கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வேளாண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேளாண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தென்னை வளர்ச்சி வாரியம் - 2022-23 ஆண்டுக்கு (தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு) ரூ.7500 வரை தென்னை நடவு மானியம் - விண்ணப்பப்படிவம் (Coconut Development Board - Coconut Plantation Subsidy up to Rs.7500 for the year 2022-23 (for two consecutive years) - Application Form)...



>>> தென்னை வளர்ச்சி வாரியம் - 2022-23 ஆண்டுக்கு (தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு) ரூ.7500 வரை தென்னை நடவு மானியம் - விண்ணப்பப்படிவம் (Coconut Development Board - Coconut Plantation Subsidy up to Rs.7500 for the year 2022-23 (for two consecutive years) - Application Form)...


தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் 2022-23 ஆண்டுக்கு (தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு) தென்னை நடவு மானியம்  

நெட்டை கன்றுகளுக்கு 1 ஹெக்டேர் பரப்பில் புதியதாக தென்னங்கன்றுகள் நடவு செய்த விவசாயிகள் ரூபாய் 6500/-

நெட்டை× குட்டை நடவு செய்த விவசாயிகளுக்கு ரூபாய் 6750/-

குட்டை நடவு செய்த விவசாயிகளுக்கு ரு7500/- மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளதால் தகுதியுள்ள விவசாயிகள் மேற்படி படிவத்தை பூர்த்தி செய்து அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுக கேட்டுக்கொள்ளபடுகின்றனர்.

மேலும் 10 ஏக்கர் பரப்பு (4 ஹெக்டேர்) வரை உள்ளவர்கள் மட்டுமே மேற்படி மானியம் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.



ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Appointment of Agricultural Graduate Vocational Teachers by Teachers Recruitment Board - Proceedings of the Joint Director of School Education seeking vacancy details in Government Higher Secondary Schools) ந.க.எண்: 48189/வி1/இ1/2021, நாள்:27-09-2021...



 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி  ஆசிரியர்கள் நியமனம் - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Appointment of Agricultural Graduate Vocational Teachers by Teachers Recruitment Board - Proceedings of the Joint Director of School Education seeking vacancy details in Government Higher Secondary Schools) ந.க.எண்: 48189/வி1/இ1/2021, நாள்:27-09-2021...



>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 48189/வி1/இ1/2021, நாள்:27-09-2021...

B.Sc., Agri படிப்பிற்கான விண்ணப்பம் 08.09.2021 முதல் ஆரம்பம் (Tamil Nadu Agricultural University UG Admission 2021 Notification)...

B.Sc., Agri படிப்பிற்கான விண்ணப்பம் 08.09.2021 முதல் ஆரம்பம் (Tamil Nadu Agricultural University UG Admission 2021 Notification)...


"Tamil Nadu Agricultural University UG admission will commence on 8th September , 2021 


Tamil Nadu Agricultural University offers eleven undergraduate degree programmes through 14 constituent and 28 affiliated colleges.  


The online applications for admissions to undergraduate degree programmes for the current academic year , 2021-22 will open on sch September ( Wednesday ) 2021. As per government direction a new initiative from this year onwards , Agriculture and Horticulture degree programmes are to be offered in Tamil Medium also at Agricultural College and Research Institute and Horticultural College and Research Institute , Coimbatore. 


Dr. M. Kalyanasundaram , Dean ( Agriculture ) and Chairman Admissions Committee informed that , the Government of Tamil Nadu have also announced during the budget section to start one Horticultural College at Jeenur in Krishnagiri District and three Agricultural Colleges at Karur District , Keezhvelur in Nagapattinam District and Chettinad in Sivagangai District as Constituent colleges of TNAU during the academic year 2021-22 itself





3 மாவட்டங்களில் புதிய வேளாண்மைக் கல்லூரிகள்(New Agricultural Colleges will be opened in 3 Districts) : அரசு அறிவிப்பு...



 3 மாவட்டங்களில் புதிய வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 


தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக.28) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.


இதில் வேளாண் துறை சார்பில் வெளியான அறிவிப்பு:


''வேளாண்‌ கல்வியின்‌ முக்கியத்துவம்‌ கருதி, கரூர்‌ மாவட்டம்‌, நாகப்பட்டினம்‌ (கீழ்வேளூர்), சிவகங்கை (செட்டிநாடு) ஆகிய மூன்று மாவட்டங்களில்‌ ரூ.30 கோடி மதிப்பில்‌ அரசு வேளாண்மைக்‌ கல்லூரிகள்‌ தொடங்கப்படும்‌.


தற்போது, வேளாண்‌ கல்வி மற்றும்‌ வேளாண்‌ ஆராய்ச்சியின்‌ தேவை அதிகரித்துள்ளது. இதனைக்‌ கருத்தில்‌ கொண்டு, வேளாண்‌ நிதிநிலை அறிக்கையில்‌ கிருஷ்ணகிரியில்‌ புதியதாக அரசுத்‌ தோட்டக்கலைக்‌ கல்லூரி தொடங்க அறிவிக்கப்பட்டது.


வேளாண்‌ கல்வியின்‌ முக்கியத்துவம்‌ கருதி, 2021-2022ஆம்‌ ஆண்டில், கரூர் மாவட்டம்‌, நாகப்பட்டினம்‌ மாவட்டத்தில்‌ கீழ்வேளூா்‌, சிவகங்கை மாவட்டத்தில்‌ செட்டிநாடு ஆகிய இடங்களில்‌ மூன்று புதிய அரசு வேளாண்மைக்‌ கல்லூரிகள்‌ தொடங்குவதற்கு மாநில அரசு தலா ரூ.10 கோடி வீதம்‌ மொத்தம்‌ ரூ.30 கோடி நிதியை ஒதுக்கும்''‌.


இவ்வாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.


>>> வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை எண்: 5, அறிவிப்புகள்: 2021-2022...


தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை(Agriculture Budget - 2021-2022) தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - முக்கிய அம்சங்கள்...

 


வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.


நடப்பாண்டில் 2500 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.


உணவு தானிய பயிர்கள், தென்னை, கரும்பு, பருத்தி, சூர்யகாந்தி பயிர்களில் தேசிய அளவில் முதல் 3 இடங்களில் தமிழகம் இடம்பெற வழிவகை.


வேளாண் தொகுப்பு திட்டம், மானாவாரி நில 

மேம்பாடு, இயற்கை விவசாயம் உள்ளிட்ட 16 திட்டங்கள் மூலம் இலக்கை அடைய வழிவகை.


சாகுபடி பரப்பு 60 விழுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்தப்படும்.


தரிசு நிலங்களை மாற்றிட குளங்கள், பண்ணை குட்டைகள், கசிவுநீர் குட்டைகள் போன்ற நீர் ஆதாரங்கள் பெருக்கப்படும் - எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.


நெல் ஜெயராமன் சேகரித்த மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும்.


தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் வகைகள் 200 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி செய்து வழங்கப்படும்.


கால்வாய், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாரும் திட்டம் ரூ.250 கோடி செலவில் பயன்படுத்தப்படும்.


இருபோக சாகுபடி நடைபெறும் பரப்பை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த நடவடிக்கை.


கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.


சர்வதேச நிபுணர்களின் கருத்தை கேட்டு வேளாண் பட்ஜெட்டை தயாரித்துள்ளோம்.


தமிழ்நாட்டில் விவசாயம் நடைபெறும் பரப்பளவு 11.07 லட்சம் ஹெக்டேர் கூடுதலாக்கப்படும்.


நெல் ஆதார விலை அதிகரிப்பு:


நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலை சன்ன ரகத்திற்கு ரூ.70 லிருந்து ரூ.100 ஆக உயர்த்தி கொள்முதல் செய்யப்படும்.


கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சை, நெல்லை, கரூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சிறிய அளவில் 10 உழவர் சந்தைகள் 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.


மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகள் கொண்ட தளைகள் 2 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.


மூலிகை செடிகளை பெருக்கும் திட்டம் ரூ.2.18 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.


வேளாண்மையின் பெருமையை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள சென்னையில் மரபுசார் வேளாண் அருங்காட்சியகம்.


பயிறு வகை விலையை கட்டுப்படுத்த, பயிறு விவசாயிகளை காப்பாற்ற ரூ.45.97 கோடி ஒதுக்கீடு.


தமிழ்நாட்டில் பனைமர வளர்ப்பை அதிகரிக்க 30 மாவட்டங்களில் புதிய திட்டம்.


76 லட்சம் பனை விதைகள், ஒரு லட்சம் பனைமர கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.


 பனை மரங்கள் வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்.


பனைவெல்ல பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நியாய விலைக்கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்யப்படும்.


காய்கறிகளை குறைவாக சாகுபடி செய்யக்கூடிய 2,000 கிராமங்களில் மண் வளத்தை மேம்படுத்தி 1250 ஹெக்டர் பரப்பில் காய்கறி பயிரிட மானியம். 


அனைத்து மாவட்டங்களிலும் 100 ஹெக்டர் பரப்பில் கீரை சாகுபடி மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிக்கவும் மானியம்.


குழந்தைகள் தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஊரகப் பகுதிகளில் 12 வகை காய்கறி விதைகள் அடங்கிய 2 லட்சம் விதைகள் மானியத்தில் வழங்கப்படும்.


கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.150 வீதம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த முடிவு; இதன்மூலம் கரும்புக்கு டன் ஒன்றிற்கு ரூ.2900 வீதம் விலையாக பெறுவர்.


35 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காவிரி டெல்டாவில் நெல் சாகுபடி அதிகரித்துள்ளது- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.


சென்னை கொளத்தூரில் நவீன வேளாண் விற்பனை மையம் அமைக்கப்படும்.


கிருஷ்ணகிரியில் 150 ஏக்கரில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கிடு.


சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 10 குதிரைத்திறன் வரையிலான 5000 பம்பு செட்டுகள் 70%  மானியத்தில் நிறுவப்படும். 


இத்திட்டம் ரூ.114 கோடியே 68 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.


நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளை சந்தைப்படுத்த எடப்பள்ளியில் ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை அமைக்கப்படும்.


ஒட்டன்சத்திரம், பண்ருட்டியில் ரூ.10 கோடி செலவில் நவீன குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்.


“பண்ருட்டியில் பலா சிறப்பு மையம்"- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்.


விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க ரூ.4508 கோடி ஒதுக்கீடு.


வட்டார அளவில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் டிராக்டர் உள்ளிட்ட இயந்திரங்கள் ரூ.23 கோடி செலவில் கொள்முதல்.


திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விதை நீக்கும் இயந்திரம் நிறுவப்படும்.


20000 ஹெக்டேர் தென்னந்தோப்புகளில் சொட்டுநீர் பாசனமுறை நடப்பாண்டில் ஏற்படுத்த திட்டம்.


இந்த ஆண்டு 17 லட்சம் தரமான தென்னங்கன்று உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில் தரப்படும்.


>>> 2021-2022 வேளாண் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...