கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Annual Day லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Annual Day லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Controversy as students dance to a caste song with a party-related towel at an annual day at a government school

 


அரசுப்பள்ளியில் நடந்த ஆண்டுவிழாவில் மாணவர்கள் கட்சி சார்ந்த  துண்டுடன் சாதியப்பாடலுக்கு நடனமாடியதால் சர்ச்சை


Controversy as students dance to a caste song with a party-related towel at an anniversary celebration at a government school


 கிருஷ்ணகிரி மாவட்டம் - சோப்பனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த ஆண்டுவிழாவில் மாணவர்கள் கட்சி சார்ந்த  துண்டுடன் சாதியப்பாடலுக்கு நடனமாடியதால் சர்ச்சை


கிருஷ்ணகிரியில் அரங்கேறி இருக்கிறது ஒரு அதிர்ச்சி நிகழ்வு. அரசுப் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் பாமக துண்டை கழுத்தில் போட்டுக் கொண்டு சாதி பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்கள் மாணவர்கள். இதை அடுத்து பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.


பள்ளிகளில் கொலை, கொள்ளை சம்பவம், போதைப் பொருள் பயன்பாடு, தவறை தட்டிக் கேட்கும் ஆசிரியர்கள் மீது தாக்குதல், தவறான பாலியல் புகார் என மாணவர்கள் அத்துமீறி வருகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளோ, அனைத்துக்கும் ஆசிரியர்களையே பலியாக்குவதால் ஆசிரியர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் சோப்பனூர் கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.


இந்த நிலையில் நேற்று பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றிருக்கிறது. விளையாட்டுப் போட்டிகள், கவிதை, போட்டி, கட்டுரை போட்டி என பல போட்டிகள் நடைபெற்ற நிலையில் மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. தங்களது திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். அப்போது மாணவர்கள் திடீரென கழுத்தில் பாமக துண்டை போட்டுக்கொண்டு மறுமலர்ச்சி படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடனமாடி இருக்கின்றனர்.


அது மட்டுமல்லாமல் நடனம் ஆடும் போது வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவரான காடுவெட்டி குரு, சந்தன கடத்தல் வீரப்பன் ஆகியோர் படம் பொறித்த டீசர்ட்களையும் அணிந்தபடி நடனமாடி இருக்கின்றனர். இதனால் அங்கிருந்த பிற மாணவர்களும் பெற்றோர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்துடன் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக பாடல் நிறுத்தப்பட்டு மாணவர்கள் நடனமாட அனுமதிக்கப்படவில்லை.


இதையடுத்து குறிப்பிட்ட சமூகத்தினர் ஏன் அப்பாடலுக்கு நடனம் ஆடக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அரசுப் பள்ளியில் சாதி ரீதியான பாடலுக்கு நடனமாடியதோடு பாமக கட்சித்துண்டை கழுத்தில் அணிந்து கொண்டு ஆடியது அதிர்ச்சி அளிப்பதாக கூறிய பெற்றோர், இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருக்கின்றனர்.


இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது மாணவர்கள் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடினால், அதற்கு முன்னதாகவே பயிற்சியில் ஈடுபட்டு இருப்பார்கள். அப்படி மாணவர்கள் சாதியப் பாடலுக்கு நடனம் ஆடுவது தெரிந்தும் அதை எப்படி அனுமதித்தார்கள்? அப்போது இல்லை என்றாலும், நிகழ்ச்சி நடக்கும் போது மாணவர்கள் ஆடியதை எப்படி அனுமதித்தனர் என கேள்வி எழுப்புகின்றனர் பெற்றோர்.





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...






Annual Day in Government Schools - DSE Proceedings

 


அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த ₹ 14.60 கோடி நிதி ஒதுக்கீடு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Allocation of ₹ 14.60 Crore for Annual Day in Government Schools - DSE Proceedings


அனைத்து வகையான அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துவதற்கு தமிழக அரசு 14 கோடி ரூபாய் ஒதுக்கீடு.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அனைத்து வகை பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது


2024-2025ஆம் கல்வியாண்டு - ஆண்டு விழா பணம் ஒதுக்கீடு - மாணவர் எண்ணிக்கையில் அடிப்படையில்


மாணவர்கள் எண்ணிக்கை 2000 க்கு மேல் இருந்தால் ரூபாய் 50,000, 

1001 லிருந்து 2000 வரை ரூபாய் 30,000, 

501 இல் இருந்து 1000 வரை ரூபாய் 15,000,

 மாணவர் எண்ணிக்கை 251 முதல் 500 வரை ரூபாய் 8000, 

மாணவர் எண்ணிக்கை 101 இல் இருந்து 250 வரை ரூபாய் 4000 

மாணவர் எண்ணிக்கை 100க்குள் இருந்தால் ரூபாய் 2500 

இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும்.

 மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகள் பிப்ரவரி மாதத்திற்குள்ளாகவும், 

தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மார்ச் 31க்கு உள்ளாகவும் ஆண்டு விழாக்களை நடத்தி முடிக்க வேண்டும்.



2024-2025ஆம் கல்வியாண்டில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி  அனைத்து பள்ளிகளிலும் பள்ளிகளின் கல்வி செயல்பாடுகள், மாணவர்களின் சிறப்பு அம்சங்கள், ஆசிரியரின் சிறப்பு செயல்பாடுகள், ஆகியவற்றை பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து பள்ளி ஆண்டுவிழா நடத்திட வேண்டும் என 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அனுப்பப்பட்டுள்ளது.


   எனவே ஜனவரி மாதம், பிப்ரவரி மாதங்களில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை தொடக்க / நடுநிலைப் பள்ளிகளிலும் பள்ளிகளின் வசதிக்கேற்ற பெற்றோர்கள், பொது மக்களின்  முன்னிலையில் மாண்புமிகு  அமைச்சர் மற்றும் மதிப்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் கொண்டு சிறப்பாக பள்ளி ஆண்டு விழா நடத்திட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.








இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Work bookல் உள்ள தொகுத்தறி மதிப்பீடு (SA) எழுத உத்தேச Time Table

  Work bookல் உள்ள  தொகுத்தறி மதிப்பீடு (Summative Assessment) எழுத உத்தேச Time Table வணக்கம். மதிப்பிற்குரிய HMs & Teachers, Work bookல...