இடுகைகள்

AIADMK லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வருவேன் என்று வாக்குறுதி அளித்து அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமம் போட்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் விமர்சனம்...

படம்
பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வருவேன் என்று வாக்குறுதி அளித்து அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமம் போட்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று எதிர்க்கட்சித் தலைவர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் விமர்சித்துள்ளார். திருவண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மடிக்கணினி திட்டம், அம்மா ஸ்கூட்டர் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், திருமண உதவித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை ஆட்சிக்கு வந்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறுத்திவிட்டார் என்று குற்றம்சாட்டினார்.  அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி எனக்கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் கண்ணை திறந்து பார்த்தால் அதிமுக ஆட்சிக்காலம் வெளிச்சமான ஆட்சிக்காலம் என்பது தெரியும் என்று கூறினார்.  நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி, பல வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதனை நிறைவேற்றாமல் மக்களுக்க

மக்களவைத் தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு...

படம்
 மக்களவைத் தேர்தலுக்கான 16 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு...   16 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு... 👉 வடசென்னை - ராயபுரம் மனோகரன் 👉தென் சென்னை - ஜெயவர்தன் 👉காஞ்சிபுரம் - ராஜசேகர் 👉அரக்கோணம் - விஜயன் 👉ஆரணி - கஜேந்திரன் 👉கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ் 👉விழுப்புரம் - பாக்கியராஜ் 👉சேலம் - விக்னேஷ் 👉நாமக்கல் - தமிழ்மணி 👉ஈரோடு - ஆற்றல் அசோக்குமார் 👉கரூர் - தங்கவேல் 👉சிதம்பரம் - சந்திரஹாசன் 👉மதுரை - சரவணன் 👉தேனி - நாராயணசாமி 👉நாகை - சுர்ஜித் சங்கர் 👉இராமநாதபுரம் - ஜெயபெருமாள் 👉தேமுதிக-விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு 👉புதிய தமிழகம், SDPI கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு

2021 சட்டமன்ற தேர்தலுக்கான அ.இ.அ.தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியீடு (அரசு ஊழியர்கள் மற்றும் காவலர்களுக்கான வாக்குறுதிகள்)...

படம்
 AIADMK Assembly Election Manifesto - 2021 Released... வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனிதுறை. மாவட்டம் தோறும் சிப்காட் தொழில் வளாகம் அமைக்கப்படும். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை. வேலையில்லா இளைஞருக்கு ஊக்கத்தொகை இரட்டிப்பாக வழங்கப்படும். அமைப்பு சாரா ஓட்டுனர்களுக்கு விபத்து காப்பீடு. மதுபானக்கடைகள் படிப்படியாக மூடப்படும். CAA சட்டத்தை கைவிட வலியுறுத்தப்படும். 100 நாட்கள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். தனியார் பங்களிப்புடன் தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு காலை டிபன் வழங்கப்படும். ஏழை திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை வழங்கப்படும்-அதிமுக தேர்தல் அறிக்கை. பொங்கல் பண்டிகைக்காக உதவித்தொகை திட்டம் தொடரும். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் பெயர் சூட்டப்படும். புற்றுநோய் சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்  - அதிமுக தேர்தல் அறிக்கை. அரசு பள்ளி சுயநிதி வகுப்பு மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும். அங்கன்வாடி குழந்தைகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் தினந்தோறும் 200 மி.லி பால். நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு 50% கட்டணச் சலுகை.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...