கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய கல்லூரிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிய கல்லூரிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3 மாவட்டங்களில் புதிய வேளாண்மைக் கல்லூரிகள்(New Agricultural Colleges will be opened in 3 Districts) : அரசு அறிவிப்பு...



 3 மாவட்டங்களில் புதிய வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 


தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக.28) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.


இதில் வேளாண் துறை சார்பில் வெளியான அறிவிப்பு:


''வேளாண்‌ கல்வியின்‌ முக்கியத்துவம்‌ கருதி, கரூர்‌ மாவட்டம்‌, நாகப்பட்டினம்‌ (கீழ்வேளூர்), சிவகங்கை (செட்டிநாடு) ஆகிய மூன்று மாவட்டங்களில்‌ ரூ.30 கோடி மதிப்பில்‌ அரசு வேளாண்மைக்‌ கல்லூரிகள்‌ தொடங்கப்படும்‌.


தற்போது, வேளாண்‌ கல்வி மற்றும்‌ வேளாண்‌ ஆராய்ச்சியின்‌ தேவை அதிகரித்துள்ளது. இதனைக்‌ கருத்தில்‌ கொண்டு, வேளாண்‌ நிதிநிலை அறிக்கையில்‌ கிருஷ்ணகிரியில்‌ புதியதாக அரசுத்‌ தோட்டக்கலைக்‌ கல்லூரி தொடங்க அறிவிக்கப்பட்டது.


வேளாண்‌ கல்வியின்‌ முக்கியத்துவம்‌ கருதி, 2021-2022ஆம்‌ ஆண்டில், கரூர் மாவட்டம்‌, நாகப்பட்டினம்‌ மாவட்டத்தில்‌ கீழ்வேளூா்‌, சிவகங்கை மாவட்டத்தில்‌ செட்டிநாடு ஆகிய இடங்களில்‌ மூன்று புதிய அரசு வேளாண்மைக்‌ கல்லூரிகள்‌ தொடங்குவதற்கு மாநில அரசு தலா ரூ.10 கோடி வீதம்‌ மொத்தம்‌ ரூ.30 கோடி நிதியை ஒதுக்கும்''‌.


இவ்வாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.


>>> வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை எண்: 5, அறிவிப்புகள்: 2021-2022...


🍁🍁🍁 டிசம்பரில் செமஸ்டர் தேர்வு - ஆசிரியர்கள் பற்றாக்குறை - மாணவர்கள் அச்சம்..

 தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலைக்கல்லூரியில் போதுமான ஆசிரியர்கள் பணியமர்த்த படவில்லை இதனால் சுமார் 2000 மாணவர்கள்  தேர்வுகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற அச்சத்தில் மாணவர்கள் உள்ளனர்.

 தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அதாவது கள்ளக்குறிச்சி தென்காசி அரியலூர் கோயம்புத்தூர் விழுப்புரம் விருதுநகர் நாகப்பட்டினம் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 2 பெண் பெண்கள் கல்லூரி உள்பட மொத்தம் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டன.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns