கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அறிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

100% No Govt Servant & Teachers Will Accept Tamil Nadu Govt's Evasion Words to instead of Old Pension Scheme - Tamil Nadu Chief Secretariat Association Condemns Report

 


பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு அரசின் பசப்பு வார்த்தைகளை 100% எந்த அரசு ஊழியரும், ஆசிரியர்களும் ஏற்க மாட்டார்கள் - தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கண்டன அறிக்கை


100% No Govt Servant & Teachers Will Accept Tamil Nadu Govt's Evasion Words to instead of Old Pension Scheme - Tamil Nadu Chief Secretariat Association Condemns Report



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Joint Director Mr. Pon Kumar's speech was of very low quality - Teachers' Fedaration condemned


முறைசாராக் கல்வி இணை இயக்குநர் திரு.பொன்.குமார் அவர்களின் பேச்சு மிகவும் தரம் தாழ்ந்தது - ஆசிரியர் கூட்டணி கண்டனம் 


Joint Director Mr. Pon Kumar's speech was of very low quality - Teachers' Fedaration condemned


 முறைசாராக் கல்வி இணை இயக்குநர் திரு.பொன்.குமார் அவர்களின் உதகை பேச்சு மிகவும் தரம் தாழ்ந்தது. கண்டனத்துக்குரியது.

@@@@@@@@@@@@@@@@

*AIFETO   15.11.2024.*

*தமிழக ஆசிரியர் கூட்டணி

 அரசு அறிந்தேற்பு எண்:-

  36/2001.*

@@@@@@@@@@@@@@@@


முறைசாரா கல்வி இணை இயக்குனர் திரு.பொன். குமார் அவர்கள் உதகையில் 14.11.2024 மாலையில் குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்டு சுமார் இரண்டு மணி நேரம் கட்டுப்பாடு இல்லாமல் மனம் போன போக்கில் வாய்க்கு வந்தபடி ஆசிரியர்களை ஒருமையில்  பேசியுள்ளார். 


அவர் படித்தது, இளமைப் பருவம் , அவருடைய குடும்ப வரலாற்றினை தன்னையும் அறியாமல் தற்புகழ்ச்சியாக நீண்ட நேரம் பேசி இருக்கிறார். ஆசிரியர்களிடம் பொது அறிவு வினாடி வினா கேட்பது போல சம்பந்தமில்லாத கேள்விகளை எல்லாம் கேட்டு சங்கடபடுத்தி இருக்கிறார். நாட்டுப்புற கதைகள் சிலவற்றை சம்பந்தமில்லாமல் கூறியிருக்கிறார். சில BEO க்களை  கூப்பிட்டு உங்களுக்கு பிடிக்காத ஆசிரியர்கள் எவரேனும் இங்கு இருந்தால் அவர்களிடம்  நான்கு கேள்விகளை கேளுங்கள் என்று கூறியிருக்கிறார். 


ஒர் ஆசிரியை அழைத்து நீங்கள் சில கேள்விகளை இங்கு உள்ள ஆசிரியர்களிடம் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார். குழந்தைகள் தின விழாவில் ஆசிரியர்களை பெருமைப்படுத்த வேண்டியவர் ஆசிரியர்களை வசைபாடி இருக்கிறார். ஒருமையில் பேசுவது ஒருவருக்கு மட்டும் சொந்தமல்ல. அதே ஒருமையில் ஆசிரியர்கள் இணை இயக்குநரிடம் பேசி இருக்க வேண்டும். ஆசிரியர்களுடைய தலைமைப் பண்பு அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளது. 


இனிவரும் கூட்டங்களில் அவர் தரைக்குறைவாக பேசினால் அதே பாணியில் வேகமாக பதில்கள்  போய் சேரும். தமிழ்நாடு அரசு  அதிகாரப் பதவிகள் எதுவும் இவருக்கு ஒதுக்காமல் உள்ளது இதுதான் காரணம் என்று தெரிகிறது. அதேபோல மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்களுக்கு இவரை அனுப்பாமல் தவிர்த்து வருகின்ற உண்மையும் நமக்கு தெளிவாக தெரிகின்றது. 


ஒருங்கிணைந்த கல்வித் திட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிய மாவட்டங்களில் பல பள்ளிக் கட்டிடங்கள் கட்டி அவற்றிற்கு டைல்ஸும் பதித்து  கொடுத்திருக்கிறார். இரண்டு மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட மாவட்ட அலுவலகத்திற்கு கட்டிடம் கட்டி கொடுத்திருக்கிறார். அதை எல்லாம் ஆசிரியர்கள் பாராட்டத்தான் செய்கிறார்கள். ஆனால் எந்த மாவட்டத்திற்கு இவர் சென்றாலும் பிரச்சனைகள் இல்லாமல் வந்ததில்லை. 


இனி இவர் ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல்  தவிர்த்து அவர் மரியாதையை அவரே காப்பாற்றிக் கொள்ள 'நா' காக்க வேண்டும். 


ஒரு மூத்த இயக்க தலைவர்.


வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS)  அலைபேசி: 9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com


Demands will be fulfilled successively for the benefit of government employees, teachers - Tamil Nadu Government Announcement



அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழும் வகையில் கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் - தமிழ்நாடு அரசு அறிக்கை - நாளிதழ் செய்தி 


Demands will be fulfilled successively for the benefit of government employees, teachers - Tamil Nadu Government Announcement 


சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் மகிழும் வகையில் அவர்களது கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2019 ஜனவரி 25-ம் தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமி, ஒரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வாங்கும் ஊதியத்தைச் சொல்லி ஆசிரியர்களுக்கு இவ்வளவு சம்பளமா எனக் கூறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைக் கேவலப்படுத்தினார். அவருடைய ஆட்சியில் போராடிய அரசு ஊழியர், ஆசிரியர்களைப் பார்த்து, "அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா? என்று கேட்டு, ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் கொச்சைப்படுத்தினார்.


ஆனால், இன்று ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காக இந்த அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறுகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 19 ஆண்டு முதல்வர் பொறுப்பில், 4 முறை ஊதியக் குழுக்களை அமைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கினார். அதனால், அவர்கள் இந்த அரசுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறார்கள்..


ஒரே ஒரு கையெழுத்தில் 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தனர். அதன்பின், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சென்று உத்தரவை டிஸ்மிஸ் செய்ய வைத்த பெருமை திமுகவுக்கு உண்டு. திமுக அரசு வழங்கிய பல சலுகைகளை, அதிமுக அரசு ரத்து செய்தது. அனைத்தையும் 2006-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது மீ்ணடும் நடைமுறைப்படுத்தினார்.


அரசு ஊழியர் நியமனத் தடைச் சட்டம், "டெஸ்மா" சட்டம் ரத்து செய்யப்பட்டன. 1996-ல், அரசு ஊழியர்கள் முழு ஓய்வூதியம் பெற தகுதியுள்ள பணிக்காலம் 33 ஆண்டுகள் என்பது 30 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. இவ்வாறு பல சலுகைகள் வழங்கப்பட்டது.


அதேவழியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ல் பொறுப்பேற்றது முதல் அரசு ஊழியர் ஆசிரியர்களின் நலன்களைப் பரிவோடு கவனித்து சலுகைகள் வழங்கி வருகிறார். மகளிருக்கு மகப்பேறு விடுப்புக் காலம் 9 மாதம் என்பதை 12 மாதங்களாக உயர்த்தியுள்ளார். அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீதம் என்பது 40 சதவீதமாக உயர்த்தப்பட்டது.


கடும் நிதிநெருக்கடிகளுக்கு இடையிலும் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். மத்திய அரசு உயர்த்திவரும் அகவிலைப்படிகளை அவ்வப்போது தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அளித்து வருகிறார். அடுத்தடுத்து அவர்களுடைய கோரிக்கைகளும் அவர்கள் அனைவரும் மகிழும் வகையில் நிறைவேற்றப்படும்.

 

பழைய அரசு அலுவலர் குடியிருப்புகள் படிப்படியாக புதிதாகக் கட்டப்படும். அரசுப் பணியாளர்களுக்கு வீடு கட்டும் முன்பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள் இறந்தால் ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது.


சமக்ர சிக்சா அபியான் திட்டத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்காத நிலையிலும் 32,500 ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்குரிய ஊதியங்களை உரிய நாளில் வழங்கி பாதுகாத்துள்ளது திமுக அரசு. பழனிசாமியின் நாடகம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் கடும் எதிர்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்படடுள்ளது.





DMK government did not fulfill election promises to government employees, teachers - Former Chief Minister alleges



அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை - முன்னாள் முதலமைச்சர் குற்றச்சாட்டு


தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற தவறிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;



>>> அறிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



"2021 சட்டமன்ற தேர்தலின்போது வெளியிட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய் சொல்லி மக்களை திமுக ஏமாற்றுகிறது. திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ஆட்சிக்கு வந்த பின் அரசு ஊழியர்களுக்கு திமுக பட்டை நாமம் போட்டுள்ளது.


பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக அரசு இன்னும் நிறை வேற்றவில்லை. திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதியை நிறைவேற்றாதது பற்றி திருச்சியில் பேட்டி அளித்தேன். என் பேட்டிக்கு பதில் சொல்லாமல் பெயரே இல்லாமல் ஒரு அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. உண்மை சுட்டதால் 7 பக்க மொட்டைக் காகித அறிக்கையை ஆட்சியாளர்கள், ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளனர்.


கபட நாடகம் ஆடுவதில் பி.எச்டி பட்டம் பெற்ற ஆட்சியாளர்கள், அதிமுக மீது பாய்கின்றனர். எந்த சூழ்நிலையிலும் நாடகமோ, சூழ்ச்சியோ செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பிரதான எதிர்க்கட்சி என்பது நிழல் அரசை போன்றது, அது சுட்டிக்காட்டும் குறைகளை நேர்மையான அரசு ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும்."


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Online Patta change service - Report of the Director of Land Surveys and Topography


இணையவழி பட்டா மாறுதல் சேவை தொடர்பாக நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநரின் அறிக்கை - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1896, நாள் : 09-11-2024


Report of the Director of Land Surveys and Topography in relation to the online patta change service - Tamilnadu Government Press Release No.  1896, Dated : 09-11-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Ready to make Chief Minister Stalin the Leader of Opposition in 2026 - TNGEA



2026-ல் முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்கட்சித் தலைவராக்க தயார் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அறிக்கை


Ready to make Chief Minister Stalin the Leader of Opposition in 2026 - Tamil Nadu Government Employees Association Statement



>>> அறிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



  "2026-ல் முதல்வர் ஸ்டாலினை எதிர்கட்சித் தலைவராக்க தயார்" - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்


#MKStalin | #DMK | #TNGovt | #TNGEA


💢 முதல்வருக்கு 2026 தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பரிசளிக்க தயார்’ - அரசு ஊழியர்கள் சங்கம்


🔥 மதுரை: “எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அதை அவருக்கு பரிசளிக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தயாராக இருக்கிறோம்” என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


🔥இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், “கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடிய இடத்திற்கெல்லாம் தேடி வந்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘தேனாறும், பாலாறும் ஓடும்’ என்றவாறு தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்தார். 


🔥 2021-ல் சட்டமன்றத் தேர்தலின்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தார்.


🔥ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளாகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக, 24 மாதகால அகவிலைப்படி, ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம் ஆகியவற்றை முடக்கி, அரசு ஊழியர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்தது தான் அவரின் சாதனை.


தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்த பள்ளிக் கல்வித் துறை ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் நிதிசாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார்.


🔥 உண்மையிலேயே நிதி நிலை மோசமாக உள்ளது என்றால், நிதி நிலை சரியாகும் வரை எங்ளுக்கு ஊதியம் வேண்டாம் என்று தமிழ்நாடு முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவிப்பார்களா? அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த சிபிஎஸ் சந்தா தொகை தமிழ்நாடு அரசால் தவறுதலாக கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது.


🔥 போக்குவரத்துத்துறை ஊழியர்கள் தற்போது ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காமல் பரிதவிக்கும் நிலை அரசு ஊழியர்களுக்கும் வரப்போகிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அதை அவருக்கு பரிசளிக்க தயாராக இருக்கிறோம் என்பதை சொல்ல கடமைப்பட்டுள்ளோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


புற்றுநோய், ஆஸ்துமாவை ஏற்படுத்தும் கோனாகார்பஸ் மரங்களை அரசே வளர்ப்பதா? கேடு தரும் மரங்களை அகற்றி விட்டு நாட்டு மரங்களை வளர்க்க வேண்டும்! - மருத்துவர் இராமதாசு அவர்கள் வலியுறுத்தல்...

 


புற்றுநோய், ஆஸ்துமாவை ஏற்படுத்தும் கோனாகார்பஸ் மரங்களை அரசே வளர்ப்பதா? கேடு தரும்  மரங்களை அகற்றி விட்டு நாட்டு மரங்களை வளர்க்க வேண்டும்! - மருத்துவர் இராமதாசு அவர்கள் வலியுறுத்தல்...

தமிழ்நாட்டில் பசுமைப்போர்வையை அதிகரிக்கும் நடவடிக்கை என்ற போர்வையில் கோனாகார்பஸ் (Conocarpus)  என்ற வகை மரங்களை தமிழக அரசு அதிக அளவில் வளர்த்து வருகிறது. சென்னை நீலாங்கரை கடற்கரைப் பகுதியிலும்,  தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலும் சாலையோரங்கள், சாலைகளின் நடுப்பகுதிகள், பூங்காக்கள்,  கல்விநிறுவன வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவன  வளாகங்களில் இந்த வகை மரங்கள் மிக அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கும், மனித உடல்நலத்திற்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் இந்த வகை மரங்களை அரசே நடுவது கண்டிக்கத்தக்கது.


தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் கோனாகார்பஸ் வகை மரங்களின் மலர்கள் ஆண்டுக்கு இரு முறை மகரந்த சேர்க்கை நடத்தும் திறன் கொண்டவை. அப்போது அந்த மலர்களில் இருந்து வெளிவரும் மகரந்த தூள்கள் மனிதர்களின்  சுவாச மண்டலத்திற்குள் நுழைந்து சளி, இருமல், மூச்சடைப்பு  உள்ளிட்ட சுவாசக் குறைபாடுகளை ஏற்படுத்தும்;   இந்த மரங்களின் அருகில் நீண்ட காலம் வசிப்பவர்களுக்கு ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும் என்றும்,  புற்றுநோய் ஏற்படும் ஆபத்தும் அதிகம் என்றும் சுற்றுச்சூழல்  வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.


கோனாகார்பஸ் வகை மரங்கள் அடர்த்தியாகவும்,  வேகமாகவும் வளரும் என்பதைத் தவிர்த்து இந்த மரங்களால் எந்த பயனும் இல்லை. பார்ப்பதற்கு பசுமையாகவும், அழகாகவும் காட்சியளிக்கும் இந்த வகை மரங்களின் இலைகளை எந்தக் கால்நடைகளும் உண்ணாது. இந்த மரத்தில் குருவிகள் கூடு கட்டாது. தேனீக்கள் கூட இந்த மரத்தை அண்டாது. அதுமட்டுமின்றி, நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சக் கூடியவை. ஆனால், இது குறித்த உண்மைகள் எதுவும் தெரியாமல் இந்த வகை மரங்கள் தமிழகத்தில் அதிக அளவில் நடப்பட்டு வருவது கவலையளிக்கிறது.


கோனாகார்பஸ் வகை மரங்களின் சிறப்புகளில் ஒன்று அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடியவை. இந்த ஒற்றைக் காரணத்திற்காக அரபு நாடுகளில்  கோனாகார்பஸ் மரங்கள் மிக அதிக எண்ணிக்கையில்  வளர்க்கப்பட்டன. ஆனால், வெப்பத்தைத் தாங்கும் தன்மையால் கிடைக்கும் நன்மையை விட, தீமைகள் அதிகம் என்பதால் அரபு நாடுகளில் இந்த வகை மரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. உலகில் மேலும் பல நாடுகளிலும் கோனாகார்பஸ் மரங்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் குஜராத் மாநிலம் இந்த வகை மரங்களை அதிக அளவில் வளர்த்ததன் விளைவை அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. வதோதரா நகரில் கடந்த 2017-18 ஆம் ஆண்டுகளில் 24 ஆயிரம் கோனாகார்பஸ் மரங்கள் நடப்பட்டன.  அந்த மரங்கள் தினமும் ஒரு லட்சம் லிட்டர் வீதம் ஆண்டுக்கு மூன்றரை கோடி லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி அப்பகுதியை பாலைவனமாக மாற்றி வருகிறது. இதைத் தொடர்ந்து குஜராத், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் கோனாகார்பஸ் மரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

கோனாகார்பஸ் மரங்களின் தீமைகள் குறித்தும் தமிழக அரசிடம்  சுற்றுச்சூழல் வல்லுனர்கள் புகார் அளித்துள்ளனர். தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்களிடம் பல மாதங்களுக்கு முன்பே இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள போதிலும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் செய்யப்படும் ஒவ்வொரு நாள் தாமதமும் சுற்றுச்சூழலுக்கும், மனித நலத்துக்கும் பெரும் ஆபத்தை விளைவித்து விடும். 


எனவே தமிழ்நாட்டில் கோனாகார்பஸ்  மரங்களை அரசு தடை செய்வது மட்டுமின்றி,  மக்கள் வாழும் பகுதிகளில் வளர்க்கப்பட்டுள்ள இந்த வகை மரங்களை அகற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வகை மரங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சாலையோரங்கள், பூங்காக்கள், தோட்டங்கள் போன்றவற்றில் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய மா, வேம்பு, பூவரசு, அரசு போன்ற நாட்டு மரங்களை நடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

@CMOTamilnadu

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது? - பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி...


தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது? - பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி...


மத்திய அரசில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமல்: தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது?


மத்திய அரசில் 2004&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இது ஈடு இல்லை என்றாலும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை விட சிறந்தது என்ற வகையில் வரவேற்கத்தக்கது.


தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் 2004&ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பணியில் சேர்ந்த சுமார் 23 லட்சம் பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி, மத்திய அரசுப் பணியாளர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் பிற படிகளில் 10% பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வூதியக் கணக்கில் சேர்க்கப்படும். மத்திய அரசும் அதே தொகையை செலுத்தும். மத்திய அரசு ஊழியர் 60 வயதில் ஓய்வு பெறும் போது, அவரது கணக்கில் உள்ள முதிர்வடைந்த தொகையில் 40 விழுக்காட்டையும், 60 வயதுக்கு முன்பாக ஓய்வுபெறுவோர் 80 விழுக்காட்டையும் காப்பீட்டு நிறுவனத்திடம் செலுத்தி ஓய்வூதிய ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இந்த முறையில் எவ்வளவு ஊதியம் வழங்கப் படும்? என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இது தான் புதிய ஓய்வூதிய முறையின் பெரும் குறையாகும்.


• செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!

• https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29


ஆனால், மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்படி, 25 ஆண்டுகள் பணி செய்து ஓய்வு பெறுவோர் அனைவருக்கும் அவர்கள் கடைசி 12 மாதங்களில் பெற்ற சாராசரி ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஊதியமாக வழங்கப்படும். குறைந்தது பத்தாண்டுகள் பணியாற்றியவர்களுக்கு  மாதம் ரூ.10,000 உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். ஓய்வூதியர்கள் உயிரிழ்ந்தால், அவர் கடைசியாக பெற்ற ஓய்வூதியத்தில் 60% அவரது வாழ்விணையருக்கு வழங்கப்படும். அதே நேரத்தில்  பணியாளர்கள் செலுத்தும் பங்களிப்புத் தொகையில் எந்த மாற்றமும் இல்லை. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்பது பழைய ஓய்வூதியத்திற்கு மாற்றாக முடியாது. ஆனால், புதிய ஓய்வூதியத்துடன் ஒப்பிடும் போது சிறந்தத் திட்டம். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்பது தான் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.


மத்திய அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறிவிட்ட நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார்? என்பது தான் எனது வினா. தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்பது கடந்த பல ஆண்டுகளாகவே தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைக்க 2016-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப் பட்ட சாந்தா ஷீலா நாயர் குழு எந்த அறிக்கையும் அளிக்கவில்லை. அதன்பின் 03.08.2017-ஆம் தேதி அமைக்கப் பட்ட டி.எஸ்.ஸ்ரீதர் குழு அதன் அறிக்கையை 27-.11.2018 அன்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அளித்தது. ஆனால், அதன் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும் பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை அளித்திருந்தது.  ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முயற்சியைக் கூட திமுக அரசு மேற்கொள்ளவில்லை. தேர்தலில் அளித்த வாக்குறுதியைக் கூட மதிக்காமல், கடந்த 2022&ஆம் ஆண்டு மே 7&ஆம் நாள் சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் பி.டி,ஆர் பழனிவேல் தியாகராஜன், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த  வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டார். அதன்பிறகு வந்த நிதியமைச்சரோ, தமிழகத்தின் நிதிநிலைமை மேம்பட்ட பிறகு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்வோம் என்று  கூறி வருகிறார். இது அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்றழைக்கலாம் என்பதற்கு ஒப்பானதே.


தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஜாக்டோ&ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் போதிலும் அசைந்து கொடுக்க தமிழக அரசு  மறுக்கிறது. தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமற்றது அல்ல. கடந்த இரு ஆண்டுகளில் இராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், இமாலயப் பிரதேசம், கருநாடகம் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு நினைத்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அடுத்த மாதமே செயல்படுத்தலாம். ஆனால், அதை செய்ய திமுக அரசுக்கு மனம் இல்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்றால் அடுத்து வரும் மாதங்களில் அரசு ஊழியர்கள் கடுமையான போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க முடியாது.


வாழ்நாளில் 30 முதல் 35 ஆண்டுகள் வரை அரசுக்காக பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற பிறகு அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அரசு ஊழியர்களின் வாக்குகளை வாங்குவதற்காக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடமையும்  திமுக அரசுக்கு உண்டு. இந்த இரண்டையும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.




TETOJAC சார்பில் 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 29.07.2024, 30.07.2024 மற்றும் 31.07.2024 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் நடைபெற்ற DPI தொடர் முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கை...

 

டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 29.07.2024, 30.07.2024 மற்றும் 31.07.2024 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் நடைபெற்ற டி.பி.ஐ தொடர் முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து TETOJAC மாநில உயர்மட்டக்குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்)


04.08.2024


*மூன்று நாட்கள் பேரெழுச்சியுடன் நடந்த டி.பி.ஐ. முற்றுகைப் போராட்டம்!*


*பள்ளிக்கல்வித்துறைச் செயலருடன் சுமூகமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள்!*


*டிட்டோஜாக்கின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு!*


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 29.07.2024, 30.07.2024, 31.07.2024 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் பள்ளிக்கல்வித்துறையின் தலைமை அலுவலகமான டி.பி.ஐ வளாகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதென 14.07.2024 அன்று திருச்சியில் நடைபெற்ற டிட்டோஜாக் மாநில ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், டிட்டோஜாக்கில் இணைந்துள்ள 12 ஆசிரியர் சங்கங்களின் மாநில நிர்வாகிகள், டிடோஜாக்கின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், 12 இணைப்புச் சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.


இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மூன்று நாட்கள் முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காக 12 இணைப்புச் சங்கங்களின் நிர்வாகிகளும் கண்துஞ்சாது களப்பணியாற்றினர். மூன்று நாட்கள் டி.பி.ஐ முற்றுகைப் போராட்டம் என்ற கடுமையான களப்போராட்ட முடிவிற்கு டிட்டோஜாக் பேரமைப்பு ஏன் வந்தது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே இப்படியொரு களப்போராட்டத்தை நடத்த டிட்டோஜாக் முடிவெடுக்கவில்லை என்பதை இந்த இடத்தில் நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும்.


30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் பேரமைப்பு வட்டார அளவில், மாவட்ட அளவில் பல போராட்டங்களை எழுச்சியுடன் நடத்தியது. கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில் 13.10.2023 அன்று சென்னையில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தத் தீர்மானித்தது. மாநிலம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்னை புறப்படத் தயாரான நிலையில், கோரிக்கைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த 12.10.2023 அன்று மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களை அழைத்தார். 


அமைச்சரது அழைப்பின் பேரில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் போராட்டத் தேதிக்கு முதல் நாள் மாலை பேச்சுவார்த்தைக்குச் சென்றனர். இப்பேச்சுவார்த்தையில் மதிப்புமிகு.பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களும், மதிப்புமிகு.தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களும் பங்கேற்றார்கள். 1 மணி 45 நிமிடங்கள் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் டிட்டோஜாக் முன்வைத்த 30 கோரிக்கைகள் தொடர்பாகவும் ஒவ்வொன்றாக விரிவாக விவாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் முடிவில் டிட்டோஜாக் முன்வைத்த 30 கோரிக்கைகளில் 12 கோரிக்கைகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக உரிய ஆணைகள் வெளியிடப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.


இதனடிப்படையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மீது பெரும் நம்பிக்கை கொண்டு டிட்டோஜாக் பேரமைப்பு 13.10.2024 அன்று சென்னையில் நடத்தவிருந்த மாநில அளவிலான ஆர்ப்பாட்டத்தை ஒரு நல்லெண்ண அடிப்படையில் பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டமாக நடத்த முடிவெடுத்தது. அதன்படி 13.10.2023 காலை 10 மணிக்கு டிட்டோஜாக் சார்பில் சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெற்ற 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டத்தில் ஆசிரியர் இயக்க வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை இயக்குநரும், மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநரும் அக்கூட்டத்தில் பங்கேற்று முதல் நாள் பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பாக பொதுமேடையிலேயே அறிவித்தனர். இதனால் மாநிலம் முழுவதும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் நியாயமான 30 கோரிக்கைகளில் முதற்கட்டமாக கோரிக்கைகளாவது நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.


ஆனால், இந்நிகழ்விற்குப் பின்பு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகள் தொடர்பாக எவ்வித ஆணைகளும் தொடக்கக்கல்வித்துறையால் பிறப்பிக்கப்படவில்லை. டிட்டோஜாக்கின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் இது தொடர்பாக பலமுறை முயன்றும் ஆணைகளைப் பெற இயலவில்லை.


இந்தச் சூழலில் தான் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர்களின் முன்னுரிமையைப் பாதிக்கும் வகையிலும், பதவி உயர்வைப் பாதிக்கும் வகையில் ஊட்டுப் பதவிகளில் மாற்றம் செய்தும், குறிப்பாகத் தொடக்கக்கல்வித் துறையில் மிகப்பெரும்பான்மையாகப் பணியாற்றும் 80 சதவீதப் பெண்ணாசிரியர்களின் பதவி உயர்வைப் பறிக்கும் வகையிலும் அரசாணை: 243 நாள்: 21.12.2023 தமிழக அரசால் வெளியிடப்பட்டது. 12.10.2023 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பாக ஆணைகள் வெளிவரும் என்று எதிர்பார்த்த தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு எதிர்பாராத விதமாக அரசாணை: 243 வெளியிடப்பட்டது தலையில் இடிதாக்கியதைப் போன்று இருந்தது. இதனால் மாநிலம் முழுவதும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பும், அதிருப்தியும் ஏற்பட்டது.


இதனைத் தொடர்ந்து டிட்டோஜாக் பேரமைப்பு அரசாணை 243 ஐ ரத்து செய்தல் உள்ளிட்ட 31 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி 19.02.2024 அன்று சென்னையில் மாபெரும் உண்ணவிரதப் போராட்டத்தை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக அரசாணை 243 தொடர்பாக டிட்டோஜாக் பேரமைப்பை அன்றைய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதன்படி 20.02.2024 அன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளரும், தொடக்கக்கல்வி இயக்குநரும் கலந்து கொண்டார்கள். 1 மணி 30 நிமிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்பு மீண்டும் ஒருமுறை டிட்டோஜாக் அமைப்பை அழைத்துப் பேசுவதாகவும் கூறினார். ஆனால், இறுதிவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கமலேயே அரசாணை 243ன் படி பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்த ஆணை பிறப்பித்தார்.


பொதுவாக ஒரு துறையில் வெளியிடப்படும் அரசாணை என்பது அந்தத் துறையின் வளர்ச்சிக்கும், அதில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கும், அந்தத் துறையின் பயனாளிகளுக்கும் பயன் தருவதாக இருக்க வேண்டும். ஆனால், இங்கு அதற்கு நேர் மாறாக அரசாணை 243 வெளியிடப்பட்டது. தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் 5 சதவீத ஆசிரியர்களுக்குக் கூட பயன்தராத ஒரு அரசாணையை, 95 சதவீத ஆசிரியர்களுக்குக் கேடு விளைவிக்கும் அரசாணையை, மாணவர்களின் நலனுக்கு குந்தகம் ஏற்படுத்தும் அரசாணை 243 ஐ வெளியிட்டு விட்டு, இந்த அரசாணை ஆசிரியர்களுக்குப் பயன் தரக்கூடியது என்று தொடக்கக்கல்வித்துறைக்குச் சம்பந்தமில்லாத சில ஆசிரியர் சங்கங்கள் கூறுவதைச் சரி என்று ஏற்றுக் கொண்டதால் அது தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம் என டிட்டோஜாக் பேரமைப்பு கருதுகிறது.


எனவேதான் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் என்பது தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் மீது திணிக்கப்பட்ட போராட்டம் என்று டிட்டோஜாக் பேரமைப்பு கூறுகிறது.


எனவேதான் மூன்று நாள் முற்றுகைப் போராட்டம் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது. இதுவரை இல்லாத அளவிற்கு ஆசிரியர்கள் ஆவேசத்தின் வார்ப்படங்களாய், குறிப்பாகப் பெண்ணாசிரியர்கள் உணர்ச்சிப் பிழம்பாய் களத்தில் நின்று போராடினர்.


முற்றுகைப் போராட்டத்தை ஒடுக்க தமிழ்நாடு அரசு காவல்துறையை ஏவிவிட்டது. இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு டெஸ்மா, எஸ்மா காலத்தில் கூட இல்லாத அளவிற்கு ஆசிரியர்களை பணியாற்றும் பள்ளிகளிலேயே ஆசிரியர்கள் கற்பித்தல் பணி செய்து கொண்டிருந்தபோதே காவல்துறை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிகழ்வு என்பது வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக விழுந்துவிட்டது. சங்கப் பொறுப்பாளர்களை கொடுங்குற்றவாளிகளைப் போல நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்து காவல் நிலையங்களுக்கு கொண்டு சென்ற நிகழ்வு என்பது எந்த சட்டப்பிரிவின் கீழ் சரியானது என்பதை தமிழக அரசுதான் கூற வேண்டும். அதேபோன்று முற்றுகைப் போராட்டத்திற்கு வாகனங்களில் வந்த பெண்ணாசிரியர்களை கண்ட இடத்தில் நிறுத்தி மண்டபங்களில் இரவு முழுவதும் சிறை வைத்த நிகழ்வும் சட்டவிரோத நிகழ்வுகளாகும். அதேபோன்று கல்வித்துறை அலுவலர்கள் மூலம் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்தால் "ஊதியத்தைப் பிடிப்போம்" என்றும் "கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் மிரட்டிய செயல் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும். இத்தனை இடர்களையும் தாண்டி, தடைகளைத் தகர்த்து சென்னைக்கு வருகை தந்த ஆசிரியர்களை ரயில் நிலையங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும், கண்ட இடங்களிலும் கைது செய்தது காவல்துறை. இத்தனை இடர்பாடுகளையும் தாண்டி டி.பி.ஐ முற்றுகைப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றார்கள் என்றால் ஆசிரியர்களின் கோபத்தையும், நியாயத்தையும், போராட்ட வலிமையையும் தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். இத்தனை அடக்குமுறைகளையும் தாண்டி முதல் நாள் முற்றுகைப் போராட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், இரண்டாம் நாள் முற்றுகைப் போராட்டத்தில் 4500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், மூன்றாம் நாள் முற்றுகைப் போராட்டத்தில் 5500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பங்கேற்றார்கள் என்பதுதான் போராட்டத்தின் வெற்றி, டிட்டோஜாக் பேரமைப்பின் வலிமை.


அதுமட்டுமல்ல டி.பி.ஐ. முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ள இயலாதவர்கள் தற்செயல் விடுப்பெடுத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று போராட்டம் தொடங்குவதற்கு முதல் நாள் தான் டிட்டோஜாக் அறிவித்தது. அதனை ஏற்று மாநிலம் முழுவதும் மூன்று நாட்களில் கல்வித்துறை அலுவலர்களின் அச்சுறுத்தலையும் மீறி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தற்செயல் விடுப்பு எடுத்தார்கள் என்பது டிட்டோஜாக் பேரமைப்பின் 31 அம்சக் கோரிக்கைகளின் மீது தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு உள்ள ஆதரவு நிலையை வெளிப்படுத்துகிறது. பல மாவட்டங்களில் பெரும்பாலான ஒன்றியங்களில் மிகப் பெரும்பாலான ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்த நிலையில் அன்றையதினம் பள்ளிகளை நடத்த இயலாத நிலை தான் ஏற்பட்டது. எனவே, தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக டிட்டோஜாக் மட்டுமே உள்ளது என்பதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும்.


மூன்று நாள் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்ட பின்பு புதிதாகப் பொறுப்பேற்ற மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்கள் இரண்டு முறை டிட்டோஜாக் அமைப்பை அழைத்துப் பேசினார். 22.07.2024 அன்று முற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்கள் புதிதாகப் பொறுப்பேற்ற நிலையிலும் அனைத்துக் கோரிக்கைகளையும் விரிவாகக் கேட்டறிந்து நமது கோரிக்கைகளின் நியாயத்தைப் புரிந்து கொண்டு சாதகமான முறையில் கோரிக்கைகளின் மீது நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறியது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. இருப்பினும் கோரிக்கைகள் தொடர்பாக உத்திரவாதமான அறிவிப்புக்கள் இல்லாததால் கடந்த கால அனுபவங்களைக் கணக்கில் கொண்டு முற்றுகைப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என டிட்டோஜாக் அறிவித்தது.


அதன்பின்பு முதல் இரண்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் 30.07.2024


அன்று இரண்டாவது முறையாக டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதனடிப்படையில் 30.07.2024 அன்று பிற்பகல் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்களும், புதிதாகப் பொறுப்பேற்ற தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களும் பங்கேற்றனர். அரசாணை 243 தொடர்பாக விரிவாக டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய செயலாளர் அவர்கள், டிட்டோஜாக் அமைப்பின் மற்ற கோரிக்கைகள் தொடர்பாகவும், குறிப்பாக 12.10.2023 அன்று டிட்டோஜாக் அமைப்புடன் மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆலோசனை நடத்தினார்.


பேச்சுவார்த்தையின் முடிவில் தான் புதிதாக பொறுப்பேற்றுள்ளதால் டிட்டோஜாக்கின் கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து பொருத்தமான ஆணைகள் வெளியிட ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் வேண்டும் எனவும், கோரிக்கைகள் தொடர்பாக தன்னை மீண்டும் வந்து சந்திக்குமாறும் தெரிவித்தார். இருப்பினும் கோரிக்கைகள் தொடர்பாக உத்தரவாதமான அறிவிப்பேதும் இல்லாத சூழலில் மூன்றாம் நாள் முற்றுகைப் போராட்டம் தொடரும் என மாநில டிட்டோஜாக் உயர்மட்டக்குழு அறிவித்தது.


மூன்றாம் நாள் முற்றுகைப் போராட்டம் பேரெழுச்சியுடன் நடைபெற்று முடிந்த நிலையில் 31.07.2024 அன்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்ற டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு கூட்டத்தில் மூன்று நாள் முற்றுகைப் போராட்ட நிகழ்வுகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அடக்குமுறைகளை எதிர்கொண்டு நெஞ்சுறுதியோடு போராட்டக் களத்திற்கு வருகை தந்து களப்போராளிகளாகக் களத்திலே நின்று போராட்டத்தை வெற்றியடையச் செய்த ஆசிரியர்களுக்கும், போராட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக இமைப்பொழுதும் சோராமல் களப்பணியாற்றிய டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகளுக்கும் மாநில டிட்டோஜாக் உயர்மட்டக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்களின் சிறப்பான அணுகுமுறை மற்றும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சூழல் ஆகியவற்றை விரிவாக விவாதித்த மாநில உயர்மட்டக்குழு எதிர்வரும் ஆகஸ்டு இரண்டாவது வாரத்தில் திருச்சியில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி டிட்டோஜாக்கின் அடுத்த கட்ட செயல்பாடுகளைத் தீர்மானிப்பதென முடிவு செய்துள்ளது. டிட்டோஜாக் பேரமைப்பைப் பொறுத்துவரை முன்வைத்துள்ள 31

கோரிக்கைகளும் நியாயமானவை. எனவே, 31 கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என டிட்டோஜாக் வலியுறுத்துகிறது.


 குறிப்பாக அரசாணை 243 முற்றிலுமாக ரத்து செய்வதையே டிட்டோஜாக் ஏற்றுக்கொள்ளும் என்பதையும் இங்கு வலியுறுத்திக் குறிப்பிட விரும்புகிறோம். மேலும், 12.10.2023 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகளுக்கான ஆணைகள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும். இதுவே டிட்டோஜாக் பேரமைப்பின் உறுதியான நிலைப்பாடு. நம் கோரிக்கைகளுக்கு சரியான தீர்வு உரிய காலத்திற்குள் கிடைக்கவில்லை என்றால் டிட்டோஜாக் பேரமைப்பு இறுதி வரை உறுதியாகக் களத்தில் நின்று போராடும்.


*டிட்டோஜாக் மாநில அமைப்பு அதிகாரப்பூர்வ அறிக்கை.*

எண்ணும் எழுத்தும் - பருவம் 1க்கான மாணவர் நிலை அறிக்கை EMIS வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வழிமுறை...0

 

எண்ணும் எழுத்தும் EnnumEzhuthum - பருவம் 1க்கான மாணவர் நிலை அறிக்கை EMIS வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வழிமுறை...



EE - Students level report for this term 1 is available for download in EMIS portal. Please find the steps...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் - Single Page PDF...



How to download student level report?


STEP 1

Go to ‘https://emis.tnschools.gov.in/', type User Name & Password and click 'Login'


STEP 2

Click the 'Menu Bar-三)


STEP 3

Click 'Ennum Ezhuthum'


STEP 4

Click ‘Ennum Ezhuthum 2024-2025 Term 1 Student....”

This report shows the EE student-wise Level Report of this particular year 2024-25


STEP 5

The file will be downloaded. Click 'Open' to access the file...



ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் அறிக்கை...


 பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை  

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல்

இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது:

அது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்!


தமிழ்நாட்டில் அரசு  பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள்,  தொழிற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள்  மே மாதம் 24-ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை மொத்தம் 30 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  ஆசிரியர்களை  கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் செய்வது வரவேற்கத் தக்கது. ஆனால், அதில் கடைபிடிக்கப்படும் அணுகுமுறை மிகவும் தவறானதும், அநீதியானதும் ஆகும்.


ஆசிரியர்கள் பணியிட மாறுதலில் கடைபிடிக்கப்படும் அடிப்படை நடைமுறை, ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு  வழங்கி விட்டு, அதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது தான். இது தான் தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கம் ஆகும். ஆனால்,  2021-ஆம்  ஆண்டில்  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நடைமுறையை காற்றில் பறக்கவிட்டு, பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பாகவே பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தும் புதிய  நடைமுறையை புகுத்தியிருக்கிறது.


கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.  பதவி உயர்வு பெறுபவர்களுக்கு, அந்த நேரத்தில் காலியாக உள்ள இடங்களில்  அவர்களுக்கு விருப்பமான  இடத்தை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது தான் விதி ஆகும். அது அவர்களின் உரிமை. அப்படி செய்வது தான் பணியிட மாறுதலில்  குழப்பங்களைத் தடுக்கும்.  


ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் நேரடியாக பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப் பட்டால்,  அதற்கு முன் காலியாக உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விடும்.  அத்தகைய சூழலில் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்ய போதிய இடங்கள் இருக்காது. அதனால், விருப்பம் இல்லாமல், அதிகாரிகளால் ஒதுக்கப்படும்  இடங்களில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.  அதுமட்டுமின்றி,  ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் போது அவர்கள் ஏற்கனவே வகித்து வந்த பணியிடம் காலியாகி விடும். அதனால்,  அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவார்கள்.


ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு  வழங்காமல்,  பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவதன் நோக்கமே, பணியிட மாறுதல் முடிவடைந்த பிறகு  பதவி உயர்வு வழங்குவதன் மூலம் ஏற்படும் காலியிடங்களில் தங்களுக்கு வேண்டியவர்களை பணம் வாங்கிக் கொண்டு இடமாறுதலில் அமர்த்தலாம் என்பது தான் என்று குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. அந்தக் குற்றச்சாட்டுகளை  புறந்தள்ளி விட முடியாது.


2021-ஆம் ஆண்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் காரணமே ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தான். அவர்களின் பணியிட மாறுதல் நடைமுறையில் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த  நடைமுறையை மாற்றுவது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். எனவே, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நடைமுறையை ரத்து செய்து விட்டு, பதவி உயர்வு வழங்க வேண்டிய ஆசிரியர்களுக்கு முதலில் பதவி உயர்வு வழங்கி விட்டு,  அதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்து ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று  வலியுறுத்துகிறேன்.


24-02-2024 அன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்துக்குப் பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை...





>>> 24-02-2024 அன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்துக்குப் பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை - PDF...



24-02-2024 அன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்துக்குப் பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை...


*ஜாக்டோ - ஜியோ* ( *JACTTO-GEO* )


*(தமிழ்நாடு ஆசிரியர் அமைப்புகள் மற்றும் அரசு ஊழியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழு)*


 *நாள்:24.02.2024* 


*இன்னும் கொஞ்சம் பொறுத்திருப்போம்!*


 *பட்ஜெட் மான்ய கூட்டத்தொடர் வரை போராட்டத்தை நிறுத்தி வைப்போம்!*


 *நமக்கான அறிவிப்புகள் வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்!*


*பதுங்கிப் பாயும் வேங்கையின் பொறுமையுடன் பசித்திருப்போம்!*


 *விழித்திருப்போம்!*


 *ஒற்றுமையுடன் இருப்போம்!*


*அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களே, அரசு ஊழியர்களே, அரசுப்பணியாளர்களே*


*நாமெல்லாம் ஒன்று சேர்ந்து நம்முடைய உரிமைகளுக்காக மாநில அரசிடம் தொடர்ந்து நம்முடைய கோரிக்கைகளை வைத்து வருகிறோம். அரசின் கவனத்தை ஈர்க்க பலகட்ட போராட்டங்களை வடிவமைத்து அவற்றை செவ்வனே செயல்படுத்தி அரசுக்கு அழுத்தத்தை தந்து கொண்டிருக்கிறோம். நமக்கான முதல்வர் நம்மிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையிலும் அதே சமயம் அரசின் நிதி ஆதாரங்கள் மேம்படும் வரை நம்மை முதல்வர் காத்திருக்கச் சொன்னதை கருத்தில் கொண்டும் நாம் கடந்த இரண்டரையாண்டுகளாக வாழ்வாதார கோரிக்கைகளுக்கான காலஅவகாசத்தை பொறுத்துக்கொண்டு வந்திருக்கிறோம். இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் நாம் முதல்வரை மூன்று முறைகள் நேரில் சந்தித்து நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முறையிட்டிருக்கிறோம். நம்முடைய நெடுநாள் பொறுமைகளை அவரிடம் எடுத்துரைத்திருக்கிறோம். மாநாடு நடத்தியும் நம்முடைய கோரிக்கைகளில் பால் உள்ள நியாயங்களை அவசியங்களை, அவசரங்களை அவரிடம் எடுத்துரைத்திருக்கிறோம்.*


*தமிழக முதலமைச்சர் அவர்களும், அவர் ஆட்சியேற்ற பிறகு நம்மை சந்தித்த எல்லா தருணங்களிலும் மற்றும் மாநாட்டிலும் அவர்கொடுத்த வாக்குறுதிகளை புறந்தள்ளாமல் தான் கொடுத்த வாக்குறுதிகளை மறக்கவில்லை மறுக்கவில்லை மறைக்கவில்லை என்றும் அவை அனைத்தும் தன்னுடைய நினைவில் உள்ளதாகவும் அவை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையையும் உறுதிபடுத்தி வந்திருக்கிறார். தமிழக முதல்வர் அவர்கள் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் நமக்கான வாக்குறுதிகள் ஒன்றைக்கூட நிறைவேற்றாதது நம்முடைய வேதனைகளையும், கோபங்களையும் கொழுந்துவிட்டு எரியச் செய்த நிலையில் நாம் இதுவரை இரண்டுமுறை போராட்ட களங்களுக்கு தயாரான போது அமைச்சர்களை அனுப்பி தன்னுடைய நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி "சிலகாலம் காத்திருங்கள் நிச்சயம் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் " என்று மீண்டும் மீண்டும் உறுதியளித்து வந்திருக்கிறார்.*


*அதன்பிறகும் சிலகாலம் முதல்வரின் உறுதிமொழியில் இருந்த நம்பிக்கைகளின் பேரில் பொறுமையுடன் காத்திருந்துவிட்டு அரசுத்தரப்பில் எந்த சலனமும் இல்லாத நிலையில் நாம் நம்முடைய கோரிக்கைளில் அதிமுக்கியத்துவமும். அவசியமும் வாய்ந்த பத்து கோரிக்கைகளை முன் வைத்து இப்போது போராட்டகளத்திற்கு தயாராகி வந்தோம். இந்த நிலையில் அரசாங்கத்தின் துாதுவர்களாக மாண்புமிகு அமைச்சர்கள் திரு.எ.வ.வேலு, திரு.முத்துசாமி மற்றும் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை தமிழக முதல்வர் பேச்சு வார்த்தைக்காக நியமித்து அவர்களுடனான பேச்சுவார்த்தை ஜாக்டோ ஜியோவின் முக்கியத் தலைவர்களுடன் நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாகவே இருந்தது. தமிழக முதல்வர் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களின் கோரிக்கைகளை ஒருபோதும் ஒதுக்கித் தள்ள விரும்பியதில்லை என்றும். தற்போதுள்ள நிதி பற்றாக்குறை சூழ்நிலை காரணமாக கோரிக்கைகள் அறிவிக்கப்படாமல் உள்ளதாகவும், நம்முடைய போராட்டங்கள் நியாயமானவையே என்றாலும் அரசாங்கத்தினால் அவற்றை உடனடியாக நிறைவேற்ற இயலாத நிலைமை உள்ளதால் போராட்டங்களை விலக்கிக் கொண்டு இன்னும் சிலகாலம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.*


*ஆனால் நாம் நம்முடைய கோரிக்கைகளில் ஒரு சிலவற்றையேனும் முதல்வர் பரிசீலித்து ஆணையிடுவாரேயானால் நாங்கள் போராட்டத்தை ஒத்தி வைப்பது குறித்தோ அல்லது சிலகாலம் காத்திருப்பது குறித்தோ முடிவெடுக்க இயலும் என்று தெரிவித்தோம். அனைத்து ஊழியர்களும் ஆசிரியர்களும் பணியாளர்களும் அரசின் தற்போதைய நிலைப்பாட்டை வெகுகாலம் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்றும் நாங்கள் ஒற்றுமையுடனும், பொறுமையுடனும் பொறுப்புடனும் முதல்வரின் வார்த்தைகளை மதித்து இதுகாலம்வரை காத்திருக்கிறோம் என்பதையும் அவர்களுக்கு புரிய வைத்தோம். நம்முடைய பொறுமைகளை புரிந்து கொண்ட மாண்புமிகு அமைச்சர்கள் மாண்புமிகு முதலமைச்சரிடம் இதுகுறித்து தெரிவிப்பதாகவும் சொல்லிச் சென்றனர்.*


*ஆனால் நம்முடன் சுமூகமாக பேசிச்சென்றதற்கு மாறாக மாண்புமிகு அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களின் பெயரில் வெளியான அறிக்கை ஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்டத்தை கொச்சை படுத்துவது போன்றும், அரசாங்கம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து வருவதான தோற்றத்தையும், தமிழ்நாடு மிக இக்கட்டான பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் இந்த காலகட்டத்தில் ஜியோ அதிகப்படியான பணப்பலன்களைக் கேட்டு போராடுவது சரியானதல்ல என்று பொதுமக்களை திசை திருப்பும் வகையிலும் இருந்ததால் அந்த அறிக்கையை நாம் முற்றிலும் நிராகரிப்பதாக தெரிவித்து போராட்டம் தொடரும் என்று அறிவித்தோம்.*


*நம்முடைய போராட்டம் தொடரும் என்ற அறிவிப்பால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. மீண்டும் மாண்புமிகு அமைச்சர்கள் நம்முடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். நாம். "முதல்வர் எங்களுடன் பேச வேண்டும். இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே கோரிக்கைகளில் ஏதாவது ஒன்றிரண்டை செயல்படுத்திடும் அறிவிப்பை வெளியிட வேண்டும். மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எத்தனை நாட்கள்/மாதங்கள் கால அவகாசம் தேவைப்படும் என்பதை தெரிவிப்பதன் அடிப்படையிலேயே எங்களுடைய போராட்டத்தை நாங்கள் திரும்பப் பெறுவது குறித்து முடிவு செய்ய இயலும். அதனால் முதல்வருடன் நேரடியாக பேசாமல் நாங்கள் போராட்டத்தை ஒத்தி வைப்பதற்கான அறிவிப்பை வெளியிடமுடியாது" என்று தெரிவித்தோம்.*


*மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்தமுறையும் நம்முடைய கோரிக்கைகளை அவற்றில் உள்ள நியாயங்களை. அவற்றை நிறைவேற்றுவதில் அரசுக்கு ஏற்பட்டுள்ள காலதாமதங்களை மறுக்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். ஆனால் அதே சமயம் இன்னும் எத்தனை காலம் பொறுமையுடன் காத்திருப்பது என்பதுதான் நமக்குள்ள பெரிய கேள்வியாக உள்ளது. அமைச்சர் பெருமக்கள் அனைவரிடமும் ஏதாவது காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம். நாங்கள் உங்களுடைய கோரிக்கைகளில் நிறைவேற்றுவதில் மனம் உள்ளவர்களாக இருப்பதால்தான் பேச்சு வாரத்தைக்கு உங்களை அழைத்திருக்கிறோம் என்றும் அரசாங்கம் தற்போது பல்வேறு வகையான நிதிச்சுமையில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், மாதந்தோறும் அரசு ஊழியர்களுக்கு. ஆசிரியர்களுக்கு, பணியாளர்களுக்கு சம்பளம் அளிக்கவே நிதிப்பற்றாக்குறை உள்ள நிலையில், மத்திய அரசும் பல வகைகளில் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதிகளை தராமல் நிறுத்தி வைத்திருக்கும் சூழலில், நீங்கள் உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற கேட்டுப் போராடுவதால் எந்தப்பலனும் ஏற்படப்போவதில்லை. தமிழக முதல்வருக்கு கொடுக்க மனமிருந்தும் கஜானாவில் பணமில்லை என்று தெரிவித்தனர். இருப்பினும் முதல்வருடன் நாம் பேச ஏற்பாடு செய்வதாகக் கூறி ஏற்பாடு செய்து கொடுத்தனர்.*


*மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் நேரில் நம்மை சந்திக்க அழைக்க, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருடனும் அவர் பேசினார். நிதிநிலைமை மிகக்கூடிய விரைவில் சரியாகிவிடும் என்று சொன்ன முதல்வர் உங்கள் கோரிக்கைகளை நான் நிறைவேற்றாமல் யார் நிறைவேற்றப் போகிறார்கள்? என்று கேட்டு மீண்டும் ஒருமுறை அவர் தேர்தல் அறிக்கையிலும், நமது மாநாட்டிலும் தெரிவித்த உறுதிமொழியை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார். நாமும் இந்த சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவதற்குள் சில அறிவிப்புகளையேனும் வெளியிட வேண்டும். வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் எங்கள் போராட்டத்தை நிறுத்தி வைக்கிறோம் என்று தெரிவித்தோம். மாண்புமிகு முதல்வர் அவர்களும் "பரிசீலிக்கிறேன்." என்று சொல்லிச் சென்றார். அவருடனான பேச்சு வார்த்தை மிகவும் நம்பிக்கைத் தரும் விதத்தில் அமைந்திருந்ததால் 15.02.2024ல் நடத்தவிருந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை ஒருமனதாக முடிவு செய்து திரும்பப் பெறுவதாக அறிவித்தோம். சட்டமன்றக் கூட்டத்தொடரில் வெளியாகும் வரும் அறிவிப்பு அதன்பிறகான தமிழக அரசின் நிலைப்பாடு ஆகியவற்றைப் பொறுத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போராட்டத்தை தொடர்வதென முடிவு செய்திருந்தோம்.*


*ஒரு போராட்டத்தை அறிவித்து விட்டு முன்று அமைச்சர்களுடன் பேசிவிட்டு அவர்கள் கொடுத்த அறிக்கை நமக்கு திருப்தி அளிக்காத நிலையில் நாம் அந்த அறிக்கையை முற்றிலும் நிராகரித்துவிட்டு போராட்டத்தை தொடர்வதாக அறிவித்ததும் அதன்பிறகு மாண்புமிகு அமைச்சர்கள் நம்மை முதல்வருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து முதல்வரின் வாய்மூலம் கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்ததும் நம்பிக்கையை விதைப்பதாக இருந்தன. பொதுவாக அரசுக்கெதிரான போராட்டங்களை யார் செய்தாலும், அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் போது போராட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டு பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் என்றுதான் அழைப்பார்கள். ஆனால் முதன்முறையாக நாம் நிதியமைச்சரின் அறிக்கைக்குப் பின்னரும் போராட்டம் தொடரும் என அறிவித்து அது நிலுவையில் இருக்கும்போதே போராட்ட அறிவிப்பை திரும்பப் பெறாமல் முதல்வரை சந்தித்து அவரின் உறுதிமொழிக்குப் பின்னர் ஒருநாள் தற்றகாலிக வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளதோடு காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளது இந்த இயக்கத்திற்கு கிடைத்துள்ள வெற்றியாகும். நம்முடைய ஒற்றுமை, விடாமுயற்சி. கொண்ட லட்சியத்தில் உறுதிப்பாடு போன்றவைதான் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் சென்று நம்முடைய உரிமைகளை மீளப்பெற வழிசெய்யும்.*


*அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் நம்மை உதாசீனப்படுத்திவரும் நிலையில் வேறு எந்த கட்சியும் ஆட்சியும் நம்முடைய கோரிக்ககைள நிறைவேற்ற முன்வராத சூழ்நிலையில் நமக்கான கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று அன்று சொன்ன வார்த்தைகளை இன்றுவரை சொல்லிவரும் திராவிட முன்னேற்றக் கழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் மட்டும்தான் நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றித்தரமுடியும் என்ற நம்பிக்கை மீண்டும் மலர்ந்துள்ளது.*


*நாம் நடத்தும் போராட்டங்கள் அனைத்தும் நம்முடைய உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டங்களே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் காத்திருங்கள் கொடுக்கிறோம் என்று தெரிவிக்கும் இடத்தில், 'முடியாது நாங்கள் போராடியே தீருவோம் என்று எதிர்ப்பாடான நிலை எடுத்து போராட்டத்தை தொடர்வது முறையானதாக இருக்காது என்கிற யதார்த்தத்தை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். தமிழக அரசியல்கட்சிகளில் திமுகவைத் தவிர வேறு எந்த கட்சியும் நமக்கான உரிமைகளை நிறைவேற்றித்தருவோம் என்று ஒரு பேச்சுக்குக் கூட கூறாத நிலையில் "காத்திருங்கள் நான் செய்யாமல் உங்களுக்கு யார் செய்யப் போகிறார்கள்." என்று கூறும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பினை எதிர்த்து நாம் போராட்டகளம் செல்வதானது நமக்காக திறந்திருக்கும் வாய்ப்பு வாசல்களை நாமே அடைத்துவிட்டதாக ஆகிவிடும். மிகுந்த யோசனைகளுக்குப் பிறகே அரசின். தமிழக முதலமைச்சரின் நம்பிக்கை வார்த்தைகளை ஏற்று சில கோரிக்கைகளாவது கூடியவிரையில் நிறைவேறும் என்ற நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டின் அடிப்படையில் போராட்டத்தை தற்காலிகமாக நிறுததி வைத்திருந்தோம். ஆனால் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரும் முடிந்திருக்கிறது.*


*கனத்த இதயத்தோடு நிற்கிறோம். முதலமைச்சரின் வார்த்தைகளிலும், உடல்மொழியிலும் நம்மை ஏமாற்றும் போக்கோ. வஞ்சிக்கும் எண்ணமோ இருப்பதாக தெரியவில்லை. ஒரு பாராளுமன்றத் தேர்தலை எதிரில் வைத்துக்கொண்டு முதல்வர் தன்னுடைய உறுதிமொழிகளை தள்ளிப்போடுவதோ. இல்லையென்று கைவிரிப்பதோ அவர் வகிக்கும் பதவிக்கும் அவருக்கு இருக்கும் பெயருக்கும் புகழுக்கும் அழகாக இருக்காது என்பதை அவர் உணராதவர் இல்லை. இதுவரை அவர் கொடுத்த வாக்குறுதிகளுக்கும் இப்போது கொடுத்திருக்கும் உறுதிமொழிக்கும் வித்தியாசங்கள் பெரிதாக இல்லாத நிலையில் அவரின் வாக்குறுதிகளின் பேரில் பெரிய அளவில் சந்தேகம் எழவில்லை. கூடிய விரைவில் பட்ஜெட்உரை தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் எதுவும் தரவில்லை என்பதற்காக நாம் உடனடியாக ஒரு போராட்டத்தை அறிவிப்பது உளமாற நலமாக இருக்காது. கூடிய விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் வரக்கூடிய நிலையில் கடைசியாக ஒருமுறை நாம் நம்முடைய போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைப்போம். இப்படி நாம் முடிவெடுப்பதால் நம்முடைய போராட்டங்கள் முடிந்துவிட்டதாக அர்த்தமில்லை. சேமித்து வைத்த சக்திகளை வீணடிக்காமல் பாதுகாத்து வைப்போம்.கொடுத்த வாக்குறுதிகள் நீர்த்துப்போனால் மீண்டும் போராட்டத்தை தொடரும் நிலைப்பாட்டில் ஒற்றுமையாக உறுதியாக இருப்போம். புறச்சூழல்களை கவனத்துடன் கண்காணிப்போம். எப்போது போராட்டம் என்றாலும் அதற்கான தயாரிப்புகளோடு தயாராக இருப்போம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பாக ஆசிரியர்கள். அரசு ஊழியர்கள் பணியாளர்கள் குறித்தான தேர்தல் கால வாக்குறுதிகள் குறித்து கொள்கை முடிவினை அறிவிக்க வேண்டுமென ஜாக்டோ-ஜியோ கேட்டுக்கொள்கிறது.*


*தங்கள் நம்பிக்கையுள்ள*


 *மாநில ஒருங்கிணைப்பாளர்கள்*


ஊதிய முரண்பாடு அநீதி : இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதி வழங்க வேண்டும் - மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் (Salary Discrepancy Injustice: Justice should be given to Secondary Grade Teachers - Dr. S.Ramadoss)...



 ஊதிய முரண்பாடு அநீதி : இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதி வழங்க வேண்டும் - மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் (Salary Discrepancy Injustice: Justice should be given to Secondary Grade Teachers - Dr. S.Ramadoss)...


தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றும் இரு பிரிவினருக்கு இடையிலான ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து அரசுக்கும், ஆசிரியர் சங்கத்தினருக்கும்  இடையே நடைபெற்ற பேச்சுகள் தோல்வியடைந்திருக்கின்றன. நீதி கிடைக்காத ஆசிரியர்கள் 28-ஆம் நாள் முதல் போராட்டம் அறிவித்துள்ளனர். வருங்காலத் தலைமுறையினருக்கு பாடம் நடத்த வேண்டிய ஆசிரியர்களை சாலையில் இறங்கி போராட்டம் நடத்தும் கட்டாயத்திற்கு தள்ளுவதை ஏற்க முடியாது.


சம வேலைக்கு சம ஊதியம் என்ற முழக்கத்துடன் ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என வலியுறுத்தி வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை மிகவும் நியாயமானது.  2009-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ஆம்  தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் ஊதிய முரண்பாடு நிலவுகிறது. 31.05.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9,300 அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. ஆனால், 01.06.2009க்கு பிறகு  நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 மட்டுமே அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. அப்போது அடிப்படை ஊதியத்தில் ரூ.4100 என்ற வேறுபாட்டில் தொடங்கிய ஊதிய முரண்பாடு, இப்போது மொத்த ஊதியத்தில் ரூ.16,000க்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது. ஒரே பணியை செய்யும் இடைநிலை ஆசிரியர்களிடையே இந்த அளவு ஊதிய முரண்பாடு நிலவுவது நியாயமற்றது.


2009-ஆம் ஆண்டில் தொடங்கி 14 ஆண்டுகளாக நீடித்து வரும் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அவர்களுக்கும், அரசுக்கு இடையில் பலமுறை பேச்சு நடத்தியும் எந்தத் தீர்வும் காணப்படாதது மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த ஆண்டு திசம்பர் மாதம் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் 5 நாட்களுக்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து அவர்களுடன்  பேச்சு நடத்திய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆசிரியர்களின்  கோரிக்கையை ஏற்பது குறித்த முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்தார். ஆனால், அதன்பின் 9 மாதங்களாகியும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படவில்லை.


இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைவது சாத்தியமற்ற ஒன்றல்ல; எளிதானதே. 2009-ஆம் ஆண்டு மே மாதம் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ரூ.5200 மட்டுமே  அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது. அதை ஏற்காத ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் பணிக்கான அடிப்படைக் கல்வித் தகுதி பட்டயப் படிப்பு என்பதையும், ரூ.5200  என்பது பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி கொண்ட பணிக்கானது என்பதையும் அரசுக்கு சுட்டிக்காட்டினர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கான அடிப்படை ஊதியம் 1.80 மடங்கு உயர்த்தப்பட்டது. 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு இதே நடைமுறையை கடைபிடிக்க  அரசு தவறி விட்டது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம்.


இடைநிலை ஆசிரியர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி கல்வியியல் பட்டயப்படிப்பு (D.T.Ed) ஆகும். பட்டயப்படிப்பை குறைந்தபட்ச கல்வித்தகுதியாகக் கொண்ட அனைத்து பணிகளுக்கும் ரூ.9300 அடிப்படை ஊதியம் வழங்கப்படும் போது இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பிரிவினருக்கு மட்டும் அந்த அளவு ஊதியத்தை மறுப்பது நியாயமற்றது. இந்த உண்மையையும், நியாயத்தையும் உணர்ந்து கொண்டு   2009-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் ரூ.9300 அடிப்படை  ஊதியம் வழங்கப்பட்டால் 14 ஆண்டு கால சிக்கலுக்கு தமிழக அரசால் தீர்வு கண்டுவிட முடியும்.


இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும் என்பதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதே கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு திசம்பர் 25, 26 ஆகிய நாட்களில் சென்னையில் போராட்டம் நடத்திய போது, அவர்களை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த  மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை நன்கு உணர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உடனடியாக  அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் அவர்களின் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கி சிக்கலைத் தீர்க்க வேண்டும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளிடமிருந்து வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது - மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள் அறிக்கை (Banks should not deduct from the beneficiaries of Kalaignar Magalir Urimai Thittam - Hon'ble Minister of Finance and Human Resource Management Mr. Thangam Thennarasu's statement)...

 கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளிடமிருந்து வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது - மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள் அறிக்கை (Banks should not deduct from the beneficiaries of Kalaignar Magalir Urimai Thittam - Hon'ble Minister of Finance and Human Resource Management Mr. Thangam Thennarasu's statement)...



➤ மகளிருக்கு அளிக்கப்படும் உரிமைத் தொகையில் இருந்து வங்கிகள் பிடித்தம் செய்யக்கூடாது;


➤ மாநில அரசுக்கும், வங்கிகளுக்கும் இடையே

புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது 


➤ ஒப்பந்தங்களை மீறும் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிக்கு மாற்றப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்


➤ உரிமைத் தொகையில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், அதுகுறித்து 1100 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்


- அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை


கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டோர் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

 

ரூ 1000 உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பெண்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.


இ சேவை மையங்கள் மூலம் பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

 

57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் எஸ்எம்எஸ்  மூலம் அனுப்பப்பட்டுவிட்டது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2022-ஆம் ஆண்டு கல்வி நிலை குறித்த ‘ஏசா் (ASER)’ ஆய்வறிக்கை (Annual Status of Education Report (Rural) 2022 )...



>>> 2022-ஆம் ஆண்டு கல்வி நிலை குறித்த ‘ஏசா் (ASER)’ ஆய்வறிக்கை (Annual Status of Education Report (Rural) 2022 )...


(தமிழ்நாடு குறித்த அறிக்கை பக்க எண்: 217-222)


தினமணி தலையங்கம்...


தேசிய அளவில் 2005-ஆம் ஆண்டு முதல் கல்வி நிலை குறித்த ‘ஏசா்’ ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. 3 முதல் 16 வரையிலான குழந்தைகளின் பள்ளிச் சோ்க்கை, படிக்கும் திறன், கணிதத் திறன் உள்ளிட்டவை மாவட்ட, மாநில, தேசிய அளவில் இந்த அறிக்கையில் ஆய்வு செய்யப்படுகிறது. தொடா்ந்து பல மாதங்கள் மூடிக்கிடந்த பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பாதிப்பின் அளவைக் கணிக்கும் இந்த முதலாவது ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.


சமீபத்தில் 2022-ஆம் ஆண்டுக்கான கல்வி நிலை குறித்த ‘ஏசா்’ அறிக்கை வெளிவந்திருக்கிறது. கொள்ளை நோய்த்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகள் தடைபட்டிருந்த அந்த அறிக்கை, பல புதிய வெளிச்சங்களைத் தருகிறது. கற்கும் திறனில் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று இந்தியாவில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய அளவில் நடத்தப்பட்ட இந்த அறிக்கை பதிவு செய்கிறது. இந்தியாவிலுள்ள 616 மாவட்டங்களில் உள்ள 19,000 கிராமங்களில் ஏழு லட்சத்துக்கும் அதிகமான மாணவா்களை ஆய்வு செய்து, கிராமப்புற கல்வி நிலை குறித்து 2022 ‘ஏசா்’ அறிக்கை பதிவு செய்திருக்கிறது. 2018-க்கும் 2022-க்கும் இடையிலான நான்கு ஆண்டுகளில் பரவலாக அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரித்திருக்கிறது. படிக்கும் திறனும், கணிதத் திறனும் பெரும்பாலான மாநிலங்களில் குறைந்திருக்கிறது.


மிஸோரம், ஜம்மு - காஷ்மீா் மாநிலங்களைத் தவிர, ஏனைய அனைத்து மாநிலங்களிலும் 6 முதல் 14 வரையிலான குழந்தைகளின் கிராமப்புற அரசுப் பள்ளி சோ்க்கை அதிகரித்திருக்கிறது. 2018 போலவே மிக அதிகமான அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கையில் மேற்கு வங்கம் முதலிடம் வகிக்கிறது. 2018-இல் ஏழு மாநிலங்களில் மாணவா் சோ்க்கை 50 %-க்கும் குறைவாக இருந்தது. 2022-இல் மேகாலயம், மணிப்பூா் இரண்டு மாநிலங்களில் மட்டுமே அந்த நிலைமை. கேரளத்திலும், உத்தர பிரதேசத்திலும் மாணவா் சோ்க்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றன. தேசிய அளவில் 65.6 % (2018) இருந்த மாணவா் சோ்க்கை, 2022-இல் 72.9 %-ஆக அதிகரித்திருக்கிறது.


2018 வரை தொடா்ந்து அதிகரித்து வந்த தனியாா் பள்ளிகள் மீதான மோகம் திடீரெனக் குறைந்திருப்பதை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. 2018-இல் 30.9 %-ஆக இருந்த கிராமப்புற தனியாா் பள்ளிகளுக்கான வரவேற்பு, 2022-இல் 25.1 %-ஆகக் குறைந்திருக்கிறது. மிஸோரம், ஜம்மு - காஷ்மீா், மத்திய பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூா் மாநிலங்களில் தொடா்ந்து தனியாா் பள்ளிகளுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதையும் குறிப்பிடுகிறது 2022 ‘ஏசா்’ அறிக்கை.


2014 முதல் 2018 வரை கற்கும் திறன் அதிகரித்து வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென்று ஒரு வீழ்ச்சி தெரிகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்தாலும்கூட, 3, 5, 8 வகுப்புகளில் படிக்கும் மாணவா்களின் வாசிக்கும் திறனும், கணிதத் திறனும் பரவலாகவே எல்லா மாநிலங்களிலும் குறைந்திருப்பதை சுட்டுக்காட்டுகிறது அறிக்கை.


2-ஆம் வகுப்பு பாடங்களை படிக்க முடிந்த 3-ஆம் வகுப்பு மாணவா்களின் எண்ணிக்கை 24 மாநிலங்களில் குறைந்திருக்கிறது. அதேபோல, 5-ஆம் வகுப்பு 8-ஆம் வகுப்பு மாணவா்களில் 2-ஆம் வகுப்புப் பாடத்தை படிக்கத் தெரிந்தவா்களின் எண்ணிக்கையும் குறைந்திருப்பது தெரிகிறது. படிக்கும் திறனுடன் ஒப்பிடும்போது, கணிதத் திறன் அந்த அளவுக்கு மோசமில்லை.


இன்னொரு குறைபாட்டையும் அறிக்கை தெரிவிக்கிறது. அரசுப் பள்ளி மாணவா்களின் கற்கும் திறன் குறைந்திருப்பது போலவே, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் தனியாக கட்டணம் செலுத்தி பயிற்சி எடுத்துக்கொள்வது அதிகரித்திருக்கிறது. 22 மாநிலங்களில் தனிப் பயிற்சி ஆசிரியா்களும் (டியூஷன்), தனியாா் பயிற்சி நிலையங்களும் அதிகரித்திருப்பதை அறிக்கை கூறுகிறது. ஐந்து மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாணவா்கள் கட்டணம் செலுத்தி தனிப் பயிற்சி பெறுகிறாா்கள் என்றும், 73.9 % அரசுப் பள்ளி மாணவா்கள் மேற்கு வங்கத்தில் தனிப் பயிற்சி எடுத்துக் கொள்கிறாா்கள் என்றும் தெரிவிக்கிறது அறிக்கை.


கிராமப்புறங்கள் உள்பட எல்லா பகுதிகளிலும் இணையவழிக் கல்வி சென்றடைந்திருக்கிறது. சமநிலையிலான தொழில்நுட்ப வசதி ஆரம்பகட்டத்தில் இணையவழி கட்டமைப்புக்குத் தடையாக இருந்தது மாறி, அந்த வழிமுறை குக்கிராமங்கள் வரை பரவலாக இருப்பதாக தெரிவிக்கிறது அறிக்கை. கொள்ளை நோய்த்தொற்றுக்கு முன்பு 36 % மட்டுமே குடும்பங்களில் இருந்த கைப்பேசிகளின் எண்ணிக்கை 2022-இல் 74 %-ஆக அதிகரித்திருக்கிறது. ‘ஏசா்’ ஆய்வாளா்கள் எடுத்த புள்ளிவிவரத்தின்படி, 10-இல் 9 குடும்பங்களில் கைப்பேசிகளும், இணைய இணைப்பும் காணப்பட்டதாக தெரிகிறது.


பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் பெரிய அளவில் மாணவா் சோ்க்கை குறைந்து, பள்ளிக்கூடங்கள் மூடப்படும் என்கிற அச்சத்தைப் பொய்யாக்கி அரசுப் பள்ளிகளிலும், தனியாா் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை அதிகரித்திருக்கிறது. 2018-இல் 66 %-ஆக இருந்த அரசுப் பள்ளிகளின் பங்கு, 73 %-ஆக அதிகரித்திருக்கிறது. 2022-இல் பள்ளிக்கு வராத பெண் குழந்தைகளின் விகிதம் இரண்டு சதவீதம் அளவில் மட்டுமே என்பது அறிக்கை குறிப்பிடும் இன்னொரு முக்கியமான தகவல்.


‘ஏசா்’ அறிக்கை நம்பிக்கை அளிக்கிறது. அதே நேரத்தில், கிராமப்புற அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மட்டுமல்லாமல், கற்பிக்கும் திறனும் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே மாணவா் சோ்க்கையால் வருங்காலத் தலைமுறை பயன் அடையும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் - பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு அவர்கள் அறிக்கை (When will the Old Pension Scheme come into effect in Tamilnadu - Report by P.M.K Founder Dr.Ramadasu)...


>>> தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் - பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு அவர்கள் அறிக்கை (When will the Old Pension Scheme come into effect in Tamilnadu - Report by P.M.K Founder Dr.Ramadasu)...


 தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்று பாமக நிறுவனர் ராமதாசு அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்...

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில்," பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்தும் மாநிலங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ள நிலையில், இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்க வேண்டிய தமிழ்நாடு அதற்கான நடவடிக்கைகளை எடுக்காதது வருத்தமளிக்கிறது.

சண்டிகரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1.75 லட்சம் பஞ்சாப் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். அவர்களிடமிருந்து புதிய ஓய்வூதியத் திட்டத்திற்காக வசூலிக்கப்பட்ட ரூ.16,746 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பஞ்சாப் அரசு வலியுறுத்தியுள்ளது.


அண்மைக்காலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதன்முதலில் செயல்படுத்தியது இராஜஸ்தான் மாநிலம் தான். அப்போது ராஜஸ்தான் அரசால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியாது இது வெற்று அறிவிப்பாகவே இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறினார்கள். ஆனால், அனைத்து எதிர்மறை கருத்துகளையும் முறியடித்து ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதுமட்டுமின்றி, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும், பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், சமூக நீதிக்கு பெயர்பெற்ற தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


இந்தியாவில் 5 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதன் மூலம், இந்தியாவில் இனி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவே முடியாது என்ற மாயை தகர்க்கப்பட்டிருக்கிறது. இது தான் மிகவும் மகிழ்ச்சியளிக்கும் உண்மையாகும். இந்தியாவில் 2004ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்தும், தமிழ்நாட்டில் 2003ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்தும் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பிந்தைய சமூக பொருளாதார பாதுகாப்பை அழித்து விடும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது.


தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. இன்னும் கேட்டால் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிதாகும். பிற மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையும், அரசின் பங்களிப்புத் தொகையும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இந்த தொகை அவ்வாறு செலுத்தப்படவில்லை; மாறாக இந்தத் தொகை தனிக்கணக்கில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனால் அந்த நிதியை அரசின் கணக்கிற்கு மாற்றிக் கொள்வதில் எந்தவிதமான தடையும் இல்லை.


ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு முன்பாகவே தமிழகத்தில் பழைய ஒய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைக்க 2016ம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப் பட்ட சாந்தா ஷீலா நாயர் குழு எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. அதன்பின்னர் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி மூத்த இஆப அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அதன் அறிக்கையை 27-.11.2018 அன்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அறிக்கையை அளித்தது. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமானது தான் என்று என்பது பல்வேறு மாநிலங்களில் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டதிலிருந்தே உறுதியாகியுள்ளது. எனவே, இனியும் ஏதேனும் காரணங்களைக் கூறி பழைய ஓய்வூதியத் திட்டத்தை தாமதப்படுத்தாமல், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் மூலம் உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...