்தின் மூலம் பள்ளிக்கு ஐஎஸ்ஓ 9001:2015 எனும் சர்வதேச தரச் சான்று பிப்.15-ஆம் தேதி வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்திலேயே சர்வதேச தரச் சான்று பெற்ற முதல் அரசு நடுநிலைப் பள்ளியாக ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி விளங்குகிறது. சர்வதேச தரச்சான்று பெறும் அளவுக்கு பள்ளியை உயர்த்திய ஆசிரியர்களைக் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அதிகமான அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் சேர்ந்தது, பொதுத்தேர்வு முடிவில் தொடர்ந்து சிறப்பிடம், விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்கும் திறமையும் கொண்டுள்ளதோடு நடுநிலைப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றும் கிடைத்திருப்பது கல்விக்குக் கிடைத்த கூடுதல் அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி கூறுகையில், "தமிழக அரசின் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தியதால் கல்வித் தரமும், மாணவர்களின் கற்றல் திறனும் மேம்பட்டு, மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதன் அடிப்படையிலேயே தரச்சான்றும் கிடைத்துள்ளது. சிறந்த முறையில் செயல்பட்ட ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
Middle School HM to BEO Promotion Application Form...
நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்குதல் - இரண்டு வாரங்களுக்குள் முடிவெடுத்து அரசாணை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு - நகல்...
Madras High Court Judgement W.P.No.8211 of 2009, Date : 12-02-2021...
>>> Click here to Download Madras High Court Judgement W.P.No.8211 of 2009, Date : 12-02-2021...
தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...