கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Election Manifesto லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Election Manifesto லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

TVK - Election Manifesto 2026

 


தமிழக வெற்றிக் கழகம் - மக்களின் தேர்தல் அறிக்கை 2026 


Tamilaga Vettri Kazhagam – The People's Election Manifesto 2026


த.வெ.க. - தேர்தல் அறிக்கை 2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



விஜய் ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.2500, 6 இலவச சிலிண்டர், 200 யூனிட் மின்சாரம் கிடைக்கும்! 

தேர்தல் வாக்குறுதி ரீவைண்ட்.


தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நேரத்தில், தவெக தேர்தல் வாக்குறுதிகள் குறித்த தேடல் மக்கள் மத்தியில் உள்ளது.


தவெக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும்படத்தில், பெண்களுக்கு மாதம் ரூ.2,500 முதல் இலவச மின்சாரம், சிலிண்டர், தொழில்கடன் உள்ளிட்ட பல திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கப்போகிறது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.


தவெக தேர்தல் வாக்குறுதிகள் 2026


குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும். 6 விலையில்லா சிலிண்டர்கள் ஆண்டுக்கு வழங்கப்படும். மணப்பெண்களுக்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கப்படும். பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கம் மோதிரம் வழங்கப்படும். மாணவர்களின் அம்மாக்களுககு ரூ.15,000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். மகளிர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும். அரசு போக்குவரத்து கழக அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் என விஜய் அறிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு மாணவ, மாணவியரும் நிதி பற்றாக்குறையால் உயர் கல்வி பெறாமல் போகக்கூடாது. எனவே, 12ஆம் வகுப்புக்குப் பிறகு பிஎச்டி வரை படிக்க ரூ.20 லட்சம் வரை பிணையம் இல்லாமல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு


உறைவிட வசதியுடன் 100 காமராஜர் சிறப்பு பள்ளிகள் அமைத்து தரப்படும். ரூ.20 லட்சம் வரை உயர்க்கல்விக் கடன் வழங்கப்படும். நவீன கட்டமைப்புடன் அரசுப் பள்ளிகள் அமைக்கப்படும். ஏஐ கருவி மூலம் கட்டணமில்லா போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படும் என விஜய் வாக்குறுதி அளித்துள்ளார்.


அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். 8ஆம் ஊதியக்குழு உடனடியாக அமல்படுத்தப்படும், ஐந்தாண்டு பணியில் உள்ள ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.18,000, சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.10,000 ஊதியம் வழங்கப்படும். பணி ஓய்வின்போது ரூ.15 லட்சம் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி, செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி, கற்பித்தல் அல்லாத பணிகள் நீக்கம், அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.



தமிழ்நாடு ஆட்சேர்ப்பு - அரசு வேலை என்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு என்பதால், அந்த நடைமுறைகளில் உள்ள குறைகளை களைய மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பணிகளுக்கு ஆட்சேர்பு அட்டவணை உருவாக்கப்படும். டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, டிஎன்இபி ஆட்சேர்ப்புகளை 365 நாட்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்


முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்படும். 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். நீண்டகாலம் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கப்படும் வழங்கப்படும். அனைத்து நலத்திட்டங்களையும் எளிதாக பெற ஒவ்வொரு குடும்பத்திற்கும் Tamil nadu citizen privilege card திட்டம் கொண்டு வரப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.


குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். நவீன கட்டமைப்புடன் கூடிய மருத்துவமனை அமைத்து தரப்படும். ஆண்டுதோறும் கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை செய்து தரப்படும். போதைப் பொருள் இல்லா தமிழ்நாடாக உருவாக்கப்படும் என் தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வரை உதவித் தொகை வழங்கப்படும். ஊதியத்துடன் கூடிய 5 லட்சம் இன்டர்ன்ஷிப் வழங்கப்படும். இளைஞர்களுக்காக 5 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். தொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடன் வழங்கப்படும். அரசுத் தேர்வுகளுக்கு கால அட்டவணை கால அட்டவணை நிரந்தரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிலமுடைய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 முதலீட்டு உதவி வழங்கப்படும். பயிர்க் கடன்கள் தள்ளுபடி. விவசாயிகளுக்கு நெல் குவிண்டலுக்கு ரூ.3500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500 வழங்கப்படும். 5 லட்சம் சோலார் பம்புகள் வழங்கப்படும். தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும். 100 சதவீதம் பயிர்க் காப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு தாமத சூழல் நிதி உதவி - படித்த இளைஞர்களுக்கு 29 வயதுக்கு மேல் வேலைவாய்ப்பு இல்லை என்றால் டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் 4000 ரூபாய், டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் 2500 ரூபாய் இளைஞர் நல நிதி கொடுக்கப்படும்.


மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தடைக்கால நிவாரணம் ரூ.27,000 வழங்கப்படும். மீன்களுக்கு குறைந்தபட்ச ஆதார் விலை வழங்கப்படும். ரூ.25 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கப்படும். மீனவர்களுக்கு நிரந்தர வீடு வழங்கப்படும் என தவெக தெரிவித்துள்ளது.


லஞ்சமில்லா நிர்வாகத்துடன் அரசுச் சேவைகள் அனைத்து வீட்டு வாசலிலும் இருக்கும். காலக்கெடுவுடன் கூடிய அரசு சேவைகள். நிதி ஒதுக்கீட்டில் 10 சதவீத திடடங்களை மக்களே தீர்மானிக்கும் அதிகாரம். சட்மன்றத்தில் மக்கள் முறையீட்டுக்கான ஒருநாள் ஒதுக்கப்படும். அனைத்து அரசு சேவைகளையும் ஒரே தளத்தில் வழங்கும் Vetri TN Super App உருவாக்கப்படும் என்று தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வெற்றி தொழில் பயிற்சி உத்தரவாதம் - ஆண்டுதோறும் 5 லட்சம் தொழில் பயிற்சிகள் வழங்க அரசு மற்றும் தனியார் சிறுகுறு நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சிகள் வழங்கப்படும். பட்டதாரிகளுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய், ஐடிஐ டிப்ளோமா 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் உள்ளூர் ஆட்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.


தமிழ்நாடு வளர்ச்சிக்காக 2036ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொளாதார இலக்கை எட்டுவோம். ஏஐ அமைச்சகம், ஏஐ பல்கலைக்கழகம், ஏஐ நகரம் உருவாக்கப்படும். MSME-களுக்கு ரூ.15,000 கோடி ஆதரவும், மாவட் வாரியாக மாஸ்டர் பிளான் செய்யப்படும். தமிழகத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 21 நாட்களுக்கு வணிக உரிமம் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெற்றி தொழில் முனைவோர் திட்டம் - தொழில் முனைவோரை உருவாக்க 25 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி


நமது ஊரில் நமது வேலைவாய்ப்பு - தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க, தமிழ்நாடு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நிறுவனங்களில் 75 விழுக்காடு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருந்தால், அந்த தனியார் நிறுவனங்களுக்கு மாநில ஜிஎஸ்டி 2.5 விழுக்காடு மானியம், 5 விழுக்காடு மின் கட்டணம் மானியம் கொடுக்கப்படும் என விஜய் அறிவிப்பு


இளைஞர்கள் பங்களிப்பு - பஞ்சாயத்து, நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் முதல்வர் சேவை மக்கள் நண்பர் என்ற 5 லட்சம் பதவிகள் உருவாக்கி, மக்களுக்கான சேவைகள் அவரவர் வசிப்பிடங்களிலேயே சேவைகள் வழங்கப்படும். இந்த திட்டத்தில் உள்ள இளைஞர்கள் பங்காளருக்கு 18000 மாத ஊதியம் கொடுக்கப்படும்.


தமிழ்நாடு இளைஞர் ஆலோசனை குழு - வளர்ச்சி திட்டங்கள், இளைஞர்களை நேரடியாக பாதிக்கும் கருத்துகளை முதலமைச்சர் மற்றும் அரசு அதிகாரகள் நேரடியாக தெரிவிக்கும் தளமாக இது இருக்கும்.


DMK Election Manifesto 2026

 



சட்டப்பேரவைத் தேர்தல் 2026 : தி.மு.க. தேர்தல் அறிக்கை


DMK Election Manifesto : Tamilnadu Legislative Assembly Election 2026


தி.மு.க. வின் தேர்தல் வாக்குறுதிகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



📌 காலை உணவு திட்டம் 8ஆம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்படும் 


📌 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்


📌 மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000-ஆக அதிகரிக்கப்படும்


📌 விவசாயிகளுக்கு  நவீன மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்படும்


📌 5 ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்


📌 மருத்துவ காப்பீடு ஆண்டு வருமான வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு


📌 மருத்துவ காப்பீடு தொகை ரூ.10 லட்சமாக   உயர்த்தப்படும்


📌 புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்ட உதவித்தொகை ரூ.1500-ஆக உயர்த்தப்படும்


📌 நெல் குவிண்டாலுக்கு ரூ.3500-ஆக உயர்த்தப்படும்


📌 பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5-ஆக உயர்த்தப்படும்


தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள்


📌5 ஆண்டுகளில் 35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிகணினிகள் வழங்கப்படும்


📌நான் முதல்வன் திட்டத்தில் ரூ.1500 மாத உதவித் தொகையுடன் பயிற்சி


📌அனைத்து மாவட்டங்களிலும் நியோ டைட்டல் பூங்கா 

 

📌ரூ.18 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு 50 லட்சம் வேலைவாய்ப்பு 


📌தமிழ்நாட்டின் ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்த்த நடவடிக்கை


📌தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி ரூ.5 லட்ச கோடியாக உயர்த்தப்படும்


📌5,000 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்படும்


📌1,000 கிராம கோவில்கள் மறுசீரமைக்கப்படும்


📌சிறுபான்மையினருக்கான தொழில்கடன் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்


📌கிராம சாலைகள் ரூ.10,000 கோடியில் சீர் செய்யப்படும்


📌மாநகராட்சி, நகராட்சிகளில் 50 புதிய செம்மொழி பூங்காக்கள்


📌திருச்சி, மதுரை, சேலம், கோவை அருகே நவீன வசதிகளுடன் கூடிய நகரங்கள் உருவாக்கப்படும்


📌5 ஆண்டுகளில் 10,000 புதிய பேருந்துகள் இயக்கப்படும்


📌தொழிற்சாலைகளுக்கு செல்லும் மகளிருக்கு உதவ 1000 குழந்தைகள் காப்பகங்கள் 


📌BC, MBC பிரிவினர் தொழில் கடன் பெறும் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்


📌மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கு நவீன சிகிச்சை வசதிகள்


📌தமிழ்நாட்டில் 10 கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும்


📌ஊரகப்பகுதிகளில் 10,000 புத்தொழில்கள் தொடங்கப்படும்


📌மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள் புதிதாக அமைக்கப்படும்


📌அனைத்து அரசு கலைக்கல்லூரிகளில் டிஜிட்டல் கற்றல் மையங்கள்


தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள்


📌முதியோர் உதவித்தொகை ரூ.2000-ஆக அதிகரிக்கப்படும்


📌மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.2500-ஆக உயர்த்தப்படும்


📌மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.12,000-ஆக உயர்த்தப்படும்


📌சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்


📌மத்திய - மாநில உரிமைகளை நிலைநாட்ட நடவடிக்கை - முதலமைச்சர்


📌சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களுக்கு பிணையில்லாமல் ரூ.5 லட்சம் வரை வங்கிக்கடன்


📌பேரிடர் கால இழப்பீடுகள் ஹெக்டேருக்கு ரூ.25,000 வரை உயர்த்தப்படும்


📌அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் கருவிகள் இருமடங்காக்கப்படும்


📌8ஆவது ஊதியக் குழு அறிக்கையை செயல்படுத்த குழு அமைக்கப்படும்


📌1.5 லட்சம் காலிப்பணியிடங்கள் கால தாமதம் இன்றி நிரப்பப்படும்




பீகார் பேரவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டது இந்தியா கூட்டணி



பீகார் பேரவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டது இந்தியா கூட்டணி


* தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ்


*▪️. பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்,


*▪️. ஒவ்வொரு குடும்பத்திற்கும் |மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம்,


*▪️. வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை,


*▪️. மகளிருக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும்,


*▪️ ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் உள்ளிட்ட பல தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது இந்தியா கூட்டணி.


* நவம்பர் 6,11 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.



Philips HL7756/01 750 Watt Mixer Grinder, 3 Stainless Steel Multipurpose Jars with 3 Speed Control and Pulse function (Black)




Actual Price: Rs. 4795

Offer Price : Rs. 3599

Benefit : Rs. 1196


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47tqBNL


Steps will be taken to implement the Unified Pension Scheme for Government Employees and Teachers - Tamil Nadu Finance Minister Mr. Thangam Thennarasu


 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (Unified Pension Scheme) அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழ்நாடு நிதி அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அறிவிப்பு


Steps will be taken to implement the Unified Pension Scheme for Government Employees and Teachers - Tamil Nadu Finance Minister Mr. Thangam Thennarasu


 ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டவுடன், அதனை ஆராய ஒரு குழு அமைத்து விரைவில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 309ல் அறிவித்த  பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு (Old Pension Scheme) பதிலாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (Unified Pension Scheme) அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்


- தமிழ்நாடு நிதி அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அறிவிப்பு




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியீடு...

 


தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் :-


2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது...


Release of DMK manifesto for Parliament Lok Sabha elections 2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



✨மாநிலங்கள் சுயாட்சி பெரும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்


✨ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்ட பிரிவு நீக்கப்படும்


✨திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்


✨ஒன்றிய அரசு அலுவலங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்


✨இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்


✨காலை உணவு திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும்


✨விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும்


✨நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்


✨குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்


✨நீட் தேர்வு ரத்து செய்யப்படும்


✨மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 10,00,000 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்


✨பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது


✨மாணவர்களுக்கு வட்டி இல்லா கல்விக் கட 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்


✨100 நாள் வேலை திட்டம் 150 நாளாக மாற்றப்படும்


✨தமிழ்நாட்டில் புதிதாக IIT, IIM அமைக்கப்படும்


✨பெட்ரோல் விலை 75 ரூபாயும், டீசல் 65 ரூபாயும், சிலிண்டர் விலை 500 ரூபாயும் குறைக்கப்படும்


✨நாடு முழுவதும் மாணவர்களின் கடன் ரத்து செய்யப்படும்


- திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு...


2024 மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை...


2021 சட்டமன்ற தேர்தலுக்கான அ.இ.அ.தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியீடு (அரசு ஊழியர்கள் மற்றும் காவலர்களுக்கான வாக்குறுதிகள்)...

 AIADMK Assembly Election Manifesto - 2021 Released...



வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனிதுறை.


மாவட்டம் தோறும் சிப்காட் தொழில் வளாகம் அமைக்கப்படும்.


இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை.


வேலையில்லா இளைஞருக்கு ஊக்கத்தொகை இரட்டிப்பாக வழங்கப்படும்.


அமைப்பு சாரா ஓட்டுனர்களுக்கு விபத்து காப்பீடு.


மதுபானக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.


CAA சட்டத்தை கைவிட வலியுறுத்தப்படும்.


100 நாட்கள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.


தனியார் பங்களிப்புடன் தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு காலை டிபன் வழங்கப்படும்.


ஏழை திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை வழங்கப்படும்-அதிமுக தேர்தல் அறிக்கை.


பொங்கல் பண்டிகைக்காக உதவித்தொகை திட்டம் தொடரும்.


மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் பெயர் சூட்டப்படும்.


புற்றுநோய் சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்  - அதிமுக தேர்தல் அறிக்கை.


அரசு பள்ளி சுயநிதி வகுப்பு மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும்.


அங்கன்வாடி குழந்தைகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் தினந்தோறும் 200 மி.லி பால்.


நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு 50% கட்டணச் சலுகை.


அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் சோலார் சமையல் அடுப்பு வழங்கப்படும்.


அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அம்மா வாஷிங்மெசின் வழங்கப்படும்.


கரிசல் மண், களிமண் எடுக்க தடையில்லா அனுமதி- அதிமுக தேர்தல் அறிக்கை.


அனைத்து மாவட்டங்களிலும் சிறிய தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.


தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பத்திரிகையாளர் குடியிருப்பு கட்ட இடம் வழங்கப்படும்.


ஜாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் அனைத்து ஜாதியினருக்கும் உரிய இடஒதுக்கீடு.


நெசவாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.


மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குத் தேவையான கடன் உதவி வழங்கப்படும்.


கோதாவரி-காவேரி இணைப்புத் திட்டத்தை மேற்கொள்ள தீவிர நடவடிக்கை.


கட்டணம் இல்லாமல் லைசன்ஸ் மற்றும் ஓட்டுனர் பயிற்சி.


அனைவருக்கும் சோலார் அடுப்பு.


கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2 ஜி.பி டேட்டா.


அம்மா இல்லம் என்ற பெயரில் ஏழைகளுக்கு வீடு.


ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் திட்டம் அமல்படுத்தப்படும்.


வீடுகளுக்கு ஆண்டிற்கு 6 விலையில்லா கேஸ் சிலிண்டர்.


அம்மா வாஷிங்மெஷின் வழங்கும் திட்டம்.


கல்விக் கடன் தள்ளுபடி - அதிமுக தேர்தல் அறிக்கை.


ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, ரூ.25,000 மானியத்தில் பசுமை ஆட்டோ திட்டம்.


கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.


கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் - அதிமுக தேர்தல் அறிக்கை.


100 நாட்கள் வேலை, 150 பணி நாட்களாக உயர்த்தப்படும்


மாதந்தோறும் மின் பயனீட்டு கணக்கீடு நடைமுறை அமல்.


மகப்பேறு விடுப்பு காலம் ஒரு வருடமாக உயர்த்தப்படும்.


பொங்கல் பண்டிகை உதவித்தொகை தொடரும் 


சூரியசக்தி மின் ஆற்றல் திட்டங்களுக்கான மானியம் தொடரும்.


நெல், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும்.


பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக தேர்தல் அறிக்கை.


ஈழத்தமிழர் உட்பட எழுவர் விடுதலையில் அதிமுக உறுதி.


இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை.


காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கு இலவச மின் இணைப்பு 


விலையில்லாத அரசு கேபிள் திட்டம் அறிமுகம்.


தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு.


உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை - அதிமுக தேர்தல் அறிக்கை.


நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கு இலவச நுழைவுத்தேர்வு பயிற்சி.


வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை.


முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000ஆக உயர்த்தப்படும் - அதிமுக தேர்தல் அறிக்கை.




>>> 2021 சட்டமன்ற தேர்தலுக்கான அ.இ.அ.தி.மு.க தேர்தல் அறிக்கை  (PDF)...


2021 சட்டமன்ற தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியீடு (ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகள்)...

 DMK Election Manifesto for 2021 Assembly Elections - Released...


ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் நலன்

  • மாநில அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 80-வயது நிறைந்தவுடன் 20 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதனை மாற்றி 70-வயது நிறையும் பொழுது 10 சதவிகிதமும், 80-வயது நிறையும் பொழுது மேலும் 10 சதவிகிதமும் ஓய்வூதியம் வழங்கப்படும்.

பழைய ஓய்வூதியத் திட்டம்

  • புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஒய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்.

  • தமிழக அரசு அலுவலர்களின் பணி தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க மாநில நிர்வாகத் தீர்ப்பாயமும் (STATE ADMINISTRATIVE TRIBUNAL) தலைமைச் செயலாளர் / துறைச் செயலாளர் / துறைத் தலைவர் தலைமையிலான கூட்டு ஆலோசனைக் குழுக்களும் மீண்டும் அமைக்கப்படும்

சம வேலைக்கு சம ஊதியம்

  • ரூ.8000/- அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அ.தி.மு.க ஆட்சியில் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். அத்தகைய ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கழக ஆட்சி, அவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் காலமுறை ஊதியம் வழங்கும். 

  • ஆசிரியர் பணிக்காலத்தில் உயர்கல்வி கற்று பட்டம் பெறும் ஆசிரியர்களுக்கு கழக ஆட்சியில் அறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்து வழங்கி வந்த ஊக்கத்தொகை அ.தி.மு.க அரசினால் நீக்கப்பட்டுவிட்டது. இந்த ஊக்கத்தொகை மீண்டும் தொடர்ந்து வழங்கப்படும்.


பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் 

  • பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடிய ஆசிரியர்கள் மீது 17B பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட ஊதிய உயர்வு, மற்றும் பணி உயர்வு முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்குக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு ஆசிரியர்களுக்குப் பாதிப்பிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைத்திட ஆவன செய்யப்படும்.

அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் பணி நியமனக் கோரிக்கை

  • தமிழகத்தில் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாகப் பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும். அவர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமும் பணிக்கொடையும் வழங்கப்படும்.

  • அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பணிக் காலத்தில் இறந்தால் அவர்களது குடும்பத்தினருக்குத் தற்போது வழங்கப்பட்டுவரும் குடும்ப நலநிதி ரூபாய் 3 இலட்சம் என்பது 5இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

  • பள்ளிக்கல்வித் துறையில் பகுதி நேரப் பணியாளர்களாகப் பணிபுரிந்து நிரந்தரமாக்கப்பட்ட தொழிற் கல்வி ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் 50விழுக்காடு பகுதிநேரப் பணிக் காலத்தை ஓய்வூதியம் நிர்ணயிப்பதற்குக் கணக்கில் எடுத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

  • அரசுப் பணியாளருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் குடும்ப மருத்துவச்செலவு வரம்பை உயர்த்துவதுடன், அறுவை சிகிச்சைக்கு மட்டுமின்றித் தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக In-Patient) சேர்ந்து சிகிச்சை பெறும் அனைத்து வகையான மருத்துவ செலவினங்களும் அடங்கும் வகையில் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மாற்றியமைக்கப்படும்.


  • திருக்குறளை தேசிய நூலாக ஆக்க மத்திய அரசை வற்புறுத்துவோம்!
  • கடும் ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைக்கப்படும்!
  • முதலமைச்சரின் நேரடிக்கட்டுப்பாட்டில் தனித் துறை உருவாக்கப்பட்டு, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
  • அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்படும்.
  • சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
  • பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டுத் திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும்.
  • சென்னையில் திராவிட இயக்கத் தீரர்கள் கோட்டம் அமைக்கப்படும்.
  • கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படுத்தப்படும் வரையில், சொத்து வரி அதிகரிக்கப்படாது.
  • கொரோனா கொடுந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.
  • ஆவின்பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.
  • அனைத்துத் தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்.
  • சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
  • பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.
  • நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாகத் தரப்படும். உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்.
  • அனைத்து அரசு வேலை வாய்ப்புகளிலும் பெண்கள் இடஒதுக்கீடு 30 விழுக்காட்டில் இருந்து 40 விழுக்காடு ஆக்கப்படும்.
  • சட்டம் ஒழுங்கை காக்கும் பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்.
  • பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை களைய, சைபர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.
  • குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக்க 'கலைஞர் சிறப்பு வீட்டு வசதித் திட்டம்' கொண்டு வரப்படும்.
  • நகர்ப்புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்போருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும்.
  • கிராம நத்தத்தில் உள்ள வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கப்படும்.
  • சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில், லாரிகள் மூலமாக நீர் வழங்குவதை தவிர்க்க, குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்.
  • அனைத்துக் கிராமங்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்.
  • கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • முக்கியமான மலைக்கோவில்கள் அனைத்திலும் கேபிள் கார் வசதி ஏற்படுத்தித் தரப்படும்.
  • கிராமப்புற பூசாரிகளின் ஊதியமும், ஓய்வூதியமும் அதிகரிக்கப்படும்.
  • இந்து ஆலயங்கள் புனரமைப்பு, குடமுழுக்கு பணிக்கு 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • மசூதி, தேவாலயங்களை சீரமைக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் படி முறையான பயிற்சி பெற்று 14 ஆண்டுகளாக வேலையின்றி காத்திருக்கும் 205 அர்ச்சகர்களுக்கும் உடனடி பணி நியமனம் செய்யப்படும்.
  • 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்த்தப்படும்.
  • 32 லட்சம் ஆதவற்ற பெண்கள், கைம்பெண்கள், 50 வயதைக் கடந்த மணமாகாத பெண்கள், மாற்றுத் திறனாளிகள், உழவர் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள், இலங்கை அகதிகள் ஓய்வூதியம் 1500 ரூபாயாக ஆக்கப்படும்.
  • ஏழை மக்கள் பசி தீர, முதல் கட்டமாக 500 இடங்களில் 'கலைஞர் உணவகம்' அமைக்கப்படும்.
  • நடைபாதைவாசிகளுக்கு இரவு நேரக் காப்பகங்கள் அமைக்கப்படும்.
  • சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக பணியமர்த்தி கால முறை ஊதியம் வழங்கப்படும்.
  • கலைஞர் காப்பீட்டு திட்டமும், வருமுன் காப்போம் திட்டமும் மேம்படுத்தப்படும்.
  • தமிழக ஆறுகள் அனைத்தும் மாசு அடையாமல் காக்க தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்படும்.
  • இயற்கை எரிவாயுவில் இயங்கும் புகையில்லா பேருந்துகள் தமிழக மாநகராட்சி பகுதிகளில் இயக்கப்படும்.
  • கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், அரசு அலுவர்கள், முன்களப் பணியாளர்கள் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
  • பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியர், ஆசிரியர் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிதி, ரூ.3 லட்சம் என்பது ரூ.5 லட்சம் ஆக்கப்படும்.
  • குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுக்கூடைத் திட்டம் அமல்படுத்தப்படும்.
  • பத்திரிகையாளர் மற்றும் ஊடகத் துறையினர் நலன் காக்க தனி ஆணையம் அமைக்கப்படும்.
  • பத்திரிகையாளர், ஊடகத்துறையினர் ஓய்வூதியமும் குடும்ப நிவாரண நிதியும் உயர்த்தப்படும்.
  • சிறு குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்க 10 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்!
  • ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்கிட 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்!
  • மகளிருக்கு பேறுகால உதவித் தொகை 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
  • நீட் தேர்வை ரத்து செய்ய கழக அரசு அமைந்ததும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும்.
  • முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.
  • வேலை வாய்ப்பு அலுவலகங்கள் இளைஞர்களின் திறன் பயிற்சி மையங்களாக செயல்படும்.
  • ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
  • அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும்.
  • அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 80 வயதுக்கு மேல் 20 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படுகிறது. அதனை 70 வயதுக்கு மேல் 10 விழுக்காடாகவும், 80 வயதுக்கு மேல் 10 விழுக்காடாகவும் வழங்குவோம்!
  • வேலையில்லா பட்டதாரிகள் குறுந்தொழில் தொடங்க 20 லட்சம் வரை கடன் வசதி வழங்கப்படும்.
  • அரசுப் பணி மகளிருக்கு பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்படும்.
  • சிறப்பு தாய் சேய் நலத்திட்டம் என்ற பெயரால் கருவுற்ற பெண்களுக்கு வீடு தேடி மருத்துவ வசதி வரும்.
  • புதிய தனி கனிம வள அமைச்சகம் உருவாக்கப்படும். கனிமங்கள், தாது மணல், மணல் ஆகிய தொழில்கள் அமைத்தும் டாமின் நிறுவனத்தின் கீழ் அரசே நடத்தும்.
  • அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டாவுடன் கைக்கணினி வழங்கப்படும். கல்வி நிறுவனங்களில் வை-ஃபை வசதி செய்து தரப்படும்.
  • அரசுத் துறை நிறுவனங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகப் பணியில் உள்ள அனைத்துப் பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
  • போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்.
  • நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ. 4000-ஆக உயர்த்தி வழங்கப்படும்!
  • உழவர் சந்தைகளுக்கு உயிரூட்டப்பட்டு, அது அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்!
  • நீர்ப்பாசனத் துறைக்கு மாற்றாக புதிய நீர்வள ஆதாரங்கள் அமைச்சகம் உருவாக்கப்படும்!
  • நீர் மேலாண்மை ஆணையம் அமைத்திடச் சட்டம் கொண்டு வரப்படும்!
  • முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் 10 ஆயிரம் கோடியில் பெரிய ஏரி, குளங்கள் பாதுகாப்புச் சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 தடுப்பணைகள் கட்டப்படும்!
  • ஏழை - எளிய, சிறு வணிகர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
  • அ.தி.மு.க. அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள கடன் சுமையை சீர்செய்ய பொருளாதார உயர்மட்டக் குழு அமைக்கப்படும்!
  • மீனவர் சமுதாயத்தினர், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அனைவருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.
  • அம்மையார் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் உள்ள கல்வித் துறையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
  • மத்திய அரசுப் பள்ளிகள் உள்பட தமிழகப் பள்ளிகள் அனைத்திலும் 8-ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடம் ஆக்கிட சட்டம் கொண்டு வரப்படும்.
  • சென்னை நகரை வெள்ளப்பெருக்கத்தில் இருந்து பாதுகாக்க, சென்னைப் பெருநகர் வெள்ளத் தடுப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்படும்!
  • வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
  • வாழை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, பருப்பு, மிளகாய், சிறுதானியங்கள், தேயிலை, எண்ணெய் வித்துக்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும்.
  • இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும்.
  • தமிழ் எழுத்து வரிவடிவம் சிதைக்கப்படுவதைத் தடுக்க புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்!
  • இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த உலகநாடுகளை மத்திய அரசு வலிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • இந்தியாவில் வசிக்க விரும்பும் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனைப் பேண வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை அமைக்கப்படும்.
  • மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
  • அரசு பள்ளி, கல்லூரி மாணவியர்க்கு இலவச நாப்கின் வழங்கப்படும்.
  • பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
  • மத்திய அரசின் இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான உச்சவரம்பு 25 லட்சமாக உயர்த்திட மத்திய அரசை வலியுறுத்துவோம்.
  • தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க வற்புறுத்துவோம்.
  • ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • நரிக்குறவர், குருவிக்காரர், வேட்டைக்காரர், லம்பாடி, படுகர் சமுதாயத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
  • மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
  • மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச் சலுகை வழங்கப்படும்.
  • மாற்றுத்திறனாளி மாணவர்க்கு 3 சக்கர மோட்டார் வாகனம் வழங்கப்படும்.
  • வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும்.
  • புகழ்பெற்ற இந்துக் கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல 1 லட்சம் பேருக்கு தலா 25 ஆயிரம் வழங்கப்படும்.
  • பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கப்படும்.
  • சென்னை சிறுசேரி பகுதியில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
  • தமிழகத்தில் ரயில் பாதை இல்லாத 16 முக்கிய வழித்தடங்களில் புதிய ரயில் பாதை அமைக்க வலியுறுத்துவோம்.
  • திருச்சி, மதுரை, சேலம், நெல்லை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் கொண்டு வரப்படும்.
  • வேலூர், கரூர், ஓசூர், இராமநாதபுரத்தில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
  • பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்தாக பால் வழங்கப்படும்.
  • கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  • 100 நாட்கள் வேலைத் திட்டம், 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும்.
  • 30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
  • மகளிர் சுய உதவிக்குழுவினரின் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  • அரசு உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும்.
  • இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற தனி அமைச்சகம் அமைக்கப்படும். இதற்கு திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் என்று பெயரிடப்படும்.
  • தலைவர் கலைஞர் அவர்களின் புகழ்பெற்ற வாசகம் உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கும். அது, "சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்" என்பதாகும்.
  • அவர் வழியில் நானும் சொன்னதைச் செய்வேன். செய்வதைத் தான் சொல்வேன் என்பதைத் தமிழக மக்களுக்கு எனது உறுதிமொழியாக வழங்குகிறேன்.


>>> 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை (PDF)...


கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான நிதி உயர்த்தப்படும் - பள்ளி இடைநிற்றல் சதவீதம் குறைக்கப்படும் - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்...

 💥 பள்ளி இடைநிற்றல் சதவீதம் குறைக்கப்படும் - ஸ்டாலின்


💥 பட்டதாரிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்தப்படும் - ஸ்டாலின்


💥 நகர்புறத்தில் புதிதாக 35 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு - ஸ்டாலின்


💥 அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி - ஸ்டாலின்


💥 தமிழகத்தின் பசுமை பரப்பளவை உயர்த்த நடவடிக்கை - ஸ்டாலின்





💥 கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான நிதி உயர்த்தப்படும் - ஸ்டாலின்


💥 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம்


💥 துறைகளை சீரமைப்பதே எனது முதல் பணி - ஸ்டாலின்


💥 நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், சமூக நீதி இவை உள்ளிட்ட 7 துறைகள் முக்கியமானவை - ஸ்டாலின்


💥 குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வெள்ளி முலாம் பூசிய ஈய பாத்திரம் TAPS : CPS ஒழிப்பு இயக்கம்

வெள்ளி முலாம் பூசிய ஈய பாத்திரம் TAPS : CPS ஒழிப்பு இயக்கம் CPS ஒழிப்பு இயக்கம் *_மாநில மையம்_* ________________________ *வெள்ளி முலாம் பூசி...